Tuesday, April 24, 2012

பயமுறுத்தும் மருத்துவர்கள்: இது நியாயமா?

ங்கள் அம்மாவுக்கு சமீபத்தில் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இருபது நாளுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இருபது நாளில் டாக்டர் இரண்டு முறை "இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் மகன்-மகள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த தம்பி-தங்கைகள் என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ. சி. யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்த போது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.

ஐ. சி யூ க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ. சி. யூ க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. " பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம். " என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்த போது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம் !

அதுவே "பிழைக்கிறது கஷ்டம் " என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், " பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம் !

மருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா?

உறவினர்கள் அனைவரும் மிக கவலையுடன் அழுது புலம்பியவாறே இருக்கின்றனர். நோயாளியிடம் நேரடியாக கூறா விட்டாலும் தங்கள் உணர்வுகள் மூலம் "பிழைப்பது சிரமம்" என்கிற உணர்வை உடன் இருப்போர் நோயாளிக்கு தெரிவிக்கவே செய்கின்றனர்.

பிழைப்பது சிரமம் என எங்கள் அம்மாவை சொன்னதால், நடந்த சில விஷயங்களை கூறுகிறேன். எங்களில் சிலர் அம்மாவிடம் போய் "உனக்கு ஏதும் நிறைவேறாத ஆசை இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு. வேற யாரையும் பார்க்கணும் என நினைக்கிறியா?" என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தோம். இது அம்மாவுக்கு, தான் இறக்க போவதால் தான் இப்படி கேட்கிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் தானே?

நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே. இது மருத்துவர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் நம்பிக்கையை தங்கள் சுய நலத்துக்காக குலைப்பது எப்படி சரியாகும்? மருத்துவர்கள் இதனை உணர்ந்து இப்படி அனாவசியமாக பயமுறுத்தாமல் இருப்பது நல்லது !

***
ங்கள் வீட்டுக்கருகில் நடந்த இன்னொரு சம்பவம் பகிர்கிறேன்

சிங்கப்பூரில் பெண் மருத்துவராக இருக்கிறார் அவர். அவர் கணவரும் குழந்தைகளும் மட்டும் இங்கு சென்னையில் உள்ளனர். பெண் மருத்துவரின் கணவர் பெயரை ரவி என்று வைத்து கொள்வோம். ரவிக்கு சர்க்கரை நோய் உண்டு. காலில் கொப்பலமும், தோல் பிரச்னையும் வந்துள்ளது. டாக்டரிடம் காட்ட, சர்க்கரை நோயால் தான் இப்படி நடந்தது என்றும் கட்டை விரலை ஆப்பரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார் .

ரவி, சிங்கப்பூரிலிருக்கும் தன் டாக்டர் மனைவியிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் " கொஞ்ச நாள் பொறுங்கள் நான் இந்தியா வரும்போது பார்த்து கொள்ளலாம்" என சொல்ல, ரவியோ தான் பாட்டுக்கு அந்த ஆபரேஷனுக்கு உடன்பட்டு கட்டை விரல் அகற்றப்பட்டு விட்டது.

இனி தான் இருக்கு விஷயம் !!

கட்டை விரலை எடுத்த பின்னும் ரவிக்கு மீண்டும் மீண்டும் காலில் கட்டி மற்றும் தோல் பிரச்சனை வந்திருக்கிறது ! இன்னொரு டாக்டரிடம் காட்ட அவர் " சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது. இதய நோய் வந்து விட்டது. பை பாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே செய்யா விட்டால் பிரச்சனை ஆகி விடும் என்றும் கூறி இருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட ரவியின் மனைவி சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்து விட்டார். அடுத்த சில வாரங்கள் இதற்காக பல மருத்துவர்களிடம் அலைந்து திரிந்து காலில் வந்தது தோல் வியாதி தானே அன்றி வேறு ஏதும் இல்லை என்று கண்டறிந்துள்ளார். தோல் மருத்துவர் தந்த மருந்து எடுத்து கொண்டதும், காலில் இருந்த கொப்பளம் மற்றும் தோல் பிரச்சனை முழுதும் சரியாகி விட்டது . ரவியின் கால் கட்டை விரல் போனது தான் மிச்சம் ! பை பாஸ் ஆபரேஷன் ஆகாமல் தப்பி விட்டார் ரவி !

நினைத்து பாருங்கள் ! தங்கள் சுய நலனுக்காக எப்படி என்ன ஆப்பரேஷன் செய்யலாம் என்று கணக்கு போடும் மருத்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாய் நீங்கள் தனியாகவோ, நிறுவனம் மூலமோ "இன்சூரன்ஸ் பாலிசி" வைத்திருப்பதாக சொன்னால் அவர்களின் அணுகுமுறை மற்றும் பேச்சு ரொம்பவே மாறி விடுகிறது.

கடவுளுக்கு இணையாக கருதக் கூடிய ஒரு தொழில் இருக்குமாயின் அது மருத்துவ துறை தான். அந்த துறையில் தான் இப்படி பட்ட புல்லுருவிகளும் உள்ளனர் !

நம்மை போன்ற மனிதர்களின் பயமே மருத்துவர்கள் பணம் செய்ய வைப்பாக அமைந்து விடுகிறது ! நண்பர்களே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! குறிப்பாய் ஆபரேஷன் என்றால் இரண்டு அல்லது மூன்று ஒபினியன் வாங்காமல் முடிவு எடுக்காதீர்கள் !

**********
கீற்று  ஏப்ரல் 21 , 2012 இதழில் வெளியானது. 

37 comments:

 1. எத்தனை ரமணாக்கள் வந்தாலும் இவங்களையெல்லாம் திருத்த முடியாது. :-(

  ReplyDelete
 2. மருத்துவத்தொழில் புனிதம் என்பதெல்லாம் காலாவதி ஆகிருச்சு.

  இப்ப அது ஒரு வியாபாரம். செஞ்ச முதலீட்டை பலநூறு மடங்கா திருப்பித்தரும் உன்னதத் தொழில்!

  இங்கே நம்மூருலே அடுத்த அஞ்சாவது நிமிசம் போகப்போகும் உயிருக்கும் 'யூ வில் பீ ஆல்ரைட் இன் நோ டைமு' 'ன்னு சொல்லித் தோளில் தட்டிக்குடுக்கும் டாக்குட்டர்கள்தான் வாடிக்கை.

  ReplyDelete
 3. மாப்ள நீங்க சொல்றது போல பல இடங்களில் நடக்குது...இப்போ தான் ஒருத்தரை உள்ள தள்ளிட்டு வந்தேன்...பய புள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கு...கேட்டா சீனியர் டாக்டராம்..அடிங்கொய்யால...அவன அடிச்ச அடி இருக்கு பாருங்க..இனி எவனும் குடிச்சிட்டு ஹாஸ்பிடல் வரமாட்டான்...அவன் எம்மாம் பெரிய டாக்டரா இருந்தாலும் சர்தான்!

  ReplyDelete
 4. //அமைதிச்சாரல் said...
  எத்தனை ரமணாக்கள் வந்தாலும் இவங்களையெல்லாம் திருத்த முடியாது. :-(//

  Repeatu...

  ReplyDelete
 5. நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே

  ReplyDelete
 6. கிருஸ்ணாடாவின்சியின் தன் கடைசி சிறுகதையில் கல்லீரல் பாதிக்கப்பட்ட ஒருவன் நீ கூடிய விரைவில் இறந்துவிடுவாய் என கைவிட்டுவிடுவார்கள்...அவன் ஒரு சித்த வைத்தியர் ஒருவரிடம் நம் இந்திய மருத்துவம் பார்த்தது குணம் அடைந்துவிடுவான்......அதை நான் சிறுகதையாக பார்க்கமுடியவில்லை நடந்த நிகழ்வு போலவே இருந்தது பல சம்பவங்கள் இதைப்போலவே நடக்கிறது...மருத்துவம் வியாபாரம் என்று போய் விட்டது..வேதனையான விசயம்!

  ReplyDelete
 7. அண்ணே மருத்துவரை நாம் கடவுளுக்க சமமாக நினைக்கின்றோம்... ஆனால் பல மருத்துவர்கள் நம்மை பணம் கொடுக்கும் எந்திரமாகத்தான் பார்க்கிறார்கள்...

  ReplyDelete
 8. //ஆதி மனிதன் said...

  //அமைதிச்சாரல் said...
  எத்தனை ரமணாக்கள் வந்தாலும் இவங்களையெல்லாம் திருத்த முடியாது. :-(//

  Repeatu... //

  Repeat of the Repeatu..

  ReplyDelete
 9. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. நீங்க சொன்னமாதிரி, ரெண்டுமூணு டாக்டர்களிடம் அட்வைஸ் கேட்டுக்க வேண்டியதுதான். முன்பெல்லாம் குடும்ப டாக்டர்கள்னு இருப்பாங்க. இப்ப அதுவும் இல்லியா... டாக்டர் சொல்றதை நம்பவும் முடியாம, மறுக்கவும் முடியாம...

  ReplyDelete
 10. நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்
  :(.

  ReplyDelete
 11. மோகன் குமார்,

  மருத்துவர்கள் சேவையுணர்வுடன் பணியாற்றினார்கள் என்பதெல்லாம் சங்ககாலத்து சமாச்சாரம் ஆகிடுச்சு சாரே :-))

  இப்போ எல்லாம் மருத்துவக்கட்டணத்தை பொருளாதார அளவீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கிறாங்க,

  மருத்துவமனையின் முதலீடு + கடன் நிலுவை + மருத்துவரின் சேவைக்காண கட்டணம் என கூட்டிக்கழித்து ஒரு தொகையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்.

  மேலும் மருத்துவர்களிடையே நல்ல தொடர்பு உண்டு , உங்க ஊருல சிசேரியனுக்கு எவ்வளவு வாங்குற, சின்ன ஊருலவே அவ்வளவு தராங்களா, அப்போ நான் ரேட் ஏத்திடுறேன்னு என பேசிவைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கட்டணம் வாங்குறாங்க.

  சேவையாக கூட மருத்தும் பார்க்க வேண்டாம் குறைந்த பட்சம் ஒரு தொழில்தர்மம் ஆவது கடைப்பிடிக்க வேண்டாமா? அது கூட இல்லை என்பது தான் இன்றைய நிலை.

  ReplyDelete
 12. மருத்துவர்களை மிரட்டும் நோயாளிகளும் உண்டு....நோயாளிகளை மிரட்டும் மருத்துவர்களும் உண்டு.... இரண்டில் எது முதல் யார் காரணம் என்று பார்ப்பது கடினம். எங்கள் ப்ளாக்கில் கூட 'ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சர்ஜரி இஸ் பெஸ்ட்' என்று ஒரு பதிவு வந்தது...(ஓசியில் விளம்பரம்!) இன்றைய வியாபார உலகில் மருத்துவர்கள் சேவை செய்ய அவர்கள் என்ன ஆப்பக் கடையா வைத்திருக்கிறார்கள்!!

  நேற்றைய பதிவு: ஓகே ஓகே வெற்றி பெற்றது எப்படி?

  நேற்றைய என் கமெண்ட் பார்க்கவும்!

  அது சரி 12 ஆவது கமென்ட் போட்டால் பரிசு ஏதும் உண்டா என்ன?!! [ஹி...ஹி...பழிக்குப் பழி வாங்கிட்டேனாம்!]

  ReplyDelete
 13. உயிர் காக்கும் மருத்துவம் இன்று வயிற்று பிழைப்பிற்காக செய்யும் தொழிலாகிப்போனதே இதற்க்கு காரணம் ..!

  ReplyDelete
 14. மருத்துவ தொழிலும் வியாபாரமாகி விட்டது. ஒன்றும் சொல்வதற்கில்லை.

  ReplyDelete
 15. we will be studying BE and expected to get salary of minimum 30k at the start when we are at the age of 23 to 23.

  but we expect doctors to serve instead of expecting the same starting salary at the age of 28

  i dont find the logic. why dont we write about other commodities and services ?

  10 years back average salary of a middle class guy is about 7000 and doctor fees is 25 and now the same average salary of middle class is 25000 and we expect the doctors to get the same.

  when an engineer getting 1 lakh for his job why cant our doctors get with same exp?

  ReplyDelete
 16. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் என்றாகி விட்ட பின், எந்த ப்ரச்னையால் இந்த வியாதி வந்தது என்று கண்டுபிடிப்பவர் யார்? சின்ன வயதில் எல்லா வியாதிக்கும் சிவப்பு கலர் சிரப் கொடுத்து குணப்படுத்திய குடும்ப டாக்டர் நினைவுக்கு வருகிறார்!

  நல்ல டாக்டர் அமைவதுக்கு போன ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கணும் போல!

  ReplyDelete
 17. Anonymous7:09:00 PM

  முதலில் அம்மா உடல் நிலை தேறியது சந்தோசம் மோகன்...

  எப்பவோ கட்டப்பட்ட கல்லணை இன்னும் நிற்கிறது...வருசா வருஷம் போடும் நம்ம ஊரு ரோடு உடனே பல்லாங்குழி ஆயிர்ரதில்லையா நண்பரே..அது போலத்தான் இதுவும்...

  நம்ம எதிர்பார்ப்பை குறைச்சுக்க வேண்டியது தான்...

  நல்ல மருத்துவர் எண்ணிக்கை அதே அளவில் தான் உள்ளது...
  சாதாரண தர மருத்துவர்கள் பெறுத்துவிட்டார்கள்...நோய்களும் பல கிளைகள் விட்டு...கூடவே நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு...

  நமது அறிவும் எதிர்பார்ப்பும் வளர்ந்து போய் விட்டதே இதற்க்கு காரணமோ?

  உங்கள் அதே மனோநிலையுடன் நான் கடந்த வருடம் எழுதிய பதிவை வாசித்து உங்கள் கருத்தை கூறுங்களேன் மோகன்...


  http://reverienreality.blogspot.com/2011/07/blog-post_20.html

  ReplyDelete
 18. Dhans நல்ல ஒரு பிரச்னையை எழுப்பி உள்ளீர்கள் !

  இஞ்சினியரை விட டாக்டருக்கு அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதில் நானும் உடன் படுகிறேன்.
  அப்படி கிடைப்பதில்லை என்பது தவறு தான்.

  பள்ளியில் வேலை செய்யும் டீச்சர்களுக்கு கூட நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பதில்லை. அதற்காக அவர்கள் பள்ளி வரும் குழந்தைகள் பாக்கெட்டில் கை வைக்க முடியுமா?

  இந்த பதிவில் மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என சொல்லப்பட வில்லை. நான் குறிப்பிட்ட சம்பவத்தில் எனது அம்மாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஒரு நாள் வருமானம் மிக மிக குறைந்த பட்சம் 20000-க்கும் மேல் ( Very Conservative ) மாதம் அவர் சம்பாதிப்பது ஆறு லட்சம்

  இங்கு பிரச்சனை பணம் அல்ல. நோயாளிக்கு ஏதும் ஆகி விட்டால் தன்னை கோபிப்பார்களே என்று அவர் நம்பிக்கை தராமல் போகிறார். இது மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது

  அடுத்த உதாரணம் இன்னும் மோசம்: அது சுத்தமான சுரண்டல். தனக்கு பணம் தர ஒருவர் கட்டை விரலை வெட்டிய ஆளை மருத்துவர் என்று சொல்ல முடியுமா? இன்னொருவர் பை பாஸ் செய்தால் தான் போச்சு என்று நின்றிருக்கிறார். மனிதனின் உயிரோடு, உடல் பாகங்களோடு எப்படி அவர்கள் விளையாடலாம்? நமக்கு அல்லது நம் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி கட்டை விரலை தேவையின்றி வெட்டினால் நமக்கு எப்படி இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. வருடம் ஆனாலும் இடுகையின் பொருள் இன்றும் பொருந்தும்.

   20 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் ஒரு எஞ்சினீயர் சொன்னது நினைவில் இருக்கிறது. நான் அந்தக்காலத்தில் (குறைந்த எஞ்சினீயரிங் கல்லூரிகள்) மெரிட்டில் எஞ்சினீயரிங்க் படித்தேன். இவ்வளவு வருடத்துக்குப்பின் என் சம்பளம் 8000. இன்னைக்கு டிப்ளமா படிச்சுட்டு கம்யூட்டர் புரோகிராமர்னு 18,000-20,000 சம்பளம் வாங்கறாங்க அனுபவம் இல்லாதவங்க. இது அடுக்குமா என்றார்.

   தன்ஸ் சொல்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. இன்றைக்கு சாதாரண அறிவு பெற்றோர் (எஞ்சினீயர்னு வச்சுக்கலாம்) முதல் மாதச் சம்பளமே 20,000 வாங்குவார்கள். ஆனால் புத்திசாலிகளான மருத்துவர்கள், கூடுதலாக 2 வருடங்கள் படித்தும் 20,000 வாங்குவதில்லை. ஆனால் இது ஒரு பெரிய வித்தியாசம், கம்பிளெயின்ட் என்று சொல்லமுடியாது. மருத்துவர் 90 வயதாகும்போது எக்கச்சக்கமா (சும்மா கொஞ்சம் எக்சாஜரேஷன்) சம்பளம் வாங்குவார். எஞ்சினீயர் 60 வயதுல ஓய்வு பெற்று ஹிந்து பேப்பர் படிச்சிக்கிட்டு இருப்பார். அனுபவத்துக்கு ஏற்ற சம்பளம், எஞ்சினீயருக்குக் கிடைப்பதுபோல பலப் பல மடங்கு மருத்துவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் எங்கு போனாலும், தனி மரியாதை (ரயில் பயணம் போன்று). இளம் மருத்துவர், உயிரோடு விளையாடித்தான் அனுபவம் பெறுகிறார். அதற்கு மருத்துவமனை facilitate செய்வதால்தான் குறைந்த சம்பளம்.

   நீங்கள் சொல்லும் Highly Paid மருத்துவர்கள், Targetஐ நோக்கி வேலை பார்ப்பவர்கள். அதாவது, மாதம் 2 லட்சம் சம்பளம் என்றால், அவருக்கு டார்கெட் 10 லட்சம். அதற்குமேல் என்ன achieve செய்தாலும் கூடுதல் இன்சென்டிவ் என்று மருத்துவத் தொழிலே, Sales/Marketing மாதிரி ஆகிவிட்டது. அவர்களுக்கு வெளி'நாடு சுற்றுலாலாம் மருத்துவமனைகள் ஏற்பாடு செய்துதருகின்றன (ரிலாக்ஸ்க்காகவும் டார்கெட்டை புத்துணர்ச்சியோடு achieve செய்வதற்காகவும்)

   இதுலயும் மனசாட்சி உள்ள மருத்துவர்கள் (கடவுளுக்குப் பயப்படறவங்க, சக உயிர்களை நேசிக்கறவங்க), யார் பணமுள்ளவரோ அவர்களுக்கு (சிசேரியன் போன்று) விலை உயர்ந்த சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.

   எனக்கு ஒரு வித்தியாச அனுபவம் 16 வருடங்களுக்கு முன் பெங்களூரில் ஏற்பட்டது. என் பையன் பிறந்தபின், அந்த டாக்டருக்கு ஒரு பரிசை, நான் வெளி'நாட்டிலிருந்து பயணம் செய்து அங்கு சென்றபோது தந்தேன். அதற்காக மட்டும்தான் அவரைப் பார்த்தேன். அதை வாங்கிக்கொண்டு, கன்சல்டேஷன் ஃபீஸ் 150 ரூபாய்க்கு எழுதிக்கொடுத்தார் (அதையும் செலுத்தினேன்).

   இந்த பிளாக் எழுதுபவர்கள், கிசு கிசு பாணியிலாவது நல்ல மருத்துவமனை, மோசமான மருத்துவமனை என்று எழுதலாம். மற்றவர்கள் சுதாரிச்சுக்க சுலபமா இருக்கும்.

   Delete
  2. இன்னொண்ணும் நீங்க பார்க்கணும். எஞ்சினீயர் ஆவதற்கு (மிகக் குறைந்த அறிவுத்திறன் உள்ளவர்கள், தேர்வு பிரகாரம், 40-50% வாங்கியவர்கள்) கிட்டத்தட்ட 2 லட்சம் செலவாகிறது என்றால் (வெட்டியாக இருப்பவர்களுக்கு இது 15 லட்சமாகலாம்), மருத்துவராக ஆவதற்கு, 1 1/2 கோடி செலவாகிறது. (இன்னும் அதிகமாகலாம்). அதற்கு அப்புறமும், கிட்டத்தட்ட அடிமையாக 3-5 வருடங்கள் பணி செய்யணும் (குறைந்த சம்பளத்தில்). அப்புறம் எப்படி நாம, 'சேவை', 'இடியாப்பம்'னுலாம் சொல்லலாம்?

   மருத்துவம் ஒரு தொழில். அதற்கு உரிய விலையை நோயாளிகள் கொடுக்கவேண்டும். சிலர், அதனை 'சேவையாகவே எண்ணி, குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கிறார்கள். அதனை எக்செப்ஷன் என்றுதான் நாம் நினைக்கவேண்டும்.

   'கழுகு' படம் எடுத்தால், சரி சரி.. தொலைக்காட்சியிலேயே பார்த்துக்கொள்ளலாம், 'ஹங்கர் கேம்ஸா' - டிவிடி வரட்டும், ரஜினி படமா, 1000 ரூ செலவு பண்ணி டிக்கெட் எடு என்று நினைக்கும் நாம், பெரிய பெரிய மருத்துவமனையை நம்பி நாடும்போது செலவழிப்பதில் என்ன தயக்கம்?

   எனக்கு சரவண பவன் வேணும், ஆனால் கையேந்தி பவன் விலையில, அந்த சௌகரியத்தோட என்று எப்படி எண்ணமுடியும்?

   இது ஒரே பிரச்சனையின் இன்னொரு கோணம்.

   Delete
 19. தான் அவர்களின் சம்பள ஒப்பீடு எனக்கு உடன்பாடில்லை
  சம்பாதிப்பது மட்டுமே நோக்கமென்றால் அவர் ஏன் டாக்டர் ஆகிறார் ?
  சம்பாதிப்பதற்கென எத்தனையோ வழிகள் உள்ளனவே ?

  ReplyDelete
 20. //கடவுளுக்கு இணையாக கருதக் கூடிய ஒரு தொழில் இருக்குமாயின் அது மருத்துவ துறை தான். அந்த துறையில் தான் இப்படி பட்ட புல்லுருவிகளும் உள்ளனர் !//

  நிறைய புல்லுருவிகள் ஊடுருவி விட்டனர் மருத்துவத் துறையில். பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கும் மருத்துவர்கள்/ மருத்துவமனைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள்.

  மிகவும் கவலைக்குரிய விஷயம் மோகன்.

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு.

  தொடருங்கள்...!

  ReplyDelete
 22. //பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம் !//

  நுகர்வோர் நீதிமன்றங்களின் கீழ் மருத்துவத்துறையை கொண்டு வந்த பின் இது தான் நிலை

  ReplyDelete
 23. //நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே. இது மருத்துவர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் நம்பிக்கையை தங்கள் சுய நலத்துக்காக குலைப்பது எப்படி சரியாகும்? மருத்துவர்கள் இதனை உணர்ந்து இப்படி அனாவசியமாக பயமுறுத்தாமல் இருப்பது நல்லது !
  //

  நுகர்வோர் நீதிமன்றங்களின் கீழ் மருத்துவத்துறையை கொண்டு வந்த பின்னர், நோயாளிக்கு ஏற்படக்கூடிய அனைத்து பின் விளைவுகளையும் விளக்க வேண்டும் என்பது அவசியமாகிறது

  எனவே இதை தவிர்க்க முடியாது

  இதை தவிர்க்க வேண்டும் என்றால் மருத்துவத்துறை நுகர்வோர் நீதிமன்றங்களின் கீழ் இருந்து அகற்றப்பட வேண்டும்

  ReplyDelete
 24. நோய் ஆரம்பத்தில் இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்யக்கூறினால் நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள்

  ஒரு வேளை

  செய்யாமல் விட்டு பிறகு பிரச்சனை ஆனால் , "முதலிலேயே டாக்டரிடம் காட்டினேன். அவர் தான் ஒன்றும் ஆகாது மருந்து போதும் என்றார், இப்ப பிரச்சனை ஆகி விட்டது" என்று கூறுவார்கள்

  அவ்வளவே

  ReplyDelete
 25. இந்த பஸ் முழுவதும் படித்து பாருங்கள்


  சிசேரியன்

  உதாரணம் : Kavitha Gajananan - டாக்டர் இல்ல இல்ல...... எனக்கு வலியே எடுக்கல.. :) , நார்மல் டெலிவரிக்கு சான்ஸே இல்லை.. ஆனா எனக்கு நார்மல் டெலிவரி தான் ஆகும்னு சொல்லி, பல முறை சொன்ன தேதியில் டாக்டரை சென்று பார்த்தும் , உனக்கு நார்மல் டெலிவரி தான் வலி எடுத்தால் தான் வரனும், சும்மா வரதே ந்னு சொல்லி அனுப்பி வைத்துவிட்டு, பிறகு கடைசி நேரத்தில் , யாரவது ஒருவரை தான் காப்பற்ற முடியும்னு சொல்றதும் அதே டாக்டர்கள் தான் .

  நாங்களே ஏன் வலி வரலன்னு சந்தேகப்பட்டு போயி பார்க்கும் போது, டாக்டர்களுக்கு அந்த சந்தேகம் வரவே இல்லையே... கடைசி நேரத்தில் சிரமப்பட்டது நாங்கள் மட்டுமே .
  Nov 12, 2011

  ReplyDelete
 26. i dont comment on the salar part, i know few doctors who left the corporate hospitals because of the treatment cost is high and they dnt like to work there.

  6 lakh after he served in most respected and most risky profile.

  we mostly take second opinion and in major cases more than two opinion is been taken, in this case the wife is doctor and she cant even come and check. i would say she could have checked and taken right decision. i am not qualified enough in comment for medical treatments, but in case if its proven then i accept what u said.

  ReplyDelete
 27. நண்பர்களே உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி. குறிப்பாய் டாக்டர் புருனோ சொல்வது டாக்டர்கள் தரப்பும் நாம் அறிய உதவுகிறது

  மருத்துவர்களில் சிலர் மக்களின் பர்ஸ் மேல் தான் குறியாக இருக்கிறார்கள் என்கிற கருத்து நம்மில் பலருக்கு இருப்பது உங்கள் பின்னூட்டங்கள் மூலம் நிச்சயமாக தெரிகிறது.

  வேலை பளு காரணமாக இந்த பதிவுக்கு மட்டும் தனி தனியே பதில் தர வில்லை. மன்னிக்க !

  நேரம் ஒதுக்கி கமன்ட் எழுதிய அனைவருக்கும் நன்றியும் அன்பும் !

  ReplyDelete
 28. நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே

  என் அனுபவ உண்மை / பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்கள்.

  ReplyDelete
 29. வகுப்பில் tort தெரிந்து கொண்ட முதல் நாளிலிருந்தே கை துருதுருக்கும் வக்கீல்கள் இல்லையா? அதுவும் இது போல் உண்மையிலேயே நடக்கும் பொழுது? malpractice வழக்கு போடுவதில்லையா அங்கே?

  ReplyDelete
 30. என்னை வயிற்று போக்குக்காக மருத்துவ மனையில் சேர்த்து அவர்கள் மூன்று நாட்கள் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் உடம்பு தேவலையும் ஆகவில்லை மோசமும் ஆகவில்லை(ஒரு வேளை வெறும் தண்ணீரை ஏற்றி இருப்பார்களோ!?) பின்னர் நானே பொறுமை இழந்து சண்டை போட்டு எல்லா குழாய்களையும் பிடுங்கி எறிந்து விட்டு வந்து விட்டேன். பின்னர் என் குடும்ப மருத்துவர் இரண்டு நாட்களுக்கு வெறும் தயிர் சாதம் சாப்பிட சொல்ல, அது மாதிரியே செய்தவுடன் சரியாகி விட்டது. என் பதிவை நீங்கள் கீழ் வரும் சுட்டியில் காணலாம்.

  www.thanaithalaivi.blogspot.in/2011/09/blog-spot.html

  ReplyDelete
 31. இதைப் பற்றி ஒரு பதிவு தயாராகிறது. குறைகள் நிறைகள் எங்கும் உண்டு! தமிழ் நாட்டில் உள்ள மருத்துவர்கள் யாரும் வேறு உலகத்தில் இருந்து வரவில்லை...அவர்கள் உங்களில் ஒருவர்...

  தமிழ்நாடு என்ற சட்டியில் இருந்துதான் அவர் வருகிறார். அவர் அப்படிதான் இருப்பார்....

  ReplyDelete
 32. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 33. இதை போன்ற மருத்துவர்களிடன் நிறைய பட்டிருக்கிறேன். பணம் என்றால் பிணத்தை கூட திண்பார்கள்.

  ReplyDelete
 34. குடும்ப மருத்துவர்கள் இல்லாம காரணத்தால் , நோயாகிக்கும் டாக்டருக்கும் , நம்பிக்கை பாலம் இல்லை. நாம் சந்தேக கண் கொண்டு பார்க்க, அவர்கள், முன் எச்சரிக்கையுடன், முடிவுக்ள் எடுக்க, திண்டாடுவது, நோயாளிகள் தான்.

  பை பாஸ் செய்து கொள்ள வற்புறுத்துவது, மிக சாதாரணமாகி விட்டது. இதில் மாத்திர்ம் நாடேங்கிலும் ஒற்றுமை தான்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...