Monday, April 30, 2012

டிவியில் மேதின சிறப்பு நிகழ்ச்சிகள்.. எதை பார்க்கலாம்? லிஸ்ட்

விசேஷ தினம் வந்தால், நண்பர்கள் டிவி நிகழ்ச்சிகளையும், கூடவே வீடுதிரும்பலையும் நினைப்பது வழக்கமாகி விட்டது! :))

"டிவி எல்லாம் நான் பார்க்குறது இல்லை " என்று சொல்வது ஒரு Fashion ! ஆனாலும் இன்னொரு பக்கம் டிவி பாப்போம். நான் கூட அப்டி தான் (நம்ம ப்ளாக் படிக்காத) சில பேர் கிட்டே டிவி பாக்குறதில்லைன்னு சொல்வேன் !

டிவி சிறப்பு நிகழ்ச்சி லிஸ்ட் போடும் காப்பிரைட் நம்ம ப்ளாகுக்கு  மட்டும் தான் ! இதை பார்த்து யாரும் ஆரம்பிக்க படாது ! ஆமா சொல்லிட்டேன் !  :))

மஞ்சளில் தந்திருப்பது நான் பார்க்க போவது. மேலும் நீங்கள் பார்க்கலாம் என நான் பரிந்துரைப்பது. உங்கள் ரசனைக்கேற்ப நீங்கள் வேறு நிகழ்ச்சியும் பார்க்கலாம் (வேற ஒண்ணுமில்லை. அதெப்படி மஞ்சளில் போட்டு இதை பாருங்க என நீ சொல்லலாம் என சென்ற முறை ஒருத்தர் சட்டையை பிடிச்சு பின்னூட்டத்தில் உலுக்கிட்டார். சொம்பு பலமா அடி பட்டுருச்சு )

வாங்க நிகழ்ச்சிக்கு போவோம் !

விஜய் டிவி

காலை 9 மணிக்கு : அன்புள்ள அப்பா - ஜெயம் ரவி தன் தந்தை மோகன் பற்றி

காலை 10 மணிக்கு : ஓகே ஓகே ஒரு பார்வை

காலை 12 30மணிக்கு : நண்பன் நூறாம் நாள் விழா

மதியம் 3 மணிக்கு : வழக்கு எண் : 18 /9 : பல இயக்குனர்கள், பாலாஜி சக்திவேலை வாழ்த்தி பேசுகிறார்கள் (ஏம்பா பொங்கலுக்கு தமிழ் வருஷ பிறப்புக்கெல்லாம் கூட இந்த பட சிறப்பு நிகழ்ச்சி இருந்துச்சேப்பா? நீங்க இன்னும் முடிக்கலை? படம் ஓடுறதை விட அதிக நாள் சிறப்பு நிகழ்ச்சி ஓட்டுறீங்க ! ஆமா !)

மாலை 5 மணிக்கு : நண்பன் திரைப்படம் (நம்ம விமர்சனம் : இங்கு )

5 மணிக்கு போடும் படம் 10 மணி வரை ஓடுது ! அஞ்சு மணி நேரம் !!அப்ப எவ்ளோ விளம்பரம்னு பாத்துக்குங்க ! புது படம் வாங்க கொடுத்த காசை விஜய் டிவி யும் சம்பாதிக்க வேணாமா?

இரவு 10 மணிக்கு: அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ( அஜீத் பிறந்த நாளும் அதுவுமா காலை முதல் இரவு வரை விஜய் குறித்த நிகழ்சிகள் என்று பேர் வந்துட கூடாதேன்னு balance பண்றாங்கோ !!)

சன் டிவி : 

காலை 6 . 45 மணிக்கு : சுகி சிவம் மே தினம் பற்றி பேசுகிறார்

காலை 7 மணிக்கு : நடிகர் நடிகைகளின் முதல் சம்பளம்

காலை 8 மணிக்கு : சிரிப்பு கொண்டாட்டம் (சின்னி ஜெயந்த், சொர்ணமால்யா பங்கு "பெரும்" காமெடி)

காலை 8 .30 மணிக்கு : வடிவேலு மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்

காலை 10 மணிக்கு : ஓகே ஓகே : படத்தில் விடுபட்ட காமெடி காட்சிகள் (நிச்சயம் பாக்கணும்)

காலை 11 மணிக்கு : முனி காஞ்சனா பார்ட் - 2 திரைப்படம்

மதியம் 2 மணிக்கு சிறப்பு திரைப்படம் : ராஜ "பட்டை" சே ! ராஜபாட்டை !( கணினிக்கே படத்தை பத்தி தெரியது பட்டைன்னு சரியா அடிக்குது ! இதையும் மீறி படத்தின் சில பகுதிகளை நீங்க பார்த்தா நடக்கும் விளைவுக்கு நாம் பொறுப்பல்ல !

மாலை 4 .30   மணிக்கு: கருணாஸ் புது படம் : சிறப்பு நிகழ்ச்சி

மாலை 5   மணிக்கு: கலாட்டா குடும்பம் : தங்கம் Vs செல்லமே டிவி சீரியல் குடும்பங்கள் கலந்து கொள்ளும் கேம் ஷோ (சீரியல் விரும்பி பார்ப்போர் இதனை பார்க்க கூடும்)

மாலை 6 மணிக்கு: போக்கிரி படம் (எத்தனாவது தடவை சார் போடுறீங்க??)

விஜய் டிவியின் நண்பன் படத்துக்கு எதிரா, சன்னில் அதே நேரத்தில் புது படமான ராஜ பாட்டை போடலை பார்த்தீங்களா? அது தான் சன்னின் டெக்னிக். நண்பன் Vs ராஜபாட்டை எனில் மிக எளிதா நண்பன் ஜெயிச்சிடும். சற்றே டப் பைட் கொடுக்க இன்னொரு விஜய் படமான போக்கிரி தான் ரைட்டு என முடிவு செய்துள்ளனர். வடிவேலுவின் சூப்பர் காமேடிக்காகவாவது அவ்வப்போது வருவோமில்ல. அதான் !

ஜெயா டிவி

காலை 7.30 மணிக்கு : மாலை பொழுதின் மயக்கத்திலே படம் சிறப்பு கண்ணோட்டம் (காலையில் முதல் நிகழ்சியிலேந்து ஆரம்பிச்சிடீங்களா?)

காலை 9 மணிக்கு : சீர்காழி சிவசிதம்பரம் வழங்கும் சிறப்பு தேன் கிண்ணம் (அவருக்கு பிடித்த பழைய பாடல்கள்)

காலை 11 .30 மணிக்கு : போடிநாயக்கனூர் கணேசன் - உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக சூப்பர் ஹிட் அதிரடி படம் (அப்டி தான் சொல்றாங்க) - ஹரி குமார் நடித்தது !

மதியம் 3 மணிக்கு : மனம் கொத்தி பறவை- சிவா கார்த்திகேயன் நடித்த படம். சிவா மற்றும் பட குழுவினர் பங்கேற்பு

மாலை 4 மணிக்கு : நடன இயக்குனர் ரகு வின் -50ஆவது வருட திரை அனுபவம் ஒட்டி பாராட்டு நிகழ்ச்சி

கலைஞர் டிவி

காலை 9 மணிக்கு : மே தின சிறப்பு கேம் ஷோ

காலை 10 மணிக்கு : பாஸ் என்கிற பாஸ்கரன் ( சந்தானம் இருந்தும் கூட, நயனுக்கு பயந்து நான் இந்த சேனல் பக்கம் அந்த நேரம் வர மாட்டேன்)

மதியம் 2 30 மணிக்கு : எடிசன் -2011ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள்

மாலை 5 மணிக்கு : ஸ்டன்ட் மாஸ்டர்கள் பேசுகிறார்கள்

மாலை 5 .30 மணிக்கு : விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ( நண்பன் விளம்பர இடைவேளையின் போது இங்கு வந்து விடலாம் !)

இரவு 9 மணிக்கு - மசாலா கபே பட குழு பேசுகிறது (இந்த சிறப்பு நிகழ்ச்சி மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்போம். அஞ்சலி சார் !)
****
நேயர்களே... சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் சேனல் மாற்றி மாற்றி கண்டு களியுங்கள் ! மனைவியிடம் கண்டபடி திட்டு வாங்கி மே தினத்தை கொண்டாடுங்கள் !

19 comments:

 1. எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்.அப்படியே பார்த்துடலாம். நன்றி

  ReplyDelete
 2. எதை பார்ப்பேன்னு தெரியலை. உங்க லிஸ்ட் கண்டிப்பா உதவியா இருக்கும்.

  ReplyDelete
 3. Anonymous6:13:00 PM

  விஜய் மட்டும் தான் நான் பார்ப்பேன் மோகன்...மே தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. எப்படியும் பகல் நேரத்தில் பார்க்க முடியாது. அலுவலகம் உண்டு! மாலை வீடு வந்து சேர்ந்து என்ன ஓடுகிறதோ அதை அப்பப்ப எட்டிப் பார்க்கலாம்! :)

  டி.வி. ரிமோட் நம்ம கையில வரதே இல்லை... :(

  ReplyDelete
 5. அன்பரே போக்கிரி அல்ல மாற்றப்பட்டு விட்டது காவலன்

  ReplyDelete
 6. என்சாய்.........எனக்கு ஆஃபிஸ் இருக்கு :(

  //"டிவி எல்லாம் நான் பார்க்குறது இல்லை " என்று சொல்வது ஒரு Fashion ! ஆனாலும் இன்னொரு பக்கம் டிவி பாப்போம். //

  நான் நிஜமாகவே பார்ப்பதில்லை. அவ்வளவு விளம்பரங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சிகளை பார்க்கும் பொறுமை இல்லாததே காரணம் :)

  ReplyDelete
 7. தமிழ் மணத்தின் திரை மணத்தில் முதலாம் இடுகையாக இவ்விடுகை


  சூடான சினிமா இடுகைகள்

  டிவியில் மே தின சிறப்பு நிகழ்சிகள்.. எதை பார்க்கலாம்? லிஸ்ட்

  மோகன் குமார்

  ReplyDelete
 8. நண்பன் பார்க்கலாம் என்று ஐடியா.

  ReplyDelete
 9. வடிவேலு வெடிவேலுவாக் கலக்கின நிகழ்ச்சியை சன்னில் பார்த்தோம்.. விடுபட்ட காமெடியும் செமயாத்தான் இருந்தது..

  ReplyDelete
 10. நன்றி ராம்வி மேடம். ரொம்ப நாள் கழிச்சு எட்டி பார்க்கிறீர்கள்

  ReplyDelete
 11. நன்றி கோவை டு தில்லி மேடம்

  ReplyDelete
 12. ரெவரி: உண்மை தான் விஜய் நல்ல நிகழ்ச்சிகளாக காண்பிக்கிறார்கள் !

  ReplyDelete
 13. வெங்கட் : கருத்துக்கு நன்றி மே 1 இந்தியா முழுதும் தானே லீவு? அதிலும் நீங்கள் அரசு ஊழியர் வேறு ! எப்படி அலுவலகம் உள்ளதோ புரிய வில்லை வெங்கட் !

  ReplyDelete
 14. PREM.S said...
  அன்பரே போக்கிரி அல்ல மாற்றப்பட்டு விட்டது காவலன்

  *****

  ஆம் பிரேம் முதலில் போக்கிரி என்றனர். பின் காவலன் ஆக்கி விட்டனர். காவலன் வரும் போது தியேட்டர் கிடைக்காமல் திண்டாட விட்ட சண் டிவி இன்று அதை ஒளி பரப்புகிறது !

  ReplyDelete
 15. ஆதி மனிதன் said...
  For us "Labor day" is on May-28.

  ********

  தகவலுக்கு நன்றி ஆதிமனிதன்

  ReplyDelete
 16. ரகு: என்னாது உங்களுக்கும் ஆபிசா? :((

  ReplyDelete
 17. நன்றி ஸ்ரீராம். விளம்பரங்களுக்கு இடையே முழுதும் பார்த்தீர்களா என அறியேன்

  ReplyDelete
 18. அமைதி சாரல் : நிகழ்ச்சி பார்த்ததோடு இங்கும் பகிர்ந்தது மகிழ்ச்சி தருகிறது நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...