Friday, April 27, 2012

டிவியில் கலக்கி வரும் பதிவர்கள்; உங்களுக்கும் வாய்ப்பு !


தமிழகத்தில் சமீபத்தில் துவக்கப்பட்ட செய்தி சேனல் சத்யம் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் தினசரி காலை ஒன்பது முதல் பத்து மணி வரை ஏதேனும் ஒரு நல்ல தலைப்பில் ஒரு மணி நேரம் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் தொடர்ந்து நம் பதிவர்கள் பலர் பங்கேற்று அசத்தி வருகிறார்கள்.


இரு நாட்களுக்கு முன் கிழக்கு பதிப்பகம் பத்ரியும் டோண்டு ராகவனும் " சாதி வாரி கணக்கெடுப்பு தேவையா?" என்கிற தலைப்பில் விவாதம் செய்தனர். நேற்று ஏப்ரல் 26 அன்று சென்னை யூத் பதிவர்களின் வழிகாட்டி, பிரபல தொழிலதிபர், பதிவர், கவிஞர், எழுத்தாளர் KRP செந்தில் அவர்களும் அஞ்சாசிங்கம் செல்வினும் " காதல் திருமணம் சிறந்ததா? பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா? " என்று விவாதம் செய்தனர். நீங்கள் இதனை பார்க்க தவறி இருந்தால் விரைவில் நிகழ்ச்சி யூ டியூப் மூலம் வலையேற்றம் செய்யப்படும் என தொழிலதிபர் KRP செந்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வரும் ஞாயிறு காலை ஒன்பது முதல் பத்து மணி வரை "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு நல்லது செய்கிறது/ தேவையில்லை; கேட்டது செய்கிறது" என பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமாரும், வீடுதிரும்பல் மோகன் குமாரும் பங்கேற்கிறார்கள்.

அடியேன் "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு தேவை; அது நல்லது செய்கிறது" என்று பேச உள்ளேன். வீடுதிரும்பலை தொடர்ந்து வாசிக்கும் தங்களிடம் இரு கோரிக்கை :

i ) ஞாயிறு காலை என்பதால் வீட்டில் நீங்கள் இருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. எனவே நிகழ்ச்சியை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள். மேலும் நிகழ்ச்சியில் போன் மூலமும் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கலாம். தற்போது தான் பிரபலமடையும் டிவி என்பதால் எளிதில் தொலைபேசி லைன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் குரலை நீங்கள் டிவியில் கேட்க, உங்கள் நண்பர்களுடன் போனில் பேச, எங்களை கலாய்க்க ஒரு வாய்ப்பு !
ஒரு வேளை போனில் பேச முடியாவிடினும் கூட நிகழ்ச்சி பார்த்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்

 ii) "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு தேவை; அது நல்லது செய்கிறது" என்ற தலைப்பிற்கு நல்ல பாயிண்டுகள் இருந்தால் பின்னூட்டத்திலோ, snehamohankumar@yahoo.co.in என்கிற எனது மெயில் ஐ.டி க்கோ சொல்லுங்கள்.

ஒரு நபரால் சில கோணங்களில் மட்டும் தான் யோசிக்க முடியும். உங்களின் வெவ்வேறு கருத்துகள் சேர்ந்தால் அது வாதத்துக்கு வலு சேர்க்கும். பல முறை டிவி நிகழ்ச்சிகளில் பேசும் போதும் பயன்படுத்தும் யோசனை தான் இது. நண்பர்கள் சொல்வதில் மனதுக்கு சரி என படுவதை நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம்.

நம்ம மெட்ராஸ் பவன் சிவகுமாரை நேரில் பார்த்து பேசிருக்கீன்களா? மனுஷன் ஆணிதரமா விவாதம் செய்வார். "வக்கீலா ஆகவேண்டிய ஆள்யா நீ" என அடிக்கடி சொல்வேன் நான். அவரோடு விவாதம் செய்வதை நினைத்தால் தான் basement ஆடுது !

எனவே அவருக்கு ஆதரவு பாயிண்டுகளாக தராமல் நமக்கு தேவையான பாயிண்டுகளை அவசியம் தாருங்கள் ! பின்னூட்டத்திலோ மெயிலுக்கோ உங்கள் கருத்துகளை எழுதுங்கள் !

*******

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சத்யம் தொலைக்காட்சியில் பேச உங்களுக்கு விருப்பமெனில் கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

அஞ்சாசிங்கம்: 9444125010
பிரபாகரன்: 8015899828
*******


சத்யம் சேனல் பலர் வீடுகளில் தெரியவே செய்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த பின் எங்கள் டிவியில் தேட, அந்த சேனல் இருப்பது தெரிந்தது.

இன்று அல்லது நாளை சத்யம் டிவி எந்த சேனலில்/ எந்த எண்ணில் வருகிறது என்பதை உங்கள் டிவியில் பார்த்து வைத்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் வீட்டு டிவியில் சத்யம் டிவி வரவில்லை எனில் சத்யம் டிவி நிகழ்ச்சிகளை இணையத்திலும் பார்க்கலாம். அதற்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள் .

இதுவரை அரட்டை அரங்கம், நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேசி உள்ளேன். அங்கெல்லாம் பேச்சாளர்களே முப்பது பேருக்கு மேல் இருப்பர். நமக்கு பேசும் வாய்ப்பு குறைவாய் தான் கிடைக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தலைப்பை ஆதரித்து ஒருவரும், எதிர்த்து ஒருவரும் மட்டுமே பேசுகிறார்கள். ஒருங்கிணைப்பாளராக டிவி நிருபர் ஒருவர் உள்ளார். அவ்வளவு தான் ! நிகழ்ச்சியும் ஒரு மணி நேரம் வருவதால் நம் கருத்துகளை நிறைய சொல்ல வாய்ப்பு கிடைக்கும் !

உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்குகிறோம் !

மறந்து விடாதீர்கள் வரும் ஞாயிறு காலை ஒன்பது மணி: சத்யம் தொலைக்காட்சி !

44 comments:

 1. உங்களுக்கும், சிவாவுக்கும்
  வாழ்த்துக்கள் அண்ணே!

  சத்யம் தொலைக்காட்சியில் பதிவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பது மகிழ்வான விசயம்:))

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 3. Is this channel available on DISH TV( ZEE network) ?

  If so, may I know the channel number?

  Thanks

  ReplyDelete
 4. ஏகப்பட்ட வாழ்த்துக்கள்..பகிர்வுக்கு நன்றிங்க.

  Cast Away (2000) - திரைப்பார்வை

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அசத்துங்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. முதல்ல பத்திரிக்கைகள் இப்ப டிவியும் நம்மை கவனித்துக்கொண்டு இருக்கின்றது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் பொறுப்பா எழுதனும் என்கிற எண்ணம் வருகிறது....

  ReplyDelete
 9. பதிவர்களுக்கான களம் பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் தொடர்ந்து அமைந்து வருவது சந்தோசமான விஷயம்தான். தமிழ் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாழ்த்துகள் கலக்குங்க.....

  பதிவர்களுக்கு வாய்ப்பு தருவது நல்ல விஷயம்.

  எங்களுடையது TATA SKY. 11 தமிழ்சேனல் தான் வரும். இணையத்தில் தான் பார்க்க வேண்டும். இல்லையென்றால் பிறகொரு நாள் பகிருங்கள்.

  ReplyDelete
 12. Anonymous6:56:00 PM

  வாழ்த்துக்கள்... அடித்து ஆடுங்கள்...

  "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு தேவை; அது நல்லது செய்கிறது" என்ற தலைப்பிற்கு நல்ல பாயிண்டுகள் இருந்தால்"...

  C'mon Mohan...உங்களுக்கே தெரியும் ஒரு பிரயோஜனமும் கிடையாதுன்னு...-:)

  DEBATEல COUNTER ATTACK தான் எப்பவும் ஜெயிக்கும்...

  உங்க நண்பரை/எதிரியை முதல்லையே ATTACK பண்ணுங்க...

  மத்ததுலாம் AUTOMATIC ஆ நடக்கும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. Anonymous7:14:00 PM

  >>நம்ம மெட்ராஸ் பவன் சிவகுமாரை நேரில் பார்த்து பேசிருக்கீன்களா? மனுஷன் ஆணிதரமா விவாதம் செய்வார். "வக்கீலா ஆகவேண்டிய ஆள்யா நீ" என அடிக்கடி சொல்வேன் நான். அவரோடு விவாதம் செய்வதை நினைத்தால் தான் basement ஆடுது !

  அன்புள்ள மோகன் குமார்,

  என்னது இது சின்ன புள்ளத்தனமா :-)
  ஆஞ்சநேயர் மாதிரி உங்கள் பலம் உங்களுக்கே தெரியவில்லை :-)

  BTW, இந்த வார விகடனில் (என் விகடன் - சென்னை) மெட்ராஸ் பவன் சிவகுமார் பற்றி வந்துள்ளதே, பார்த்தீர்களா ?

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. நிச்சயமாகப் பார்க்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. சத்யம் செய்திச் சேனல் வருவதை சில மாதங்களுக்கு முன்னாலேயே பார்த்தேன். ஆனால் சேனல் தொடர்ந்து பார்ப்பதெல்லாம் இல்லை. மேலும் கேபிளில் மிகவும் பின் வரிசையில் தருகிறார்கள். பலருக்கு க்ளாரிட்டியே இருக்காது. என்னைப் பொறுத்தவரை அந்நேரத்தில் பார்க்க முடியாது. 8 To 10 பவர் கட்!
  சத்யம் சேனலைத் தொடர்பு கொள்ள என்ன நம்பர் என்று சொல்லியிருக்கலாம். நார்மல் சார்ஜா என்றும் சொல்லியிருக்கலாம்!!!

  //உங்க நண்பரை/எதிரியை முதல்லையே ATTACK பண்ணுங்க.//

  ஐயையோ....வன்முறை எல்லாம் வேண்டாம்...! அப்புறம் சிவசங்கர் பாபா-யாகவா முனிவர் பேட்டி மாதிரி ஆயிடும்! (சும்மா தமாஷ்!)

  ReplyDelete
 17. Congrats Mohan. Is it a live program? Will try to watch if it gets loaded in net. Otherwise please load it in youtube and share the link.

  BTW, I will still be the supporter for Madras Bhavan Sivakumar.

  //"கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு நல்லது தேவையில்லை; //

  ReplyDelete
 18. KRP அண்ணே வணக்கம் ஆம் உண்மை தான் சத்யம் டிவி வலை பதிவர்களை தொடர்ந்து ஆதரிப்பது மகிழ்ச்சிக்குரியது
  ***

  ReplyDelete
 19. மாதவா: விசாக்கில் எப்படி என தெரியலையே ! எளிய வழி.. உங்கள் வீட்டு சானலில் வருகிறதா என பார்ப்பது தான். நான் டிஷ் டிவி யில் தெரியுமா என சில நண்பர்களிடம் கேட்டுள்ளேன் விபரம் தெரிந்தால் சொல்கிறேன்

  ReplyDelete
 20. ***
  நன்றி குமரன்

  ReplyDelete
 21. ***
  நன்றி விக்கியுலகம்

  ReplyDelete
 22. ***
  நன்றி ஜனா சார்

  ReplyDelete
 23. நன்றி கலகுமரன்

  ReplyDelete
 24. சுரேஷ்: உண்மை தான். பதிவர்களை அனைவரும் "கவனிக்கிறார்கள்"

  ReplyDelete
 25. // ! சிவகுமார் ! said...
  பதிவர்களுக்கான களம் பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் தொடர்ந்து அமைந்து வருவது சந்தோசமான விஷயம்தான். தமிழ் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!//

  ***********

  அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்ற அளவு ஆயிட்டீங்களா? நாளைக்கு பாத்துக்குறேன் உங்களை :))

  ReplyDelete
 26. கோவை நேரம் : நன்றி சார்

  ReplyDelete
 27. கோவை2தில்லி : நன்றி மேடம் இணையத்தில் பாருங்கள். பின் காணொளி கிடைத்தால் நிச்சயம் பகிர்வேன்

  ReplyDelete
 28. ரெவெரி said...
  DEBATEல COUNTER ATTACK தான் எப்பவும் ஜெயிக்கும்...உங்க நண்பரை/எதிரியை முதல்லையே ATTACK பண்ணுங்க.

  ***

  அய்யையோ ! நண்பரை அட்டாக் பண்ணுவதா? நிகழ்ச்சியில் நன்கு பேசுவதை விட நட்பு முக்கியம் சார் ! ஒரு வேளை இருவரும் அடித்து கொண்டாலும் அது பேசி வைத்து கொண்டதாய் தான் இருக்கும்

  தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 29. பாலஹனுமான்: நன்றி; பயம் எல்லாம் கிடையாது. ஒன்றாம் வகுப்பு முதல் தொடர்ந்து மேடை ஏறி வருகிறேன். மேடை பயம் எல்லாம் என்றும் கிடையாது

  இப்படி சொன்னாலாவது உங்களிடமிருந்தெல்லாம் பேச சில நல்ல பாயின்ட் கிடைக்கும் என்று பார்த்தேன். ஒருத்தரும் தலைப்பை ஒட்டி ஒரு பாயிண்ட்டும் தர மாட்டேங்குறீங்க :))

  ReplyDelete
 30. அப்பா துரை: நன்றிங்கோ

  ReplyDelete
 31. அமைதி சாரல்: நன்றி

  ReplyDelete
 32. முரளி தரன்: அப்பா: பாக்குறேன்னு சொன்னது நீங்க ஒருத்தர் தான். ஸ்பெஷல் நன்றிகள்

  ReplyDelete
 33. ஸ்ரீராம்: சத்யம் டிவி எங்க வீட்டில் ஓரளவு நல்லா கிளியரா தெரியுது. உங்கள் வீட்டில் அந்த நேரம் கரண்ட் கட் எனில் பார்க்க முடியாது தான் :(

  ReplyDelete
 34. ஆதி மனிதன்: நன்றி. பதிவர்கள் பலரின் கருத்தும் நான் பேசுவதுக்கு எதிராய் தான் இருக்கும்

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள் :) அவசியம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 36. வாழ்த்துகள் மோகன்...

  இணையத்தில் தான் பார்க்க வேண்டும்!.... பார்க்கிறேன்.

  ReplyDelete
 37. வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. 2/5 தேதியிட்ட விகடன் இதழில் வந்துள்ள இந்தியா சிமென்ட் சீனிவாசன் பேட்டி அளித்துள்ள கிரிக்கெட் கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் பேச விவரம் கிடைக்கலாமோ....பார்த்தீர்களோ...

  ReplyDelete
 39. //ஸ்ரீராம். has left a new comment on your post "டிவியில் கலக்கி வரும் பதிவர்கள்; உங்களுக்கும் வாய்...":

  2/5 தேதியிட்ட விகடன் இதழில் வந்துள்ள இந்தியா சிமென்ட் சீனிவாசன் பேட்டி அளித்துள்ள கிரிக்கெட் கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் பேச விவரம் கிடைக்கலாமோ....பார்த்தீர்களோ... //

  Yes. Read that interview. Thanks a lot for your concern and advise Sriram !

  ReplyDelete
 40. butterfly Surya said...
  வாழ்த்துக்கள் :) அவசியம் பார்க்கிறேன்.

  ******
  அட சூர்யா ! நன்றி

  ReplyDelete
 41. நன்றி ரத்னவேல் ஐயா

  ReplyDelete
 42. நன்றி வெங்கட்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...