Thursday, April 5, 2012

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி : அற்புத அனுபவம்

திருச்சூருக்கு மிக அருகே உள்ள டூரிஸ்ட் இடங்களில் முக்கியமானது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. திருச்சூரில் இருந்து சாலக்குடி வரை ஒரு மணி நேர பேருந்து பயணம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் சாலக்குடி என்று சொல்வார்கள். ஆனால் சாலக்குடி என்பது மலைக்கு கீழே உள்ள ஊர். சாலக்குடியிளிருந்து ஒன்று அல்லது ஒண்ணரை மணி பேருந்து பயணத்தில் அதிரப்பள்ளி அடையலாம்.

அதிரப்பள்ளி செல்ல காலை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அப்போது கிளம்பி விடுவது நல்லது. வெய்யில் வந்தால் சற்று சிரமம் ஆகிடும். நான் ஏழு மணிக்கு திருச்சூரில் பேருந்து ஏறினேன்.


திருச்சூர் டு சாலக்குடி அருமையான ரோடு. நேஷனல் ஹைவே. எனவே பயணத்தில் எந்த சிரமும் இல்லை.

பேருந்தில் உள்ள நடத்துனர், ஓட்டுனர், ஏறுவோர் என எங்கும் நீக்கமற வேஷ்டி அணிந்துள்ளனர்.

பேருந்தில் கண்டக்டர்கள் நம் ஊர் போல விசில் அடிப்பதில்லை. டிரைவர் தலைக்கு மேல் சின்ன மணி ஒன்று உள்ளது. இது கயிறில் கட்டப்பட்டு அதன் மறுமுனை பேருந்து கடைசி வரை செல்கிறது. கண்டக்டர் அந்த கயிறை பிடித்து இழுத்தால் முன்னே டிரைவருக்கு ஒலி கேட்டு பேருந்தை நிறுத்துகிறார் அல்லது கிளப்புகிறார்.

 பேருந்து செல்லும் சாலைகளில் சில வீடுகள் மிக பாதாளத்தில் உள்ளன. அதற்கு அடுத்த வீடோ மிக உயரத்தில் உள்ளது. சற்று மலை பிரதேசம் என்பதால் இப்படி உள்ளது போலும் !

எட்டு மணிக்கு சாலக்குடி அடைந்து பின் அதிரப்பள்ளி பேருந்தை பிடித்தேன்.

திருச்சூர் டு சாலக்குடி செல்லும் வழியில் ஆங்காங்கு "Toddy Shop" என்றும் தமிழில் கள்ளு கடை என்றும் போர்டுகள் !!

வழி எங்கும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி பேனர்கள் இருந்தது. காங்கிரஸ் பேனரில் மருந்துக்கும் ராகுல், சோனியா அல்லது மன்மோகன் படங்களை காணும் ! முழுக்க கேரள தலைவர்கள் படம் மட்டுமே இருந்தது ஆச்சரியமாய் இருந்தது.

சாலக்குடியில் மட்டுமல்ல கேரளா முழுதுமே லாட்டரி விற்பனை படு ஜோராய் நடக்கிறது (அங்கு லாட்டரி தடை செய்யப்படவில்லை !) நூறு ரூபாய்க்கெல்லாம் லாட்டரி வாங்குவோரைப் பார்த்தேன்.சாதாரண ஆட்கள் இவ்வளவு ரூபாய் இதற்கு செலவழிக்கிறார்களே என வருத்தமாய் இருந்தது.

லாட்டரி விற்கும் கண் தெரியாதவர் கண்டகடரிடம் பேசி கொண்டு நிற்கிறார்

காலை ஒரு தேநீர் மட்டும் அருந்தி விட்டு பஸ் ஏறி விட்டேன். மலை வேறு ஏறியதால் வயிற்றை புரட்டி விட்டது. சாப்பிட்டுட்டு ஏறினாலும் பிரச்சனை ! வெறும் வயிறாய் இருக்க வேண்டாம் என தேநீர் அருந்தி
விட்டு சென்றாலும் பிரச்சனை. எப்படி தான் மலை ஏறுவது என்று இன்னும் புரிந்த பாடில்லை.

சாலக்குடி பேருந்து நிலையத்தில் "இஞ்சி மிட்டாய் ஐந்து ரூபாய்க்கு இரண்டு" என விற்றார் ஒருவர். அதை வாங்கி வைத்திருந்தேன். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஓரளவு சமாளித்தேன். இறங்கிய பின் சற்று வாமிட் செய்ததும் உடல்நிலை சரியானது !

செல்லும் போதே பஸ் கண்டக்டர், அதிரப்பள்ளி வரை தான் நிறைய பேருந்து உண்டு என்றும், வாழச்சளுக்கும், அங்கிருந்து கிளம்பவும் பேருந்து அதிகம் இல்லை என்றும் சொன்னார். அவரே தன் பேருந்து ஒரு மணியில் திரும்ப வருமென்றும் அப்போது அதில் வந்து ஏறி கொள்ளுமாறும் சொன்னார். அது ஒரு அரசு பேருந்து தான் ! அவர் என்னிடம் அதை சொல்லியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை ! சக மனிதர் மேல் உள்ள அக்கறையில் இதை சொன்னார். தமிழர்- மலையாளி என்ற வித்யாசம் பாராமல் !

குட்டீஸ் கார்னர்
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும், வாழச்சல்லுக்கும் சேர்த்து ஒரே டிக்கட் தான். அதாவது எங்காவது ஒரு இடத்தில் டிக்கெட் வாங்கினால் அடுத்த இடத்தில வாங்க தேவையில்லை. முதல் இடத்தில் வாங்கிய டிக்கெட் காண்பித்தால் போதும்


ஒரு மணி நேரத்திற்குள் வாழச்சல் சுற்றி விட்டு வெளியே வந்து பஸ்சுக்கு காத்திருந்தேன். சற்று நேரம் ஆகி விட்டது. பேருந்தை காணும். அப்போது அங்கு வந்த வேன் ஒன்றில் லிப்ட் கேட்க, அவர்கள் என்னை ஏற்றி கொண்டனர். அதிரப்பள்ளியில் இறக்கி விட்ட போது பணம் எடுத்து தர, "வேண்டாம்" என சிரிப்போடு கூறி விட்டு சென்று விட்டனர்.இவருக்கும் ஷாருக்குக்கும் எத்தனை வித்யாசம் ? :)
 ஷாரூக் கானின் பெரிய சைஸ் படம் போட்டு இம்மானுவேல் சில்க்ஸ் என்கிற நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. ஷாருக்கை கேட்டு கொண்டா அல்லது அவருக்கான விளம்பர பணம் தந்து விட்டா இதையெல்லாம் உபயோகிக்க போகிறார்கள் என யோசித்தேன். விசாரித்ததில் ஷாருக் இந்த கடையை வந்து திறந்து வைத்தாராம் ! ஐந்து லட்சம் சதுர அடியில் மிக பெரிய துணி கடையாம் !அய்யாசாமி கார்னர்

அய்யாசாமி ராஜாஜி சொன்ன மாதிரி "Less luggage More comfort " என்ற பாலிசி பாலோ செய்பவர். நிகழ்ச்சியில் பேச வேண்டுமென்பதால் ஷூ கொண்டு சென்றார். செருப்பு எடுத்து கொண்டு போகலை. எங்கு போனாலும் ஷூவில் போக வேண்டியதாயிற்று. இதனால் கால் எல்லாம் செம வலி கண்டுடுச்சு !


************
பொதுவாய் மலையாள பெண்கள் என்றாலே வெள்ளை நிறத்தில் இருப்பார்கள் என்கிற கருத்து உண்டு. இதற்கு மாறாக நம் ஊரை போலவே கருப்பு நிறத்திலும் நிறைய பெண்களை பேருந்திலும் தெருக்களிலும் பார்த்தேன்

பெண்கள் அநேகமாய் தலைக்கு குளித்து விட்டு, காதுக்கு இரு புறமும் கொஞ்சம் முடியை எடுத்து பின்னலுக்கு நடுவே ஒரு முடிச்சு போட்டு விட்டு, மீதம் முடியை லூசாக விட்டுள்ளனர். அநேகமாய் அனைத்து பெண்களும் இப்படி தான் இருந்தனர்.

வாழச்சல்
முதலில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியும் பின் வாழச்சல்லும் உள்ளது. நான் முதலில் வாழச்சல் சென்று இறங்கி விட்டேன். திரும்பி வந்து அதிரப்பள்ளி பார்க்கலாம் என.


வாழச்சல், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இருந்து ஓடும் நீர், சிறு ஆறு போல் இருக்க, அனைவரும் இறங்கி குளிக்க வசதி ஆக உள்ளது. சுற்றி தோட்டம் நிறைய உள்ளது.

இங்கு ஒரு நண்பர்கள் கூட்டம் மிக மகிழ்வாக குளித்து கொண்டிருந்தது.இந்த இரு நிமிடவீடியோவில் வாழச்சல் மற்றும் அதன் சுற்றுபுறம் பார்க்கலாம் !
*************
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை முதலில் பார்த்ததும் மனதில் தோன்றும் உணர்வு "ஆஆ !" . இந்தியாவில் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி தான் ! (முதலாவது கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி). இந்தியாவில் அகலமான நீர்வீழ்ச்சி என்றால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தானாம் !

இந்த வீடியோவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிக்கலாம் !ஒரே ஒரு வருத்தம். நீர்வீழ்ச்சி குறுக்கு வாட்டில் உள்ளது. அதன் ஒரு முனை வரை தான் நாம் நடக்க முடிகிறது.மறு முனைக்கு செல்ல முடியாது. இதனால் முழு அழகையும் ரசிக்க முடிவதில்லை. முழுதாய் பார்க்க நாம் அருவிக்கு கீழே இறங்கி செல்ல வேண்டும். செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது. ட்ரெக்கிங் போவது போல் சற்று சிரமப்பட்டு செல்லவேண்டும். மேலும் வெயில் வேறு ! பலரும் கீழே இறங்குவது இல்லை. (நானும் கூட !!). சிரமப்பட்டு இறங்கினால் நீர்வீழ்ச்சி அழகை கீழிருந்து ரசிக்கலாம்.
கீழே உள்ள படத்தில் உள்ளவர்கள் கோட்டயத்தில் இருக்கும் டாக்டர்கள். அனைவரும் தமிழர்கள். அதிரபள்ளியில் சந்தித்து பேச ரொம்ப மகிழ்வாய் இருந்தது

அதிரபள்ளி நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது. இதிலும் மக்கள் குளிக்கின்றனர். ஆனால் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாது. தண்ணீர் மிக வேகமாக கொட்டுவதால் அதன் அழகை ரசிக்க மட்டும் தான் முடியும்.

படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்


அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நிறைய தமிழ் குரல் கேட்க முடிகிறது. சேலத்திலிருந்து வந்த கல்லூரி மாணவர்கள் நீர்வீழ்ச்சியை பார்த்து விட்டு, 'டேய் வாடா நாம செத்து செத்து விளையாடலாம்" என கிண்டல் செய்து பேசியதை கேட்க முடிந்தது.

சாலக்குடி டு அதிரப்பள்ளி செல்ல துவங்கினால் மலை பிரதேசம் என்பதால் நிறைய செல்போன்கள் சிக்னல் கிடைக்காது. அப்பாடா ! நிம்மதி என நினைத்தால் திடீரென சிக்னல் வந்துடுது ! சிக்னல் வந்து வந்து போகுது !

தமிழ் பெயரில் மட்டும் ஒரு லாட்ஜ் மருந்துக்கும் மலையாள எழுத்து இந்த போர்டில் இல்லை. 

சாலக்குடிக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும் இடையே உள்ள தூரத்தில் சில டூரிஸ்ட் இடங்கள் உள்ளன. குறிப்பாய் பட்டர்பிளை பார்க் மற்றும் ஒரு Water based theme park .

சிலர் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஹோட்டலில் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி அருவியின் அழகையும் குளுமையும் ரசித்து விட்டு வருகின்றனர்.

நான் சென்ற மார்ச் மாதம் குறைந்த நீர் இருந்ததாக சொன்னார்கள். அதுக்கே இவ்வளவு நீர் ! நிறைய நீர் இருக்கும் போது அதிரம்பள்ளி எப்படி இருக்கும் ! நினைத்தாலே அருமையாக உள்ளது !

அதிரப்பள்ளி வாழ்வில் தவற விடாமல் சென்று வர வேண்டிய அழகிய இடம் !!

**********
டிஸ்கி : நாளை முதல் மூன்று நாள் விடுமுறை என்பதால், வியாழன் அன்று பயண கட்டுரை வெளியிடப்படுகிறது
**********
உயிர்மை மார்ச் 2, 2012 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை
**********
கேரள பயணக்கட்டுரை பிற பகுதிகள் வாசிக்க லிங்க் இதோ:

முதல்பகுதி : கேரள பயணகட்டுரை: டிரைலர்+எப்படி நடத்தினர் என்னை?


2-ம் பகுதி: கேரளாவில் பார்த்த புது மம்மூட்டி படம்: கேரள தியேட்டர்கள் எப்படி?

மூன்றாம் பகுதி: ஒரு டேமும் இரு கோயில்களும்


நான்கு:20 ஆவது மாடியில் அற்புத சர்ச் டவர்

45 comments:

 1. அதிரம்பள்ளியும், கட்டுரையும் கொள்ளை அழகு...

  அய்யாச்சாமியின் போஸ் அருமை...

  ReplyDelete
 2. / இந்தியாவில் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி தான் ! (முதலாவது கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி). இந்தியாவில் அகலமான நீர்வீழ்ச்சி என்றால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தானாம் ! /

  தகவல்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 3. நூறு ரூபாய்க்கு லாட்டரி வாங்கனதுக்கே ஆச்சர்யமா...?

  ஆயிரக்கணக்குல வாங்குறவ கோஷ்டில்லாம் இருக்காஙக பாஸ்.. பை த வே, தமிழ்நாட்டிலும் லாட்டரி விற்பனை ”முறைப்படி” நடக்கிறது.
  :-)

  ReplyDelete
 4. அதிரப்பள்ளியின் அழகை ரசித்தோம். தகவல்களும் உபயோகமாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.

  ReplyDelete
 5. நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற அருமையான
  படங்களுடன் கூடிய பதிவு
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. அதிரம்பள்ளி பயணக்கட்டுரை அருமை... விவரங்கள் நன்று.

  புகைப்படங்களும் காணொளியும் போட்டு அசத்தறீங்க!

  பேருந்தில் மணி: நம்ம கோயம்புத்தூர்லேயே இப்படித்தானுங்! மணி அடிப்பாங்!....

  ReplyDelete
 7. புன்னகை மன்னன் படம் எடுத்த அருவி இது தான்..தற்போது ராவணன் படமும் இங்குதான் எடுக்கப்பட்டது.
  அப்புறம் அங்கு கள்ளு டேஸ்ட் பண்ணினீங்களா...அப்புறம் கேரளா டாஸ்மாக் சென்று பாருங்கள் ஒருமுறை...

  ReplyDelete
 8. எவ்ளோ அழகா வரிசையில் நின்னு பில் போட்டு வாங்கி வருவாங்க...

  ReplyDelete
 9. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு.

  ReplyDelete
 10. நல்லபல தகவல்களுடன் பதிவு சுவாரஸ்யம். வீடியோ உங்கள் பயணக் கட்டுரையின் சிறப்பம்சம்.

  ReplyDelete
 11. புகைப்படங்களை பார்க்கும்போதே போகவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. சந்தர்ப்பம் அமைய வேண்டும்.....பார்ப்போம்......

  ReplyDelete
 12. அழகான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மனதை விட்டு விலகாத இடம். உங்கள் வீடியோவில் காணும் போது செல்லவேண்டும் எனத் தோன்றுகின்றது.....

  ReplyDelete
 13. Peyare athiruthu! Paarkum aavalaik koduthathu padhivu!

  ReplyDelete
 14. arpudham. enakku erkanavae adhirappalliya paarkkanumnu aasai. adhai melum thoondi vitta nanbarukku..........................

  ReplyDelete
 15. arpudham. enakku erkanave adhirappalliya paakkanumnu kolla aasai. adhai melum thoondi vitta ungalukku......................... nandry.

  ReplyDelete
 16. சங்கவி said...
  அதிரம்பள்ளியும், கட்டுரையும் கொள்ளை அழகு...

  அய்யாச்சாமியின் போஸ் அருமை...

  ***

  நன்றி சங்கவி. பயண கட்டுரைகள் எப்போதும் உங்களை கவர்வது தெரிகிறது

  ReplyDelete
 17. ராமலக்ஷ்மி said...

  தகவல்களும் பகிர்வும் அருமை.

  ***

  நன்றி மேடம்

  ReplyDelete
 18. Raju N said...
  நூறு ரூபாய்க்கு லாட்டரி வாங்கனதுக்கே ஆச்சர்யமா...? ஆயிரக்கணக்குல வாங்குறவ கோஷ்டில்லாம் இருக்காஙக பாஸ்.. பை த வே, தமிழ்நாட்டிலும் லாட்டரி விற்பனை ”முறைப்படி” நடக்கிறது.
  :-)

  **

  ராஜு அப்படியா? நூறு ரூபாய் நோட்டு கொடுத்து லாட்டரி வாங்குவது தான் பார்த்தேன். நீங்கள் சொன்னது போல் உள்ளே இன்னும் சில நோட்டுகள் இருந்திருக்கலாம் ! லாட்டரி வாங்குவோர் பெரும்பாலும் தின சம்பளம் வாங்குவோர் என நினைக்கிறேன் அவர்கள் தங்கள் பணத்தை இப்படி செலவழிப்பது வருத்தமே !

  ReplyDelete
 19. கோவை2தில்லி said...
  அதிரப்பள்ளியின் அழகை ரசித்தோம். தகவல்களும் உபயோகமாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.

  **

  மேடம் உங்க வீட்டு காரரும் கூட பயணத்தில் விருப்பம் உள்ளவர் தானே . முடியும் போது குடும்பத்துடன் செல்லுங்கள்

  ReplyDelete
 20. Ramani said...
  நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற அருமையான படங்களுடன் கூடிய பதிவு
  மனம் கவர்ந்தது

  ***

  மகிழ்ச்சி நன்றி ரமணி

  ReplyDelete
 21. வெங்கட் நாகராஜ் said...

  பேருந்தில் மணி: நம்ம கோயம்புத்தூர்லேயே இப்படித்தானுங்! மணி அடிப்பாங்!....

  ****

  அப்படிங்களா? நீங்க கோவையில் பெண் எடுத்ததால் தெரியுது. நான் விவரம் தெரிஞ்சு இன்னும் கோவைக்கு போகலீங் !

  ReplyDelete
 22. கோவை நேரம் said...
  புன்னகை மன்னன் படம் எடுத்த அருவி இது தான்..தற்போது ராவணன் படமும் இங்குதான் எடுக்கப்பட்டது.
  அப்புறம் அங்கு கள்ளு டேஸ்ட் பண்ணினீங்களா...அப்புறம் கேரளா டாஸ்மாக் சென்று பாருங்கள் ஒருமுறை...

  **

  புன்னகை மன்னன் அங்கு எடுத்ததா? சமீபத்தில் அரவான் அங்கு எடுத்தனர். கள்ளு சாப்பிடும் வழக்கமில்லை. நன்றி நண்பரே

  ReplyDelete
 23. சென்னை பித்தன் said...
  அழகான படங்களுடன் அருமையான பகிர்வு.

  **
  மகிழ்ச்சியும் நன்றியும் சார்

  ReplyDelete
 24. ஸ்ரீராம். said...
  நல்லபல தகவல்களுடன் பதிவு சுவாரஸ்யம். வீடியோ உங்கள் பயணக் கட்டுரையின் சிறப்பம்சம்.

  வீடியோவை குறிப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சி தருகிறது நன்றி ஸ்ரீராம்

  ReplyDelete
 25. ர‌கு said...
  புகைப்படங்களை பார்க்கும்போதே போகவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. சந்தர்ப்பம் அமைய வேண்டும்.....பார்ப்போம்......

  ***
  முடியும் போது செல்லுங்கள் ரகு நன்றி

  ReplyDelete
 26. வீடு சுரேஸ்குமார் said...
  அழகான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மனதை விட்டு விலகாத இடம். உங்கள் வீடியோவில் காணும் போது செல்லவேண்டும் எனத் தோன்றுகின்றது.....
  ************
  மகிழ்ச்சி நன்றி சுரேஷ்

  ReplyDelete
 27. middleclassmadhavi said...
  Peyare athiruthu! Paarkum aavalaik koduthathu padhivu!

  நன்றி மகிழ்ச்சி மாதவி

  ReplyDelete
 28. allursree said...
  arpudham. enakku erkanavae adhirappalliya paarkkanumnu aasai. adhai melum thoondi vitta nanbarukku.....

  முதல் வருகைக்கு நன்றி. தங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. சுமார் 15 வருடங்களுக்கு முன்னதாக போயிருக்கிறேன் :)

  கோவையில் இருந்து குடும்பத்தோடு காரில் போக சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா? பள்ளி விடுமுறையில் திட்டமிடலாம்

  ReplyDelete
 31. // கோவையில் இருந்து குடும்பத்தோடு காரில் போக சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா?//

  இயலும் என்று தான் நினைக்கிறேன். கோடையில் மிக அதிக வெய்யில் இருக்கும். காலாண்டு விடுமுறையில் நீங்கள் யோசிக்கலாம் என நினைக்கிறேன். நெட்டில் எந்த மாதம் செல்வது நலம் என பார்த்தால் தெரியும்

  ReplyDelete
 32. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு !

  ReplyDelete
 33. அருமையான பதிவு.
  ஏற்கனவே முகநூலில் எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். அன்று பின்னூட்டம் போட முடியவில்லை. மின்சாரம் போய்விட்டது.
  வாழ்த்துகள்.
  உங்கள் சுற்றுலா பதிவுகளை துளசி மேடம் அவர்களின் பதிவுடன் ஒப்பிடலாம். அவ்வளவு அருமை.
  நன்றி.

  ReplyDelete
 34. பல செய்திகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. தொடரட்டும்!

  ReplyDelete
 35. இந்த சாலக்குடிதான் நான் ஆதியில் காலுகுத்திய ஸ்தலம். ஒன்னரைக்கொல்லம் அவிடே ஜீவிச்சிருந்தும் ஃபோல்ஸ் கண்டிட்டில்லா:(

  வீட்டினு புறத்தே (வீட்டைத் தொட்டு ஓடும்) சாலக்குடி புழையிலானு திவசேன ரெண்டு நேரமும் குளி.

  ஈ ஃபோல்ஸ் குறே படங்களில் அபிநயிச்சிட்டுண்டு. நம்மட ஆக்டர் கலாபவன் மணி, பண்டு காலத்தே இவிடே ஆட்டோகாரனா!

  ReplyDelete
 36. //திண்டுக்கல் தனபாலன் said...
  அழகான படங்களுடன் அருமையான பகிர்வு !//

  நன்றி சார்

  ReplyDelete
 37. Rathnavel Natarajan said...
  அருமையான பதிவு.ஏற்கனவே முகநூலில் எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  உங்கள் சுற்றுலா பதிவுகளை துளசி மேடம் அவர்களின் பதிவுடன் ஒப்பிடலாம். அவ்வளவு அருமை.


  **

  சார் துளசி மேடம் பதிவுகளுடன் என் பதிவை ஒப்பிட்டது மிக மகிழ்ச்சி நன்றி சார்

  ReplyDelete
 38. அமைதி அப்பா said...
  பல செய்திகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. தொடரட்டும்!

  நன்றி சார்

  ReplyDelete
 39. துளசி மேடம் : அங்கேயே இருந்தும் பால்ஸ் பார்க்கலை என்பது ஆச்சரியமா இருக்கு. கலாபவன் மணி அங்கு தான் ஆட்டோ ஓட்டினாரா ? இதுவும் புது தகவல். நன்றி

  ReplyDelete
 40. முதல் நீர்வீழ்ச்சியும் பார்த்ததில்லை, இதையும் பார்த்ததில்லை.
  லிஸ்டில் சேர்த்துவிட்டேன். படங்களும் தகவல்களும் பயன்படும்.

  ReplyDelete
 41. நடுவுல இருக்குற தமிழ் டாக்டருங்கலோட 3 person photo - இதுக்கு முன்னால பார்த்த மாதிரி இருக்கே?

  ReplyDelete
 42. அதிரம்பள்ளி பயணம் அழகிய படங்களுடன் அருமை.

  ReplyDelete
 43. அருமையான பதிவு. நேரில் சென்று வந்ததுபோன்ற உணர்வு. இந்த அருவிக்கு செல்ல பலரிடமும் யோசனை கேட்டிருக்கிறேன், ஆனால் தங்களுடைய பதிவுதான் நிறைவு செய்திருக்கிறது. விரைவில் சென்றுவரவேண்டும். நன்றி.

  ReplyDelete
 44. Athirapalliya nanga parthu irrukom kilerunthu.
  Ennoda friend veeraragavan neenthi poi athulaya kulichan.
  Mattavargal konjam payanthom. Nallavellai eduvum problem illa

  J.Balaji / Thiruvallur

  ReplyDelete
 45. Athirapalliya nanga parthu irrukom kilerunthu.
  Ennoda friend veeraragavan neenthi poi athulaya kulichan.
  Mattavargal konjam payanthom. Nallavellai eduvum problem illa

  J.Balaji / Thiruvallur

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...