Monday, May 14, 2012

அதிக செலவின்றி மருத்துவம் (MBBS) படிக்க ஒரு வழி

ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு அதிக செலவின்றி மருத்துவம் படிக்க உள்ள வாய்ப்பு பற்றி பகிர்வது பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை மருத்துவ படிப்பு குதிரை கொம்பாக தான் உள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் மிக குறைவாக உள்ளன. 98% க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் தான், அரசு மருத்துவ கல்லூரியில் MBBS சீட் கிடைக்கும். ( Forward Community எனில், அதுக்கும் மேல் 99% எடுக்கணும் !!)

தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க ஐந்தாண்டில் கிட்டத்தட்ட  ஐம்பது லட்சம்  செலவழிக்க வேண்டும் என நினைக்கிறேன். ( தவறாயிருந்தால் திருத்துங்கள் ! )

இந்நிலையில் நடுத்தர மக்களுக்கு வர பிரசாதமாய் உள்ளது வெளி நாட்டு மருத்துவ படிப்புகள் !

நண்பரின் உறவினர் பெண் ஒருவர் இப்படி தான் ரஷ்யா சென்று மருத்துவம் படித்துள்ளார். இவரை போல பல்வேறு மாணவ மாணவிகள் தமிழகத்திலிருந்து ஆண்டு தோறும் ரஷ்யா சென்று படிக்கின்றனர் . தமிழகத்தில் தனியார் கல்லூரியில் ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு தான் அங்கு ஐந்து வருடத்துக்கு மொத்தமும் சேர்த்து ஆகிறது என்கிறார்கள் பெண்ணின் பெற்றோர் !.

ரஷிய மருத்துவ கல்லூரி
மருத்துவ படிப்பை ஆங்கிலம் அல்லது ரஷிய மொழியில் படிக்கலாம். 

ஆங்கிலத்தில் படித்தால் தான் மேலே சொன்ன அளவு செலவாகிறது. ரஷிய மொழியில் படித்தால் செலவு மிக மிக குறைவு. ( இந்தியர்கள் பலரும் ஆங்கிலத்தில் தான் படிக்கிறார்களாம். ரஷிய மொழியில் படிப்போர் குறைவே !)

Pavlov, , Mechnikov, Sechenov ஆகியவை ரஷியாவில் படிக்க நல்ல யூனிவர்சிட்டி என்று இணையத்தில் தேடி பார்க்கும் போது தெரிகிறது.

ஆனால் இதில் ஒரு முக்கிய பிரச்சனை உள்ளது ! அங்கு படித்த படிப்பை Medical council of India இங்கு அப்படியே அங்கீகரிப்பதில்லை ! இந்தியா வந்த பிறகு வந்து மூன்று தேர்வுகள் எழுதி பாஸ் செய்தால் தான், இந்தியாவில் பிராக்டிஸ் செய்ய அனுமதி உண்டு .

இது சம்பந்தமாய் Medical council of India இப்படி கூறுகிறது:


Any Indian student who receives a medical graduate degree from a foreign country must meet three conditions to be a registered medical practitioner in India.

First, the students must pass MCI's Screening Test. Second, they must earn a medical degree from an institute listed in the World Directory of Medical Schools, published by the World Health Organization. Third, they must obtain the Eligibility Certificate from MCI according to the Eligibility Requirement for Taking Admission in an Undergraduate Medical Course in a Foreign Medical Institution Regulations, 2002.

***
இதில் இரண்டாவதாக சொல்லப்படும் "World Directory of Medical Schools"-ல் லிஸ்ட் ஆகியுள்ள யூனிவர்சிட்டியில் படிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. ஆயினும் நாம் சேர்கிற யூனிவர்சிடி அந்த லிஸ்டில் உள்ளதா என்பதை முன்பே பார்த்து விட்டு சேரலாம். 

ஆனால் ஸ்க்ரீனிங் டெஸ்ட் என்று சொல்லப்படும் மூன்று தேர்வுகள் தான் தலைவலி !

இதென்ன பிரமாதம் ஒரு கோர்சே முடித்தவர்கள் மூன்று பரீட்சை பாஸ் செய்ய முடியாதா என்கிறீர்களா? அங்கு தான் இருக்கு விஷயம் !

ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வு ரெண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் எழுதினால் தேர்ச்சி பெறுவது வெறும் ஐம்பது பேர் தான். அதாவது நூற்றுக்கு ரெண்டு சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெறுகின்றனர். இது அவர்களை மனதளவில் மிகவும் வாட்டுகிறது.

இரண்டாயிரம் பேரில் ஐம்பது பேர்தான் தேர்வு பெறுகிறார்கள் எனில் மீதம் உள்ளவர்கள் முடிக்க எத்தனை வருடம் ஆகும் என யோசித்து பாருங்கள் ! மேலும் வருடா வருடம் புது மாணவர்கள் வேறு வந்த வண்ணம் இருப்பார்கள் !

இந்த மூன்று தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வரை அவர்கள் இந்தியாவில் தனியார் மருத்துவ மனைகளில் டியூட்டி டாக்டர் ஆக பணியாற்றுகிறார்கள். அந்த தேர்வு பாஸ் செய்த பிறகு தான் தனியே கிளினிக் வைக்கலாம்.

நீங்கள் ரஷ்யாவிலேயே மருத்துவராக இருப்பதானால் இந்தியாவில் நடக்கும் இந்த தேர்வுகள் எழுத தேவையில்லை.

ஆனால் படிக்க போகும் நம்மவர்கள் பெரும்பாலும் அங்கு செட்டில் ஆவதை விரும்புவதில்லையாம் ! திரும்ப இந்தியா வரவே விரும்புகிறார்களாம் !

அங்கு பாடங்களோ தேர்வுகளோ மிக எளிது என்று சொல்வதற்கில்லையாம். வழக்கமான மருத்துவ படிப்பை போல மிக கஷ்டப்பட்டு படித்து விட்டு பின் இங்கும் வந்து இவ்வளவு கடினமான தேர்வு முறை ஏன் என்பதே இவர்கள் அனைவரின் கேள்வியாக உள்ளது !


உங்களுக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர்கள் பிள்ளைகள் யாரேனும் மருத்துவம் படிக்க நினைத்தால், அவர்களுக்கு இந்த ரஷிய கோர்ஸ் பற்றி
சொல்லுங்கள். மேலதிக தகவல்கள் இணையத்தில் தேடினால் கிடைக்கிறது.
ரஷியாவில் MBBS முடித்து விட்டு இந்தியாவில் இந்த தேர்வுகளும் எழுதி பாஸ் ஆனவர்கள் MBBS என்று போட்டு விட்டு பிராகெட்டில் Moscow என்று போட்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம் !

மருத்துவ நண்பர்கள் யாரேனும் இந்த பதிவை வாசித்தால் ரஷியாவில் படிக்கும் இந்த கோர்ஸ் பயனுள்ளதா, நம் இந்தியர்கள் படிக்கலாமா என அவசியம் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் !

17 comments:

 1. எல்லாரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு மிக்க நன்றி...!!!

  ReplyDelete
 2. இந்த ஸ்க்ரீனிங் டெஸ்ட் முறை எல்லா நாட்டிலும் (அநேகமாக) உண்டு. இங்கு அமீரகத்திலும் வேலைக்கு வரும் மருத்துவர்கள் இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும். அதுவும் தேர்ச்சிபெற மூன்று சான்ஸ்கள்தான் உண்டு. மூன்றுமுறையும் ஃபெயிலாகிவிட்டால், அதன்பிறகு எழுதவும் முடியாது. மருத்துவர் வேலையும் கிடையாது!!

  அந்தந்த நாட்டின் மருத்துவ நடைமுறைகள், jargons போன்றவை தெரிந்துகொள்வதற்கு உதவும் என்று நினைக்கிறேன்.

  சில அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியாவில் மருத்துவம் படிக்க வைக்கிறார்கள், தெரியுமா? ஏன்னா, அரபுநாடுகள், ஐரோப்பா, அமெரிக்காவைவிட இந்தியாவின் கர்நாடகா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிப்பது மிகவும் செலவு குறைந்தது என்பதால்!!

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 4. எங்கள் உறவு வட்டத்திலேயே இரண்டு பேர் ரஷ்ய சென்று படித்துத் திரும்பியவர்கள் இருக்கிறார்கள். நட்பு வட்டத்தில் லேட்டஸ்டாக ஒன்று! இதுவும் ஒரு வழிதான்!

  ReplyDelete
 5. நல்ல பதிவு.

  ReplyDelete
 6. நன்றி லோகநாதன்

  ReplyDelete
 7. தங்கள் அனுபவமும் பகிர்ந்தமைக்கு நன்றி ஹுஸைனம்மா

  ReplyDelete
 8. நன்றி வெற்றிமகள்

  ReplyDelete
 9. நன்றி கோவை நேரம்

  ReplyDelete
 10. நன்றி Sriram. மகிழ்ச்சி

  ReplyDelete
 11. ரத்னவேல் நடராசன் ஐயா நன்றி

  ReplyDelete
 12. வித்தியாசமான விவரமான பதிவு.

  ReplyDelete
 13. \\ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வு ரெண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் எழுதினால் தேர்ச்சி பெறுவது வெறும் ஐம்பது பேர் தான். \\

  சங்கதி இப்படி இருக்க, இது தேவையா பாஸ்!!

  ReplyDelete
 14. Under graduation in medicine, in society's view is inadequate..to some extent this is true also. So if one would take such a long process to complete under-graduation..then what abt post-graduation and others? Is it worthwhile to spend whole of your youth in Academics alone..?this has to be answered individually? The question is not about learning in Russia or elsewhere. It is about who should decide the need for pursuing Medicine? Parents/societal pressures or mere merit or passion and compassion..? For one who is driven by passion and compassion devoting the whole life for academics and exams is not an issue. For the rest it is painful and self destructing. While there has to be change in Medical education, parents should also stop pressurizing their children from pursuing medical courses just because one has money and merit. This is one field which should not be pursued for belly filling or for pride, though this is happening largely.We as a society fail to notice the frustration in a huge number of doctors who just took up medicine due to merit/money and how their frustration converts into unethical and inadequate practise- u have already written an article on one such experiences. Otherwise, the quality of medical education in India is above par and difficult too..that is one of the reasons for screening tests.

  ReplyDelete
 15. seemz u hate simbu :) u must be above 40 :)

  ReplyDelete
 16. நல்ல பயனுள்ள தகவல் !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...