Thursday, May 24, 2012

வானவில் 89: கல்வி கட்டணம்- இளையராஜா-ஐஸ்வர்யாராய்

தில்லி, சிம்லா, குலு, மணாலி பயணம் 

தில்லி, சிம்லா, குலு, மணாலி 10 நாள் பயணம் இன்றுடன் முடிந்தது. நினைத்ததை விட மிக அதிக அனுபவங்களை, நண்பர்களை, தகவல்களை மகிழ்ச்சியை கொடுத்தது இந்த பயணம். விரைவில் இதன் பயண கட்டுரை தொடங்கும் என்பது யாம் சொல்லாமலே உங்களுக்கு தெரிந்திருக்கும் !முதல் சில நாட்கள் நான் கேட்டு கொண்டதற்கு இணங்க நண்பர் ரகு பதிவுகளை Draft-ல் இருந்து பிரசுரித்து கொண்டிருந்தார். பின் அவரிடம் இணையம் பக்கம் வருவதே சிரமம் ஆக உள்ளதால் மற்ற பதிவுகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டு கொண்டேன். இப்போது ஊருக்கு திரும்பி விட்டதால் மறுபடி ஆட்டம் நிதானமாக தொடங்கும் !

தமிழக பள்ளிகளில் கல்வி கட்டணம்

கல்வி கட்டணம் குறிப்பிட்ட அளவு தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசும், உயர்நீதி மன்றமும் உத்தரவு போட்டாலும் தமிழக பள்ளிகள் வழக்கத்தை விட அதிக பீஸ் தான் வாங்குகின்றன. எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் முன்பெல்லாம் ரெசீப்ட் தருவார்கள். இப்போதோ மாதாந்திர பீசுக்கு மட்டும் பள்ளி பெயரில் ரெசீப்ட் தந்து விட்டு, பெரிய அமவுண்டுக்கு சாதாரண தாளில் எந்த விளக்கமும், பள்ளி பெயரும் இன்றி எழுதி தருகிறார்கள். பள்ளி பெயர் போட்டு தந்தால் அதிகம் வசூலிக்கிறார்கள் என தெரிந்து விடுமே !!

மாணவர்களுக்கு நேர்மையை கற்று தர வேண்டிய இடத்திலேயே நேர்மை இல்லை ! என்ன சொல்வது?

ரசித்த வரிகள்

எந்த மலரும் நாம் விரும்பியதால் மலரவில்லை.

களைகள் நாம் விரும்பாத போதும் முளைக்காமல் இருப்பதுமில்லை -டோகன் (ஜப்பான்)

நாட்டி- அஜூ கார்னர்

அஜூவிற்கு பியூட்டி பாய் என்று ஒரு பெயர் உண்டு என முன்பே கூறியிருந்தேன். அதை தவிர இன்னொரு பெயர் இப்போது வைத்திருக்கிறோம் அது " பம்மல்" .

ஸ்க்ரீன் மேலே தான் நாட்டி அஜூ இருவரும் எப்போதும் இருப்பர். அந்த ஸ்க்ரீன் பக்கம் நாம் போனாலே அஜூ சற்று பயந்து அங்கும் இங்கும் நகர்வான். பின் பக்கமாக அவன் நகர்ந்து போவது செம காமெடியாக இருக்கும். இப்படி நம்மை பார்த்தாலே அங்கும் இங்கும் நடந்து பம்முவதால் தான் அவருக்கு பம்மல் என பெயர் வைத்தோம். பம்மல் என்றாலோ அஜூ என்றாலோ அவனை தான் கூப்பிடுகிறோம் என தெரியும் ! நாம் அவனை கூப்பிட்டால், தன் அழகான  பெரிய கண்களால் நம்மை பார்ப்பான் இந்த பட்டு பையன் !

பத்து நாள் கழித்து இன்று ஊருக்கு வந்ததும் முதலில் எங்கள் வீட்டுக்கு போகாமல், நாங்கள் இல்லாத போது நாட்டி அஜூ இருந்த மாமனார் இல்லம் தான் முதலில் சென்றோம். தினமும் போன் செய்து விசாரிக்கவும் தவற வில்லை.  We missed them so much !!

என்னா பாட்டுடா இது !

சமீபத்தில் விஜய் டிவியில் இறந்த சில பின்னணி பாடகர்கள் பாடிய பாடலை நினைவு கூறும் விதமாய் சிறுவர் சிறுமிகள் பாடினார்கள். அப்போது ஸ்வர்ணலதாவின் "குயில் பாட்டு. வந்ததென்ன இளமானே " பாடலை ஒரு சிறுமி மிக சுமாராய் பாடினாள். அதை கேட்கும் போது அப்பாட்டை ஸ்வர்ணலதா குரலில் கேட்க தோன்றி இணையத்தை நாடினேன். அடடா ! என்னா அருமையான பாட்டு இது !இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய கால கட்டத்தில் வந்த பாட்டு. ராஜா பாடல்களில் எப்போதும் பிளூட் மற்றும் வயலின் இரண்டையும் மிக அற்புதமாய் பயன் படுத்துவார். இப்பாட்டிலும் அவை என்னமாய் பயன் படுத்தியுள்ளார் ...பாருங்கள் ! Class ! முதலில் பிளூட் ஒலிக்கும். அது முடிகிற இடத்தில வயலின் துவங்கும். இவை இரண்டும் மாறி மாறி பயணிக்கும். இப்படி பிளூட் மற்றும் வயலின் மாறி மாறி அசத்திய எத்தனையோ ராஜா பாட்டுகளை காட்ட முடியும்.

வீடியோவில் பார்க்கும் போது சினிமாவே ஆனாலும் இந்த பாட்டின் இறுதி பகுதியை காண மனம் வராது. நிறுத்தி விடுவேன் :((

போஸ்டர் கார்னர் 

வழுக்கையான அரவிந்த் சாமி ! குண்டான ஐஸ்வர்யா ராய் !அய்யாசாமியின் புது போன்

அய்யாசாமி கடந்த 6 வருடங்களாக ஒரே மொபைல் போன் தான் வைத்திருந்தார். எத்தனை முறை ரிப்பேர் ஆனாலும், எவ்வளவு செலவு செய்தும் அதை சரி செய்வாரே ஒழிய மாற்றவே மாட்டார். " என் இன்னொரு விரல் மாதிரி எளிதா யூஸ் பண்ணுவேன். இதை மாற்ற மனசே இல்லை" என்பார். ஒரு முறை மிக சிக் ஆகி யாரும் ரிப்பேர் செய்ய முடியாது என்றபோது தனக்கு நன்கு தெரிந்த ஒரு மெக்கானிக்கிடம் போய் அழுது புலம்பி, இவர் இம்சை தாங்காமல் எங்கோ ஸ்பேர் பார்ட் வாங்கி அவர் அதை சரி செய்து தந்தார்.

அதன் வெளி பாகமெல்லாம் உடைந்து பார்க்கவே கோரமாக இருக்கும்.


அவர் மகளும், மனைவியும் " இந்த போன் தேவையா? மாத்துங்க" என்றாலும் காதிலேயே வாங்கி கொள்ள மாட்டார்.

திடீரென அவர் அண்ணன் மகன் புதிதாய் வேலைக்கு போனதால் இவருக்கு ஒரு சாம்சங் டச் போன் வாங்கி தந்து விட்டான். இவர் சொல்ல சொல்ல கேட்காமல் பழைய போனை உருவி போட்டு விட்டு புதுசை ஆக்டிவேட் செய்து விட்டான். மனுஷன் டச் போனை வைத்து கொண்டு அல்லாடுகிறார் !

பழசும் புதுசும்
Contacts-ல் யாரையாவது தேட முயல அது பாட்டுக்கு எங்கெங்கோ ஓடுது. மெசேஜ் டைப் செய்வதற்குள் இவருக்கு தாவு தீருது ! பார்க்கும் நபரிடமெல்லாம் " இந்த போனை எப்படி யூஸ் பண்றது?" என கேட்டு கேட்டு கற்று வருகிறார். கூடிய சீக்கிரம் கற்று தேற கூடும் !

சென்னை ஸ்பெஷல் : எக்ஸ்பிரஸ் அவின்யூவில் வியாழன் என்ன ஸ்பெஷல் ?

எக்ஸ்பிரஸ் அவின்யூவில் Hunger Games படம் பார்க்கும் போது தான் இந்த தகவல் தெரிந்தது. ஒவ்வொரு வியாழனும் எக்ஸ்பிரஸ் அவின்யூவில் எந்தெந்த ஹிந்தி படம் நடக்கிறதோ அவை அனைத்துக்கும் வியாழன் அனைத்து காட்சிகளிலும் ஆங்கில சப் டைட்டில் போடுவார்களாம் !

ஹிந்தி தெரியாது என்பதால் தான் நல்ல ஹிந்தி படங்களை சப் டைட்டில்களுடன் DVD- யில் பார்ப்பது வழக்கம். இப்படி சப் டைட்டிலுடன் காட்டினால் தியேட்டரிலேயே பார்க்கலாமே? வியாழன் பொதுவாய் அதிக கூட்டம் இராது போலும்; எனவே மக்களை தியேட்டருக்கு ஈர்க்க இந்த யோசனை செய்திருக்கலாம் !

எப்படியோ... யாம் பெரும் இன்பம் பெருக இவ்வையகம் என இத்தகவலை உங்களுக்கு பகிர்கிறேன் !

33 comments:

 1. Welcome back!

  //மாதாந்திர பீசுக்கு மட்டும் ரெசீப்ட் பள்ளி பெயரில் ரெசீப்ட் தந்து விட்டு, பெரிய அமவுண்டுக்கு சாதாரண தாளில் எந்த விளக்கமும், பள்ளி பெயரும் இன்றி ரெசீப்ட் தருகிறார்கள்//

  நாகரிக போர்வையில் வசிக்கும் திருட்டு கும்பல்!

  இதுவரை எக்ஸ்ப்ரஸ் அவென்யு போனதேயில்லை....:(

  ReplyDelete
 2. தங்கள் வலைப்பூ , இந்த வார என் விகடனில் , தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .

  இணையத் தமிழன், விஜய் .
  http://inaya-tamilan.blogspot.in/

  ReplyDelete
 3. /////வழுக்கையான அரவிந்த் சாமி ! குண்டான ஐஸ்வர்யா ராய் !///

  எப்புடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் ......

  ReplyDelete
 4. Anonymous1:25:00 AM

  Welcome back sir.

  ReplyDelete
 5. -பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையே தனிதான்...! எல் கே ஜி வகுப்புக்குக் கூட லேப் ஃபீஸ்! லைப்ரேரி கட்டணம் என்பார்கள், புத்தகம் தர மாட்டார்கள்! அதர்ஸ் என்று ஒன்று, மிசலேநியஸ் என்று ஒன்று ப்ரேக் அப் விவரம் கேட்டால் பிரித்துத் தருவார்கள்!

  -ரசித்த வரிகளை நானும் ரசித்தேன்.

  -இளையராஜா இளையராஜாதான்.

  -காணாமல் போகும் கவர்ச்சிகள்!

  -புது ஃபோன் நன்றாக இருக்கிறது!


  -நானும் இதுவரை எக்ஸ்ப்ரஸ் அவென்யு போனதேயில்லை!

  ReplyDelete
 6. ஒரு வார இதழ் படித்த உணர்வு ஏற்படுகிறது.

  ReplyDelete
 7. நல்வரவு. நல்ல தொகுப்பு.

  பம்மல் கார்னர் அருமை.

  போஸ்டர்.. அவர்களும் மனிதர்களே!

  புது ஃபோன் பழகி விடும் ஒருவாரத்தில்:)!

  பயணக் கட்டுரை தொடங்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 8. Anonymous8:48:00 AM

  இந்த வாரம்-என் விகடன் - திருச்சி வலையோசையில் இடம் பெற்ற நீடாமங்கலம் நண்பர் அய்யாசாமிக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. 10 நாட்கள் உல்லாச பயணம் முடிந்து சந்தோசமாக வந்துள்ள அண்ணனை வரவேற்கிறேன்...

  இந்த வார திருச்சி பதிப்பில் வலையோசி நாயகனாக வலம் வரும் அண்ணனுக்கு இனிய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. வெல்கம் பேக்!!

  //எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில்//
  அவ்ளோ தெரிஞ்சவங்கன்னா, எடுத்துச் சொல்லலாம்ல?? :-))))

  இந்தியப் பள்ளிகள் வெளிநாட்டில் இருந்தாலும் இதேபோலத்தான் கட்டணங்கள். என் மகன் பள்ளியில் CBSE exam regn fees என்று 200 திர்ஹம் முதல் 500 திர்ஹம் வரை வசூலிக்கிறார்கள்!! CBSE website-ன்படி இந்தக் கட்டணம் வெறும் நூறே ரூபாய்தான்!! (1 திர்ஹம் = 14 ரூ)

  இதுதவிர அதை வாங்கு, இதை வாங்கு என்று திணிப்பது வேறு!!
  -----
  /வழுக்கையான அரவிந்த் சாமி ! குண்டான ஐஸ்வர்யா ராய் !//

  அதனாலென்ன? வயது முதிரும்போதும், தாய்மை அடையும்போதும் இதெல்லாம் நடப்பதுதான். இதில் தவறென்ன, இழிவென்ன? இன்னும் சொல்லப்போனால் அழகை மட்டுமே ஆராதிக்கும் மக்களுக்கு இதில் படிப்பினை உள்ளது.
  ____________

  //டச் ஃபோன்//

  இரண்டு வருடங்களுக்கு முன் என்னிடமும் இப்படியொரு ஃபோன் திணிக்கப்பட்டது!! அதை வைத்துக் கொண்டு அல்லாடியது.. அப்பப்பா.. இப்போதான் பழகிவருது!!

  ஆனால், இப்போ டச் ஸ்க்ரீன் சிலசமயம் தகராறு பண்ணுது. கீ-பேட் போல நீண்ட நாள் வருவதில்லை.

  ReplyDelete
 11. சப் டைட்டிலுடன் தியேட்டரில் படம்... நல்ல தகவல்!

  ReplyDelete
 12. Welcome back..

  I will read and comment later

  :-)

  ReplyDelete
 13. \\தில்லி, சிம்லா, குலு, மணாலி 10 நாள் பயணம் இன்றுடன் முடிந்தது. \\ஆஹா, இங்கே போக பிளான் pottu ரொம்ப நாளா கிடப்பில் இருக்கிறது. எனக்கு ஹிந்தி தெரியாததால் இன்னமும் போகாமல் இருக்கிறேன். நண்பர்கள் யாரவது சென்றால் கூடவே ஓட்டிக் கொள்ளலாம் என்று பார்த்தால் ஒருத்தனும் போக மாட்டேங்கிறான். எங்கே டிக்கட் புக் செய்வது எங்கே தங்குவது மற்றும் இதரத் தகவல்களைத் தந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 14. \\வழுக்கையான அரவிந்த் சாமி ! குண்டான ஐஸ்வர்யா ராய் !\\ அரவிந்த சாமி அப்படியே தள்ளு வண்டியல பழம் விற்கிறா மாதிரி இருக்கான். ஐஸ்வர்யா..... ஒரு மாதிரியா இருக்கா.... இது தான் சாமி நிதர்சனம்.

  ReplyDelete
 15. \\எத்தனை முறை ரிப்பேர் ஆனாலும், எவ்வளவு செலவு செய்தும் அதை சரி செய்வாரே ஒழிய மாற்றவே மாட்டார்.\\ ஐயா....... சாமி........ உங்க காலைத் தொட்டு கும்பிடனும். நிச்சயமா நீங்க ரொம்ப பணக்காரர் போல இருக்கு. ரிப்பேர் எல்லாம் துணிஞ்சு செய்யுறீங்க. எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லேங்க. புது போனு 700 க்கோ 800 க்கோ வாங்கி அடுத்த ரெண்டு மூணு வருஷத்தை ஓட்டி விடுவோம். ஏழைப் பட்டவங்க........

  ReplyDelete
 16. \\ஒவ்வொரு வியாழனும் எக்ஸ்பிரஸ் அவின்யூவில் எந்தெந்த ஹிந்தி படம் நடக்கிறதோ அவை அனைத்துக்கும் வியாழன் அனைத்து காட்சிகளிலும் ஆங்கில சப் டைட்டில் போடுவார்களாம் !\\ போடுறதே போடுறான், தினமும் போட்டால்தான் என்ன?

  ReplyDelete
 17. இந்த பதிவு உங்க வலைப்பூ பெயருக்கு நல்லாவே பொருந்தும் :)

  தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
 18. ரகு: மாச ஆரம்பத்தில் ஒரு முறை எக்ஸ்பிரஸ் அவிநியூ போனால் போகுது :)

  ReplyDelete
 19. விஜய் பெரியசாமி: நன்றி நண்பரே

  ReplyDelete
 20. வரலாற்று சுவடுகள்: ஹிஹி நன்றி

  ReplyDelete
 21. சிவக்குமார்: நன்றி விழா நன்கு நடந்திருக்கும் என நினைக்கிறேன்

  ReplyDelete
 22. ஸ்ரீராம்: நன்றி பள்ளி பற்றிய உங்கள் அனுபவம் சரியே. எக்ஸ்பிரஸ் அவிநியூ சென்னையில் அடையாளங்களில் ஒன்றாகி வருகிறது. ஒரு முறை சென்று வாருங்கள்

  ReplyDelete
 23. முரளி: மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 24. நன்றி ராமலட்சுமி மேடம். போன் இப்போது ஓரளவு பழகி விட்டது ( 50 %)

  ReplyDelete
 25. பாலஹனுமான்: நன்றி ஹை

  ReplyDelete
 26. சங்கவி: மிக்க நன்றி

  ReplyDelete
 27. ஹுசைனம்ம்மா: உங்க ஊரிலும் பள்ளிகளில் இதே கதை தானா? :((

  ReplyDelete
 28. ஜனா சார் : நன்றி

  ReplyDelete
 29. மாதவா: ரைட்டு

  ReplyDelete
 30. தாஸ்: மணாலி பற்றி எங்கு புக் செய்வது என்று நிச்சயம் விரிவாக எழுதுகிறேன்

  போனுக்கு ரிப்பேர் செலவு நூறு ரூபாய் போல் தான் ஆகும். மிக அதிக செலவு வைக்காத போன் அது

  ReplyDelete
 31. அனுஜன்யா: மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 32. மனம் கவர்ந்த பாட்டு அது.
  படம் முழுக்க அந்த பாட்டு வரும் , ராஜாவின் ராஜாங்கம் நடந்த காலம் அது

  ReplyDelete
 33. டச் ஸ்க்ரீன் தொல்லையா? போகப் போகப் பழகிடும்.. அதாவது தொல்லை.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...