Friday, May 11, 2012

தஞ்சை- இனிய நினைவுகள்- ஏராள படங்கள்

மீபத்தில் தஞ்சை சென்ற போது சிறுவயது முதல் நான் சுற்றி திரிந்த மறக்க முடியாத பல இடங்களை காமிராவில் பதிவு செய்து வந்தேன். தஞ்சையில் சில காலமேனும் இருந்த யாருக்கும் இந்த இடங்கள் பல இனிய நினைவுகளை மீட்டு தரும் !
******
தஞ்சை பெரிய கோவில்...


கோவிலின் பிரம்மாண்டம் வியப்பாக, பச்சை புல்வெளி பார்த்து மகிழ, தரையில் நிழல் விழாத கோபுரம் பற்றிய கதை கேட்டு ரசிக்க  .. பக்தியெல்லாம் தாண்டி மேற்சொன்ன விஷயங்களே நம்மை பெரிதும் கவரும் !
****************
பெரிய கோவிலுக்கு அருகே இருக்கும் ஆற்று பாலம். வருடத்தில் பாதி மாதங்களுக்கு மேல் தண்ணீர் இல்லாத பொழுதில் வறண்டு குப்பைகளுடன் காட்சி அளிக்கிறது. நீர் புரண்டு ஓடும் நேரத்தில் இதன் அழகே தனி !****************
தஞ்சை பெரிய கோவிலின் முதல்/ வெளி கோபுரம் 


***********
மருத்துவ கல்லூரி சாலையில் உள்ளது இந்த புனித லூர்து சர்ச். செம உயரமாக உள்ள இந்த சர்ச் மிக அழகாக இருக்கும். சர்ச்சை சுற்றி எவ்வளவு காலி இடம் !**********

ராணி பேரடைஸ்:

தஞ்சையின் தற்போதைய சிறந்த தியேட்டர் என்று இதனை தான் சொல்கிறார்கள். சென்னைக்கு சத்யம் தியேட்டர் மாதிரி தஞ்சைக்கு ராணி பேரடைஸ். (ஒரே தியேட்டர் தான். சத்யம் மாதிரி காம்ப்ளக்ஸ் அல்ல)**********
சிவகங்கை பூங்காவின் வெளிப்புறம் ! பூங்கா ஒரு காலத்தில் மிக அற்புதமாக இருந்தது. தற்போது மிக சுமாரான maintenance தான் !**********
பழைய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த அன்பு பால் நிலையம் எனக்கு தெரிந்து இருபது வருடத்துக்கும் மேலாக இருக்கிறது. பகலில் லஸ்ஸியும் இரவில் கற்கண்டு பாலும் விற்பார்கள். நின்றவாறே மிக பெரிய கூட்டம் குடிக்கும் இது போன்ற லஸ்ஸியை நான் வேறெங்கும் குடித்ததில்லை.

இவர்களே இரவில் கற்கண்டு பால் தயார் செய்வார்கள். இதற்கும் கூட்டம் அம்மும்.

***********
தஞ்சையின் மிக புகழ் பெற்ற இனிப்பு கடை பாம்பே சுவீட்ஸ் ! தஞ்சையில் ரயிலடி, பழைய பேருந்து நிலையம் அருகே, வினோதகன் ஆஸ்பத்திரிக்கு அருகே, மருத்துவகல்லூரி சாலை.. என பல இடங்களில் கிளைகள் கொண்டது. அசோகா அல்வாவும், சந்திரகலாவும் இக்கடையின் ஸ்பெஷாலிட்டிகள் !  நினைத்தாலே எச்சில் ஊறுகிறது !

************
ல்ல விஷயங்கள் மட்டுமே பேசினால் எப்படி? தஞ்சை மக்களை விட்டு பிரியும் ஒரு நினைவு சின்னத்தையும் சற்று பார்ப்போம். குமரன் தியேட்டர்...!

தஞ்சையில் இருபது வருடத்துக்கு முன்பே பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் எல்லாம் புது படம் ஓடும். அந்த தியேட்டர்களில் புது படம் எடுத்த, மறு நாளே குமரன் தியேட்டருக்கு வந்து விடும் ! தினம் மூன்று ஷோ சினிமா. மதிய ஷோவுக்கு பெண்கள் கூட்டம் தான் நிறைய வரும். (அப்போதெல்லாம் டிவி சீரியல்கள் அதிகம் இல்லை). டிக்கெட் விலை மிக குறைவு.  இங்கு எத்தனையோ படங்கள் பார்த்துள்ளேன். இன்று தியேட்டர் மூடப்பட்டு அந்த இடம் பரிதாபமாக இருக்கிறது. அந்த இடத்தில் என்ன வர போகிறது என தெரிய வில்லை.

குமரன் தியேட்டர் நினைவாக சில படங்களும், அதன் இன்றைய நிலையும் இதோ...
***********
தஞ்சை திலகர் திடல். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தொடங்கி எம். ஜி. ஆர், கலைஞர், ஜெ , சோனியா என இங்கு பேசாத அரசியல் தலைவர்களே இல்லை. தஞ்சையின் மிக பெரும் அரசியல் கூட்ட மேடை இது ! நான் சென்ற போது அங்கு ஒரு கண்காட்சி நடந்து திடல் முழுதும் மூடியிருந்ததால் மைதானத்தை முழுதாய் படம் எடுக்க முடியலை********
மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும் மிக புகழ் பெற்றது தஞ்சை. பழைய பேருந்து நிலையம் அருகில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர் கிளினிக்குகள் உள்ளன. அங்குள்ள ஒரு பில்டிங்கில் எத்தனை டாக்டர்களின் போர்டுகள் .....பாருங்கள் !


****
பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள ஏராள பழ கடைகள்.


*********
தஞ்சையின் பழம் பெரும் தியேட்டர் இது. பெயர்: திருவள்ளுவர். நண்பர்கள் தீபாவளிக்கு முதல் நாள் இங்கு போடும் "மஜாவான"  படத்தை அவசியம் பார்ப்பார்கள். போலிஸ் தொந்தரவு இன்றி நிறைய சீன் அன்றுதான் காட்டுவார்கள் என்பது அவர்கள் அனுபவம் (மீ ..போனதில்லை. நம்புங்கோ)


திருவள்ளவர் திரையரங்கு உள்ளே நூற்றுகணக்கான டூ வீலர் நிற்க " சினிமாவுக்கு இவ்வளவு கூட்டம் வருதா என ஆர்வமாய் விசாரித்தேன். உள்ளே உள்ள காலி இடத்தை டூ வீலர் ஸ்டாண்ட் ஆக்கி வெளி ஆட்களும் வண்டியை இங்கு விட்டுவிட்டு போகிறார்களாம் ! அதான் அவ்ளோ வண்டி நிக்குது !
************
மருத்துவ கல்லூரி சாலையில் உள்ளது இந்த ஆபிரஹாம் பண்டிதர் கார்டன். ஒரு டாக்டரின் இல்லம் இது ! உள்ளே பெரிய கார்டன் ஒன்று அந்த வழியே செல்லும் அனைவரையும் ஈர்க்கும்
     

*****
தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் ராஜராஜன் தியேட்டர் அருகில் உள்ளது இந்த ஆஞ்சநேயர் கோவில். சாலையிலேயே இருக்கும் சிறிய கோயில் எனினும், சனிக்கிழமையில் மிக அதிக கூட்டம் வரும். சக்தி வாய்ந்த, வேண்டுதலை நிறைவேற்றும் கடவுள் என பலராலும் நம்பப்படும் கோயில் இது*****************

தஞ்சை ஆற்று பாலமும்  கடை வீதியும்
**************

ஞானம் தியேட்டர் இருந்த இடம் இப்போது ஞானம் ஹோட்டல் ஆகி விட்டது. இங்கு ஒரு சூப்பரான சிலோன் பரோட்டா கடையும் முன்பு இருக்கும். இப்போது இல்லை :((

ஞானம் தியேட்டர் ...இப்போது ஞானம் ஹோட்டல்
*****
தஞ்சாவூரு மல்லியும் கனகாம்பரமும் ... 


தஞ்சை கலை பொருட்களுக்கு புகழ் பெற்ற பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையம் 
************
நிறைவாக தஞ்சையில் எனக்கு மிக பிடித்த ஹோட்டலான சாந்தி பரோட்டா கடை.


இங்கு பல படங்களும் வீடியோவும் கூட எடுத்தேன். அவை சாந்தி பரோட்டா பற்றி தனி பதிவாக வெளியாகும் !  

லட்சுமி சீவல் நிறுவனத்தில் சீவல் தயாரிப்பு, தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மகால், தலை ஆட்டி பொம்மை தயாரிப்பு என தனி தனி பதிவுகள் தயார் ! ஒவ்வொன்றாக வெளியாகும் நண்பர்களே.. காத்திருங்கள் !

தொடர்புடைய பதிவுகள்:

தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

வானவில்: தஞ்சை ஸ்பெஷல்

43 comments:

 1. தஞ்சாவூரை சரியாப் பார்க்கலைன்ற மனக்குறை கொஞ்சம் போக்கியது இந்தப் பதிவும் படங்களும்.

  பலவருசங்களுக்கு முன் கோவில் பார்க்க வந்து, உள்ளே ஒருசுத்தும், யானைகிட்டே அவசரமா வாங்குன ஆசீர்வாததோடும் பயணம் முடிஞ்சு போச்சு:(

  ReplyDelete
 2. Anonymous8:52:00 AM

  ராணி பேரடைஸ் எல்லாம் இப்ப மெயிண்டனென்ஸ் போயிடுச்சி, கடைசியா நான் இப்ப ரகளை படம் பார்த்தேன். சீட் எல்லாம் கிழிந்து உடைந்து தொங்குகிறது.
  குமரன் என் சின்ன அத்தை வீட்டுக்கு அருகில் உள்ள தியேட்டர் சனி இரவுக்காட்சி எந்தப்படமாயிருந்தாலும் செல்வதுண்டு. இப்பொழுது மூடிக்கிடப்பது வருத்தமளிக்கிறது. நகராட்சி தியேட்டரான திருவள்ளுவர் இன்னும் இயங்குவது ஆச்சரியமளிக்கிறது. யாகப்பாவும் தற்போது இயங்குவது இல்லை, ராஜா கலையரங்கமும் தான். மிகச்சிறு வயதில் நான் ஞானத்தில் திரைப்படங்கள் பார்த்துள்ளேன். அந்த லெஸ்ஸி கடையில் நான்கு டோக்கன் வாங்கி அரைமணிக்கு ஒரு லெஸ்ஸியாக குடிக்கும் சந்தோஷம் இருக்கிறதே.
  அண்ணே கீழ அலங்கத்தில் தற்போதும் பார்க்கும் நிலையில் இருக்கும் பீரங்கிமேட்டை மறந்து விடாதீர்கள். அதன் அருகில் தான் என் பெரிய அத்தை வீடு இருக்கிறது. பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு தான் விளையாடுவது எல்லாம்.

  ReplyDelete
 3. அருமையான படங்களுடன் பார்க்காத தஞ்சாவூரின் இடங்களை முழுமையாகக் கண்டுகொண்டேன்.

  ஒரு தடவை வந்திருக்கின்றேன் தஞ்சாவூர் பெரிய கோயில் , அரண்மனை,மியூசியம், பூம்புகார் பார்த்தேன்.அருமையான இடம்.

  ReplyDelete
 4. தஞ்சை கோவில் வித்தியாசமான கோணத்தில் அசத்தலா இருக்கு...!!!!

  ReplyDelete
 5. இதுவரை நான் தஞ்சைக்கு போனதேயில்லை. ஆனால் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊராக கருதுகிறேன். ஒருவேளை தஞ்சையைப் போலவே புராதனத்து பெருமைகள் வாய்ந்த காஞ்சிபுரத்துக்காரன் என்பதாலும் இருக்கலாம்.

  நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
 6. இதுவரை நான் தஞ்சைக்கு போனதேயில்லை. ஆனால் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊராக கருதுகிறேன். ஒருவேளை தஞ்சையைப் போலவே புராதனத்து பெருமைகள் வாய்ந்த காஞ்சிபுரத்துக்காரன் என்பதாலும் இருக்கலாம்.

  நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
 7. //தஞ்சை திலகர் திடல். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தொடங்கி எம். ஜி. ஆர், கலைஞர், ஜெ , சோனியா என இங்கு பேசாத அரசியல் தலைவர்களே இல்லை. //
  I think Thilagar once made a speech/his helicopter landed in this ground. That's the reason it is still called as 'Thilagar Thidal'. Please correct me if I am wrong.

  Both Bombay sweets and Anbu milk are my friends.

  ReplyDelete
 8. போனவாரம் கும்பகோணத்துல எங்க செக் பாலாசி கல்யாணத்த முடிச்சிட்டு நேரா தஞ்சாவூர் தேவர் மெஸ்ல பிரியாணி சாப்பிடலாம்னு எங்க தலைவர் தலைமைல தஞ்சை வந்தோம்.அங்க சிங்கை JPRம் வி.மனிதனும்,காமாச்சி மெஸ்க்கு கூட்டிட்டு போனாங்க வெறால் மீன் குழம்பும் மண்டையும் அட்டகாசம்.(தல எங்க தலைக்கும் கும்கிக்கு மட்டும் தான் இருந்துங்க)அடுத்ததடவ போனீங்கன்னா இங்கையும் போயிப்பாருங்க :-))
  புரோட்டாக்கடைய மைண்ட்ல வெச்சுக்குறேன் :-)))

  ReplyDelete
 9. 1.அன்பு பால் நிலையம் சுமார் 35 வருடங்களாகிறது
  2. அப்பாவின் பையில் இருந்து காசு காணவில்லையென்றால் ,அது சாந்தி புரோட்டாவாகியிருக்கும்
  3.ராணிபேரடைசில் பார்த்த முதல் படம் நிழல்கள்..தனியாக:-) சேர்ந்து நிறைய படங்கள்..யாருடன் என்று கேட்கக்கூடாது
  4. திருவள்ளுவர் தியேட்டர்.. வீட்டில் சண்டைபோட்டு,கோவித்துக்கொண்டு போய் தங்கிய இடம்.. சுமார் மூன்று மாதங்கள் அங்கு சோடா.கலர்,முறுக்கு விற்றேன்.

  4. குமரன் தியேட்டரில்தான் முதல் முதலாக கஞ்சா அடிக்க கற்றுக்கொண்டேன்.. ஹவுஸ்ஃபுல் என்றொரு பழைய இந்திப்படம் என்று நினைவு..
  5. அசோகா என்றால் அது திருவையாறு ராமன் ஸ்வீட்ஸ் ஸ்டால்தான்..பாம்பே எல்லாம் பிறகுதான்..
  6. தெற்கலங்கம் தெருவில் கிட்ட தட்ட 250 மருத்துவர்கள் இருக்கலாம்

  ReplyDelete
 10. //போனவாரம் கும்பகோணத்துல எங்க செக் பாலாசி கல்யாணத்த முடிச்சிட்டு நேரா தஞ்சாவூர் தேவர் மெஸ்ல பிரியாணி சாப்பிடலாம்னு எங்க தலைவர் தலைமைல தஞ்சை வந்தோம்.அங்க சிங்கை JPRம் வி.மனிதனும்,காமாச்சி மெஸ்க்கு கூட்டிட்டு போனாங்க வெறால் மீன் குழம்பும் மண்டையும் அட்டகாசம்.(தல எங்க தலைக்கும் கும்கிக்கு மட்டும் தான் இருந்துங்க)அடுத்ததடவ போனீங்கன்னா இங்கையும் போயிப்பாருங்க :-))
  புரோட்டாக்கடைய மைண்ட்ல வெச்சுக்குறேன் :-)))//

  நான் தான் காமாட்சிக்கு போக சொல்லியது என்ற உண்மையை ஏன் மறைத்திர்கள் :-)

  ReplyDelete
 11. //ராணி பேரடைஸ் எல்லாம் இப்ப மெயிண்டனென்ஸ் போயிடுச்சி, கடைசியா நான் இப்ப ரகளை படம் பார்த்தேன். சீட் எல்லாம் கிழிந்து உடைந்து தொங்குகிறது. //

  அது இப்போது பிக் சினிமா ..நான் அங்கு சமீபத்தில் கா. சொ.எப்படி பார்த்தேன்.. ஆரம்பத்தில் தேசியகீதம் ஒளிபரப்பினார்கள்..சிகரெட்,பாக்கு உள்ளே அனுமதி இல்லை.. தியெட்டர் நன்றாகத்தானே இருந்தது?

  ReplyDelete
 12. தஞ்சையைச் சுற்றிக் காண்பித்து விட்டீர்கள். மற்றவர் தொடர்ந்து..:)!

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 13. படங்களும், தகவலும் அருமை.

  ReplyDelete
 14. @மணிஜீ மன்னிச்சுசூசூசூ :-)) அப்பையே யானக்காரர் சொன்னார் மணிஜீ சொல்லிருக்கார் இன்னைக்கு காமாச்சிக்கு போகனும் மண்ட சாப்டே ஆகனும்னு :-))

  ReplyDelete
 15. தஞ்சாவூர் பற்றி எழுதி என் கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தி விட்டீர்கள்.

  அனைத்தையும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.

  சில செய்திகள் நண்பர்களின் பின்னூட்டத்தில் சரி செய்யப்பட்டுள்ளது.

  எத்தனை முறை பெரியக் கோவில் பற்றி எழுதினாலும் சரி, தஞ்சாவூர் பற்றி எழுதினாலும் புதிதாகப் படிப்பது போல்தான் உள்ளது.

  மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 16. thanjai parriya ninaivukal arumai. thanjaikkaaran aana naan niingkal kurithulla ovvondrum kurithuum niraiya ezhutha ullathu. ivarrin aarambam idailnilai valarcci mudivu ena niraya thakavalkal ullana. ungal pathivu arumai. nalla arimugam thanjaiyai parri arriyathaavarkalukku. some problems in my computer so that I am not in a position to post my comments in Tamil sorry mohan. vaazthukkal.

  ReplyDelete
 17. ஆஹா... நான் தஞ்சாவூர்ல இருந்துருக்கேனே....
  தஞ்சைக் கோவில் சமீபத்தில் படித்த புத்தகத்தை நினைவு படுத்தியது! :))
  புதாறு என்ன இப்படி வரண்டுக் கிடக்கிறது? பிரகதீஸ்வரா...
  மங்கலபுரத்தில் சர்ச்சா... நான் இருக்கும்போது இல்லையே... ஈஸ்வரி நகர் தாண்டி ஒரு மசூதி இருக்கும்... அதுக்கு முன்னாலேயே ஒரு பிரசித்தி பெற்ற, ஆனால் சிறிய ஆஞ்சநேயர் கோவில் இருக்கும்.
  ராணி பாரடைஸ்.... என்ன படம் பார்த்திருக்கிறேன் இங்கு... நிழல்கள் என்று ஞாபகம்! முரட்டுக் காளையோ...?
  சிவகங்கைப் பூங்கா.... ஆ... உள்ளே தொங்கு பாலம் இருக்கோ...
  அன்பு பால் நிலையம்... கேள்விப் பட்டதில்லை... ஆனந்த் பவன் பக்கத்தில் சுப்பையாப் பிள்ளை பால்கடை இப்போது இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
  பாம்பே ஸ்வீட்ஸ்... அப்போது இருந்ததா...நினைவில்லை!
  குமரன் தியேட்டர்... ஆ...இப்படி ஆகி விட்டதா... குர்பானி, மெக்கனாஸ் கோல்ட், இன்னும் சில படங்கள் பார்த்திருக்கேன்... இது இருக்குமிடம் பெயர் என்ன... மங்களபுரம், செல்வா நகர், ராஜப்பாநகர், கணபதி நகர், மேம்பாலம் என்று வரும் ஸ்டாப்கள்... மங்களபுரம் தாண்டி இது இருக்கும்.
  திலகர் திடலை மறக்க முடியாது... காரணமும் சொல்ல முடியாது!
  திருவள்ளுவர் தியேட்டர்... மறக்க முடியாத சம்பவங்கள் சந்தித்த தியேட்டர். கிரகப்பிரவேசம் இங்கு பார்த்தேன். பக்கத்திலேயே சென்றல் லைப்ரேரி இருக்கும்!
  ஆப்ரஹாம் பண்டிதர் கார்டன் அருளானந்த நகரில் அல்லவா இருக்கும்... எதிரே அப்போது காஸ்மாபாலிடன் க்ளப்....அதன் பின்னே வ.வு.சி நகரில் எங்கள் வீடு!
  ஆற்றுப்பாலம்..? வலது பக்கம் யாகப்பா தியேட்டர்? இங்கு நேராகச் சென்றால் எங்கள் சூப்பர் டெய்லர் பரத் இருப்பார். சைக்கிளில் இங்கு விழுந்து முட்டி பேந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது!
  ஓ...வாரன்ட் பார்த்த ஞானம் தியேட்டர் காணோமா...

  ReplyDelete
 18. அடடா..நான் தஞ்சை போன போது உங்க பதிவு வரல..இல்லேனா..எனது கோவை மெஸ்ஸில் இடம் பெற்று இருக்கும் சாந்தி பரோட்டா

  ReplyDelete
 19. நிறைய இடம் சொல்லி இருக்கீங்க..போறேன்..பாக்குறேன்..

  ReplyDelete
 20. தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர்தட்டு, ஆத்துப்பாலம் தர்கா அருகே ஒருவர் வைத்திருந்த (தற்போது உள்ளதா?) வித்தியாசமான பெயருள்ள கடை! ஆம். கடையின் பெயர் "பேனா மருத்துவர்" இன்க் பேனாக்களை ரிப்பேர் செய்து கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட்!

  தஞ்சை பெரியகோவில் வாசலில் நிற்கும் யானை மற்றும் கொஞ்ச தொலைவில் அமைக்கப்பட்டிருக்கு ராஜராஜ சோழன் சிலை இவையெல்லாம் மிஸ்ஸிங்க் ;( இருக்கட்டும் இன்னொரு பதிவிட்டு ஈடு கட்டிடுங்க பாஸ்.

  ReplyDelete
 21. தஞ்சையின் ஞாபகங்கள் . நன்றி

  ReplyDelete
 22. தஞ்சையை நேரில் சுற்றிப் பார்த்தேன் உங்கள் பதிவில்... நன்றி!

  ReplyDelete
 23. துளசி டீச்சர்: என்ன சரியா பாக்கலைன்னு சொல்றீங்க ! அடுத்த முறை தஞ்சை வரும் போது சொல்லுங்கள் ஜமாய்ச்சுடலாம்

  ReplyDelete
 24. செந்தில்: நானும் ராணி பரடைஸ் சமீபத்தில் போகலை. பலரும் தியேட்டர் அருமை என்றனர்.

  //அந்த லெஸ்ஸி கடையில் நான்கு டோக்கன் வாங்கி அரைமணிக்கு ஒரு லெஸ்ஸியாக குடிக்கும் சந்தோஷம் இருக்கிறதே//
  அடேங்கப்பா. நான் எப்போதோ ஒரு முறை இரண்டு குடித்துள்ளேன் அம்புட்டு தான்

  ReplyDelete
 25. மாதேவி. மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 26. யுவா: நீங்க தஞ்சை இதுவரை போனதில்லை என சொல்வது ஆச்சரியம் தருது. ரிப்போர்டர் !! நிச்சயம் வாய்ப்பு வரும். அவசியம் பாருங்க. நானும், பின்னூட்டத்தில் நண்பர்களும் சொல்லியுள்ள ஹோட்டல்களை விசிட் அடிக்க பாருங்கள்

  ReplyDelete
 27. ஆதி மனிதன் : திலகர் திடல் பற்றி நீங்கள் சொன்னது எனக்கும் புது தகவல். பாம்பே சுவீட் & அன்பு பால் கடை முதலாளிகள் தங்கள் நண்பர்கள் என அறிவேன்

  ReplyDelete
 28. கார்த்திக்: தேவர் மெஸ் மிஸ் பண்ணிட்டேன். நிச்சயம் ஒரு முறை தனி பதிவாவே எழுதலாம் அதை பற்றி

  காமாச்சி மெஸ் புது தகவல். மணிஜியிடம் எங்கே இருக்கு என தெரிந்து கொள்கிறேன் நன்றி

  ReplyDelete
 29. மணிஜி : பதிவை விட கலக்கலா இருக்கு உங்க பின்னூட்டம் ! எவ்ளோ தகவல் !! நன்றி

  ReplyDelete
 30. ராமலட்சுமி மேடம்: நன்றி
  //மற்றவர் தொடர்ந்து..:)!

  இது புரியலை. மற்றவை என சொல்ல வந்து மற்றவர் என டைப் செய்து விட்டீர்களோ?

  ReplyDelete
 31. அமைதி அப்பா: மகிழ்ச்சி. தஞ்சையில் தான் படித்தீர்களா?

  நாத்திகர் என்றாலும் பெரிய கோவிலை நீங்கள் ரசிப்பது அருமை

  ReplyDelete
 32. ஹரிணி சார்: உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தருகிறது. தஞ்சை எத்தனை பேரின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது !

  ReplyDelete
 33. ஸ்ரீராம்: அடேங்கப்பா: எம்புட்டு நினைவுகள் !!

  //மங்கலபுரத்தில் சர்ச்சா//

  ஆம். இது மிக சரியாக குமரன் தியேட்டர் எதிரில் உள்ளது

  //சிவகங்கைப் பூங்கா.... ஆ... உள்ளே தொங்கு பாலம் இருக்கோ...//

  இருக்கு என்று தான் நினைக்கிறேன். போய் நாளாச்சு

  //ஆப்ரஹாம் பண்டிதர் கார்டன் அருளானந்த நகரில் அல்லவா இருக்கும்... //

  இல்லை லட்சுமி சீவல் மிக அருகில் இது உள்ளது.

  //யாகப்பா தியேட்டர்? இங்கு நேராகச் சென்றால் எங்கள் சூப்பர் டெய்லர் பரத் இருப்பார்//

  நான் கூட சூப்பர் டைலரிடம் தைத்துள்லேன்

  விரிவான நினைவுகளுக்கு நன்றி

  ReplyDelete
 34. கோவை நேரம் சார்: மகிழ்ச்சி பாருங்கள்

  ReplyDelete
 35. அதிரைக்காரன் said
  //பேனா மருத்துவர்" இன்க் பேனாக்களை ரிப்பேர் செய்து கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட்!//

  அட்டகாசம். என்னா வித்யாசமான கடை இல்லை? எழுத மறந்து விட்டேன். அடுத்த முறை செல்லும் போது இருக்கிறதா என பார்க்கிறேன்

  மிக நன்றி

  ReplyDelete
 36. சேகர்: நன்றி

  ReplyDelete
 37. ஜனா சார்: மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 38. தொடர்ந்து மற்றவரும் சுற்றிக் காண்பிக்கிறார்கள் பின்னூட்டங்களில்:)!

  ReplyDelete
 39. அருமையான பதிவு.
  தஞ்சாவூர்க்காரர்கள் கூட இவ்வளவு பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. Well covered.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 40. நானும் தஞ்சாவூர்காரன்தான். கூடிய விரைவில் எனது தஞ்சாவூர் பற்றிய பதிவை முகநூலில் இடுகிறேன். எனது பிளாக் mrnatarajan.blogspot.in

  உங்கள் பதிவு சூப்பர்.

  ReplyDelete
 41. Wow! HOME SWEET HOME!

  Thanks for the blogger for the wonderful photos. Of Course no photo can do justice to our town's beauty and our makkalin ulla azhagu.....adhai angeyye vaazhundhu unaravendum!

  UNGALIN INDHA ARTICLE, PHOTOS, NAAN THIS MOTHER'S DAY - MAY 13TH, thaai veettu seedhanamai cherish pannaren!

  anbudan,

  Vinatha.

  ReplyDelete
 42. வாசித்தேன்... நல்ல பதிவு...
  தஞ்சாவூரை பத்தி எத்தனை பேரு எழுதினாலும், எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது.......

  ReplyDelete
 43. \\தரையில் நிழல் விழாத கோபுரம் பற்றிய கதை கேட்டு ரசிக்க \\இது உண்மையல்ல, நிழல் கீழே விழும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...