Saturday, May 5, 2012

சென்னை ஐ.பி.எல் மேட்ச் நேரடி அனுபவம் ஏராள படங்களுடன்


சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் CSK VS KKRமேட்ச் பார்த்தோம். இதுவரை சேப்பாக்கம் பார்க்காதோருக்கு புது தகவல்களும், பார்த்தோருக்கு இனிய நினைவுகளும் இக்கட்டுரையில் இருக்கும்.

*******
மேட்ச் பார்க்க பலரும் பறக்கும் ரயிலையே பயன் படுகின்றனர். கார் வைத்திருக்கும் மிக மிக பணக்கார்கள் கூட பார்க் செய்து எடுப்பது சிரமம் என ரயிலில் வருகின்றனர். நம்மை மாதிரி மிடில் கிளாஸ் நாடுவது இதுவே. வேளச்சேரி ஸ்டேஷனில் ஏறும்போதே நிறைய மஞ்சள் கலர் டி ஷர்ட்டுகள் !!

நாங்கள் வேளச்சேரி ஸ்டேஷனில் பைக் டோக்கன் தரும் பெரியவரே " IPL மேட்சுக்கா?" என்று கேட்டு " பன்னிரண்டு மணிக்கு மேலாகும் திரும்ப வர " என அதற்கு தகுந்த ( டபிள் சார்ஜ்) டிக்கெட் தந்தார்.

சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கினால் ஓரிரு நிமிடத்தில் மைதானத்தை அடையலாம். நாங்கள் (மகளும் நானும்) எட்டு மணி மேட்சுக்கு ஆறரைக்கு மைதானம் சென்று விட்டோம். CSK பெயர் போட்ட இலவச மஞ்சள் டி ஷர்ட்டும் தொப்பியும், கையில் வைத்து சத்தம் எழுப்ப பலூனும் தந்தனர். வெளியில் இருந்து தண்ணீர், உணவு எதுவும் எடுத்து செல்ல அனுமதி இல்லை. சீக்கிரம் சென்றதால் நல்ல வியூ கிடைத்தது.

நாங்கள் இருந்தது A ஸ்டாண்டு. டிக்கட் விலை ரூ. எழுநூறு.



மைதானம் முழுதும் பெரும்பாலும் 12 முதல் 25 வயது நிரம்பிய இளைஞர்களே நிரம்பி வழிந்தனர். அவர்களுக்கு துணையாக அம்மா அல்லது அப்பா தங்கள் பசங்களின் நண்பர்கள் கூட்டத்துடன் வந்திருந்தனர்.



ஆறரை முதல் ஏழே முக்கால் வரை வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். நடு மைதானத்தில் கம்பீர், யூசுப் பதான் உள்ளிட்ட KKR வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். ஓரத்தில் சில CSK வீரர்கள் மட்டும் பயிற்சியில் இருந்தனர். (எப்போதும் இப்படி தானாம் ! நடு பிட்ச் வரும் டீமுக்கு... மேலும் அவர்களே நிறைய பயிற்சியில் ஈடுபடுகின்றனராம் )

ஒரு வயதானவர் ..ஆர்வத்துடன் மைதானத்தில் 


கல்லிஸ் மட்டும் எதுவும் செய்யாமல் காலை மடித்தவாறு அமர்ந்திருந்தார். அவருக்கு காயமோ, ஆட மாட்டோரோ என நினைத்தோம். ஆனால் ஆடினார்.

இந்த ஐ. பி. எல்.லில் மைக்கேல் ஹசி முதல் முறை இந்த மேட்சில் விளையாடினார். Consistent ஆக விளையாடுபவர் என அவர் விளையாடுவதில் மக்களுக்கு செம மகிழ்ச்சி. அவர் பெயர் சொன்னதும் பெரும் குரல் எழுப்பினர்.

சென்னை வீரர் பாலாஜி KKR-க்கு ஆடுகிறார். அவர் மட்டும் தனியாக மைதானத்தை சுற்றி சில ரவுண்டு ஓடினார். அப்போது கூட்டம் பெரிய அளவு சத்தம் எழுப்பி " பாலாஜி, பாலாஜி" என சத்தம் போட்டாலும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. (அன்று அணியில் அவர் இல்லை. இது தெரிந்து தான் அமைதி காத்தாரோ?)

மாறாக வெளி நாட்டு வீரர்கள் குறிப்பாய் லீ, பிரேவோ போன்றோர் மக்களின் கை தட்டலுக்கு நன்றியும் வணக்கமும் ஒவ்வொரு முறையும் தெரிவித்தனர். குறிப்பாய் லீ நம் கலாச்சாரப்படி இரு கையும் கூப்பி வணக்கம் சொன்னது மக்களிடம் செம ரெஸ்பான்ஸ் !

எங்களுக்கு நன்கு தெரிந்த குடும்பத்திலிருந்து ஏழெட்டு பள்ளி மாணவிகளுடன் கூட்டமாக மேட்ச் பார்த்தோம். அனைவரும் சேர்ந்து கமன்ட் அடித்தவாறு பார்த்தால் நன்றாக இருந்தது.

எங்களுக்கு நேர் முன்னே KKR சப்போர்ட் செய்யும் ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் சென்னைக்கு எதிராக குரல் கொடுத்தனர் " வந்துட்டாருய்யா பத்து கோடி ஜடேஜா. அப்புடியே.... பின்னிடுவாரு. ஏய் பத்து கோடி.... பத்து கோடி " என்றெல்லாம் குரல் கொடுக்க, நம் மாணவிகள் கூட்டம் செம கடுப்பாகி அவர்களுக்கு பழிப்பு காட்டினர்

சியர் கல்ஸ் அருகே போலீசார் !
ஆட்டம் துவங்க இருபது நிமிடம் முன்பு சியர் கேர்ள்ஸ் வந்து ஆட துவங்கினர். சரியான துள்ளல் இசை கொண்ட தமிழ் பாட்டுக்கு, பாடல் வரிகள் அர்த்தம் புரியாவிடினும் இசையை வைத்து நன்கு ஆடுகின்றனர். உத்து (நீங்க நினைக்கிற உத்து அல்ல) கவனித்ததில் குறிப்பிட்ட சில ஸ்டெப்புகலே வைத்து கொண்டு மாற்றி மாற்றி ஆடுவது தெரிந்தது



பூட்ட பட்ட அந்த 3 ஸ்டாண்டுகள் + நான்குக்கு புகை !


நான்கு அடித்தால் சியர் கேர்ல்ஸ் ஆடும் போது அருகில் "புகை போடுகின்றனர்" . ஆறு அடித்தால் புஸ்வானம் மாதிரி விடுகின்றனர். நேரில் பார்க்க ரொம்ப அருமையாக இருந்தது.

மைதானத்தில் மூன்று ஸ்டேண்டுகள் முழுக்க காலியா இருக்கு. அதனால் மைதானம் காலி என பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. இந்த 3 ஸ்டாண்டுகளும் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டவைஅ .தி.மு.க வந்த பின் இவை முறையின்றி கட்டப்பட்டவை என அனுமதி தர மறுத்து விட்டது. இதனால் இந்த ஸ்டேண்டுகள் பூட்டியே கிடக்கிறது. இவை திறக்கப்பட்டால் அவை யும் நிரம்பும். இப்போது டோட்டல் கெப்பாசிட்டி குறைந்ததால், டிமாண்ட அதிகமாகி டிக்கெட் விலை நிறைய அதிகமாகி விட்டது 




எங்களுக்கு அருகில் மூன்று சிறுவர் சிறுமிகள் செம டான்ஸ். ஒவ்வொரு முறை பாட்டு போடும் போதும் அலுக்காமல் ஆடி தீர்த்தனர்

Entrance Gate: Checking done here
முதல் பாதி CSK ஆடிய போது ஒவ்வொரு ரன்னுக்கும் கூட்டம் ஆர்ப்பரித்தது. பின் KKR பேட்டிங்கின் போது அமைதியாகி விட்டது. அப்போதும் கூட அவ்வப்போது CSK CSK என சத்தம் எழுப்பி தம் அணியை ஊக்குவித்தனர்

இவ்வளவு கூட்டத்துக்கும் Toilet சுத்தமாக இருப்பது ஆச்சரியம் !

********
டைம் அவுட் முடிந்து கடைசி பத்து நொடிகளை குறிக்க 10,9,8,7 என மைக்கில் கத்த கூட்டமும் சேர்ந்து கத்துகிறது. மேட்ச் சற்று டல் அடிக்கும் போதெல்லாம் ஐ. பி. எல்லின் ஒலியான "பீ பீ பீ .." ஒலிக்க, கோட்டம் "ஓஒ" என கத்தி மகிழ்கிறது

ஒருவர் " அஸ்கலக்கடி கல கல கல " என கத்த, மொத்த கூட்டமும் " ஊ.. ஆ ஊ.. ஆ " என்று கத்தும் ! இது சென்னை ஸ்பெஷல்

வெளியில் சாப்பாடு யானை விலை விற்றது. சின்ன பர்கர் எண்பது ரூபாய். சாம்பார் சாதம் என்று பெயரில் ஒரு வஸ்த்து அறுபது ரூபாய். பத்து ரூபா சிப்ஸ் பாக்கெட் முப்பது ரூபாய்.




நடிகர்கள் சித்தார்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மேட்ச் பார்க்க வந்திருந்தனர். மேலும் KKR மேட்ச் என்பதால் ஷாருக்கும் ! அவர்களை திரையில் காட்டிய போது தான் பார்க்க முடிந்தது, எங்கு இருந்தார்கள் என தெரியலை. இங்கும் ஷாருக் நின்று கொண்டிருந்தார். அது அவர் செண்டிமெண்ட் போலும்.

ஆறுக்கு புஸ்வானம் 
உதயநிதியை திரையில் காட்டி முடித்ததும் ஓகே ஓகே பட பாடலான “வேணாம் மச்சான் வேணாம்” பாடல் ஒலிக்க கூட்டம் ஆடி தீர்த்தது.

சென்னை குறைவான ரன் எடுத்ததால், சரி " இனி கொல்கத்தாவை சப்போர்ட் பண்ணுவோம், அதுவும் கம்பீர் தானே?" என பலரும் (குறிப்பாய் எனக்கு நேர் பின்னே இருத்த ஆண்டீஸ் ) பேசி கொண்டாலும் சென்னை எப்படியாவது ஜெயிசிடாதா என்று தான் பார்த்தனர்.

15 முதல் 20 ஓவர் வரை தோனி மற்றும் ஜடேஜாவின் மிக மெதுவான ஆட்டம் மற்றும் நம் பவுலர்கள் போட்ட மிக அதிக ஒய்டுகள் இவற்றால் சென்னை தோற்றது

பல சின்ன பசங்க அழ ஆரம்பித்து விட்டனர். பாவமாய் இருந்தது.

என் பெண் எவ்வளவோ பரவாயில்லை. இந்த experince ஐ தான் என்ஜாய் செய்யணும் என்கிற தெளிவோடு இருந்தாள். . மேட்ச் முடிந்தும் ஒரு டிரையின் உள்ளது. அது சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து கூட்டம் வரும் வரை காத்திருந்து பின் எடுக்கிறார்கள்.

வீட்டுக்கு வந்து சேர இரவு பன்னிரெண்டரை ஆனாலும், அடுத்த ஒரு மணி நேரம் தூங்காமல் மேட்ச் பார்த்த வியப்பை பேசி கொண்டிருந்தாள் பெண் !

மேட்ச் தோற்றதுக்கே இப்படி ! சென்னை ஜெயிச்சிருந்தா அவள் வகுப்பு தோழிங்க எல்லாருக்கும் கதை அளந்து தள்ளியிருப்பா !

முடிந்தால் சேப்பாக்கம் பக்கம் ஒரு மேட்சுக்கு உங்க பசங்களுடன் போயிட்டு வாங்க சார் !

அதீதம் மே 5 இதழில் வெளியானது 

38 comments:

 1. மேட்சினை நேரே பார்க்க முடியாவிட்டாலும் அந்த அனுபவத்தினை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் டிவியில் பார்ப்பதைவிட ஸ்டேடியத்தில் பார்ப்பது சூப்பரா இருக்கும்தான்.

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு..

  ReplyDelete
 3. நேர்ல பாக்குற அருமை டிவியில் இருக்காது.ரொம்ப அருமையான பதிவு.நானே ஸ்டேடியம் வந்த மாதிரி இருக்குங்க...

  ReplyDelete
 4. எங்களுக்கு இந்த பழம் புளிக்கும்!

  ReplyDelete
 5. நேராப்போய் பார்க்கும் அனுபவத்தை விட, உங்கள் அனுபவம் இன்னும் சுவாரஸ்யம்

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 6. நேரில் பார்க்கும்போது கிடைக்கும் எக்சைட்மன்ட்டே தனிதான்.

  பறக்கும் ரயில் சரியான ஆப்ஷன். மைதானம் அருகிலேயே சேப்பாக்கம் ஸ்டேஷன் இருப்பதால் ரொம்பவும் வசதி!

  ReplyDelete
 7. அடடா அருமை . தி - ஷர்ட் ப்ரீ யா தருவாங்களா ? நம்ப முடியலையே ! எல்லாருக்கும் தருவாங்களா இல்ல ஒரு குறிப்பிட்ட டிக்கெட் கு மட்டும் தருவாங்களா ?

  ReplyDelete
 8. மோகன்குமார்,

  அரங்கில் பார்க்கும் போது ஒரு உற்சாகம் இருக்கும் ஆனால் வேர்த்துக்கொட்டி ,தலைவலி தூக்கும்.

  முன்னர் எல்லாம் மலிவான கட்டணம் என்பதால் டெஸ்ட் மேட்ச் கூட போய்ப்பார்ப்பேன் , 5 நாளுக்கும் சேர்த்து 500 ரூ, சில ஒரு தின போட்டிகள் எனப்பார்த்துள்ளேன்.

  இப்போது தொ.காவில் கூட மேட்ச் பார்ப்பதில்லை.வெளியில் எங்காவாது கண்ணில் பட்டால் பார்ப்பதுண்டு. வேளாச்சேரியில் முருகன் கல்யாண மண்டபம் எதிரில் உள்ளப்பாரில் சரக்கோட மேட்ச் பார்க்க வசதியாக ப்ரொஜெக்டர் வச்சு மேட்ச் காட்டுவாங்க அப்போ ,இன்னும் அப்படி செய்றாங்களா. நிறைய இடங்களில் மேட்ச் காட்டுறங்க,இப்பவும் மேட்ச் ஓடும் போது பாரில் உட்கார இடம் கிடைப்பதில்லை :-))

  ----

  கேமரா எடுத்து செல்ல விட மாட்டர்களே ,கைப்பேசி கேமிராவா படம் தெளிவா தான் இருக்கு. கோடைக்காலம் என்பதால் தர்ப்பூஸ் சாலட் கூட விற்கிறாங்க போல.

  ReplyDelete
 9. மிட் விக்கெட் பார்த்த ஸ்டேண்ட் ஆஹ் ஒன்னுமே தெரியாதே... பந்து அகலமா போச்சா, நேராப்போச்சானே புரியாது, அடிக்கிறது வச்சு, அம்பையர் கைய ,காலை ஆட்டுறத வச்சு புரிஞ்சுக்கணும்.குறைவான கட்டணம் அந்தப்பகுதிக்கு தான் ,நானெல்லாம் நேராக்கம்பிவேலிக்கு போயிடுறது :-))

  ReplyDelete
 10. விச்சு : மைதானத்தில் பார்க்கும் ஜாலியே தனி தான். என் கூட டிவியில் பார்ப்பதை விட ஜாலியா இருக்கு என்றால். ஒவ்வொரு பாலும் அங்குள்ள ஸ்க்ரீனில் மறுபடி காட்டுவாங்க

  ReplyDelete
 11. நன்றி இராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 12. கோவை நேரம் said...
  நேர்ல பாக்குற அருமை டிவியில் இருக்காது

  உண்மை தான் கோவை நேரம் மிக நன்றி

  ReplyDelete
 13. வீடு சுரேஸ்குமார் said...
  எங்களுக்கு இந்த பழம் புளிக்கும்!

  *******

  சென்னையில் நீங்கள் இல்லை என்பதால் சொல்றீங்களா சுரேஷ்? எத்தனை பேர் வெளியூரிலிருந்து வர்றாங்க தெரியுமா? ஒரு முறை வந்தால் போகுது

  ReplyDelete
 14. ரகு உண்மை தான். முன்பெல்லாம் நான் பைக்கில் போவேன். இப்போது ரயில் தான் சிறந்த வழி

  ReplyDelete
 15. கவிதை காதலன் - மணிகண்டவேல் said...
  நேராப்போய் பார்க்கும் அனுபவத்தை விட, உங்கள் அனுபவம் இன்னும் சுவாரஸ்யம்

  ********

  நன்றி கவிதை காதலன்

  ReplyDelete
 16. A D Vishnu Prasad said...
  அடடா அருமை . தி - ஷர்ட் ப்ரீ யா தருவாங்களா ? நம்ப முடியலையே ! எல்லாருக்கும் தருவாங்களா இல்ல ஒரு குறிப்பிட்ட டிக்கெட் கு மட்டும் தருவாங்களா ?
  *******
  எல்லாருக்கும் தான் தந்தாங்க விஷ்ணு. சென்னை மேட்ச் எப்போது பார்த்தாலும் அனைவரும் ஒரே மாதிரி மஞ்சள் நிற டீ ஷர்ட் அணிந்திருப்பதை பாருங்கள்

  இருந்தாலும் கடைசியில் வருவோருக்கு காலி ஆகிட்டா தர மாட்டாங்க என நினைக்கிறேன்

  ReplyDelete
 17. விரிவான கமண்ட்டுக்கு நன்றி வவ்வால். எனது ஆபிஸ் இப்போ வேளச்சேரி தான். ஆனா நீங்க சொன்ன பார் மேட்டர் தெரியாது ! விசாரிச்சு இன்னும் அங்கு மேட்ச் காட்டுராங்கன்னா
  இங்கேயே மறுபடி சொல்றேன்

  கை காமிராவில் தான் படம் எடுத்தது.

  நேர் வியூ தான் நன்றாயிருக்கும். அங்கு இடம் கிடைக்கலை. இதுவும் நல்லா தான் இருந்தது

  ReplyDelete
 18. நல்ல கவரேஜ்..

  ReplyDelete
 19. நேரில் மேட்ச் பார்க்கணும்ன்னு ஆசை இருக்கு...ஆனா, உத்து கவனிச்சா ஒரு விஷயம் புரியும்...எல்லா மேட்ச்லையும் பாதி மைதானம் காலியாத்தான் இருக்கு...மக்களுடைய கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை...ஆனால், கிரிக்கெட்டை நிர்வகிப்பவர்களின் பேராசை அதிகரித்துவிட்டது...ரூ 3௦௦௦, 5௦௦௦, 7௦௦௦, 12௦௦௦..இதெல்லாம் ஒரு டிக்கெட்டின் விலை...ரொம்ப டூ மச்....அதனால், உங்க நேரடி அனுபவமே போதும் சார் :)

  ReplyDelete
 20. நிறைய செய்திகளை தெரிந்துக் கொண்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 21. நன்றி வித்யா

  ReplyDelete
 22. Bhupesh Balan said...
  நேரில் மேட்ச் பார்க்கணும்ன்னு ஆசை இருக்கு...ஆனா, உத்து கவனிச்சா ஒரு விஷயம் புரியும்...எல்லா மேட்ச்லையும் பாதி மைதானம் காலியாத்தான் இருக்கு...

  *********

  பூபேஷ்: நீங்கள் பின்னூட்டம் இட்ட பின் காலியான ஸ்டாண்டுகள் குறித்த பகுதி சேர்த்துள்ளேன் நன்றி

  ReplyDelete
 23. அமைதி அப்பா: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 24. அன்பின் திரு மோகன் குமார்,

  நேரில் சென்று மேட்ச் பார்த்தது போல் இருக்கிறது.. நல்ல பதிவு. வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவள சங்கரி.

  ReplyDelete
 25. அங்காடித் தெரு வந்த புதிதில் நடந்த ஐ பி எல் மேட்ச் அனுபவம் பற்றி எங்கள் ப்ளாக்கிலும் ஒரு பதிவு வந்திருந்தது! டிக்கெட் விலை அதிகம் என்பதற்கான காரணம் சொல்லியிருக்கிறீர்கள். சென்னையில் மட்டும்தான் யானை விலை! கேமிராவுக்குத் தடை ஏதும், எங்கும் இல்லை போலும்! அவ்வளவு நேரம் எப்படிங்க உள்ளே உட்கார்ந்திருந்தீங்க...! சென்னை தோற்றால் ஏன் சோகம்.....சென்னை அணியில் ஏதோ தமிழ் 'இளைஞர்கள்' மட்டும் ஆடுவது போல்...!

  ReplyDelete
 26. நேரில் பார்த்த அனுபவத்தை உங்க எழுத்துகளாலேயே கொண்டு வந்துட்டீங்க.. அருமை.

  ReplyDelete
 27. அஹா..உங்களுடைய அனுபவத்தை மிக அழகாக விவரித்து இருக்கீங்க மோகன்.நாங்களே மேட்ச் பார்த்தாப்போல இருக்கு. படங்கள் சூப்பர்.

  ReplyDelete
 28. சிற‌ப்பான, சுவாரஸ்யமான தொகுப்பு! பழைய நாட்களை ரிவைண்ட் செய்து பார்த்த மாதிரி இருந்தது!!

  ReplyDelete
 29. நல்லா எழுதியிருக்கீங்க மோகன்.



  //இந்த 3 ஸ்டாண்டுகளும் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டவைஅ .தி.மு.க வந்த பின் இவை முறையின்றி கட்டப்பட்டவை என அனுமதி தர மறுத்து விட்டது// கூடிய விரைவில் இங்கும் குழந்தைகள் மருத்துவமனையின் சில வார்டுகள் திறக்கப்படலாம். யார் கண்டது!

  ReplyDelete
 30. மேட்ச் நேர்ல பார்த்த effect உங்களோட narrating -ல இருந்தது.

  Nice post.

  ReplyDelete
 31. பவள சங்கரி: மகிழ்ச்சியும் நன்றியும் !

  ReplyDelete
 32. ஸ்ரீராம்: சென்னை மேல் ஊர் பாசம் இருப்பதால் தான் அணியை ஆதரிக்கிறேன் வேறொன்றும் இல்லை

  ReplyDelete
 33. அமைதி சாரல்: மிக மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 34. ராம்வி: பலரும் இதே போல் சொன்னது ரொம்ப சந்தோசம் தருது.

  ReplyDelete
 35. மனோ மேடம்: நன்றி மேட்ச் நேரில் பாதுருக்கீன்களா?

  ReplyDelete
 36. அட அனுஜன்யா !வாங்க வாங்க . காலி ஸ்டேண்டு பற்றி நீங்க சொன்ன நகைச்சுவை ரசித்தேன் :))

  ReplyDelete
 37. நன்றி + மகிழ்ச்சி அருண்

  ReplyDelete
 38. நானும் பார்த்த உணர்வு..... பகிர்வுக்கு நன்றி மோகன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...