Tuesday, May 1, 2012

வெளியூர் டூர் போகிறீர்களா - சில டிப்ஸ்

கோடை விடுமுறை ஆரம்பம் ஆகிடுச்சு. குடும்பத்தோடோ, நண்பர்களுடனோ டூர் போக திட்டமிடுகிறீர்களா? சில டிப்ஸ் இதோ:

முதலில் செய்ய வேண்டியது ரயில் டிக்கெட் புக் செய்வது தான். இப்போது 120 நாள் முன்பே டிக்கெட் முன் பதிவு செய்யலாம் என்பதால் ரயில் டிக்கெட் மிக சீக்கிரம் புல் ஆகி விடுகிறது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு முன்பே பிளான் செய்து டிக்கெட் புக் செய்து விடுங்கள். பின் ஏதாவது காரணத்தால் கான்சல் செய்தாலும், ரெண்டு நாள் முன்பு கான்சல் செய்து விட்டால் அதிகம் உங்களுக்கு லாஸ் ஆகாது.

இன்டர்நெட் மூலம் புக் செய்தால் confirm ஆன டிக்கெட் உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள். வெயிட் லிஸ்ட் எனில், அது confirm ஆகா விட்டால், பயணம் துவங்கும் முன் அந்த டிக்கெட்டுகளை ரயில்வே நிர்வாகம் கான்சல் செய்து விடும். இதுவே ரயில்வே ஸ்டேஷன் கியூவில் நின்று வாங்கிய டிக்கெட் எனில் வெயிட் லிஸ்ட் கான்சல் ஆனால் குறைந்தது Unreserved-ல் பயணம் செய்ய அனுமதி உண்டு. TTR-ஐ பார்த்து கேட்டு கொண்டால், அவர் எங்கேனும் சீட் தரவும் கூடும்.

ஆனால் குடும்பத்துடன் செல்லும் போது confirm ஆன டிக்கெட் இருக்கும் படி பார்த்து கொள்வது நல்லது !

முடிந்த வரை காரில் வெளியூர் டூர் செல்வதை தவிர்த்து ரயிலில் செல்வது பாது காப்பானது. பின் அங்கேயே கார், ஆட்டோ இவற்றை எடுத்து கொள்ளலாம். என் அனுபவத்தில் இதுவே சிறந்தது

எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் இதுவரை பார்க்காத இடம் செல்வது நல்லது. ஏறகனவே ஒரு முறை சென்ற இடம்,  மிக அதிக மகிழ்ச்சி தருவது குறைவே ( ஒரு சில exceptions இருக்கலாம் ). கோடை எனில் குளிர்வான இடங்கள் செல்ல திட்டமிடுவது நல்லது. அக்டோபர் மாதம் டில்லி, இந்தியாவின் பல பகுதிகள் செல்ல உகந்தது.

நீங்கள் போகும் ஊர் குறித்து முன்னரே நெட்டில் படித்து விடுங்கள். அந்த ஊர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் செல்லும் முன்னே நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொண்டு அதை அந்த ஊரில் இருக்கும் நபர்களிடம் தகுந்த நேரத்தில் பேச்சோடு பேச்சாக சொன்னால் அவர்கள் மிக மகிழ்வார்கள். மேலும் பல தகவல்களை தருவார்கள்

போலவே என்னென்ன இடம் பார்க்க வேண்டும் என்பதையும் இணையம் மூலமே ஓரளவு லிஸ்ட் பண்ணி விட முடியும். பத்து இடங்கள் லிஸ்ட் செய்து வைத்தால் ஓரிரு இடங்கள் சிற்சில காரணங்களால் அங்கு சென்ற பின் பார்க்க முடியாமல் போகலாம். இடங்கள் லிஸ்ட் எடுக்கும் போதே அந்த இடங்கள் என்றைக்கு விடுமுறை எந்த நேரம் திறந்திருக்கும் போன்ற தகவல்களும் பார்த்து விடுவது உங்கள் டூரை சரியாக திட்டமிட உதவும்.

சிலர் மிக நிதானமாக போகும் ஊரில் ஓரிரு இடங்கள் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பார்கள். வேறு சிலரோ ஒரு இடமும் விடாமல் பார்க்க நினைப்பார்கள். இரண்டுக்கும் நடுவில் balancedஆக இருப்பதே எனக்கு தெரிந்த வரை சிறந்தது. அனைத்து இடங்களையும்  பார்ப்பது நிச்சயம் சிரமம். அங்கு என்னென்ன இடங்கள் அதிக விசேஷமோ அவற்றை மட்டும் பார்த்தால் நலம். உங்களுக்கு இருக்கும் அதீத ஆர்வம் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்க வேண்டும் அல்லவா?

தங்கும் ஹோட்டல் : பெரும்பாலும் சுற்றி கொண்டு தான் இருக்க போகிறோம். இரவு மட்டும் தான் ஹோட்டல் ரூமில் இருப்போம். எனவே பெரிய ஸ்டார் ஹோட்டல் தேர்ந்தெடுப்பது தேவை இல்லை. அதே நேரம் நிச்சயம் டீசன்ட் ஆன ஹோட்டல் அவசியம். இணையத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஹோட்டல்கள் பற்றி விரிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. அங்கு சென்று தங்கியோர் தங்கள் அனுபவத்தை www.indiamike.com போன்ற இணைய தளங்கள் தருகின்றன. இதன் Forum-களில் எந்த ஊர் போனால், எங்கு தங்கலாம், என்ன விசேஷம் போன்ற கேள்விகளும் அதற்க்கான விடைகளும் நேரடி அனுபவம் மூலம் பலர் பகிர்கிறார்கள். நாம் எப்படி ப்ளாக், Facebook-ல் ஆர்வமாய் உள்ளோமோ அது போல பயணத்தில் ஆர்வமுள்ள பலர் இங்கு தொடர்ந்து விவாதம் செய்த வண்ணம் இருப்பர். அவர்கள் அனுபவத்தை நாம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

குளிர் பிரதேசம் எனில் அதற்கு தகுந்த சுவெட்டர் போன்றவை எடுத்து சென்று விடுவது நல்லது. முழுக்க உஷ்ணமான இடத்திலிருந்து மிக அதிக குளிர் பிரதேசம் செல்வதால் நமக்கு இவை அவசியம் தேவைப்படும். அங்கு சென்று வாங்கினால் பெரும் செலவு. எனவே சிரமம் பார்க்காமல் இங்கிருந்து எடுத்து சென்று விடுங்கள்.

சாப்பாடு: அந்தந்த ஊருக்கு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதை டேஸ்ட் செய்து பார்ப்பது வித்தியாச அனுபவம் தரும். அதே நேரம் டூரில் பொதுவாய் நிறைய சாப்பிடாமல் வழக்கத்தை விட சற்று குறைவான அளவு சாப்பிடுவது நல்லது. உணவு அதிகம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று போக்கு போன்றவை வந்து நாமும் என்ஜாய் செய்யாமல் பிறரும் நம்மால் வருந்தும் படி ஆகி விடும். கவனம் !

நிறைய அலைவதால் நிறைய தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆங்காங்கு மினரல் வாட்டர் வாங்கி குடிப்பது மிக முக்கியம். பலரும் போதுமான தண்ணீர் குடிக்க தவறுகின்றனர்.

காமிரா: அவசியம் காமிரா கொண்டு செல்வது நினைவுகளை பதிவு செய்து வைக்க உதவும். இதிலும் ஒரு அனுபவம். சிலர் காமிராவும் கையுமாய் எப்போதும் இருந்து இருக்கும் இடத்தை நன்கு கவனித்து என்ஜாய் செய்வதை தவற விடுகிறார்கள். இருக்கும் இடத்தை அனுபவிப்பதே முக்கியம். போட்டோ எடுப்பது போனஸ் தான். இதை நினைவில் கொள்வது அவசியம்

ஷாப்பிங் : செல்லும் ஊரில் என்ன வாங்கலாம், என்ன பொருள் எந்த இடத்தில் குறைவான விலையில் கிடைக்கும் போன்ற தகவல்களும் கூட இணையத்தில் கிடைக்கும், அல்லது அங்கு சென்ற பின், அங்குள்ள நபர்களை கேட்டும் தெரிந்து கொள்ளலாம். ஆட்டோ காரர்கள் போன்ற ஆட்களை கேட்டால் தங்களுக்கு எங்கு கமிஷன் கிடைக்குமோ அதை சொல்ல வாய்ப்புண்டு. எனவே ஹோட்டல் சூபர்வைசர் போன்ற ஆட்களிடம் அல்லது அந்த ஊரில் உள்ள நண்பர்களிடம் கேளுங்கள்.

ஷாப்பிங் செய்யும் போது உங்கள் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு சில பொருட்கள் வாங்கி வாருங்கள். வெளியூர் சென்றாலும் அவர்களை நினைவில் வைத்திருந்தீர்கள் என்று தெரிவிக்க தான் இந்த செயல் ! கூட்டு குடும்பங்களில் இந்த எதிர் பார்ப்பு அதிகமாய் இருக்கும் !

டூர் முடிகிற தருவாயில் உங்களுடன் வந்த அனைவரையும் எந்தெந்த இடம் மற்றும் அனுபவம் அவர்களுக்கு பிடித்தது என பேச சொல்வது எங்கள் வழக்கம். இது அனைவரின் ரசனையை அறிய உதவுகிறது என்பதோடு ஒவ்வொருவரும் நிஜமாகவே நாம் நன்கு என்ஜாய் செய்தோம் என்பதை உணரவும் உதவுகிறது ( பயண கட்டுரை எழுதும் என்னை மாதிரி ஆசாமிகள் குறிப்பு எடுத்து கொள்ளவும் தான் !)

டூரில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். அதனை பெரிது படுத்தாமல் உடனே மறந்து, சமாதானம் ஆகி விடுவது நல்லது. மாறாக அவற்றை மனதில் வைத்து கொண்டு, சண்டையை பெரிதாக்கினால் பயணம் நரகமாகும்.

வருடத்துக்கு ஒரு முறையேனும் இதுவரை செல்லாத இடம் எதற்கேனும் அவசியம் சென்று வாருங்கள் நண்பர்களே ! அந்த பயணங்கள் உங்களுக்கு இனிய நினைவுகளையும், அற்புத அனுபவங்களையும் தரும் !

இதில் தவறவிட்ட சில விஷயங்களை உங்கள் அனுபவத்திலிருந்து நீங்களும் பின்னூட்டத்தில் பகிரலாம் !

வல்லமை ஏப்ரல் 30 இதழில் வெளியானது 

29 comments:

 1. அருமையான பதிவு.
  துளசி மேடம் பதிவும் உங்கள் பதிவு போல் தான். எனக்கு பதிவு எழுதுவதற்கு அவர்கள் தான் ஆதர்ஷம். எனது முதல் பதிவில் அவர்களை குறிப்பிட்டிருக்கிறேன். இடங்களைப் பற்றிய செய்திகளும் அங்கு செல்வதற்கு குறிப்புகளும் நிரவலாக இருக்கும்
  அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.
  இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. //இடங்கள் லிஸ்ட் எடுக்கும் போதே அந்த இடங்கள் என்றைக்கு விடுமுறை எந்த நேரம் திறந்திருக்கும் போன்ற தகவல்களும் பார்த்து விடுவது உங்கள் டூரை சரியாக திட்டமிட உதவும்.//

  உண்மைதான்.. நேரம் வீணாவதைத் தவிர்த்து அந்த நேரத்துல இன்னும் சில இடங்களைப் பார்க்கலாம்.

  ReplyDelete
 3. நல்ல லிஸ்ட்..பயனுள்ள பதிவு.மிக்க நன்றிங்க..

  ReplyDelete
 4. அப்போ கிளம்பியாச்சா? :-)))))

  ReplyDelete
 5. முடிந்த வரை காரில் வெளியூர் டூர் செல்வதை தவிர்த்து ரயிலில் செல்வது பாது காப்பானது. பின் அங்கேயே கார், ஆட்டோ இவற்றை எடுத்து கொள்ளலாம். என் அனுபவத்தில் இதுவே சிறந்தது

  சிறப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. பயனுள்ள நல்ல பதிவு.

  இந்தியாவில் டூர் போகும்போது பெரிய பிரச்சனை இந்த ரெஸ்ட் ரூம்கள்தான்.

  சுத்தமான கழிப்பறை கிடைப்பது நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததோன்னு நினைச்சுக்குவேன்.

  பெரிய ஊர்களில் போய் இறங்கிக்கிட்டு உள்ளூர் வண்டிகளை வச்சுக்கறதுதான் நல்லது. அவுங்களுக்குத்தான் இடங்களுக்கான வழிகளும், திறந்திருக்கும் நேரங்களும் தெரிந்து இருக்கும்.

  குறைஞ்சது ரெண்டு நாள் ஒரு ஊருக்குன்னு வச்சுக்கிட்டால் நல்லது. ஒவ்வொரு நாள் என்று அமைத்துக்கொண்டு பயணம் கொஞ்சம் நெருக்கமாப்போச்சு எங்களுக்கு.

  ReplyDelete
 7. அருமையான பயனுள்ள கட்டுரை ..!

  நீங்கள் குறிப்பிட்ட இணையதளம் மிகவும் பயனுள்ளது ,.. பகிர்வுக்கு நன்றி ..!

  ReplyDelete
 8. அருமையான பகிர்வு சார். பயனுள்ள தகவல்கள்.

  ReplyDelete
 9. அவசியமான குறிப்புகளுடன் நல்ல பகிர்வு.

  //சிலர் காமிராவும் கையுமாய் எப்போதும் இருந்து இருக்கும் இடத்தை நன்கு கவனித்து என்ஜாய் செய்வதை தவற விடுகிறார்கள். //

  ஹி. நன்கு கவனித்து படமெடுப்பதே ஒரு என்ஜாய்மெண்ட்:)!

  ReplyDelete
 10. நன்றி ரத்னவேல் ஐயா. துளசி மேடமுடன் என்னை ஒப்பிடுவதே மிக பெருமைக்குரிய விஷயம் முக நூலில் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 11. அமைதி சாரல் மேடம்: நன்றி சந்தானம் சொல்ற மாதிரி " வாழ்க்கையே ஒரு அனுபவம் தானே :))

  ReplyDelete
 12. குமரன்: நன்றி நண்பா

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. மோகன் குமார் said...
  ஹுஸைனம்மா said...
  அப்போ கிளம்பியாச்சா? :-)))))
  ******
  க்கும். மத்த பதிவுக்கெல்லாம் எட்டி பாக்குறதே இல்லை. இப்ப வந்து கேள்வியை பாருங்க . போறோம் போறோம் :))

  ReplyDelete
 15. ராஜ ராஜேஸ்வரி: நன்றி

  ReplyDelete
 16. துளசி மேடம்: இந்த குறிப்புகள் நீங்கள் எழுதினால் இன்னும் நிறைய சொல்லிருப்பீங்க நன்றி

  ReplyDelete
 17. வரலாற்று சுவடுகள் said...

  நீங்கள் குறிப்பிட்ட இணையதளம் மிகவும் பயனுள்ளது ,..

  ******

  ஆம் நண்பரே அவசியம் அதை பயன்படுத்துங்கள் நன்றி

  ReplyDelete
 18. ராமலக்ஷ்மி said...

  //சிலர் காமிராவும் கையுமாய் எப்போதும் இருந்து இருக்கும் இடத்தை நன்கு கவனித்து என்ஜாய் செய்வதை தவற விடுகிறார்கள். //

  ஹி. நன்கு கவனித்து படமெடுப்பதே ஒரு என்ஜாய்மெண்ட்:)!

  ***
  மேடம் : இந்த அட்வைஸ் எனக்கு நானே சொல்லி கொண்டது. வேறு யாரையும் சொல்லலை :))

  ReplyDelete
 19. எனக்கும் நிறைய டூர் போக வேண்டும் என்று ஆசை. ஆனால், தலையெழுத்தோ என்னவோ, சரியான சந்தர்ப்பம் அமைவதே இல்லை :((

  ReplyDelete
 20. First thing dont forget to take ur tickets with you. Also keep safe ur home keys.

  ReplyDelete
 21. Anonymous1:02:00 AM

  எஸ் ரா 2...வாழ்த்துக்கள் மோகன்...

  ReplyDelete
 22. நல்ல குறிப்புகள் மோகன்.

  உணவு விஷயத்தில் அந்த ஊரில் என்ன உணவுப் பழக்கமோ அதையே சாப்பிடுவது நல்லது. வடக்கில் வந்தும் இட்லி, சாதம்-சாம்பார் எனத் தேடித் தேடி சாப்பிட்டு [பழையதாக இருப்பது தெரியாமல்], வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்கும் பல நண்பர்களை கவனித்திருக்கிறேன்.......

  நல்ல குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 23. ரகு: கொஞ்சம் ப்ளான் பண்ணுங்க போகலாம். இந்த வருடம் ஜூனில் குற்றாலம் போகலாம். ரெண்டு நாளில் வந்துடலாம் ரெடியா?

  ReplyDelete
 24. ரெவெரி said...
  எஸ் ரா 2...வாழ்த்துக்கள் மோகன்...

  சார் எஸ்ரா 2 ன்னா? என்னய்யா சொல்றீங்க? புரியலியே ? (எஸ்ரா வுடன் என்னை ஒப்பிடாதீங்க சார். அவர் அடைந்த உயரத்தில் ஒரு சதவீதம் கூட எட்டலை)

  ReplyDelete
 25. வெங்கட்: நன்றி உண்மை தான்

  ReplyDelete
 26. மிகவும் பயனுள்ள அனைவருக்கும் தேவையான டிப்ஸ்

  ReplyDelete
 27. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

  ReplyDelete
 28. Anonymous7:47:00 PM

  புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு வலைப் பதிவிவினை எழுத என்னவெல்லாம் விஷ்யம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். கூடுமானவரை இவை எல்லாவற்றையும் நாங்கள் செய்வது வழக்கம் தான் என்றாலும், தங்குமிடம் எப்போதும் கூடுதல் செலவாகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை. கோயில்களுக்கு போகும் போது தேங்காய் பழம் அர்ச்சனை தவிர்த்தல் நலம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...