Saturday, May 12, 2012

பதிவர்கள் பங்கேற்ற சத்யம் டிவி நிகழ்ச்சி- வீடியோ


நண்பர்களே சமீபத்தில் சத்யம் டிவியில் நண்பர் சிவகுமாரும் நானும் " கிரிக்கெட் மக்களுக்கு ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் ஆக உள்ளதா அல்லது மக்களை மிகவும் பாதிக்கிறதா?" என்ற தலைப்பில் பேசியதன் வீடியோ வடிவம் இதோ

இது டிவி நிலையத்தில் எடுத்த வீடியோ அல்ல. வீட்டிலிருந்து காமிரா மூலம் டிவியில் வந்ததை எடுத்தது. எனவே தரம் சற்று சுமாராய் தான் இருக்கும்.  Memory Card-ல் இடம் இல்லாததால் முழுவதும் எடுக்க வில்லை. நான் பேசிய இடங்களாக பார்த்து வீடியோ எடுத்த என் குடும்பத்தினர் நல்ல வேளையாக நண்பர் சிவகுமார் பேசியதையும் ஒரு முறை எடுத்துள்ளனர் !

ஒவ்வொரு வீடியோவும் ஒன்று அல்லது இரு நிமிடங்கள் தான் வரும். எனவே நீங்கள் குறைந்த நேரத்திலேயே இந்த வீடியோக்கள் அனைத்தும் பார்த்து விடலாம் !

****

கிரிக்கெட் ஏன் மக்களை அதிகம் ஈர்க்கிறது?*************
கிரிக்கெட் அனைத்து விளையாட்டுகளையும் dominate செய்கிறதா? மற்ற விளையாட்டுகளுக்கு அது எப்படி உதவுகிறது?சிவா பேசிய சிறு வீடியோ இதோ 
*****************
சச்சினுக்கு எம். பி பதவி தந்தது தவறு தான். ஏன்?*******************
மின்சார பற்றாக்குறை இருக்கும் இந்நேரத்திலும் ஐ.பி. எல் போட்டிகளுக்கு மின்சாரம் தருவது அவசியமே !!******************
போட்டிகளில் மேட்ச் பிக்சிங் எந்த அளவு சாத்தியம்?*******************
சச்சின் நேர்மையான வீரரா? கிரிக்கெட் வீரர்கள் ஒரு ரோல் மாடலாக உள்ளனரா?**********
ஐ.பி.எல் கொண்டாட்டம் - என்னா மாதிரி ஒரு பாக்கேஜ்   !!

******************
கிரிக்கெட் ஆடாத நாடுகள் ...

நிகழ்ச்சி ஒளி பரப்பானது ஒரு மணி நேரம். பெரும்பாலும் நண்பர் சிவாவும் நானும் தான் பேசினோம். அதில் 15 நிமிடத்துக்கும் குறைவான அளவே இங்கு பகிர்ந்துள்ளோம். முழு நிகழ்ச்சி வீடியோ கிடைத்தால் நண்பர் சிவகுமார் பகிர்வார் என நம்பகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் நண்பர் செல்வினை 9444125010 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

10 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பா ..!

  ReplyDelete
 2. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் நண்பர் செல்வினை 944412501 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்///////////

  9444125010

  ReplyDelete
 3. நான் மிஸ் செய்த நிகழ்ச்சி. நாளைக் காலைதான் வீடியோ பார்க்க வேண்டும். (ஹி..ஹி... ஃப்ரீ டைம்!)

  ReplyDelete
 4. நல்ல நிகழ்ச்சி...


  இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பட்டிமன்றம் போல அமைத்துக் கொண்டீர்களா... நீங்கள் ஆதரவு, நண்பர் சிவகுமார் எதிர்க்கட்சி என்று கட்சி அமைத்துக் கொண்டீர்களோ...

  உங்கள் கட்சியை எடுத்துச் சொல்வதிலும், வேக, வேகமாக புள்ளிவிவரங்கள் அடுக்குவதிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. பாராட்டுகள்.

  -அடுத்த நொடி ஆச்சர்யங்கள் கிரிக்கெட்டில் மட்டும்தானா... வாழ்க்கையிலேயே உண்டே...
  -சச்சினுக்கு நிறையவே கொடி பிடித்திருக்கிறீர்கள்.
  -ஐ பி எல் ஆட்டத்தை சகல மசாலா நிறைந்த (திரைக்கதை எழுதி தயாரிக்கப் படும்!) சினிமாவுடனும் ஒப்பிடுகிறீர்கள், முன்னரே தீர்மானிக்கப் பட்டது அல்ல இந்த ஆட்டங்கள் என்றும் சொல்கிறீர்கள்...! (சும்மா வம்புதான் மோகன்... சில 'உடன்பாடுகள்', ஒப்பந்தங்கள் இல்லாமல் ஐ பி எல் இல்லை என்று தோன்றுகிறது. கோடி கோடியாகக் காசு கொட்டும் பிசினெசாக மாறி விட்டது கிரிக்கெட்.
  -விளையாட்டு என்பது போய் பிசினெஸ் ஆகி விட்டது.

  ReplyDelete
 6. நன்றி அஞ்சா சிங்கம். இப்போது எண்ணை சரி செய்து விட்டேன்

  ReplyDelete
 7. ஸ்ரீராம்: நிகழ்ச்சியை வீடியோவில் பார்த்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக நன்றி. நாம் எடுக்கும் தலைப்புக்கு நியாயம் செய்ய வேண்டும் அல்லவா? ஒரு வக்கீலாக தன் கட்சி காரரின் தரப்பை சரியாக எடுத்து சொல்வது எப்படி அவசியமோ, அப்படி தான் தலைப்பை ஒட்டி பேச வேண்டியதாயிற்று.

  போனில் வந்த பலரும் சச்சினை திட்டினர். (அது இங்கு வீடியோவில் இல்லை) அதனால் சச்சினின் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டியதாயிற்று

  கிரிக்கெட் மூலம் வரும் பிரச்சனைகளையும் குறிப்பாய் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் பார்த்து நேரம் வீணாக்க கூடாது என்றும் பேசினேன். அது இங்கு வீடியோவில் இல்லை

  நன்றி

  ReplyDelete
 8. நன்றி பிரகாஷ் மகிழ்ச்சி

  ReplyDelete
 9. ஆங்கிலம் மொழி அறிவு வளர கிரிக்கெட் துணை புரிகிறது என்று நீங்கள் கூறிய கருத்து எனக்கு பிடித்திருந்தது. மேலும் ஆங்கில கற்க கிரிக்கெட் வர்ணனைகளும் துணை புரிந்தது உண்மைதான். தனி நபர் சாதனைகளுக்கு கிரிகெட்டில்தான் அதிக வாய்ப்பு அதிகம். அது இளைஞர்களை ஈர்ப்பதற்கு காரணமாக அமைகிறது. கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரே ஆட்டத்தில் பல பேர் சாதனை புரிய வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங்கில் கோட்டை விட்டவர் பில்டிங்கில் அசத்தமுடியும். பலவேறு புள்ளி விவரங்கள் கையாளப்படுவது சுவாரசியம் அளிக்கிறது. ஒரு ஆட்டத்தைப் பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்த முடியும். ஆனால் பிற விளையாட்டுக்களுக்கு இந்த அம்சங்கள் குறைவு.

  ReplyDelete
 10. //T.N.MURALIDHARAN said,".....'...ஆனால் பிற விளையாட்டுக்களுக்கு இந்த அம்சங்கள் குறைவு. "//

  அம்சமான அம்சம் ஒன்றினை நீங்கள் விட்டுவிட்டது போல் தெரிகிறது..
  வேறேன்ன.. அது.. மேட்ச் ஃபிக்ஸிங் தான் .

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...