Tuesday, June 12, 2012

பெட்ரோல் பங்க் கொள்ளைகள்

பெட்ரோல் போட ஒவ்வொரு முறை செல்லும் போதும் பீ. பி ஏறாமல் இருக்க வேண்டிக் கொண்டே போவேன். நம்மை நிற்க வைத்து கொண்டு கண் முன்னே ஏமாற்றுவது எவ்வளவு கொடியது ! அதை பொறுத்து கொள்வது மிக கடினம் ! இந்த பதிவில் அத்தகைய ஏமாற்று வேலைகள் குறித்து சற்று பகிர்கிறேன்

முதலாவதாக பெட்ரோல் பங்க்கில் செய்யும் ஏமாற்று வேலை கலப்படம். இது சாதாரண பைக் மற்றும் கார் ஓட்டும் நம்மால் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாது. சொந்த ஆட்டோ வைத்து ஓட்டுவோர் இதனை எளிதில் சொல்வார்கள். இத்தகைய கலப்பட பங்குகளை தவிர்க்க மிக சாதாரண வழி, கூட்டம் அதிகம் இல்லாத பெட்ரோல் பங்குகளை அறவே தவிர்த்து விடுங்கள் ! அந்த பெட்ரோல் பங்குகள் செய்யும் கலப்படம் குறித்து சுற்று வட்டத்தில் உள்ளோர் நன்கு அறிந்தே தான் அதனை முழுதும் தவிர்க்கின்றனர் என்பதை உணருங்கள் !

மாறாக நாம் என்ன நினைக்கிறோம்? பெட்ரோல் பங்க்கில் போய் ஐந்து நிமிடம் காக்க நமக்கு மனமே வருவதில்லை. விரைவில் போட்டால் போதும் என கூட்டம் இல்லாத பெட்ரோல் பாங்குகளை நாடுகிறோம். இந்த எண்ணத்தையும், வழக்கத்தையும் முழுதும் தவிர்க்க வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள். நீங்கள் பெட்ரோல் போடும் முன் சீரோவை சரி பார்ப்பது மிக அவசியம்.

மேலே சொன்னது கூட எச்சரிக்கை உணர்வு அதிகம் இல்லாதோருக்கு தான் நடக்கும். அதை விட என்ன தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் நம்மிடம் அவர்கள் பெட்ரோல் அடிப்பார்கள். இதை கவனிக்கும் நமக்கு செம டென்ஷன் ஆகும்.

நீங்கள் இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறீர்கள் எனில், துவக்கம் சீரோவில் இருந்தாலும் அடுத்த ஜம்பே இருபது அல்லது முப்பது ரூபாயில் ஆரம்பிக்கும். அளவில் பார்த்தால் சீரோவில் இருந்து நேரே 0.20 அல்லது 0.30 லிட்டருக்கு ஓடி விடும். அதன் பின் அடுத்தடுத்த எண் மாறினாலும், இந்த முதல் ஜம்ப் இருக்கே அங்கு தான் அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள் ! " என்னங்க எடுத்த உடன் 0 .30 லிருந்து ஓடுது என்று கேட்டால் " மெஷின் செம பாஸ்ட். அப்படி தான் ஓடும் " என்று சொல்லி நம்மை அனுப்புவதிலேயே குறியாய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் இத்தகைய இடங்களில் செமையாக சண்டை போட்டு விடுவார். இவர் போடும் சத்தம் தாங்க முடியாமல் இவருக்கு ஜம்ப் ஆனாதக சொல்லும் 0.30 லிட்டர் பெட்ரோல் மீண்டும் போட்டு அனுப்பி விடுவார்கள். காரணம் அங்கு நிற்கும் கஸ்டமர்கள், இவர் சொல்லும் குற்ற சாட்டுகளை கேட்டால் மறுபடி இங்கு வர மாட்டார்கள் என்பதே !

ஆனால் நம்மை போன்ற ஆட்கள் ஒவ்வொரு முறையும் இவர்களிடம் இப்படி சண்டை போட்டு நம் ரத்த அழுத்தத்தை உயர்த்தி கொள்ள முடியாது ! இதற்கு ஒரே வழி. வரிசையில் நிற்கும் போதே மற்றவர்களுக்கு எப்படி போடுகிறார்கள் என பார்க்க வேண்டும். எல்லோருக்கும் இப்படி ஜம்ப் ஆகிற மாதிரி தான் போடுகிறார்கள் எனில் நம் முறை வரும் போது " மெதுவா போடுங்க. ஜம்ப் ஆக கூடாது" என தெளிவாக அவரிடம் கூறுங்கள். " இவர் ஜாக்கிரதையான ஆள். ஜம்ப் ஆனால் சத்தம் போடுவார்" என ஒழுங்கே போட வாய்ப்பு உண்டு. அப்படி சொல்லும் நேரம் பெரும்பாலும் அதிகம் ஜம்ப் ஆகாமல் அவர்கள் பெட்ரோல் போடுவதை என் அனுபவத்தில் பார்த்துள்ளேன்

இப்படி ஜம்ப் ஆவது துவக்கத்தில் மட்டும் தான் இருக்குமா கடைசியில் வெறும் மீட்டர் ஓட, பெட்ரோல் உள்ளே கொட்டாமல் இருக்குமா என தெரியவில்லை. போலவே ஜம்ப் ஆவது பெட்ரோல் போடுபவர் கையில் தான் கண்ட்ரோல் உள்ளதா அல்லது பெட்ரோல் பங்குகள் எல்லா கஸ்டமருக்கும் இப்படி ஜம்ப் ஆகுற மாதிரி ஏற்கனவே செட்செய்திருப்பார்களா என்றும் தெரிய வில்லை. இது பற்றி யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் !

இவர்கள் செய்யும் இன்னொரு அக்கிரமம். பெட்ரோலுக்கு பெட்ரோல் போடும் முன்பே பணம் வாங்கி விடுவார்கள். போட்ட பிறகு மறுபடி கேட்பார்கள். நாம் கொடுத்து விட்டோம் என சொன்னால் நம்ப மாட்டார்கள். எனக்கு இது மாதிரி இரண்டு முறை ஆகியிருக்கிறது. இன்னும் சிலருக்கும் இப்படி ஆவதை பார்த்துள்ளேன்.

இதற்கு ஒரே வழி பெட்ரோல் போட்ட பின் தான் பணம் தரவேண்டும். அவசரமாய் முடிக்க வேண்டும் என முதலில் தந்தால், ஞாபக மறதியிலோ, அல்லது வேண்டுமென்றோ அவர்கள் மீண்டும் கேட்க வாய்ப்பு உண்டு !

இப்படி பெட்ரோல் பங்குகள் நம்மை செம டென்ஷன் ஆக்குவதை தவிர்க்க, மோசமான பெட்ரோல் பங்குகளை முழுதும் தவிர்த்தல் நலம் ! பிரச்சனை இல்லாத, நல்ல குவாலிட்டி மற்றும் சரியான அளவுடன் பெட்ரோல் தரும் பாங்குகள் குறைவே.

அத்தகைய பங்குகள் எவை என உங்களுக்கு தெரிந்தால், அவை சற்று தூரம் என்றாலும் கூட சிரமம் பார்க்காமல் அவற்றிலேயே பெட்ரோல்

போடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் ! இன்றைக்கு பெட்ரோல் விற்கிற விலையில் ஏமாறாமல் இருப்பதுடன், அவற்றை கவனித்து பீ.பி ஏறாமல் இருக்கும் !

சென்னையில் எனக்கும் நண்பர்களுக்கும் தெரிந்த அத்தகைய சில பெட்ரோல் பாங்குகளை இன்னொரு பதிவில் அறிமுகப்படுத்துகிறேன் !

********
அதீதம் ஜூன் இதழில் வெளியானது

40 comments:

  1. Anonymous11:55:00 AM

    அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள்அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள்அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள்அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள்///you are correct.I experienced it in one pump.

    ReplyDelete
  2. ஒவ்வொரு முறை பெட்ரோல் விலையேறும் போதும் , பழைய ஸ்டாக் தீரும் வரை ,பெட்ரோல் பழைய விலையிலேயே விற்கப் பட வேண்டும். ஆனால் இதை எந்த பெட்ரோல் பங்குகளும் பின்பற்றுவதில்லை .

    ReplyDelete
  3. மோகன்,

    பெட்ரோல் பங்க் சமாச்சாரங்களை பலர் பதிவுகளிலும் நிறைய பின்னூட்டமாக சொல்லிவிட்டேன். நீங்க சொன்னது போல தான் சொல்லி இருப்பேன்.பேசாம இனிமே பின்னூட்டம் போடாம பதிவா போட்டுக்கிட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன் :-))

    சீரோ செய்து போடுவதை நன்கு கவனிக்க வேண்டும், என்பது சரியே. மின்சாரக்கனவு படத்தில் ,அரவிந்த சாமியும், பிரபுதேவாவும் பேசிக்கொண்டே ,பெட்ரோல் போட சொல்லும் போது ,பிரபு தேவா , பேச்சின் நடுவிலும் "சீரோ செய்து போடுப்பா"னு சொல்வதாக காட்சி வரும்.அக்காட்சி பணக்காரர்,மிடில்கிளாஸ் மக்களின் இயல்பை காட்ட பயன்ப்பட்டு இருக்கும். சினிமாவிலும் சில சில சின்ன விஷயங்களை கவனித்து பயன்ப்படுத்தி இருக்கிறார்களே என நினைத்துக்கொண்டேன்

    ஜம்பிங்கில் ஒரு தொழில்நுட்ப சமாச்சாரம் இருக்கு மேலும் மற்ற பெட்ரோல் பங்க் சமாச்சாரத்தை வேண்டுமானால் பதிவா போடுகிறேன். இன்னும் நிறைய சமாச்சாரம் இருக்கு இதில.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. பெங்களூரில் “நல்லாப் பாத்துக்கோங்க” என ஜீரோவைக் காட்டிவிட்டே போடுவதை வழக்கமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்ற முயன்றிடுபவரும் ஏராளம். எச்சரிக்கும் விதமான நல்ல பதிவு.

    ReplyDelete
  5. அனைவரும் அவசியம் தெரிந்து
    கொள்ளவேண்டிய தகவல்கள் அடங்கிய
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. இப்போது பெட்ரோல் பங்குகள் பெரும்பாலானவற்றில் டிஜிட்டல் மீட்டராக இருக்கிறது. இதிலும் ‘ஜம்பிங்’ சமாச்சாரம் நடக்குமா?

    ReplyDelete
  7. \\நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். \\ ஐயையோ.......... இது எனக்கும் நடந்திருக்கே.......... எல்லா ஊர்லயும் பயல்கள் ஒரே மாதிரிதான் சிந்திப்பானுங்க போலிருக்கே....

    ReplyDelete
  8. மாற்றாக அவரவர் பெட்ரோலை நிரப்பி விட்டு கணக்கை சரிபார்த்து காசு கொடுக்கலாமே!

    ReplyDelete
  9. இது எல்லாரும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயம் இது...!!

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    மீதி பணம் தர மாட்டார்கள். நாம் அவசரத்தில் கிளம்பி விடுவோம்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு...

    திருடர்கள் பலவிதம்.... :(

    ReplyDelete
  12. பெங்களூர் ல நான் சைக்கிள் கு காத்து அடிக்கிறதுக்கே 1km தள்ளி போய் அடிக்கிறேன்...Mudintha varai anaivarum cycle use pannavum...allathu பெட்ரோல் பாட்டில் ல வாங்கி ஊத்தவும்

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு...டிஜிட்டல் மீட்டர் தானே..ஏமாத்த முடியுமா..?
    அப்புறம் அதிக பெட்ரோல் அடிக்கும் போது பெட்ரோல் அளவு குறையுமா...?

    ReplyDelete
  14. weights & measures department எதுவும் செய்வதில்லையா? அவ்வளவு சுலபமாக ஜம்ப் செய்ய முடியுமா என்ன?

    ReplyDelete
  15. //இப்போது பெட்ரோல் பங்குகள் பெரும்பாலானவற்றில் டிஜிட்டல் மீட்டராக இருக்கிறது. இதிலும் ‘ஜம்பிங்’ சமாச்சாரம் நடக்குமா?//
    திருடுவது என்று வந்துவிட்டால் மீட்டராவது, டிஜிட்டலாவது... எல்லாவற்றிலும் ஜம்பிங் உண்டு... எனக்கு தெரிந்து shell பங்கில் இப்படி நடப்பதில்லை என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  16. இந்த ஜம்பிங் மேட்டர் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் நல்லா தெளிவு படுத்திட்டீங்க...

    ReplyDelete
  17. நிறையவே கேள்விப்பட்ட விஷயம். நீங்கள் சொல்லியிருப்பது போல ஆட்டோ ஓட்டுனர்கள் சரியாகக் கணித்து வைத்துள்ளனர். அதே போல கேஸ் நிரப்பும் ஆட்டோக் காரர் ஒருவரும் அதில் கையை வைத்து அழுத்திக் கொண்டு கேஸ் நிரப்பும் முறையில் உள்ள ஊழல் பற்றிச் சொன்னார்!

    ReplyDelete
  18. சுஜி: நன்றி (பதிவில் பாதியை காப்பி பண்ணி போட்டு " நீங்க சொன்னது சரிதான்னு சொன்னீங்க பாருங்க சான்சே இல்லை !)

    ReplyDelete
  19. விஜய் பெரியசாமி: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  20. வவ்வால்: ஜம்பிங் பற்றி அவசியம் எழுதுங்கள் பலருக்கு அது உபயோகமாய் இருக்கும்

    ReplyDelete
  21. நன்றி ராமலட்சுமி அதீதத்தில் இதனை பிரசுரித்தமைக்கும்

    ReplyDelete
  22. நன்றி ரமணி சார்

    ReplyDelete
  23. யுவகிருஷ்ணா: டிஜிடளிலும் நிச்சயம் ஜம்பிங் இருக்கும் என்றே நினைக்கிறேன். ஓட துவங்கும் போதே அப்படி ஜம்ப் ஆகி ஓடும்படி செட்டிங் செய்திருக்க வாய்ப்புண்டு

    ReplyDelete
  24. தாஸ்: எல்லா ஊரிலும் இதே நிலை தான்

    ReplyDelete
  25. ராஜ நடராஜன்: நம்ம கையில் பம்ப் தர மாட்டாங்க. மேலும் தானாகவே ஜம்ப் ஆகுற மாதிரி செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  26. ரதனவேல் நடராசன் ஐயா: நன்றி முக நூலில் பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  27. நன்றி வெங்கட்

    ReplyDelete
  28. நன்றி தனபாலன்

    ReplyDelete
  29. விஷ்ணு: பாட்டிலில் வாங்குவது நல்ல யோசனை. அந்த நேரம் ஜம்ப் ஆகாமல் மீட்டர் சரியாய் ஓடுவதை பார்த்துள்ளேன்

    ReplyDelete
  30. கோவை நேரம்: நூறு ரூபாய் போட்டாலும் ஐநூறு ரூபாய் போட்டாலும் ஒரே அளவு (உதா: இருபது ரூபாய் ) தான் திருடுவார்கள். இதனால் அதிக விலைக்கு போடுவது ஒரு விதத்தில் நல்லது

    ReplyDelete
  31. அப்பாதுரை said...

    weights & measures department எதுவும் செய்வதில்லையா?

    நல்ல கேள்வி .அவர்கள் பணம் வாங்கி கொண்டு பேசாமல் இருப்பார்கள்

    ReplyDelete
  32. குடந்தை அன்புமணி: ஆம் ஷெல்லில் பெட்ரோல் திருடுவதில்லை. சற்று விலை அதிகம். பரவாயில்லை என போடலாம் போலும்

    ReplyDelete
  33. கலாகுமரன்: நன்றி

    ReplyDelete
  34. ஸ்ரீராம்: கேஸ் பற்றி சொன்னதுக்கு நன்றி

    ReplyDelete
  35. //weights & measures department எதுவும் செய்வதில்லையா? அவ்வளவு சுலபமாக ஜம்ப் செய்ய முடியுமா என்ன?//

    கலப்படத்த தட்டிக் கேட்ட IOC ஆபிசர் மஞ்சுநாத் சண்முகத்த சுட்டுக் கொன்ற ஊருங்க நம்ம ஊரு (Lucknow, UP).

    ReplyDelete
  36. First buy in cans ( 1 lit 0r 2 lit), than use it.
    I think its best method to avoid losses.

    ReplyDelete
    Replies
    1. கேனில் கொடுக்க மறுக்கிறார்களே.

      Delete
  37. As a dealer i suggest, ungal kasukku neengalthan gavanama irukkanum. ravie

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...