Saturday, August 25, 2012

சென்னை பதிவர் மாநாடு: இறுதிகட்ட அறிவிப்புகள் + பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் வந்து விட்டது. நாளை பதிவர் மாநாடு. இன்றே சென்னை களை கட்ட துவங்கி விட்டது. வெளியூர் நண்பர்கள் சிபி மற்றும் நண்டு என்கிற ராஜசேகர் இன்று காலை விழாவிற்கு முதல் நபர்களாக சென்னை வந்தனர். நீங்கள் இப்பதிவை வாசிக்கும் நேரத்தில் சென்னைக்கு இன்னும் ஏராள பதிவர்கள் ரயிலில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மதியம் சென்னை அடைவார்கள்.

சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர், ஆரணி நண்பர்கள் நாளை காலை சென்னை வந்துவிடுவார்கள். போலவே பெங்களூரு ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து வருவோர் இன்று இரவு பயணம் செய்து சென்னை அடைகிறார்கள்

பதிவுலகம் துவங்கி இன்றைய தேதி வரை சென்னையில் இவ்வளவு  பேர் கலந்து கொண்ட பெரிய மாநாடு நிகழ்ந்தது இல்லை என்று சொல்லும் அளவில் விழா சிறப்பாக நடைபெற உள்ளது

*********
விழா குழுவில் இயங்கி கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த இரு நாளையும் பதிவர் நண்பர்களுக்காக ஒதுக்கி விட்டோம். நாளை தான் மாநாடு எனினும் கூடி, பேசி சிரித்து மகிழ இன்றும் அனைவரும் சந்திக்கிறோம். 

ஏற்கனவே அறை வேண்டும் என சொன்ன நண்பர்களுக்கு தி. நகரில் அறை போடப்பட்டுள்ளது. அறை தேவைப்படும் நண்பர்கள் , பதிவர் ஆரூர் மூனா செந்திலை தொடர்பு கொண்டு பேசலாம். ஏற்கனவே சொன்ன நபர்களுக்கு தான் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது எனினும் கடைசி கட்டத்தில் முன்னறிவிப்பின்றி வருவோருக்கு எங்களால் முடிந்த உதவி செய்வோம்

விழாவின் இறுதி செய்த பட்டியல் இத்துடன் உள்ளது. நீங்கள் இன்றைக்கு முடிவு செய்தால் கூட, இன்று மதியத்துக்குள் விழாவுக்கு வருவதை தெரிவிக்கவும் !

மண்டபத்திற்கு வரும் வழி

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள் அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் ரயில் நிலையம் ) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மாம்பலம்.

இதேபோல் செங்கல்பட்டு,தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று குறியிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.

இந்த நிறுத்தத்தில் இறங்கி லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. சென்ரலில் இருந்து 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.

தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது) தாம்பரத்திலிருந்து மண்டபம் வர 1 மணி நேரம் ஆகலாம்.

பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும் பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.

கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.கோயம்பேட்டில் இறந்து மண்டபம் அடைய 15 நிமிடங்கள் ஆகும்.

தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். இவ்வழியே மண்டபம் வர 10 நிமிடங்கள் ஆகும்.

திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள் 25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும் இதோ

விழா காலை 9.30-க்கு துவங்குவதால்  பதிவர்கள் அனைவரும் காலை ஒன்பது மணிக்கே மண்டபத்துக்கு வரும்படி வேண்டுகிறோம்


பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்தல் நலம்

2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.

3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.

4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

இந்த சந்திப்பில் முக்கிய நிகழ்வாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழாவும் இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளவும்.

வருகை தரும் பதிவர்களின் பட்டியல்

ஈரோடு நண்பர்கள்

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
நண்டு@நொரண்டு,ஈரோடு

கோவை நண்பர்கள்  

சங்கவி,கோயம்புத்தூர
சுரேஷ் (வீடு)கோயம்புத்தூர்
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)கோவி(காதல்)கோயம்புத்தூர்
ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
அகிலா,கோயம்புத்தூர்

மதுரை நண்பர்கள்  

சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ராஜா(அடங்காத அக்கப்போரு)மதுரை

சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்

சென்னை நண்பர்கள்  

ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
இக்பால் செல்வன்,சென்னை

ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
சசிகலா(தென்றல்)சென்னை
மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
ஸ்ரவாணி(தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
ராசின்(நதிகள்) சென்னை
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை

காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை 
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை

இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?) சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
உளவாளி,சென்னை
சமீரா சென்னை 
வழக்கறிஞர் அமிழ்து சென்னை 

பெங்களூரு நண்பர்கள் 


இதர வெளி மாநில நண்பர்கள் 


வெளி நாட்டிலிருந்து வருகை தருவோர் 


இதர ஊர் நண்பர்கள் 

சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
நா.சுரேஸ்குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி

நிலவு நண்பன்,திருநெல்வேலி
ஆளுங்க , நெல்லை
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
சாம் மார்த்தாண்டன்,மார்த்தாண்டம்
ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
எண்ணங்களுக்குள் நான்(ஃபாரூக் முகமது)மங்கள நாடு)
லெனின்(கேணக்கிருக்கன்)கீரமங்கலம்

தஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்

மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்
ஆர்.வி.சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்

****
உங்களுக்கு மண்டபம் வருவதில் ஏதும் சிரமம் இருப்பின் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் நண்பர்கள் மண்டபம் வர உதவுவார்கள்/ வழி சொல்லுவார்கள் : 

மெட்ராஸ் பவன் சிவகுமார் :98416 11301

ஆரூர் மூனா செந்தில் :8883072993

43 comments:

  1. விழா சிறக்க வாழத்துக்கள்.

    ReplyDelete
  2. பட்டைய கிளப்பட்டும்....!!!!

    ReplyDelete
  3. வாருங்கள் பதிவர்களே..சென்னையில் சங்கமிப்போம்.

    ReplyDelete
  4. சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

    ReplyDelete


  5. சந்திப்போம்!சிந்திப்போம் வாருங்கள்
    தோழர்களே!

    ReplyDelete
  6. சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அழைப்பிதழ் பார்த்ததும் நாளைய தினத்தை பற்றிய எதிர்பார்ப்பு/ஆவல் இன்னும் அதிகமாகிவிட்டது...

    சீரும் சிறப்புமாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. அண்ணே . . .

    வேடிக்கை பாக்க மண்டபத்து உள்ள வரலாமா ?

    ReplyDelete
  9. அனைவரும் இணைந்து கலக்குவோம்.

    ReplyDelete
  10. குரங்குபெடல் said...
    அண்ணே . . .

    வேடிக்கை பாக்க மண்டபத்து உள்ள வரலாமா ?
    ************
    என்ன தம்பி இப்புடி கேட்டுபுட்டீங்க. நிச்சயம் நீங்க மண்டபத்துக்கு வரலாம். உங்கள் வருகையை நண்பர்களுக்கு மெயிலில் உடன் உறுதிபடுத்தவும்.

    ஒரே ஒரு விஷயம். நீங்கள் தான் குரங்கு பெடல் என்ற பெயரில் எழுதுபவர் என்று சொன்னால் தான் மண்டபத்தின் உள்ளே அனுமதிப்பார்கள். வேறு பெயரில் எழுதுவது தவறில்லை. ஆனால் உள்ளே வருபவர் யார் என்று தெரிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள். இது குழு முடிவு, தவறாய் எண்ண வேண்டாம்

    ReplyDelete
  11. Anonymous11:47:00 AM

    ' லோகோ' மிகவும் பொருத்தமாக அழகாக உள்ளது.
    விரிவான தகவல்களுக்கு நன்றி !
    விழா .....
    கனி போல இனிக்கட்டும் !
    பனி போல குளிரட்டும் !
    அணி போல சிறக்கட்டும் !
    திருஷ்டி சுத்தி போடவும் கண்டிப்பாக .

    ReplyDelete
  12. சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நாளை சந்திப்போம் நண்பரே..

    ReplyDelete
  15. கோடம்பாக்கம் ரயில் நிலையம்தான் அருகாமை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப் பட்டிருப்பது தெரிகிறது. வாழ்த்துகள். நிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை ஐந்துக்குள் முடிவடைந்து விடும் போலத் தெரிகிறது.

    ReplyDelete
  17. மாநாடு மலை போல் வெற்றியடைய மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்...

    ReplyDelete

  18. நாளை சந்திப்போம் மோகன் சார்

    வருங்காலம் நமதாகட்டும்
    வெற்றி நம் வசமாகட்டும்

    ReplyDelete
  19. சார் எனக்கும் ரூட்டு க்ளியர்,இதோ கிளம்பிட்டேன்

    ReplyDelete
  20. வந்து கலந்துக்கமுடியலையேன்னு இருக்கு. ஒளிபரப்புவதை பார்த்துக்கறேன்.

    ஹைதையிலிருந்து புதுகைத்தென்றல்

    ReplyDelete
  21. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. விழா சிறக்க வாழத்துக்கள்.

    ReplyDelete
  23. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

    கலந்து கொள்ள முடியவில்லை... :(

    காலையில் வலை முன் உட்கார வேண்டியதுதான்....

    ReplyDelete
  24. அருமையான நிகழ்வு சிறப்புடன் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. குடியால் அழியுமா பதிவுலகம்?
    பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

    ReplyDelete
  26. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  27. வர இயலவில்லை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    சித்துண்ணி கதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
    பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. நண்பரே தற்போது தான் விடுமுறைக்கு நம் தாய் நாடு வந்து திரும்பினேன்.
    விழா பற்றி அந்த சமயத்தில் எனக்கு தெரியவில்லை, அதனால் தோஹா திரும்பி விட்டேன்.
    நிச்சயம் அடுத்த முறை கலந்துக்கொள்வேன்.
    விழாவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. பதிவுகளின் சுவராசியத்தை குறைக்க வேண்டாமே...இந்த பதிவர் மாநாடு இதை மிக தீவிரமாக செய்வதாக நினைக்கிறேன்...http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html

    ReplyDelete
  31. நானும் கலந்துக்கொள்ள விரும்பினேன். ஆனால் இதே நாளில் எனக்கு பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து விட்டார்கள். எனவே கலந்துக்கொள்ள இயலவில்லை.

    ReplyDelete
  32. அழைப்பிதழ் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது.

    முடிவில், தேசிய கீதம் இருக்குமில்லையா? அழைப்பிதழில் இல்லை, எனவே இந்தச் சந்தேகம்.

    ReplyDelete
  33. அழைப்பிதழ் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது.

    முடிவில், தேசிய கீதம் இருக்குமில்லையா? அழைப்பிதழில் இல்லை, எனவே இந்தச் சந்தேகம்.

    ReplyDelete
  34. என்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் மிகவும் உண்டு. ஆனாலும் விழா இனிதே நடந்தேற என் பிரார்த்தனைகள். விழா சிறக்க வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  35. பல்வேறு பகுதிகளிலிருந்தும், எளிதாக மாநாட்டிற்கு வரும் வழியை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

    //பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?//

    நியாயமான எதிர்பார்ப்புதான்.

    ReplyDelete
  36. பெருத்த மகிழ்ச்சி உறவுகளே..,

    இந்த ஒற்றுமை இருந்தால் போதும் நினைத்ததை மெல்ல மெல்லவேனும் செய்துமுடித்துக் கொள்வோம். வெளிநாடுகளில் குறிப்பாக இங்கு குவைத்தில் நாங்கள் தொடர்ந்து எல்லாம் மாதமும் பல சங்கங்கள் மூலம் கூட்டம் வைத்து எல்லோருமாக சந்தித்து கவிதைப் படித்து தமிழின் இனிமையை அனுபவித்து சிந்தனைகளைப் பகிர்ந்து புதியவர்களை ஊக்குவித்து மொழியால் பெருமைபட்டுக் கொள்கிறோம்.

    அதற்கிணையாக நடக்கும் இந்த மொத்தப் பேரின் சந்திப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. சென்னை வருவதாக இருந்திருந்தால் நிச்சயம் கலந்துக் கொண்டிருப்பேன். வரவிட்டால் தானென்ன, மனது முழுதும் அங்கிருக்கும் உறவுகளே. நிகழ்க்சி மிக சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இருக்கும்.

    எழுத்தாலும் மனதாலும் எனக்கு இணக்கமான நிறையப் பேர் இதில் பங்குகொள்கிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன்..

    குறிப்பாக இராமானுஜம் ஐயா, கோவை.மு. சரளாதேவி, இராஜசேகரன், கேபிள் சங்கர், சி.பி. செந்தில் மற்றும் அனைவருக்கும் என் மிகுந்த வாழ்த்துக்களும் நிறைய அன்பும்.. நிறைய அன்பும் உறவுகளே..

    பேரன்புடன்..

    வித்யாசாகர்

    ReplyDelete
  37. மிக மிக நன்றி சார் .... மண்டபத்திற்கு வரும் வழி தெரியாமல் தினறிக்கொண்டு இருந்தேன்... உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  38. நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete

  39. சதீஷ் செல்லத்துரை :

    உங்கள் பதிவு வாசித்தேன். அழைப்பிதழ் துவங்கி அனைத்து பதிவுகளும் எல்லா பதிவர்களும் வெளியிட வேண்டும் என்பது குழு முடிவு. இதன் காரணம் வெவ்வேறு பதிவர்களுக்கு வெவ்வேறு தொடர் வாசகர்கள் இருப்பார்கள் என்பது தான். நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. அனைவரும் தலைப்பு ஒன்றே வைக்க முடியாது...அவரவர் விருப்பத்துக்கேற்ப தலைப்பு வைத்து கொண்டனர்.

    வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு கிண்டல் அடிப்பது பெரிதல்ல. இன்று கூட நினைவு பரிசு செய்து தருபவர் கடைசி நிமிடத்தில் காலை வாரினார் . நாளை காலை தான் தருவதாக சொல்லி உள்ளார் . அனைவருக்கும் இதனால் செம டென்ஷன். விழா மண்டபத்தில் நேரலை ஒளிபரப்பிற்கு எத்தனை மெநேக்கட வேண்டியுள்ளது என்பதெல்லாம் நேரில் பார்த்தால் தான் தெரியும். இது வெளி மாநில / வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பார்க்க தான் மெநேக்கெடுகிறோம். இன்று மாலை செம மழை. வெளியூர் நண்பர்கள் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க அவர்களை அழைத்து வர மழையில் நனைந்த படி வண்டியோட்டி சென்று சென்று திரும்புகிறார் ஒருவர்.

    இத்தனை பேரின் உழைப்பை கிண்டல் செய்வது சரியா? யோசியுங்கள் !

    இத்தனை இடர்களுக்கு இடையிலும் மிக மிக மகிழ்வாய் நண்பர்கள் முப்பது பேருக்கும் மேல் இன்று கூடி பேசி இனிமையாய், மறக்க முடியாத நாளாய் இன்றைய தினத்தை கொண்டாடினோம். எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த இன்பம்?

    ReplyDelete
  40. இன்று புலவர் ராமானுசம் அவர்களின் பதிவும் இதை பற்றியதே...ஆனால் அந்த கவிதை....வாய்ப்பே இல்லை..பெரியவர் பெரியவர்தான். இது போலத்தான் எதிர்பார்க்கிறோம்...இல்லை றேன்..இது போல தாருங்களேன்.

    ####எப்படியோ பாஸ் பதிவர் சந்திப்பில் கலந்துக்க முடியாத காட்டத்திலேயும்,நீங்க அதை பத்தி எழுதி எழுதி இன்னும் கடுப்பை கிளப்புவிகளே என்ற நல்லெண்ணத்திலும் நம்ம பங்குக்கு எதையாவது எழுதி வைப்போம்னு எழுதிட்டேன்...நல்ல படியா சிறப்பா சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்.அடுத்த திருவிழாவை இப்போவே அறிவிக்க வேண்டுகிறேன்.

    வழி தெரியலையா?இங்கே சுட்டுங்கள் மதுமதி அவர்கள் பதிவர் திருவிழாவிற்கு வர வழிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு காண நிரலையும் தருகிறார்.
    வருவதற்கு வழி காட்டும் தெய்வங்களே திரும்பி செல்லவும் வழி சொல்ல வேண்டுகிறேன்..####


    எனக்கு வரமுடியாத கஷ்டம் அய்யா....ஒரு மொக்கை பதிவா போடலாம்னு எண்ணம்தானே தவிர வேறொன்றுமில்லை.மற்றபடி சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தவே படும் கஷ்டங்களை நானும் அறிவேன்.பதிவுலகில் ஜாலியாக வரும் எத்தனையோ பதிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே...ஆனால் அது காயப்படுத்தும் பதிவாக அமைந்திருந்தால் வருத்தம் கோருகிறேன் என்று நழுவ முடியாது.மன்னிப்பு கேட்கிறேன்....

    மறக்காமல் அடுத்த திருவிழாவின் மாதத்தையாவது அறிவிக்கவும்.என்னை போன்றவர்களுக்கு விடுமுறை எடுக்க உதவியா இருக்கும்.நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...