Wednesday, September 12, 2012

வானவில்: அட்ட கத்தியும், சுந்தர பாண்டியனும்

பார்த்த படம் : அட்ட கத்தி

யார் யாரையோ காதலித்து விட்டு அம்மாப்பா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் " நம்ம" கதை. சொன்ன விதம் சுவாரஸ்யம் ! ஹீரோவாக வருபவர் செம இயல்பான நடிப்பு. இந்த வருடம் சிறந்த புது முக நடிகர் நாமினேஷனில் இடம் பெறக் கூடும் !

பாட்டுகள் சிலவும், அழகான திரைக்கதையும் முதல் பாதியை அழகாக்குகிறது. இரண்டாம் பாதி ஏமாற்றமே. பல பெண்கள் என்றால் மக்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் என, முதல் ஹீரோயினுக்கே போயிடுறார் டைரக்டர்.

சில காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. நண்பனுடன் போண்டா சாப்பிடும் காட்சி ஒரு உதாரணம். நண்பனிடம் "மூட் அவுட் சாப்பிடலை" என சொல்லிட்டு, நண்பன் போனவுடன் ஓடி வந்து அதே கடையில்  போண்டா சாப்பிடுவது செம ! அங்கே என்னை பார்க்கிற மாதிரியே இருந்தது !

முடிந்தால் ஒரு முறை பாருங்கள் அட்ட கத்தியை !

மக்கள் டிவியில் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி வீடியோ

சென்ற சனிக்கிழமை பதிவர் சந்திப்பு பற்றி மக்கள் தொலைக் காட்சியில் வந்ததை நீங்கள் அறிவீர்கள். நம் நண்பர்கள் 20௦ க்கும் மேற்பட்டோர், அதுவும் நாம் (தற்போதைக்கு) விரும்பும் ப்ளாக் பற்றி டிவியில் பேசுவதை காண மகிழ்ச்சியாய் இருந்தது. ரஹீம் கஸாலி இதை தனி பதிவாகவே ஷேர் செய்திருந்தார். இருந்தாலும் நண்பர்கள் யாரும் பார்க்காமல் விட்டால், காணலாம் என்று இங்கும் பகிர்கிறேன்.

இந்த லிங்க்குக்கு சென்றால் அதனை நீங்கள் காணலாம்.

பதிவர் மாநாடு குறித்த பகுதி இதில் 14.15 (பதினான்காவது நிமிடம் பதினைந்து நொடி ) முதல் வருகிறது !

http://www.istream.com/tv/watch/171987/Jannaluku-Veliye--Sep-8-2012

இந்த வார ரீலிஸ்: சுந்தர பாண்டியன்

வானவில்லில் இது புது பகுதி. அவ்வப்போது சற்று எதிர்பார்ப்போடு வரும் புதுப்படம் பற்றி சில வரிகள் பகிர உள்ளேன்.


இந்த வாரம் வெள்ளியன்று சசிகுமார் நடித்த சுந்தர பாண்டியன் திரைக்கு வருகிறது. சசிகுமார் கடைசியாய் நடித்த போராளி சறுக்கிய நிலையில் இந்த படமாவது கை கொடுக்குமா என பார்க்க வேண்டும். புது ஹீரோயின் (லட்சுமி மேனன்), புது இயக்குனர் (பிரபு), கிராமத்து பின்னணி..இப்படி சில சுவாரஸ்யங்கள் இருக்கிறது. "நான் ஈ"க்கு பிறகு வேறு படங்கள் ஓடாத நிலையில் இந்த படமாவது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களை காப்பாற்றுகிறதா என்று பார்ப்போம் !

ரசித்த காமெடி

எனக்கு ரொம்ப பிடித்த கவுண்டர் காமெடியில் இதுவும் ஒன்று. சூரியன் படத்தில் உள்ள பல காமெடி சீன்கள் அருமை தான் ! " உங்களை நான் டில்லியில பார்த்திருக்கேன்" என்பதும், "சத்திய சோதனை "என்பதும் எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்க வைக்கும் !



உண்மைத்தமிழன், கேபிள், ஜாக்கி

நேற்று முன் தினம் (திங்கள்) மதிய வேளை - தமிழகத்தின் பிரபல பதிவர்களான உண்மை தமிழன், கேபிள், ஜாக்கி ஆகியோர் அடுத்தடுத்து போன் செய்தனர். குறிப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் இவர்கள் மூவர் பேசியதும் வெவ்வேறு விஷயத்துக்கு. எதேச்சையாய் ஒரே நாள் இப்படி மூன்று பிரபல பதிவர்கள் போனில் பேசியது ஆச்சரியமாய் இருந்தது.

கேபிள் மற்றும் உண்மை தமிழனிடம் அடிக்கடி பேசியுள்ளேன். ஜாக்கியிடம் பேசுவது முதல் முறை. ஜாக்கி போனில் பேசும்போது அவர் பதிவை படிக்கிற மாதிரியே இருந்தது. தற்போது நடக்கும் விஷயங்களில் அமைதி காப்பதும், சில விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் கடந்து போவதும் பற்றி அக்கறையுடன் பேசினார். விண் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் பேச சொல்லி தான் அவர் போன் செய்தார் எனினும் அவர் சொன்ன மாலை நான்கு மணிக்கு அலுவலக வேலை இருந்ததால் செல்ல முடியவில்லை. இருப்பினும் என்னையும் மதித்து கூப்பிட்டமைக்கு நன்றி ஜாக்கி !

அய்யாசாமி கண்ட கனவு

நள்ளிரவு அய்யாசாமி கனவு கண்டார். ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் அவர்கள் இருக்கிறார்கள். அய்யாசாமி கீழ் தளத்து மைதானத்தில் விளையாடி கொண்டிருக்க, அப்போது கட்டிடம் தீ பிடித்து விடுகிறது. கீழ் தளத்தில் இருப்போரை தூரம் செல்லுங்கள் என விரட்டி விடுகிறார்கள். மூன்றாம் மாடியில் மனைவியும் மகளும் இருக்கிறார்கள் செல்லணும் என்று அவர் கெஞ்சினாலும் விடலை. நெடு நேரம் ஆகியும் மனைவியும் மகளும் காணும்

விழிப்பு வந்து விட்டது. இப்படி பயமுறுத்தும் கனவு காணும்போதெல்லாம் " இது கனவு தான் ! கனவு தான் ! நிஜம் கிடையாது" என்று ரெண்டு மூணு முறை சொல்லி கொள்வார் அய்யாசாமி. ஆனாலும் மறுபடி தூக்கம் வர நேரம் ஆகிடும். அதான் கொஞ்சம் பிரச்சனை :)

QUOTE CORNER


Be nice and smile to everyone you meet.

You don't know what they are going through,
and they might just need that smile.
At least for a moment,
it would make a lot of difference to them.
Life gives us many such moments to make others feel better.
For tomorrow when you feel low,
someone might smile and you may feel better.

45 comments:

  1. அய்யாசாமிக்கு பயமா...வாங்க..வாங்க..நம்ம ஊருக்கு...எமதர்ம ராஜாவை கும்பிட..

    ReplyDelete
  2. அட்டகத்தி..நன்றாக இருக்கிறது.அதிலும் கானா பாடல்கள் செம அருமை..

    ReplyDelete
  3. //தற்போது நடக்கும் விஷயங்களில் அமைதி காப்பதும், சில விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் கடந்து போவதும் பற்றி அக்கறையுடன் பேசினார்.//

    மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். வேற டாபிக் கிடைச்சதும், உங்கள் மீதான விமர்சனங்கள் குறைய ஆரம்பித்துவிடும். நீங்க தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  4. மூன்று பிரபல பதிவர்களும்...அப்போ நீங்களூம் பிரபலம் தான்...

    ReplyDelete
  5. பிரபல பதிவர்கள் பிரபல பதிவர்கிட்ட பேசியிருக்காங்க...

    அப்படித்தானே அண்ணா...

    ReplyDelete
  6. அட்ட கத்தி பார்க்க வேண்டும்
    சுந்தர பாண்டியன் என் எதிர்பார்ப்பில் உள்ள படம்
    சூரியன் காமெடி எப்பவும் ரசிக்க வைக்கும் ஒன்று
    பதிவர் திருவிழா டிவி யில் பார்க்க முடியவில்லை காரணம்
    மின்சாரம்

    ReplyDelete
  7. சசிகுமார் படங்கள் எப்பவுமே கொஞ்சம் வயொலேன்ட்-ஆ தான் இருக்கும்.. இந்த படம் எப்படியோ..
    சூரியன் படத்துல வர இன்னும் ஒரு சூப்பர் காமெடி - கனக்சன் இல்லாத போன் ல பேசிட்டு "அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா".. செம ஹிட் காமெடி!!! கவுண்டர்மணி காமெடி அடிக்க ஆளில்லை...
    சார் கனவுல நெருப்பு பார்த்த நல்லது நடக்கும் சொல்லுவாங்க so டோன்ட் வொர்ரி...
    மக்கள் தொலைகாட்சியில் நானும் வலைபதிவர் நிகழ்ச்சி கண்டு களித்தேன் சார்..

    பகிர்விற்கு நன்றிகள்!!

    ReplyDelete
  8. அட்டகத்தி இன்னும் பாக்கலை... பாத்துடறேன். சூரியன் படத்துல வர்ற காமெடி எல்லா சீன்லயும் கவுண்டர் கலக்கியிருப்பார். ஜாக்கியோட பாசாங்கு இல்லாத வெளிப்படையான பேச்சு எப்பவுமே இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். இனி அய்யாசாமிக்கு கனவுகள் இல்லாத நல்ல ஆழ்நத தூக்கம் வரட்டும்னு வாழ்த்தறேன்.

    ReplyDelete
  9. அட்டகத்தி நல்லாயிருந்தது. அந்த புதுமுக நடிகர் என்னமா அலட்டுகிறார்.

    ReplyDelete
  10. சுந்தரபாண்டியன் விளம்பரம் பார்த்தவுடனேயே ’சசிகுமார் (மூன்று படங்களிலும்) ஒரே மாதிரியே நடிக்கிறாரே (பொறுமை & பொங்குவது) இதுவும் அப்ப்டிதான் போலிருகிறது’ என்பது என் வீட்டம்மாவின் விமர்சனம்.

    இது பொதுவாக அனைத்து நடிகர்கள் இயக்குனர்களுக்கும் எழும் விமர்சனம் தான். எம்ஜிஆர், ரஜினி, சத்யராஜ் ஆகியோருக்கு இதுவே பலம். இதே பாணியை சிவாஜி, கமல் ஆகியோர் கடைபிடிக்காமல் வேறு வழியில் சென்றது அவர்கள் பலம்.

    பார்ப்போம்! சசிகுமார் வழி எதுவென்று....

    ReplyDelete
  11. இந்த விளம்பரம் தேவையா..?
    http://tk.makkalsanthai.com/2012/09/nanpathivan-veeduthirumpal-mogan.html

    இன்றைய தொழிற்களத்தில் வீடு திரும்பல்,,,

    ReplyDelete
  12. அட்டகத்தி பார்க்கவில்லை...

    சுந்தர பாண்டியன் பார்க்க வேண்டும்...

    கவுண்டர் காமெடி எப்போதும் அசத்தல் தான்...

    மற்றபடி "எதுவும்" கடந்து போகும்...

    ReplyDelete
  13. நல்லா வந்தா சரிதான் ....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  14. படங்கள் பார்க்க உங்களுக்கு எப்படி சார் நேரம் கிடைக்கிறது.!!!

    சூரியன் பட காமெடி எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

    ReplyDelete
  15. வானவில்லின் புதிய தோற்றம் அருமை!

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

    ReplyDelete
  16. படங்கள் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  17. அட்டைகத்தி படம் அருமையான படம் தான்


    பிரபல பதிவர்கள் பிரபல பதிவர்கிட்ட பேசியிருக்காங்க..

    ஏதாவது கட்சி ஆரம்பிக்கபோறீங்களா
    சொல்லிட்டு செய்யுங்க ஓட்டு போடுறோம்

    ReplyDelete
  18. சில கனவுகள் தூக்கத்தை கெடுப்பது என்னவோ உண்மை தான் அண்ணே...
    அட்டகத்தி என்னமோ எனக்கு பிடிக்காமல் போய்விட்டது .. நாயகன் நல்லா தான் நடித்திருந்தார் ..
    சு, பாண்டியன் பாடல் கேட்கலாம் போலிருக்கு படத்துக்காக வைடிங்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. அட்டகத்தியைப் பற்றி எங்கும் பாசிட்டிவ் ரிபோர்ட்தான் வருகிறது! கவுண்டர் காமெடி பற்றி சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete
  21. அட்டகத்தி பார்க்கணும்....

    கவுண்டர் காமெடி... நேற்று தான் ஏதோ சேனலில் பார்த்தேன்....

    புதிய படம்... பார்க்கலாம்...

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  22. "வர வர உங்களுக்கு என் மீது எதோ ஒரு பொறாமை வருவதை உணர முடிகிறது. நண்பனுக்கு நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்பதாக இங்கு சொல்வதை விட,நண்பனிடமே பேசி விடலாம் :"
    அப்ப கேபிள் சார்கிட்ட பேசி confrim பண்ணியாச்சா நண்பர்தான்னு.
    சந்தோஷமா சொல்லுங்க சார்.

    ReplyDelete
  23. வணக்கம் நண்பரே,
    அட்டகத்தி படத்தில் கானாப்பாடல்கள்
    மனதில் நின்றது...
    கானா பாலாவின் குரல் ஈர்ப்பு
    எழுந்து ஆட்டம் போட வைக்கிறது...

    ReplyDelete
  24. கோவை நேரம்: நன்றி அட்ட கத்தியில் கானா பாட்டுகள் நிஜமா நல்லா இருந்தது

    ReplyDelete
  25. ர‌கு said...

    மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். வேற டாபிக் கிடைச்சதும், உங்கள் மீதான விமர்சனங்கள் குறைய ஆரம்பித்துவிடும். நீங்க தொடர்ந்து எழுதுங்க.

    உண்மை தான் ரகு நன்றி

    ReplyDelete
  26. சங்கவி said...


    பிரபல பதிவர்கள் பிரபல பதிவர்கிட்ட பேசியிருக்காங்க...அப்படித்தானே அண்ணா...
    ***
    அப்படியில்லை சங்கவி பிரபல பதிவர்கள் பிரபல பதிவர்களை தொடர்பு கொள்வதில் என்ன ஆச்சரியம்? சாதாரண மனிதரான என்னை அவர்கள் தொடர்பு கொண்டதே செய்தி

    ReplyDelete
  27. நன்றி சரவணன்

    ReplyDelete
  28. நன்றி சமீரா. நாடோடிகள் செமையா இருக்குமே அதில் வயலன்ஸ் அதிகம் இருந்த மாதிரி நினைவில்லை

    ReplyDelete
  29. நன்றி பாலகணேஷ் சார். ஜாக்கியுடன் அதிகம் பழகியதில்லை இனி தான் பழகனும்

    ReplyDelete
  30. அமுதா கிருஷ்ணா. ஆம் அந்த கேரக்டருக்கு அந்த அலட்டல் பொருந்தியது என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  31. சீனி: இம்முறை வித்யாசமாய் உங்கள் வீட்டம்மாவின் பின்னூட்டம் !

    ReplyDelete

  32. தொழிற் களம்: மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  33. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete

  34. நன்றி கோவை டு தில்லி மேடம்: திருச்சியில் உங்கள் வீட்டில் கணினி கனக்ஷன் வந்து விட்டதா? மகிழ்ச்சி

    ReplyDelete
  35. சுரேஷ் நன்றி

    ReplyDelete
  36. மாதேவி நன்றி

    ReplyDelete

  37. கிராமத்து காக்கை said...

    ஏதாவது கட்சி ஆரம்பிக்கபோறீங்களா; சொல்லிட்டு செய்யுங்க ஓட்டு போடுறோம்

    ********
    அண்ணே: வணக்கம். அரசியல், பதவி பத்தி பேசினாலே நான் ஓடிடுவேன்

    ReplyDelete
  38. அரசன்: சுந்தர பாண்டியன் பாட்டுகள் இன்னும் கேட்கலை

    ReplyDelete
  39. ஸ்ரீராம்: கவுண்டர் காமெடி உங்களுக்கும் பிடிக்குமா !!

    ReplyDelete
  40. நன்றி வெங்கட்

    ReplyDelete
  41. அசீம் பாஷா: எஸ் சரியா பிடிச்சீங்க பாயிண்டை

    ReplyDelete

  42. நன்றி மகேந்திரன் ஆம் பாட்டுகள் அருமையா இருக்கு

    ReplyDelete
  43. வாவ் !!!!!! நிகழ்ச்சி சூப்பரா இருந்திச்சி மோகன் ..
    பகிர்வுக்கு நன்றி .

    //Life gives us many such moments to make others feel better.//


    மிக அருமையான வரிகள் .

    ReplyDelete
  44. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கனவு ஜோசியம் சொல்வார்கள் - பழைய கசினோ தியேட்டர் பக்கத்திலும். கனவு ஜோசியம் கேட்டுப் பாருங்க. ஒண்ணுமில்லேன்னாலும் கொஞ்சம் பொழுது போகும்.

    வெங்கட் ஸ்ரீனிவாசனின் பின்னூட்டம் insightful.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...