Thursday, September 27, 2012

சிம்லா டு குளுமணாலி -மறக்க முடியாத பேருந்து பயணம்

ணாலி செல்ல  சிம்லாவிலிருந்து காலை எட்டரை அளவில் ஹிமாச்சல் டூரிசத்தின் பஸ் கிளம்புகிறது. மாலை ஐந்து வரை பயணம் தொடர்கிறது. இதில் பெரும்பகுதி மலை பாதை என்பதால் மிக கவலையுடன் இருந்தோம். வாந்தி எடுக்குமோ என. முதல் நாள் சிம்லாவில் பயணிக்கும் போதே நாங்கள் மூவரும் சற்று கஷ்டப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக மாத்திரை சாப்பிட்டு விட்டே வண்டி ஏறினோம்.

முதல் இரண்டு மணி நேரம் மலை பாதையில் செல்வதால் பின்னி எடுத்துடுது. இந்த நேரத்தை தாண்டி விட்டால் அப்புறம் பயணம் சுகமே. அதன் பின் அநேகமாய் சமவெளியில் செல்வது மாதிரி தான் உள்ளது. ஆங்காங்கு நிறைய ஊர்கள் வருகின்றன. அவற்றை பார்த்து ரசிப்பதில் பொழுது கழிகிறது

வழியில் உள்ள ஒற்றை வீடு 

குளு-வை அடையும் முன்பே பயணம் மிக இனிதாக மாறி விடுகிறது. சுற்றிலும் மலைகள்... தூரத்தில் தெரியும் மலையில் பனி படர்ந்துள்ளது. ஒரு புறம் ஆறு மிக அழகாக ஓடுகிறது. இவற்றை பார்த்தவாறு பயணம் மிக இனிமையாக, மகிழ்ச்சியாக தொடர்கிறது






குளு என்பது தனி ஊர். மணாலி தனி ஊர். நானும் கூட செல்லும் வரை குளுமணாலி என்று ஒரே ஊர் பெயர் போல சொல்லி வந்தேன். தஞ்சை திருச்சி என்பது எப்படி தப்போ அதே போல் தப்பு இது. முதலில் குளு வந்து விடுகிறது. நீங்கள் விமானத்தில் சென்றால் இங்கு தான் இறங்கனும். அடுத்து மணாலி செல்ல ஒரு மணி நேரம் போல் ஆகும். இந்த ஒரு மணி நேரம் மிக மிக அற்புதமாய் இருக்கும் பயணம். இரு புறமும் வேடிக்கை பார்த்தவாறு செல்கிறது இந்த தூரம் !

படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் 


ஹவுஸ் பாஸ்/ பூக்கள் கார்னர்

ஹவுஸ் பாஸ் எடுத்த பூ (இது மாதிரி எக்கச்சக்கம் எடுத்து வச்சிருக்காங்க; அவை இனி ஒவ்வொரு மணாலி பதிவிலும் வரும் !) 

பஸ்ஸில் தூங்கும்போது ஹவுஸ் பாஸ் நமக்கு தெரியாமல் எடுத்தது 

ஆங்காங்கு வழியில்  சற்று  டிராபிக் ஜாம் ஆகிறது 

குளு அருகே உள்ள ஆறு, அதை சுற்றி உள்ள அழகை இந்த வீடியோவில் பார்க்கலாம்




எட்டு மணி நேர பயணம் என்பதால் படம் பிடிப்பது, பாட்டு கேட்பது இவற்றோடு அருகில் இருப்போரோடு பேசுவதும் மிக அவசியமாகி விடுகிறது. அப்படி பழக்கமானவர் தான் இந்த படத்தில் இருக்கும் ஜோஷி என்பவர். புனேயில் இருக்கும் இவர் தன் மனைவி, மகள் மற்றும் எட்டு மாத மகனுடன் வந்திருந்தார். இவருக்கு பயணங்களில் மிக ஈடுபாடு. ஒவ்வொரு வருடமும் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றி விடுகிறார். ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை எடுத்து கொண்டு தான் சுற்றுகிறார். இவர் குழந்தை எங்களுடன் செமையாய் ஒட்டி கொண்டான் !



ஹிமாச்சல் டூரிசத்தின் லோகல் டூருக்கு தான் நான் முன்பே புக் செய்திருந்தேன். ஆனால் அதை விட நண்பர்கள் சேர்ந்து கார் எடுத்து கொண்டு செல்வது நல்லது என ஜோஷியும் பஸ்ஸில் வந்த இன்னும் சிலரும் சொல்ல, நாங்கள் மூன்று குடும்பங்கள் கார் எடுத்து கொண்டு மணாலியில் சுற்றி பார்க்கலாம் என முடிவானது. மூவர் தங்கியதும் வெவ்வேறு ஹோட்டல்கள். இரண்டு கார் பிடித்து கொண்டு எல்லா இடமும் சுற்றி பார்த்தோம் !
ஆற்றில் ஜாலியாய் குளிக்கும் மக்கள் 



ஆற்றின் ஓரம் வளைந்து போகும் சாலைகள் 
 



மலை மேலே இருக்கும் ஒற்றை வீடு 



குளு அருகே உள்ள ஊரில் கோவில் ஒன்று 


ஏராளமாய் இப்படி ஆறுகள் பார்க்கலாம். செம வியூ 
 குளு உள்ளே நுழையும் முன் எடுத்த வீடியோ இது :




ஆங்காங்கு இருக்கும் காற்றாலை மின் உற்பத்தி 
குளுவிற்கு முன் ஒரு பெரிய டன்னல் வருகிறது. இதை பேருந்து கடக்க ஐந்து நிமிடம் போல் ஆகிறது. டன்னலில் ரயிலில் செல்வது ஒரு அனுபவம் எனில் பஸ்ஸில் செல்வது வேறு வித அனுபவம். இந்த வீடியோவில் பஸ் டனலுக்குள் புகுந்து வருவதை காணலாம்

என்ன ஒன்று முழு இருட்டு என்பதால், வெளிச்சமே இல்லை. எதிரில் வரும் வாகன வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்கள் சரியே வருவதில்லை.






Tunnel-ஐ விட்டு வெளியே வரும்போது எடுத்த படம் 

ரோஜா படத்தில் வருகிற பாலம் 
குளு தாண்டியதும் மலைகளில் உள்ள பனி நன்கு தெரிய ஆரம்பிக்கிறது. அதை பார்த்ததும் அனைவருக்கும் செம கொண்டாட்டம். சின்னதாய் பனி தெரிவதற்கே அனைவரும் குஷி ஆகி தத்தம் காமிராவில் படம் எடுக்கிறார்கள்.. மணாலி சென்றதும் அடுத்த சில நாளுக்கு பனியை தினம் தினம் பார்க்க போகிறோம் என தெரியாமல் !

பனி தெரிய ஆரம்பிக்கிறது 

ஆங்காங்கு இருக்கும் டென்ட்கள்    எதற்கு என தெரியலை 

குளு அருகே எடுத்த வீடியோ இது. வீடுகள் பல பாதி கட்டி முடித்த நிலையில், அப்படியே குடி இருப்பதை காணலாம்




மொத்தத்தில்: எந்த அளவு பயந்து கொண்டு ஏறினோமோ, அதற்கு எந்த அவசியமும் இன்றி மிக ஜாலி ஆக,  என்ஜாய் செய்யும் வண்ணம் இருந்தது இந்த பயணம். குறிப்பாய் குளு நெருங்கியதும் வரும் அந்த குகை  ( Tunnel  ) தொடங்கி அதன் பின் இயற்கை எழில் நம்மை "ஆஆ" வென்று வியக்க வைத்து விடுகிறது. 

அடுத்த பதிவில் :

பனி மலையில் விளையாட்டு - ஹை பாயின்ட்  ஆப் மணாலி ட்ரிப் 

44 comments:

  1. கோடை விடுமுறைக்கு இப்பவே ஆத்துக்காரர்கிட்ட சொல்லி வச்சுடுறேன்....

    பாக்க பாக்க ஆசையா இருக்கு! அந்த ஒற்றை வீடு, ஆறு... சான்சே இல்ல!

    போட்டோ பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. படங்கள் அருமை

    ReplyDelete
  3. குலு - மணாலி ஒரு சுகானுபவம் தான் மோகன். தில்லி சென்ற புதிதில் நண்பர்களுடன் சென்றது. மீண்டும் செல்ல வேண்டும். பார்க்கலாம் எப்போது வாய்க்கிறது என! :))

    ReplyDelete
  4. எப்ப பாரு ஃப்ரெண்ட்ஸ் கூட போனால் போதுமா?! அடுத்த முறை சகோதரியான என்னையும், மருகப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு போகனும். சரியா??!!

    ReplyDelete
  5. ஆமினா said...

    கோடை விடுமுறைக்கு இப்பவே ஆத்துக்காரர்கிட்ட சொல்லி வச்சுடுறேன்....

    பாக்க பாக்க ஆசையா இருக்கு! அந்த ஒற்றை வீடு, ஆறு... சான்சே இல்ல!

    போட்டோ பகிர்வுக்கு நன்றி சகோ
    >>>
    ஆமி, நீ ஏன் உன் ஆத்துக்காரர்கிட்ட சொல்லி கைக்காசெல்லாம் கரியாக்குறே?! தங்கச்சிகளை சுற்றுலா கூட்டி போறது அண்ணானோட கடமையில ஒண்ணு. சோ, மோகன் அண்ண்ண்ண்ண்ணா, நம்ம குடும்பத்தை இந்த லீவுக்கு குளுமணாலி கூட்டி போவார். டோண்ட் வொர்ரி ஆமி,

    ReplyDelete
  6. //படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் //

    அதெல்லாம் தான் நாம கரெக்டா பண்ணிடுவோம்ல..

    ReplyDelete
  7. அழகான கட்டுரை.. உங்கள் படங்கள் பார்க்கும் பொது குளு-மணாலி செல்லும் ஆசை அதிகமாகிறது..
    ஒட்டு மொத்த இயற்கையும் அங்கே கொட்டி இருப்பது போல் உள்ளது...
    படங்கள் அருமை!!
    சில வீடியோ சரியாக ஓபன் ஆகவில்லை error காட்டுகிறது..

    ReplyDelete
  8. அனைத்தும் மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. படங்கள் அருமை! நேரில் பார்க்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  10. Anonymous10:49:00 AM

    வணக்கம்.
    இந்தப் பதிவை பயணங்கள் பிரிவின் கீழ் தங்கள் பெயரில் நான் மீள்பதிவு செய்து கொள்ளலாமா?

    --

    ReplyDelete
  11. Those tents are for adventure camps.. did u try paragliding, river rafting and bungi jumping etc.. The camp organizers will organize for those...

    ReplyDelete
  12. என்ன பாஸ் ரோடங் பாஸ் போகலியா?

    ReplyDelete
  13. அசத்தல் படங்கள்... நன்றி...

    ReplyDelete
  14. குலுமனாலி படங்கள் நல்லாருக்கு மோகன் சார் இங்கெல்லாம் எப்ப போவோம்னு நினைக்க வைக்கும் படங்கள் நன்றி

    ReplyDelete
  15. அந்த டெண்ட்கள் ட்ரெக்கிங் போகிறவர்கள் யூஸ் செய்வார்கள் என நினைக்கிறேன். என் மகன் அடிக்கடி ட்ரெக்கிங் போகிறான். இந்த பாதை ஜம்மு-ஸ்ரீநகர் பாதை மாதிரியே இருக்கிறது. அடுத்த லீவிற்கு நீங்க காஷ்மீர் போங்க...நாங்க குளு,மணாலி போறோம்.

    ReplyDelete
  16. @ராஜி

    //ஆமி, நீ ஏன் உன் ஆத்துக்காரர்கிட்ட சொல்லி கைக்காசெல்லாம் கரியாக்குறே?! தங்கச்சிகளை சுற்றுலா கூட்டி போறது அண்ணானோட கடமையில ஒண்ணு. சோ, மோகன் அண்ண்ண்ண்ண்ணா, நம்ம குடும்பத்தை இந்த லீவுக்கு குளுமணாலி கூட்டி போவார். டோண்ட் வொர்ரி ஆமி, //

    உங்க அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் பாத்தாதோ அக்கா :-) இனி நானும் உங்க தங்கச்சின்னு நிரூபிக்கிறேன் இருங்க!!!

    @மோகன் அண்ணா..
    ட்ரைன்லாம் சரிபட்டுவராது... ப்ளைட்ல டிக்கெட் புக் பண்ணிடுங்க :-))

    ReplyDelete
  17. @ராஜி

    //ஆமி, நீ ஏன் உன் ஆத்துக்காரர்கிட்ட சொல்லி கைக்காசெல்லாம் கரியாக்குறே?! தங்கச்சிகளை சுற்றுலா கூட்டி போறது அண்ணானோட கடமையில ஒண்ணு. சோ, மோகன் அண்ண்ண்ண்ண்ணா, நம்ம குடும்பத்தை இந்த லீவுக்கு குளுமணாலி கூட்டி போவார். டோண்ட் வொர்ரி ஆமி, //

    உங்க அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் பாத்தாதோ அக்கா :-) இனி நானும் உங்க தங்கச்சின்னு நிரூபிக்கிறேன் இருங்க!!!

    @மோகன் அண்ணா..
    ட்ரைன்லாம் சரிபட்டுவராது... ப்ளைட்ல டிக்கெட் புக் பண்ணிடுங்க :-))

    ReplyDelete
  18. அன்புள்ள ஹவுஸ் பாசுக்கு,

    இங்கு ஆமினா மற்றும் ராஜி என்ற பெயரில் கமன்ட் போட்டுள்ள இருவரும் யார் என்று எனக்கு தெரியாது. கணவருக்கு
    தங்கை யாரும் இல்லை; எனவே "செலவு இல்லை" என நம்ப்ப்பி நீங்கள் வந்தது தெரிந்ததே. வழக்கம் போல் முழு சம்பளமும், சம்பள ஸ்லிப் உடன் தந்து விடுவேன்.

    ஆகவே இன்று சாப்பாட்டை நிறுத்தாமல் வழக்கம் போல் போட்டு ஆதரிக்கவும்

    இப்படிக்கு

    என்றும் தங்கள் பேச்சுப்படி நடக்கும் கணவன்

    அய்யாசாமி

    ReplyDelete
  19. ங்க்ஙே... ?!!!!

    ReplyDelete
  20. நைட் டின்னருக்காக சகோதரிகளை யாருன்னே தெரியாத மாதிரி நடிக்கும் மோகன் அண்ணாக்கு இனி மைனஸ் ஓட்டு போடப்படும்.

    ReplyDelete
  21. பார்த்த ஒவ்வொரு கட்சியையும் ரசித்து பகிர்ந்திருக்கிறீர்கள்.இவற்றைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் உண்டாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  22. வழியில் உள்ள ஒற்றை வீட்டில் இருப்பவர்கள் மீது பொறாமை கொள்ளலாமா.... வேண்டாம், நமக்கெல்லாம் போரடித்து விடும்! இரண்டு மூன்று நாள் பயணமாகச் சென்று வரத்தான் சரி!

    பஸ்ஸில் அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்க்காமல் என்ன தூக்கம்?! எட்டுமணி நேரப் பயணத்தில் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்க்க என்கிறீர்களோ?

    ReplyDelete
  23. ஆமினா: என்ன இருந்தாலும் ராஜி அளவு டிரைனிங் நமக்கு இல்லை. பாருங்க எப்படி மிரட்டுறாருன்னு :))

    ReplyDelete
  24. நன்றி சமுத்ரா

    ReplyDelete
  25. வெங்கட்: குலு என்றா சொல்லணும்? குளு இல்லையா? குளு குளு என்பதால் நான் அப்படியே சொல்லிட்டேன்

    ReplyDelete
  26. இந்திரா: இல்லியா பின்னே? :))

    ReplyDelete

  27. சமீரா: சில வீடியோ வரலையா? எனக்கு எல்லாம் வருதே? என்ன பிரச்சனைன்னு தெரியலை

    ReplyDelete
  28. ராமானுசம் ஐயா: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete

  29. மோட்டார் சுந்தரம் பிள்ளை: நன்றி செய்யுங்கள். நமது தளம் பெயர் லிங்க் உடன் தந்தால் நல்லது

    ReplyDelete
  30. சிவராமன் (பைத்தியக்காரன் ) : ஆம் நீங்க சொன்ன பின் தோணுது அந்த இடங்களில் தான் இந்த டென்ட் இருந்தன. நாங்கள் ரிவர் ராப்டிங் சென்றோம் அட்டகாச அனுபவம்.

    ReplyDelete

  31. முபாரக்: ரோடங் பாஸ் வரை விட வில்லை. விட்ட இடம் வரை சென்றோம். இவ்வரிசையில் அடுத்த பதிவு அது தான்

    ReplyDelete
  32. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete

  34. நன்றி சரவணன். வாய்ப்பு இருக்கும் போது அவசியம் சென்று வாருங்கள்

    ReplyDelete

  35. நன்றி அமுதா கிருஷ்ணா. காஷ்மீர் போகணும் எப்ப முடியுமோ தெரியலை

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete

  37. முரளி சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete

  38. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete

  39. ராஜி: நீங்க தங்கச்சியே தான் என்னமா மிரட்டுறீங்க :)

    ReplyDelete
  40. மகள் குலு-மணாலி போயிட்டு வந்து சொன்ன கதையைக் கேட்டு காதுல வந்த புகையே இன்னும் நிக்கலை. அதுக்குள்ள நீங்களும் போட்டோ போட்டு கெளப்புனா எப்புடி????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  41. நல்லதொரு பயணம்.குலு மணாலி பார்க்க வேண்டும். எப்போது வாய்ப்பு கிடைக்குமோ....

    உங்க மூவருக்குமே வாந்தி பிரச்சனையா?....இங்கு எனக்கும், மகளுக்கும்...:)) இதனாலேயே பிரயாணம் என்றால் பயம். ஆனா எங்க வீட்டுக்காரருக்கு பிரயாணங்கள் தான் மிகவும் பிடித்தது. என்னவொரு பொருத்தம்!!!

    ReplyDelete
  42. ஸ்ரீராம்: ரொம்ப நேரம் வேடிக்கை பார்க்க முடியலை. ஆனால் மிக கொஞ்ச நேரம் தான் தூங்கினேன். மே பி அரை மணி நேரம். மத்த நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு தான் வந்தேன்

    ReplyDelete
  43. நன்றி அமைதி சாரல்; மகள் போயிட்டு வந்தாரா? அப்போ நீங்க ஏன் போகலை? பள்ளி/ கல்லூரியில் கூட்டி சென்றனரோ?

    ReplyDelete
  44. கோவை டு தில்லி: ரயில் என்றால் யாருக்கும் பிரச்சனை இல்லை. பஸ் அதுவும் மலை ஏறினால் மூவரும் உவ்வா தான்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...