Monday, February 18, 2013

தொல்லை காட்சி- ஆடலாம் பாய்ஸ்- தேவயானி - சன் சிங்கர்

ஆடலாம் பாயிஸ் சின்னதா டான்ஸ்


ஆடலாம் பாயிஸ் சின்னதா டான்ஸ் - இது ஒரு படத்தோட பெயர். சுருக்கமா முதல் எழுத்துக்களை வைத்து ABCD !. பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க டான்ஸ் படமாம். டான்ஸ் - 3 D - யில் பார்க்கலாம். புதுமுக இயக்குனர் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான UTV தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவி யில் காட்டினர். படம் ஓட வைக்க டான்ஸ் 3- D யில் பாருங்க என்றெல்லாம் வித்யாசம் காட்ட முயல்கிறார்கள் . கதை ஒழுங்கா இருந்தாலே படம் ஓடிடும் என்பதை சில நேரம் மறந்து விடுகிறார்கள்.

சன் சிங்கர்

கொஞ்சம் கூட கவலைப்படாமல் விஜய் டிவி நிகழ்சிகளை அப்படியே நகல் எடுப்பதில் சன் டிவி யை மிஞ்ச ஆளே கிடையாது. சூப்பர் சிங்கர் பாணியில் டிட்டோ வாக ஒரு நிகழ்ச்சி - சன் சிங்கர் என்ற பெயரில் ஞாயிறு காலை ஒளிபரப்பாகிறது. இதற்கு ஏகப்பட்ட முறை குறிப்பிட்ட குழந்தையை வாரியணைத்து அனைவரும் பாராட்டுவதாக ப்ரோமோ போட்டு தள்ளினர்

அந்த குழந்தை நன்கு பாடியிருக்கலாம் ஆனால் நிகழ்ச்சியை முழுசா பார்க்க முடியலை. கொடுமையா இருந்தது ! புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனுராதா ஸ்ரீராம் எப்படி பாடினாலும் குறையே சொல்லாமல் மார்க் வாரி வழங்குகிறார்கள்.

ஈ அடிச்சான் காப்பி என்று கேள்விபட்டுள்ளீர்களா? தெரியவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். விஜய் டிவி வாய்ஸ் டிரைனர் மாதிரி குழந்தைகளுக்கான டிரைனர் என்று சொல்லி, கங்கை அமரனுக்கு அனந்த் வைத்தியநாதன் போலவே வட நாட்டு உடையை மாட்டி அவரை " மாஸ்டர் மாஸ்டர்" என்பது கொடுமையிலும் கொடுமை !

விஜய் டிவியை காப்பி அடிப்பவர்கள் நிகழ்ச்சியின் தரம் அதில் பாதியாவது இருக்கும்படி பார்த்து கொள்ளலாம் !

டிவியில் பார்த்த படம் - உள்ளத்தை அள்ளி தா

Alltime Favourite காமெடி படங்களில் ஒன்று உள்ளத்தை அள்ளி தா. கவுண்டர் கலக்கி இருப்பார். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த படம் பார்ப்பேன்.

பார்க்கும் ஒவ்வொரு முறையும் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பித்து விடும். ACS என்கிற கடினமான கோர்ஸ் நான் பாஸ் செய்த போது வந்த படம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அந்த கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்ற படி இருந்தது உள்ளத்தை அள்ளி தா.

ACS பாஸ் செய்ததுக்கு ஒவ்வொரு நண்பர் வட்டத்துக்கும் அலுக்காமல் ட்ரீட் தந்து கொண்டிருந்தேன். அப்படி நண்பர் வட்டத்துடன் பிரார்த்தனா டிரைவ் இன் சென்று இப்படம் பார்த்து விட்டு வந்தோம்

ரம்பாவின் அழகு, கவுண்டர் மற்றும் கார்த்திக்கின் கெமிஸ்ட்ரி, சிற்பியின் பாட்டுகள் என சூப்பர் ஹிட் ஆன இப்படம் இன்றைக்கும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. " பாத்து போட்டு கொடுங்க; வேன் எல்லாம் வச்சி கடத்திருக்கோம் " போன்ற டயலாக்குகள் அமரத்துவம் பெற்றவை !

ஜீ தமிழில் ஒரு தாயின் சபதம்


டி. ராஜேந்தர் சினிமா தலைப்பான " ஒரு தாயின் சபதம் " என்கிற தலைப்பில் ஜீ தமிழில் உமா பத்மநாபன் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். கணவரை இழந்து தங்கள் குழந்தைகளை தனி மனுஷியாக வளர்த்த அம்மாக்கள் பற்றிய தொடர் இது. சனிக்கிழமை மாலை 8:30 க்கு ஒளிபரப்பாகிறது. அம்மாவை நேசிக்காதோர் யாருமே இருக்க முடியாது. அதிலும் கணவன் இன்றி தானே உழைத்து, குழந்தைகளையும் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் தாய்மார்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சி மிக பெரும் அழுகாச்சி காவியமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். பேசும் மகன் / மகள் அழ, அதை கேட்டு அம்மா அழ,,,, பார்வையாளர் எல்லாம் அழுகிறார்கள். ஒரே ஒரு நாள் பத்து நிமிஷம் பார்த்ததில் டென்ஷன் ஆகி போன என் பெண் " இனிமே இந்த சான்ல பக்கம் வந்தே தொலைச்சுடுவேன்" என்று சொல்லியபடி சானல் மாற்றி விட்டாள் !

ஆட்டோ கிராப்பில் தேவயானி

சுஹாசினி தொகுத்து வழங்கும் ஆட்டோ கிராப்பில் தேவயானி உரையாடினார். வழக்கம் போல் சொல்லும் " காதல் கோட்டை தான் எனக்கு திருப்பு முனை, etc " ( 15 வருஷமா இதையே தான் கேட்டுகிட்டு இருக்கோம் மேடம் !)

40 வயதாவது இருக்கும் இவரை பார்க்க 30 க்கும் குறைவாய் தான் தோன்றுகிறது. வெயிட் போடாமல் இருப்பதன் விளைவு !

" ராஜ் குமாரனை கல்யாணம் செய்து கொள்ள குடுத்து வைத்திருக்க வேண்டும்; அவருக்கென்றே பிறந்தவள் நான் " என்றார்.

இவர்கள் இருவரும் இணைந்து மிரட்டும் புது பட டிரைலர் நினைவில் வந்து வயிற்றை  கலக்கியது.

பிளாஷ்பேக் - தூர்தர்ஷனில் பிராந்திய மொழி திரைப்படங்கள்

டிவி வந்த புதிதில் வாரம் இரண்டே படம் பார்க்க தான் வாய்ப்புண்டு. ஒன்று - ஞாயிறு மாலை வரும் தமிழ் திரைப்படம். மற்றொன்று அதே ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் பிராந்திய மொழி திரைப்படம். நல்ல விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் தேசிய விருது பெற்ற அல்லது பிற மொழியின் சிறப்பான படங்கள் இதில் திரையிடுவார்கள். சப் டைட்டிலுடன் தான் வந்த ஞாபகம். சத்யஜித்ரே, கே. விஸ்வநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களை இதில் பார்த்து மகிழ்ந்துள்ளோம். வெகு அரிதாய் சுழற்சி முறையில் ஒரு தமிழ் படமும் கூட இந்த ஸ்லாட்டில் வரக்கூடும். அன்றைக்கு நமக்கு மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடடா " இன்னிக்கு ரெண்டு சினிமா பார்க்கலாம்; மதியம் ஒரு படம்; இரவு ஒரு படம் என குதிப்போம். ம்ம் அது ஒரு காலம் !

அம்மா நடத்தி வைத்த திருமணங்கள்

தனது 65வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா 65 பேருக்கு திருமணம் நடத்தி வைத்ததை விரிவாக ஜெயா டிவியில் காட்டி மகிழ்ந்தார்கள். அம்மா " மணமக்கள் மாலையை எடுங்கள். கழுத்தில் போடுங்கள். இப்போ தாலி எடுங்கள்.. ம்ம் கட்டுங்கள் " என்றதும் மணமகன்கள் " மாண்புமிகு" மாதிரி அடிபணிந்தனர்.

அம்மா ஓரிரு குட்டி கதைகளை பார்த்து பார்த்து படித்தார். ஆவ்வ்வ் என நமக்கு கொட்டாவி வர, நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த அமைச்சர் பெருமக்கள் சட்டசபை போல, ஒவ்வொரு நிமிடமும் கை தட்டி அம்மாவை மகிழ்வித்தனர். பார்க்க செம காமெடியா இருந்தது. டிவி யில் காட்டும் சட்ட சபை நிகழ்சிகள் கூட இந்த காமெடிக்காக சில நிமிடங்கள் பார்த்து மனம் விட்டு சிரிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்

***
அண்மை பதிவு:

21 comments:

 1. சண்டிவியின் காப்பி-- எனக்கும் கொஞ்சம் கோபம்தான் அங்கே Creativity உள்ள ஆட்கள் யாருமே இல்லையா..


  ReplyDelete
  Replies
  1. உமா : அதே டவுட்டு தான் எனக்கும் !

   Delete
 2. //இவர்கள் இருவரும் இணைந்து மிரட்டும் புது பட டிரைலர் நினைவில் வந்து வயிற்றை கலக்கியது.// Me too.....

  ReplyDelete
 3. // இன்னிக்கு ரெண்டு சினிமா பார்க்கலாம்; மதியம் ஒரு படம்; இரவு ஒரு படம் என குதிப்போம். //

  Now, "Thank god, there is no cinema today" --

  Future "Thank God, there is no mega-serial today(!)"

  ReplyDelete
 4. // ஆவ்வ்வ் என நமக்கு கொட்டாவி //

  //பார்க்க செம காமெடியா இருந்தது//

  Y, do you get sleepy, seeing comedy..?

  ReplyDelete
  Replies
  1. தம்ப்ரி ..ரொம்ப டீப்பா போகாதே.. ஐயம் பாவம்

   Delete
 5. .// டிவி யில் காட்டும் சட்ட சபை நிகழ்சிகள் கூட இந்த காமெடிக்காக சில நிமிடங்கள் பார்த்து மனம் விட்டு சிரிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்//

  ஹா..ஹா..

  டி.வி. நிகழ்ச்சிகளைப்பற்றிய நல்ல அலசல்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராம்வி நன்றி

   Delete
 6. சப்த ஸ்வரங்கள் என்று முதன் முதலில் சன் TV ல் வந்த நிகழ்ச்சியே மற்ற TV களுக்குப் போய் திரும்பி சன் சிங்கர் என்று வந்திருக்கிறது.

  மார்க்குகளை வெகு தாராளமாக கொடுக்கிறார்கள் என்பது நிஜம். ஆனால் குழந்தைகள் வெகு நன்றாகவே பாடுகிறார்கள். அதிலும் சொன்னது நீ தானா பாடலை ஒரு சிறுமி வெகு அற்புதமாக பாடினாள். பிரம்மாண்டம் என்றால் சன் TV தான். அதனால் தானோ என்னவோ சன் TV rating அதிகமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. //சப்த ஸ்வரங்கள் என்று முதன் முதலில் சன் TV ல் வந்த நிகழ்ச்சியே மற்ற TV களுக்குப் போய் திரும்பி சன் சிங்கர் என்று வந்திருக்கிறது.
   //

   உண்மை உண்மை

   Delete
  2. வாங்க ராமராவ்; தங்கள் கருத்துக்கு நன்றி

   Prem s: நன்றி !

   Delete
 7. உங்கள்க்கு டிவி பார்க்க நேரம் இருக்கா சார்... இவ்ளோ ப்ரோக்ராம் பாக்றீங்க

  ReplyDelete
  Replies
  1. வீக் எண்டு தான் பெரும்பாலும் பாக்குறேன் சீனு ; வார நாளில் கஷ்டமே

   Delete
 8. சன் டிவி என்னதான் ஆசை ஆசையாய் காப்பி அடித்து பெரும் விளம்பரம் (அடிக்கடி போட்டுக்காட்டி ) செய்து நிகழ்ச்சி நடத்தினாலும் அது ஒரே சீசன் தான்.விஜய் டிவி போல் சீசன் 2.3 எல்லாம் வராது.ஆசைக்கு நடத்தி பார்க்கிறார்கள் . இப்போது புது படங்களும் பெரிதாக அவர்கள் போடுவது இல்லை.இப்போது அவர்களை நம்பர் 1 ஆக வைத்திருப்பது சீரியல்கள் தான். அதுவும் ஒரு 4,5 சீரியல் தான். மற்ற டிவிக்கள் கொஞ்சம் முயன்றால் இவர்களை வீழ்த்திவிடலாம் .முக்கியமாய் ,கலைஞர் ,மற்றும் விஜய் டிவி .முயற்சித்தால் நடக்கலாம்.

  ஜீ தமிழ் நிகழ்சிகள் மோசம் .இப்படி சொல்வதெல்லாம் உண்மை என்று அடுத்தவர் குடும்பத்தின் பிரச்சனைகளை அரங்கேற்றி டி .ஆர் .பி ஏற்ற முயற்சிக்கிறார்கள் .அங்கே வரும் பெரும்பாலோனோர் அடித்தட்டு மக்கள் .யார் மூலமோ இப்படி தங்கள் பிரச்சனைகளை சொல்லி சிக்கி கொள்கிறார்கள்.

  தூர்தர்ஷன் படங்கள் ஒரு அருமையான காலம் .அப்போது போட்ட பழைய படங்களை பார்த்துள்ளேன் .இன்று அதே படங்கள் வேறு டிவியில் போட்டால் பார்க்க பிடிக்கவில்லை .

  ReplyDelete
  Replies
  1. சீன கிரீயட்டர் நன்றி நண்பா

   Delete
 9. பிராந்திய மொழித் திரைப் படங்களில் பல சமயம் மிக நல்ல படங்கள் பார்த்ததுண்டு. மாற்றி மாற்றிப் பார்க்க வேறு ஆப்ஷன் இல்லை அல்லவா...!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம் சார் நன்றி

   Delete
 10. பொறுமையாக டிவி ப்ரொக்ராம் எல்லாம் பார்த்து எழுதறீங்க! பதிவு தேத்ததானே பாக்கறீங்க? நல்ல பகிர்வு! உள்ளத்தை அள்ளித்தா எனக்கும் மிகவும் பிடித்த படம்! பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. //பதிவு தேத்ததானே பாக்கறீங்க? //

   ஆஹா பாயிண்ட்டை கரக்ட்டா நோட் பண்ணிட்டீங்க சுரேஷ் :)

   Delete
 11. தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள் ரசனை.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...