Monday, February 4, 2013

தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

டிவி யில் பார்த்த படம் - மௌன ராகம் 

தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் - மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என இன்றைக்கும் பொருந்துற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள் + பின்னணி இசை , PC ஸ்ரீராமின் ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் பச்சான் காப்பி ரைட் எதுவும் வாங்கலையே ?) , ரேவதியின் அழகு, .. என மணிரத்னத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்று.கடல் பார்த்து விட்டு , கட்டு போட்டு கொண்டு படுத்திருப்போர் பாலு மகேந்திரா போல மணிரத்னமும் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகிடனும் என சொல்ல ஆரம்பித்துள்ளனர். மணிரத்னத்தின் சமீபத்து படங்களை (அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது உடல்நிலையை கணக்கில் எடுத்து கொண்டால்) - இந்த கூற்று சரியென்றே தோன்றுகிறது

மிஸ்டர் பீன் 

போகோவில் இப்போதும் அவ்வப்போது மிஸ்டர் பீன் காட்சிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்.... நானும் மகளும் . என் பெண்ணுக்கு 10 வருஷத்துக்கு மேலாய் மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை. நண்பர்கள் சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு மிஸ்டர் பீன் காமெடி காட்டுவதில்லை சற்று அடல்ட் கண்டெண்ட் வரும் என்பதால்.. அப்படி ஒன்றும் செக்சியாய் இருக்காது. திடீரென எப்போதாவது ஒரு முறை உடையின்றி ஓடுவார் .அவ்வ ளவு தான்.. :))

மிஸ்டர் பீன் பரீட்சை எழுதும் காட்சி, சர்ச்சில் பிரேயர் நடக்கும் போது செய்யும் லூட்டிகள் .. இவை....எவர் கிரீன் காமெடி..

சர்ச்சில் அவர் செய்யும் அமர்க்களத்தை இந்த வீடியோவில் கண்டு ரசிக்கலாம்


நிற்க. புகழ் உச்சியில் இருக்கும் போதே மிஸ்டர் பீ ாக நடிக்கும் ரோவன் அட்கின்சன் நடிப்பதை நிறுத்தி கொள்கிறேன் என அறிவித்து விட்டார். உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?

பிளாஷ் பேக் : வந்தே மாதரம்

இன்றைய சோ - தன் ஜால்ரா நடவடிக்கையால் நம் மதிப்பை இழந்து வந்தாலும், அவரது பழைய நாடகங்கள் சில அட்டகாசம் என்பதை மறுக்க முடியாது

குறிப்பாக வந்தே மாதரம் என்கிற இந்த நாடகம் ஞாயிறு காலை 9 மணியளவில் ஒளிபரப்பாகும். டிவி வந்த புதுசு. தூர்தர்ஷனில் தான் பார்த்த நினைவு. ஒவ்வொரு ஞாயிறும் மிக எதிர்ப்பார்ப்புடன் பார்த்து ரசித்த நாடகம். நமக்கு நன்கு தெரிந்த சுதந்திர போரை செம சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்சுடன் காட்டி அசத்தியிருந்தார். அன்றைய அரசியலை அதிகம் நக்கல் செய்யாமல் எடுத்து கொண்ட விஷயத்தை மட்டும் ஒரே கோட்டில் எடுத்து சென்ற சீரியல். இப்போது DVD -யாகவும் கிடைக்கிறது என இணையம் மூலம் அறிகிறேன்.

ஜெயா டிவி யில் விஸ்வரூப செய்தி

விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தபோது பேசாமல் இருந்த ஜெயா டிவி, கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தொடர்ந்து அதை பிளாஷ் நியூசாக போட்டது. பிரச்சனை முடிவுக்கு வருவதை சொல்வது நல்ல விஷயம் தான்..

ஆனால் பிளாஸ் நியூஸ் இப்படி சொன்னது: " முதல்வர் அதிரடி நடவடிக்கை : விஸ்வரூப பிரச்சனை தீர்ந்தது.. !"

ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே :))

அரவிந்த் சாமியும் அடுப்புல வெந்த ஆசாமியும்

கடல் படம் பற்றி அரவிந்த்சாமி விஜய் டிவியில் 1 மணி நேரம் பேசினார். அரவிந்த்சாமியின் கடல் பார்த்து அடுப்புலே வெந்த ஆசாமியாகி போனவர்கள் இந்த நிகழ்ச்சி பார்த்தால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள்

படம் ஆஹோ ஓஹோ என பட குழு பேசும்போது கவுண்டர் படத்தில் வரும் " போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுது " தான் நியாபகத்துக்கு வந்தது.

அரவிந்தசாமியை ஓரிரு வருடங்களுக்கு முன் பார்த்துள்ளீர்களா? நன்கு வெயிட் போட்டு முடி ஏகமாய் கொட்டி. முக நூலில் சில நண்பர்கள் " எப்ப பார்த்தாலும் பெண்கள் சைட் அடித்த மனிதன் இன்று எப்படி ஆனார் பாருங்கள் " என்று போட்டோ போட்டு மகிழ்ந்தனர் ஆனால் மனிதர் மீண்டும் பழைய ஆளாக வந்து எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளார் . வெயிட் குறைத்தது சரி. கொட்டிய முடி எப்படி திரும்ப வந்துச்சு சார்? சினிமாவில் தான் விக் என்றால் வெளியிலுமா?

நீயா நானா - குழந்தைகள் வளர்ப்பு 

குழந்தைகள் வளர்ப்பு குறித்து பெற்றோர் ஒரு புறமும் குழந்தைகள் மறுபுறமும் அமர்ந்து பேசினர். ஆண் , பெண் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில் நிறையவே மன அழுத்தம் இருப்பதும் அது குழந்தைகள் மீது தெறிப்பதும் பேச்சினூடே தெரிந்தது

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வந்த டாக்டர் அசோகன் மற்றும் ஒரு எழுத்தாளர் மிக நன்கு பேசினர் ; குழந்தைகள் மற்றும் பெற்றோர் இரு பக்கத்துக்கும் விரிவாக வாதம் செய்தனர்.
எனக்கு மிக ஆச்சரியாமான விஷயம் இன்றும் பெற்றோர் வித விதமான தண்டனைகள் வழங்கி வருகிறார்கள் என்பது தான். அடி வாங்குதல், தோப்பு கரணம் போடுதல், இருட்டிய அறைக்குள் வைத்து பூட்டுதல் என்று அவர்கள் சொன்ன அனைத்து தண்டனைகளும் சிறுவயதில் நான் அனுபவித்துள்ளேன் (பெற்றோரிடமல்ல. முதல் அண்ணனிடம் !) ஆனால் என் பெண்ணை சிறுவயதில் கோபமான சில பொழுதுகளில் அடித்துள்ளோமே ஒழிய (அந்த சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு கைக்குள் அடக்கி விடலாம்), தற்போது எந்த ஒரு தண்டனையும் தருவதில்லை.

" உங்களை அப்படி அடித்ததால் தானே நல்ல நிலைக்கு வந்தீர்கள் ? " என்றார் ஹவுஸ் பாஸ்.

" நிச்சயம் இல்லை சிறு வயதில் அடிக்க அடிக்க ரீபெல் (Rebel) போல தான் இருந்தேன். அடி மரத்து போய் விட்டது. கல்லூரி சென்றுவீட்டில் சுதந்திரமாக விட்ட பின் தான் ஒழுங்காய் படிக்க ஆரம்பித்தேன் "

குழந்தைகளுக்கு படிப்பின் மூலம் கிடைக்க கூடிய வளர்ச்சியையும், படிப்பின் சுவாரஸ்யத்தையும்  சொல்லி தந்தால் போதும் என்பதே என் நிலைப்பாடாய் உள்ளது ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
***
அண்மை பதிவு :

Student of the year ஹிந்தி படம் + சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் -ஒரு பார்வை

19 comments:

 1. மௌன ராகம் - ராகங்களை மறக்க முடியுமா...?

  நீயா நானா - போட்டி-->வந்து இருந்த சிறப்பு விருந்தினர்களின் நீயா-நானா...

  குழந்தைகளின் ஐந்து வயது வரை பார்த்த, கேட்ட, ரசித்த, சுவைத்த, சாப்பிட்ட, ..., ..., etc..., தான் வாழ்நாள் முழுவதும் தொடரும்... (சிலரைத் தவிர)

  ReplyDelete
 2. //அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது உடல்நிலையை கணக்கில் எடுத்து கொண்டால்// இதெல்லாம் சரியான விமர்சனமாகத் தெரியல. படத்தை எப்ப்டி வேணா விமர்சிங்க. தனிப்பட்ட விசயங்கள் தவிர்க்கலாமே.

  //குழந்தைகளுக்கு பொறுப்பை சொல்லி தந்தால் போதும் என்பதே என் நிலைப்பாடாய் உள்ளது// 100% agreed :)

  ReplyDelete
 3. // உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?//

  சமீபத்திய தோல்விகள்தான் இவர்களை எல்லோரும் அதிகமாக விமர்சிக்க காரணம். பட் , கொஞ்சம் யோசிச்சு பார்த்தா, காசுக்காகவோ, புகழுக்காகவோ அவர்கள் இன்னும் தம் துறையில் இருக்கவில்லை. Their passion drives them to continue.

  Performance சரியில்லன்னு நாம் சொல்லலாம். ஆனால், வெளியே போங்கன்னு கழுத்தை பிடித்து தள்ள நமக்கு உரிமையில்லைங்கறது என்னோட கருத்து.

  //அண்மை பதிவு :

  கடல் = சொதப்பல் விமர்சனம் //

  "சொதப்பல்"க்கும், "விமர்சனம்"க்கும் நடுவுல ஒரு Hyphenஐயோ, Colonஐயோ போடுங்க :)

  ReplyDelete
 4. தனபாலன் : வாங்க சார். ரொம்ப நாள் கழித்து இணையம் பக்கம் வர ஆரம்பிசிருக்கீங்க ; நேற்றைய விவாதத்தில் சிறப்பு விருந்தினர் பங்கு சிறப்பாகவே இருந்தது

  ReplyDelete
 5. ees Said:

  //இதெல்லாம் சரியான விமர்சனமாகத் தெரியல. படத்தை எப்ப்டி வேணா விமர்சிங்க. தனிப்பட்ட விசயங்கள் தவிர்க்கலாமே.//

  ees: மணிரத்னம் நிச்சயம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவர் எடுக்கும் படங்கள் எதுவும் சாதாரணமாய் எடுத்து விடுவதில்லை; ராவணன் ஆகட்டும், கடல் ஆகட்டும் தன்னை மிக சிரமபடுத்தி கொண்டு கொண்டு தான் எடுக்கிறார்; 3 முறை அட்டாக் வந்து பிழைப்பவர்கள் மிக அரிது. அப்படி 3 முறை வந்தும் பிழைத்தவர் மணி சார். இன்னொரு முறை வராமல் அவர் தன உடலை பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சொன்னேன். கடல் படம் மீதுள்ள கோபமும் சேர்ந்து வருவதால் அதில் வேறு வித தொனி வந்து விட்டது போலும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.அந்த தொனி வந்துவிட்டது.
   நீங்க சொன்ன மாதிரி கடல் பத்தி கோவம் குறைஞ்சவுடனே ஒரு தடவ படிச்சுப் பாத்திருங்க :))

   Delete
 6. //சமீபத்திய தோல்விகள்தான் இவர்களை எல்லோரும் அதிகமாக விமர்சிக்க காரணம். பட் , கொஞ்சம் யோசிச்சு பார்த்தா, காசுக்காகவோ, புகழுக்காகவோ அவர்கள் இன்னும் தம் துறையில் இருக்கவில்லை. Their passion drives them to continue.

  Performance சரியில்லன்னு நாம் சொல்லலாம். ஆனால், வெளியே போங்கன்னு கழுத்தை பிடித்து தள்ள நமக்கு உரிமையில்லைங்கறது என்னோட கருத்து.//

  நல்ல ஆர்க்யூ மென்ட் ரகு; ஒத்து கொள்ள தான் வேண்டும் !

  ReplyDelete
 7. ///குழந்தைகளுக்கு பொறுப்பை சொல்லி தந்தால் போதும் என்பதே என் நிலைப்பாடாய் உள்ளது//
  முற்றிலும் சரி. அந்த பொறுப்பு தெரிய வைப்பதற்கு தான் தண்டிப்பது!

  ReplyDelete
 8. சுவாரசியமான தகவல்கள்.
  மெளன ராகம் அருமையான படம்.
  மிஸ்டர் பீந்--எங்க வீட்டிலும் எல்லோரும் விரும்பிப் பார்ப்போம்.

  //குழந்தைகளுக்கு படிப்பின் மூலம் கிடைக்க கூடிய வளர்ச்சியையும், படிப்பின் சுவாரஸ்யத்தையும் சொல்லி தந்தால் போதும் என்பதே என் நிலைப்பாடாய் உள்ளது ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?//

  நீங்கள் நினைப்பதைதான் நானும் நினைக்கிறேன் மோகன்.

  அந்தக்காலத்தைப்போல இல்லாமல் இந்த காலத்து குழந்தைகள் அடிப்பதால் திருத்த முடியாது ஆனால் அன்பாக சொன்னால் கேட்டுக்கொள்கிறார்கள்.

  ReplyDelete
 9. படைப்பாளிகளின் கற்பனை பங்குச் சந்தை போல... கீழிருந்து புதிய உச்சத்தைத் தொட்டு பிறகு சடாரென சரியும்! மணிரத்னத்திற்கும் அதே நிலைமை தான்!! பார்ப்போம் அடுத்து ஏதாவது எழுச்சி வருமா என்று...

  ReplyDelete
 10. மௌனராகம் அருமையான படம்! பலமுறை பார்த்துள்ளேன்! சுவையான பகிர்வு! மிஸ்டர் பீன் பார்த்தது இல்லை! போகோ எங்கள் ஊரில் வருவதுஇல்லை!

  ReplyDelete
 11. மௌனராகம் நானும் பார்த்தேன் ஏற்கெனவே பார்த்த உணர்வில்லாமல் அழகாகச் சென்ற படம்.
  சில தண்டனைகள் செய்த எல்லா நல்லவைகளையும் மீறி எப்போதும் காயமாக மனதில் தங்கி விடும்.

  ReplyDelete
 12. "கொட்டிய முடி எப்படி...."... Have you not seen the "implantation" adv in TV?. Implanted hair, ... V care 4 ur HAIR!!!

  ReplyDelete
 13. மௌனராகம்.... - எவர் க்ரீன்... இதுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் என கணக்கே கிடையாது!

  மிஸ்டர் பீன் - தவறாது ரசிக்கும் ஒன்று.

  ReplyDelete
 14. மகளைக் கொன்ற மதவாதி; பணம் கொடுத்தால் விடுதலை/////////////

  ஆமாம்,ஆமாம்.மேல சொன்ன தலைப்பை விட நமக்கு இந்த கருமம்தாம் முக்கியம் பாருங்க.
  இதுக்கும் பலர் கமெண்ட்,வோட்.
  தமிழனா பிறந்ததற்கு உங்களை பார்த்து வெக்க படுகிறேன்.

  சற்றே கோபபடாமல் சிந்த்தித்தால் உண்மை தமிழனாக மாறுவீர்கள்.

  ReplyDelete
 15. ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே :))
  >>
  ஆமா! உங்களுக்கு தெரியாதாண்ணா!! ஹைய்யோ ஹைய்யோ!

  ReplyDelete
 16. மௌனராகம் படத்தை இன்னும் அருடங்கள் கழித்து நம்ம பேர பிள்ளைகள் கூட பார்த்து ரசிக்கலாம். எந்த காலத்துக்கும் பொருந்துற மாதிரி எடுத்திருப்பார் மணி சார்.

  ReplyDelete
 17. ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்' படித்திருக்கிறீர்களா? எனக்கு மௌன ராகம் பார்த்தபோது - குறிப்பாக கிளைமாக்ஸ் - இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது. மணிரத்னத்துக்கும் அந்தப் படம் எடுக்க இந்தக் கதை ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கக் கூடும்.

  ReplyDelete
 18. மெளன ராகம் நானும் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்....

  மிஸ்டர் பீனும் எப்பொழுதும் பார்ப்பதுண்டு...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...