Sunday, February 24, 2013

உணவகம் அறிமுகம்: திருச்சி PLA கிருஷ்ணா இன்


திருச்சி மெயின் பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே உள்ளது PLA கிருஷ்ணா இன் ஹோட்டல். சமீபத்தில் மதிய சாப்பாட்டுக்கு 3 குடும்பங்களாக இங்கு சென்றோம்.

உள்ளே நுழைந்ததும் அட்மாஸ்பியரே அசத்துகிறது. சாப்பாட்டு அறையின் வேலைப்பாடுகள், சேர், சோபா, நமக்கு வைக்கும் செப்பு டம்ளர் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்த நேர்த்தி , அறையின் அழகான லைட்டிங் என அசத்தலாய் இருந்தது. சாப்பாடு அன் லிமிட்டெட். நிச்சயம் இந்த 3 ஸ்டார் ஹோட்டல் அட்மாஸ்பியருக்கு குறைந்தது 200 ரூபா வாங்குவார்கள் என நினைத்தால் 100 ரூபாய் தான் !

முதலில் சப்பாத்தி வருகிறது. அதற்கான குருமா ஏ. ஒன். தேங்காயை தாராளமாய் அரைத்து விட்டிருந்தனர் (வீட்டில் என்றால் ஏன் எவ்வளவு என்போம்; எப்பவோ ஒரு முறை ஹோட்டலில் என்றால் சாப்பிடலாம்) ஏலக்காய் போன்ற சமாச்சாரங்கள் போட்டு குருமா வாசனையாகவும், டேஸ்ட்டியாகவும் இருந்தது. நம் கூட வந்த மக்கள் - ஆள் ஆளுக்கு குருமா இன்னொரு கப் கேட்டு வாங்கி அடித்து கொண்டிருந்தனர்

சாம்பார், ரசம் போன்றவை வழக்கம் போல் தான் எனினும் சாப்பாட்டில் என்னை ரொம்ப கவர்ந்தது மூணு விஷயங்கள்

முதலில் அப்பளம் - பெரிய்ய்ய சைசில் பார்க்கவே காமெடியா இருந்தது

அடுத்து - வற்றல் குழம்பு - அமர்க்களம்.கடைசியாய் - பாயசம் - நாங்கள் சென்ற அன்று பால் பாயசம் ரொம்ப அருமையாய் இருக்க, இன்னொரு முறை பாயசம் மற்றும் அப்பளம் கேட்டு வாங்கி அப்பளத்தை தூளாக்கி பாயசத்தில் போட்டு ஒரு வெட்டு வெட்டினேன்.

அனைத்து ஐட்டம்களும் அன் லிமிட்டெட் தான். அதனால் பசியும், திறமையும் உள்ளவர்கள் வீடு கட்டி அடிக்கலாம்.ஆண்களுக்கு சமமாக நிறைய பெண்களும் இங்கு உணவு பரிமாறுகிறார்கள்.
உணவு பரிமாற குறைந்தது 15 நிமிடமாவது காத்திருக்க வேண்டியுள்ளது அது மட்டுமே மைனஸ்

கார் பார்க்கிங் ஏரியா தாரளமாக இருக்கு. இங்கு லாட்ஜிங்கும் உள்ளது. ரொம்ப டீசண்ட் ஆக இருக்கும் என்றும், தங்கும் இடமாகவும் இது பாப்புலர் ஆகி விட்டதென்றும் கூட வந்த திருச்சி நண்பர்கள் கூறினர்.

திருச்சி பக்கம் சென்றால் நம்பி ஒரு முறை சாப்பிடலாம் !

மேலதிக தகவல்கள் : 

ஹோட்டல் பெயர்: PLA கிருஷ்ணா இன்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்

இணைய முகவரி : http://www.plakrishnainn.com/abouthotel.aspx

21 comments:

 1. வெட்டுங்க.. வெட்டுங்க...

  ReplyDelete
 2. மோகன், ஹோட்டல் இருக்கும் சத்திரம் பஸ் ஸ்டாண்டு, மாயாஸ் ஹோட்டல் அருகில். மத்திய பேருந்து நிலையம் என்றால் ஜங்சன் பேருந்து நிலையத்தை குறிக்கும்.

  ReplyDelete
 3. மோகன், ஹோட்டல் இருக்கும் இடம் சத்திரம் பஸ் ஸ்டாண்டு, மாயாஸ் ஹோட்டல் அருகில். மத்திய பேருந்து நிலையம் என்றால் ஜங்சன் பேருந்து நிலையத்தை குறிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உலக்ஸ் : மத்திய பேருந்து நிலையம் என்பது வெளியூர் மற்றும் உள்ளூர் பேருந்துகள் கிளம்பும் பேருந்து நிலையம் என்பது கரக்ட் தான் ! ஆனால் இந்த ஹோட்டல் மெயின் கார்ட் கேட் அருகே இல்லை. மத்திய பேருந்து நிலையம் அருகில் தான் இருக்கு. அங்கு தான் சாப்பிட்டோம்.

   5 வருஷம் திருச்சியில் சட்ட கல்லூரியில் படிதேன்; அதன் பின்னும் 2-3 வருஷம் அங்கு தான் இருந்தேன். அதனால் திருச்சி விஷயத்தில் அப்படி தப்பு செய்ய வாய்ப்பு இல்லை :)

   மேலும் ஹோட்டல் முகவரி இந்த லிங்கில் தந்திருக்காங்க கவனிங்க

   http://www.plakrishnainn.com/contactus.aspx

   கண்டோமென்ட் என்பது மத்திய பேருந்து நிலையம் ஒட்டிய ரோடு தான்

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 4. எல்லை தாண்டிய அறிமுகம்! :))

  ReplyDelete
 5. செல்லுமிடங்களில் இருக்கும் நல்ல உணவகங்களையும் அறிமுகப்படுத்துவது நல்ல முயற்சி. தொடருங்கள்..

  ReplyDelete
 6. central bus stand இல் இந்த ஹோட்டல் இருப்பதாய் தெரிய வில்லையே நான் திருச்சி தான் இப்போது!

  ReplyDelete
  Replies
  1. மத்திய பேருந்து நிலையம் அருகில் தான் இருக்கு பிரேம். அடுத்த முறை செல்லும் போது கவனியுங்கள்

   ஹோட்டலின் வெப்சைட்டில் ஹோட்டல் முகவரி தந்திருக்காங்க பாருங்க ; அதனை இங்கு தருகிறேன் :

   HOTEL PL.A.KRISHNA INN
   No.8 A,Rockins Road,
   Contonment,
   Trichy - 620 001,

   http://www.plakrishnainn.com/contactus.aspx

   Delete
  2. Mohan, One more PLA Residency Hotel near Chatiram Bustand.

   Delete
 7. பகிர்வுக்கு நன்றி! திருச்சி செல்லும் போது சென்று பார்க்கிறேன்!

  ReplyDelete
 8. Mohankumar - Eager to read reviews of AMMA unavagam started recently. Any info/feedback on AMMA unavagam.

  Ananthanarayanan

  ReplyDelete
 9. திருச்சி வரவேண்டும்போல் இருக்கின்றது. :)

  ReplyDelete
 10. இன்றுதான் மலிவு விலை உனவகங்களும் திறக்கப்பட்டன.

  ReplyDelete
 11. பிரியாணி நகரத்திற்கு என்று வரப்போகிறீர்கள்...?

  ReplyDelete
 12. எங்க ஊரு!

  ReplyDelete
 13. I did stayed in the same hotel last week. Room service very poor! I literally have to fight with them to get even a bath soap.

  ReplyDelete
 14. நீங்க சொன்ன உணவகங்கள் ல துர்கா பவன் தவிர வேற எங்கயும் சாப்பிட்டதில்ல. அதுவும் பார்சல்தான்

  ReplyDelete
 15. Boss nannum angethaan irukken.......nalla irukkum food.

  ReplyDelete
 16. ஓ! திருச்சி வந்திருந்தீங்களா? வீட்டுக்கு வந்திருக்கலாமே....:)

  உணவகம் நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 17. மோகன் குமார் சொன்னது // 5 வருஷம் திருச்சியில் சட்ட கல்லூரியில் படிதேன்; அதன் பின்னும் 2-3 வருஷம் அங்கு தான் இருந்தேன். அதனால் திருச்சி விஷயத்தில் அப்படி தப்பு செய்ய வாய்ப்பு இல்லை :) //

  நமது மோகன்குமார் அவர்கள் சொல்வது சரிதான். அவர் சொல்வது திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ளது PLA KRISHNA INN. என்ற ஹோட்டல்.

  இதே PLA பெயரில் இன்னொரு ஹோட்டல் மத்திய பேருந்து நிலையம் அருகே சற்று தூரத்தில் பெட்ரோல் பங்க்கிற்கு அடுத்து காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்கம் சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலை உள்ள சாலையில் (KPN Parcel Office எதிரில்) உள்ளது. பெயர் PLA RATHNA RESIDENCY . குழப்பத்திற்கு காரணம் பெயர்தான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...