Wednesday, February 6, 2013

வானவில்: அஞ்சலி- கிரிவலம்- ரேஷன் கார்ட் குளறுபடி

ஹெல்த் பக்கம்/ படித்த தகவல்

கேள்வி: புட்டி பால் கொடுக்க துவங்கினால், குழந்தைகளுக்கு தாய் பால் பிடிக்காமல் போய் விடும் என்கிறார்களே? உண்மையா?

டாக்டர் பதில்:

பசுவிடம் இருந்து பால் கறப்பதை பார்த்துள்ளீர்களா முதலில் கன்று குட்டியை மாட்டிடம் விடுவார்கள். கன்று தாய்ப்பசுவின் காம்பில் வாய் வைத்ததும் பால் வந்து விடாது. கொஞ்ச நேரம் உறிஞ்சிய பின்னரே பால் சுரக்கும். அப்படி பால் சுரக்கும் தருணம் கன்றை விலக்கி விட்டு பால் கறப்பார்கள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் அம்மாவின் மார்பில் வாய் வைத்ததுமே பால் வந்து விடாது கொஞ்ச நேரம் உறிஞ்சத்தான் வேண்டும். ஆனால் புட்டி பாலில் குழந்தைக்கு இந்த தேவை இருக்காது. புட்டியை வாயில் வைத்து உறிஞ்சினாலே பால் வந்து விடும் என்பதால் இம்முறையில் பால் குடிப்பது குழந்தைக்கு சுலபமாகி விடும். இப்படி எளிதாய் குடித்து பழகிய பின் தாய்ப்பால் குடிக்க சற்று போராடி பெறுவது குழந்தைக்கு பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. அதனால் தான் புட்டி பால் கொடுத்து பழக்காதீர்கள் என்கிறோம்

மேலும் புட்டி பால் நிப்பிள்கள் குழந்தைக்கு வயிற்று போக்கு தொடங்கி பல பிரச்சனைகள் வர காரணமாகி விடும்

போதுமான பால் குடித்து வரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறையேனும் சிறுநீர் கழிக்கும். அதற்கு குறைவாக கழித்தால் அதற்கு போதிய பால் கிடைக்க வில்லை என்று அர்த்தம்.

கிரிவலம்

ஜனவரி 26 - அன்று நண்பன் பிரேமுடன் கிரிவலம் சென்று வந்தேன். சற்றும் பிளான் செய்யாமல், திடீரென நிகழ்ந்த பயணம் அது . கிரிவலம் பற்றி விரிவாய் ஒரு பதிவு விரைவில் வீடுதிரும்பலில்..

அழகு கார்னர்

அழகு, நடிப்பு, கிளாமர் என அனைத்தும் கலந்து கட்டி அடிக்கும் அம்மணி. சொந்த குரலில் பேசி சொக்க வைக்கும் சுந்தரி. சின்ன தலைவி.. இவ்வார அழகு கார்னரில்..

                            
ரேஷன் கார்டு தக்க வைக்க நடக்கும் போராட்டம்

முன்பெல்லாம் ஒரு முறை ரேஷன் கார்ட் வாங்கினால்,அடுத்த ஐந்து ஆண்டுக்கு அது செல்லுபடியாகும். கருணை மிகு அம்மா ஆட்சியில் வருடா வருடம் அதை புதுப்பிக்க வேண்டும் என்கிறார்கள். புதுப்பிப்பது என்றால் வேறொன்றுமில்லை. மாதா மாதம் பொருட்கள் தந்து விட்டு நம் ரேஷன் கார்டில் பொருட்கள் வாங்கியதை குறிப்பார்கள் அல்லவா? அந்த சீட்டு முன்பு 5 வருடத்துக்கு தருவார்கள். இப்போது ஒவ்வோர் வருடமும் அந்த சீட்டு வாங்க வேண்டும். சரி ..ரேஷன் கார்டில் நிறைய தில்லுமுல்லு நடக்கிறது வருடா வருடம் ஒரு செக் பாயிண்ட் இருப்பது நல்லது என்று நினைத்தால். ஒவ்வொரு வருடமும் அந்த சீட்டு வாங்கி நம் ரேஷன் கார்டை தக்க வைத்து கொள்ள உயிர் போகிறது.

இந்த வருடத்தை எடுத்து கொள்ளுங்கள்: வருட துவக்கத்தில் எதோ ஒரு நாள் அந்த சீட்டு வந்துள்ளது. ஒரே நாளில் அந்த சீட்டு காலி. இனி மறுபடி  சீட்டுவந்தால் தான் என்றனர். கொஞ்ச நாள் கழித்து சென்று பார்த்தால், ரேஷன் கார்ட் வரிசை எண் படி ஒரு லிஸ்ட் போட்டு அந்தந்த நம்பர் உள்ளவர்கள் குறிப்பிட்ட  நாளில் மட்டும் தான் வரணும் என்றனர். நான் இந்த லிஸ்ட்டில் முதல் நாளில் இருந்துள்ளேன். அன்றைக்கு தவற விட்டதால் எல்லாருக்கும் தந்து முடித்து விட்டு அப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள்.

நம் மக்களுக்கு தங்கள் நம்பர் பார்த்து அதன் படி வருவதெல்லாம் புரியவில்லை. ஏராளமான மக்கள் ஒவ்வொரு நாளும் ரேஷன் கார்டுடன் வந்து, உங்களது நம்பர் இன்றைக்கு இல்லை என திரும்பி போகிறார்கள்.

நிற்க பொருள்கள் காலையிலும், ரேஷன் கார்ட் ஸ்லிப் மதியமும் ( 2 to 3.30) தான் தருகிறார்கள். என்னை மாதிரி இருவரும் வேலைக்கு செல்வோர்க்கு காலை தந்தாலாவது ஓரிரு மணி நேரம் பெர்மிஷனில் தாமதமாய் செல்லலாம். மதியம் என்றால் அரை நாள் லீவு போடணும். இப்படி லீவு போட்டி விட்டு எத்தனை முறை அலைவது ? !!

அஜூ நாட்டி அப்டேட் 
ஜோசியக்காரர்கள் பற்றிய சென்ற பதிவின் பின்னூட்டங்களில் எங்கள் வீட்டு கிளிகளான அஜூ மற்றும் நாட்டி நலமா என அன்புடன் விசாரித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி

இருவரும் அட்டகாசமா இருக்காங்க. நாட்டி பிறந்தது முதல் வீட்டில் வளர்பவள் என்பதால் எங்களுடன் எளிதாக ஒட்டி கொண்டாள். அஜூ பயல் ஏழெட்டு மாதம் கழித்து தான் எங்களிடம் வர ஆரம்பித்தான். இப்போது நன்கு வருகிறான். குழந்தை இருக்கும் வீடு மாதிரி குதூகலமா இருக்கு இவர்களுடன் விளையாடுவது. நாங்கள் மூவரும் காலை எழுந்ததும் இவர்களிடம் பேசி, கொஞ்சிவிட்டு தான் அடுத்த வேலைக்கு செல்வோம்.

எங்கள் பெண் பள்ளியில் இந்த வருடம் முழுதும் தொடர்ந்து மூன்று ரேங்கிற்குள் வந்ததால் மெரிட் கார்ட் வாங்குகிறாள். இதற்கு காரணம் கிளிகள் தான் என்று சொல்லி வருகிறாள். எப்படி என்று கேட்டால், படிப்பிற்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய வேண்டுமெனில் டிவி அல்லது கணினி முன் உட்கார்ந்தால் நேரம் போவது தெரியாமல் போய் விடும். அதுவே படிப்புக்கு நடு நடுவே கிளிகளுடன் விளையாடினால், சில நிமிடத்தில் மனசு ரிலாக்ஸ் ஆகிடுது என்கிறாள். லாஜிக் கரக்ட் தான் !

அலுவல் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் இருந்து பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீப் இந்த கிளிகளுடன் விளையாடும் நிமிடங்கள் தான் !


பதிவர் பக்கம் : சங்கர ராமசாமி / கருத்து சுரங்கம்

சங்கர ராமசாமி என்கிற இந்த பதிவரை சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவர் சந்திப்பு நடந்தபோது சந்தித்தேன். சமீபத்தில் தான் இவரது ப்ளாகை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் வந்த நல்ல செய்திகளை தான் " கருத்து சுரங்கம்" என்கிற பெயரில் சேகரித்து/ வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாய் வயதான முதியவர்களை அவர்கள் குழந்தைகள் வைத்து கொள்ளா விடில், அவர்கள் தங்கள் மகன் மீதே கம்பிலேயின்ட் தரலாம் என்று ஒரு சட்டம் வந்தது அல்லவா? மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் என்கிற அந்த சட்டம் பற்றி இங்கு பகிர்ந்துள்ளார். நேரம் இருக்கும் போது வாசியுங்கள்.
             
அய்யாசாமி கார்னர்

சமீபத்தில் மனைவியுடனான சண்டையில் அய்யாசாமிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. வழக்கமாய் திட்டுவது போல தான் அன்றும் மனைவி திட்டினார். பெரும்பாலும் திட்டுகளை வாங்கி கொண்டு குண்டு பிள்ளையாராட்டாம் பேசாமல் இருந்தாலும், எப்போதேனும் ஒரு முறை அரிதாய் ரோஷம் + கோபம் வந்து விடும் நம்ம ஆளுக்கு !

இரவு திட்டு வாங்கி கொண்டு தூங்காமல் உர்ரென்று புரண்டு புரண்டு படுத்தவர், காலை முதல் ஆளாய் எழுந்து வீட்டை விட்டு வெளிநடப்பு செய்தார். ஐந்தரை முதல் எட்டரை வரை கால் போன போக்கில் நடந்து விட்டு, பெண்ணை பள்ளிக்கு விடும் நேரம், மனம் மாறி வீட்டுக்கு வந்து விட்டார். ரோஷம் ஓவராய் வந்து மனுஷன் சன்யாசம் போய்ட்டாரோ என்று பயம் வந்துடுச்சு மிஸஸ். அய்யாசாமிக்கு !.

இந்த அதிரடி நடவடிக்கையால் மனிதருக்கு ரெண்டு நாள் ராஜ உபசாரம் மற்றும் கவனிப்பு. அப்புறம்?

அப்புறம் ? என்ற கேள்வி கேட்டால் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று அர்த்தம். போங்க சார் . போய் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவி கிட்டே திட்டு வாங்குங்க சார் . ... !

45 comments:

 1. "ஐந்தரை முதல் எட்டரை வரை கால் போன போக்கில் நடந்து விட்டு ""  நடந்து போன 3 மணி நேரத்தில்  வீடுதிரும்பும் வரை

  கடந்து போன விசயங்கள்

  விரைவில் வீடுதிரும்பலில் . . .

  அய்யையோ . . .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ..

   இது பற்றி அய்யாசாமியிடம் கேட்டபோது " எழுத தனி மூட் வேணும் அன்னிக்கு மனைவி மேலே கோபமா இருந்தேன்; மனசு முழுக்க சண்டை தான் ஓடுச்சு " என்றார்

   அந்த 3 மணி நேரத்தில் பதிவு ஏதும் அவர் தேத்தலை என தெரியுது நீங்க பயப்படாதீங்க

   Delete
 2. //வானவில்: அஞ்சலி//

  100% சரி!

  ReplyDelete
  Replies
  1. நற நற

   வந்துடுவீங்களே போட்டிக்கு :)

   Delete
 3. ஐந்தரை முதல் எட்டரை வரை கால் போன போக்கில் நடந்து விட்டு ""

  மீண்டும் மீண்டும் வீடு திரும்பல.....

  ReplyDelete
 4. அஞ்சலி என்றதும் டோண்டு ராகவனுக்கு அஞ்சலியோ என்று நினைத்தேன்... காலக் கொடுமை பொருந்திப் போய்விட்டது... டோண்டு பற்றி அறிந்தது இல்லை.... பதிவர் உலகிற்குநான் வந்த பின் கேள்விப்படும் இரண்டாவது மரணம்....

  ReplyDelete
  Replies
  1. தம்பி அவர் மரணம் உன் மற்றும் ஸ்ரீராம் சார் கமண்ட் பார்த்து தான் அறிந்தேன் மிக வருத்தமாய் உள்ளது

   Delete
 5. Anonymous8:23:00 AM

  /// கிரிவலம் பற்றி விரிவாய் ஒரு பதிவு விரைவில் ///

  அய்யய்யோ மறுபடியும் பயணக்கட்டுரையா?

  ReplyDelete
  Replies
  1. கிரிவலம் 1 பதிவு தான் தம்பி; லூஸ்ல விடுங்க :)

   Delete
 6. கிரிவலங்கள் தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார். செய்கிறேன்

   Delete
 7. சுவாரசிய கருத்து பரிமாற்றம் ரேசன்கார்டு புலம்பல் அனைவருக்கும் பொது
  அப்புசாமி என்றது பாக்கியம் ராமசாமி நினைவுக்கு வந்து போனார் ...........அருமை தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. சரளா: பாக்கியம் ராமசாமிக்கு தான் அப்புசாமி

   இவர் அய்யாசாமி :)

   Delete
 8. அன்பின் மோகன் குமார் - ரேசஹன் கார்டுக்கு 4 தடவை அலைந்து இறுதியாக அத்தாளைப் பெற்றேன் - என்ன செய்வது .... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சார்? லீவு போட்டுட்டு அலைய முடியலை சார். நான் இன்னும் வாங்கலை

   Delete
 9. சுவாரசியமான அலசல்.கிளிகளைப்பற்றிய விவரத்திற்கு நன்றி. உங்க பெண் சொல்வது ரொம்ப சரி.டி.வி.,பார்பதோ,கணணி முன் அமர்வதோ ரிலாக்ஸாக இருக்காது.நேரமும் செலவாகிவிடும்.குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ராம்வி சரியா சொன்னீங்க நன்றி

   Delete
 10. அழகுக் கார்னர் - அழகு.

  அஜூ, நாட்டி - அன்பு, ரிலாக்ஸ்.

  அய்யாசாமி - கார்னர் ஹா...ஹா....

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி நன்றி

   Delete


 11. தாய்ப்பாலில் ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்கும். இந்த ஹார்மோன் மிகவும் விலை மதிப்பற்ற ஒரு ஆன்டி ஆக்சிடென்ட்.
  சிசுக்களுக்கு எந்த வித நோயும் பாக்டீரியல் இன்ஃபெக்ஷனும் அணுகவிடாமல் பாதுகாக்கும் இந்த ஹார்மோன்
  குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். குழந்தைக்குத் தேவையான பாலை சுரக்கச்செய்வதும் இந்த ஆக்ஸிடோசின் தான்.

  தாய் தன் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு தகுந்தாற்போல் தான் இந்த ஹார்மோன் லெவலும் இருக்கும். பால் கொடுப்பதை விட்டு விட்டால் இந்த ஹார்மோனும் தாய்ப்பாலில் குறைந்தே இருக்கும். சிசுக்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஏதேனும் காரணமாக விட்டு விட்டு அதனால் புட்டிப்பால் கொடுக்கும்பொழுது பல விதமான பாக்டீரியல்
  இன்ஃபெக்ஷன்ஸ் வருகையிலே குழந்தை வைத்தியர்கள் குழந்தைக்கு இம்யூனிடி இல்லை என்று சொல்லி ஒரு இம்போர்டட் டானிக் சிபாரிசு செய்வார்கள்.

  இந்த இம்போர்டட் டானிக் ந்யூ ஜீலேன்டு மற்றும் ஆஸ்டிரேலியா நாடுகள் மருந்துக்கம்பெனி தயார் செய்பவை.
  ஒரு 100 கிராம் அளவு ரூபாய் 250 . இது என்ன என்று பார்த்தீர்களானால், பசு மாடுகள் கன்றுகளை ஈந்த உடன் அவைகளின் மடிகளிலிருந்து எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட ஆக்ஸிடோசினே ஆகும்.

  இன்னொரு செய்தி. ஒரு தாய்ப்பாலில் இந்த ஆக்ஸிடோசின் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதற்குப்பிறகும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். போதிய அளவு இருக்கும்வரை
  தாய்ப்பாலே கொடுக்கலாம். தாய்க்கு எந்த விதமான பிரச்னையும் ஏற்படாது.

  ஒரு தாய்ப்பசுவுக்கோ இந்த ஆக்சிடோசின் லெவெல் கன்று பிறந்து கிட்டத்தட்ட 4 வருஷங்கள் இருக்கிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. விரிவான விளக்கத்துக்கு நன்றி சுப்பு தாத்தா

   Delete
 12. இன்றைய நிலைமையில் கல்யாணமாகி 40 டு 45 வயது முடிந்த ஆண்களுக்கு " உர் மற்றும் வெளிநடப்பு" ஆகிய இரண்டும் வீட்டு அம்மணிகளை வழிக்கு கொண்டு வரும் சிறந்த முறை என்பதை எங்களுக்கு எல்லாம் சொல்லித்தந்த எங்கள் விஸ்வரூபன் அய்யாசாமிக்கு ஜே .

  ReplyDelete
  Replies
  1. அஜீம்பாஷா :))

   என்ன தான் மரியாதை கிடைத்தாலும் டெம்பரரி தானே நண்பா

   Delete
 13. //காலை முதல் ஆளாய் எழுந்து வீட்டை விட்டு வெளிநடப்பு செய்தார். //

  வெளிநடப்புன்னு முடிவானதுக்கப்புறம், விடியும் வரை காத்திருந்தது ஏன்? :-)))

  ReplyDelete
  Replies
  1. ஏங்க ஏன்?

   அவரு கொஞ்சம் பயந்தவாறு; நைட்டு நாய்ங்க தொந்தரவு வேற.. அதான் :)

   Delete
 14. ஊடலுடன் கூடலும் கலந்த இனிய இல்லறத்துக்கு வாழ்த்துக்கள்! (திருமதி அய்யாசாமியை ஏன் வீணே கலங்கடிக்கிறீர்கள்)

  ReplyDelete
  Replies
  1. "அவங்க ஏன் என்னை கலங்கடிக்கிறாங்க ; அதை கேட்க மாடீன்களா" என்கிறார் அய்யாசாமி :)

   On a Serious note, தங்கள் அக்கறைக்கு நன்றி

   Delete
 15. அஞ்சலி விஷயத்தில் சீனு போலவே நானும் நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம் சார்; செய்தி தெரிந்திருந்தால் அவரை பற்றி ஒரு பத்தி எழுதியிருப்பேன்

   Delete
 16. நண்பர்களே, இன்று காலை 8 மணிக்கெல்லாம் ஒரு மீட்டிங் இருந்தது; காலை பதிவை பப்ளிஷ் செய்து விட்டு, மீட்டிங் சென்று இப்போது தான் திரும்பினேன்

  டோண்டு அவர்களின் மரண செய்தி இந்த பின்னூட்டங்கள் மூலம் தான் அறிகிறேன். ஓரிரு முறை அவரை சந்தித்துள்ளேன். அவருக்கு கான்சர் என்பது தெரியும் ; ஆனால் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிவார் என நினைக்க வில்லை; சென்ற வாரம் கூட ஒரு பதிவு வெளியிட்டார் என நினைக்கிறேன்

  அன்னாருக்கு எமது அஞ்சலி.

  ReplyDelete
 17. இந்த அதிரடி நடவடிக்கையால் மனிதருக்கு ரெண்டு நாள் ராஜ உபசாரம் மற்றும் கவனிப்பு. அப்புறம்?

  அப்புறம் என்ன?

  மீண்டும் திட்டு - எருமை மாட்டு மேல் மழை - சாது மிரளல் - மீண்டும் கவனிப்பு.

  Why blood?
  Same blood!

  ReplyDelete
  Replies
  1. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா

   Delete
  2. Seeni : Welcome to the club :))

   Delete
 18. தாய்ப்பால் பற்றிய விளக்கம் சிறப்பு! மற்றவை வழக்கம் போல ஜோர்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் நன்றி

   Delete
 19. அய்யாசாமி.... ம்ம்ம் வீட்டுக்கு வீடு வாசப்படி! :))

  அஜு - நாட்டி தகவலுக்கு - நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் : நீங்களுமா? நீங்க வீரர்னு நினைச்சேன் !

   Delete
 20. ஜனவரி 26 - அன்று நண்பன் பிரேமுடன் கிரிவலம் சென்று வந்தேன். சற்றும் பிளான் செய்யாமல், திடீரென நிகழ்ந்த பயணம் அது . கிரிவலம் பற்றி விரிவாய் ஒரு பதிவு விரைவில் வீடுதிரும்பலில்..
  >>
  இம்புட்டு தூரம் வந்துட்டு இந்த சகோதரியை மறந்துட்டீங்க பார்த்தீங்களா?!

  ReplyDelete
  Replies
  1. வர்றோம் வரோம் வர வேண்டிய நேரத்தில் கரக்டா வருவோம்

   Delete
 21. போங்க சார் . போய் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவி கிட்டே திட்டு வாங்குங்க சார் . ... !
  >>
  திட்டு வாங்குறதுக்காகவே கல்யாணம் கட்டிக்கனுமா?!

  ReplyDelete
 22. வானவில் வழக்கம் போல் அருமை.

  மகளுக்கு வாழ்த்துகள். அஜூ நாட்டியால் ரேங்க் வாங்க முடிகிறது..நல்ல விஷயம்.

  புட்டி பால் கொடுக்க ஆரம்பித்தால் மாற்றுவது ரொம்ப கடினம்.

  எல்லார் வீட்டிலும் நடப்பது தான்....:) மிஸஸ் அய்யாசாமி தான் ரொம்ப பாவம்...:))

  ReplyDelete
  Replies
  1. //மகளுக்கு வாழ்த்துகள். அஜூ நாட்டியால் ரேங்க் வாங்க முடிகிறது..நல்ல விஷயம்.//

   நன்றி ரோஷினி அம்மா
   **

   Delete
 23. அஜு,நாட்டியை பார்ப்பதற்காகவே உங்கள் வீட்டுக்கு ஒரு முறை வரவேண்டும்.

  ReplyDelete
 24. அய்யாசாமி கார்னர்(ட்)
  // வழக்கமாய் திட்டுவது போல தான் அன்றும் மனைவி திட்டினார். பெரும்பாலும் திட்டுகளை வாங்கி கொண்டு //

  'வீட்டுக்கு வீடு'( திரும்பல்) பாத்தா .... சரவணன்- மீனாட்சி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...