Sunday, March 10, 2013

பாலாவின் பரதேசி பாடல்கள்- எப்படி?

ழக்கமாய் தன் படங்களுக்கு நிறையவே நேரம் எடுத்து கொள்ளும் பாலாவிடமிருந்து சற்று விரைவாகவே ஒரு படம் - இதற்கு முன் அடுத்தடுத்த வருடங்களில் பாலா படம் வந்த மாதிரி நினைவில்லை. சென்ற வருடம் அவன் இவனுக்கு பிறகு - இவ்வருடம் பரதேசி

Bala in Paradesi Movie Stills - Image 6 of 8

பாலாவின் எல்லா படங்கள் போல இதற்கும் எதிர்ப்பார்ப்பு நிறையவே இருக்கிறது. ஹீரோ அதர்வா, தான் நடித்த ஓரிரு படங்களில் நிச்சயம் நல்ல நடிப்பை தந்திருந்தார். அவருக்குக்காகவும், ஹீரோயின்களில் ஒருவரான தன்ஷிகாவிற்காகவும் தான் இப்படத்தை எதிர்நோக்கியுள்ளேன்

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் அனைத்து பாடல் களையும் எழுதியது வைரமுத்து

பாடல்கள் வெளிவந்து பல மாதம் ஆகிடுச்சு. பாடல்கள் எப்படி இருக்கன்னு பாக்கலாமா?
*************

யாத்தே (ஓர் மிருகம்)

பாடியவர்: பிரசன்னா, பிரகதி குருப்ரசாத்
பாடல்: வைரமுத்து

பாடியவர்கள் பேரை கவனித்தீர்களா? குறிப்பாக பெண் குரல்.. பிரகதி குருப்ரசாத் .. யார் என்று ஊகிக்க முடிகிறதா? சூப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதி போட்டி வரை வந்து ரன்னர் ஆனாரே அதே பிரகதி தான்.பாடல் துவங்குவதே பிரகதியின் ஆலாபனையில் தான்.

"ஓர் மிருகம் - ஓர் மிருகம் தன்னை அடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் - ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை "

என்று கொத்தடிமை வாழ்க்கை பற்றி பேசுகிறது பாட்டு. பிரகதி பாட துவங்கும் போது ஏறக்குறைய அழுத படியே தான் பாடுகிறார்

"வாழ்வே பழுதாச்சே " என்றும் " ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே " என்றும் செல்லும் சோகப்பாட்டு. என்றாலும் மெட்டு ஓரளவு கவர்கிறது. இப்போதைக்கு ஓரளவு ஓகே என்னும் அளவில் உள்ள பாட்டு இது !

தன்னை தானே

பாடியவர்: கானா பாலா
பாடல்: வைரமுத்து 

கானா பாலா பாடிய ஜாலியான பாட்டு. ஜீசஸ் பற்றிய பாட்டாக செல்கிறது. இது மாதிரி பாட்டுகள் குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே பிடிக்க கூடும். அதிலும் பாட்டிலேயே " அல்லேலூயா" என்று பாடுவதால் கிறித்துவர்களிலும் கூட அந்த பிரிவினருக்கு மட்டுமே பிடிக்கும் வாய்ப்பு உண்டு

*************
செந்நீர் தானா
பாடியவர்: கங்கை அமரன், பிரியா ஹிமேஷ்
பாடல்: வைரமுத்து

கங்கை அமரன் குரலை கேட்கும் போது இளைய ராஜா குரல் மாதிரியே இருக்கிறது. என்னடா இது - வைரமுத்து பாட்டை ராஜா எப்படி பாடினார் என்று பார்த்தால் - அப்புறம் தான் கங்கை அமரன் என்று தெரிய வருகிறது ( ஆமா - கங்கை அமரனுக்கு வைரமுத்துவுடன் சண்டை இல்லையா? )

பாலா படம் ஒவ்வொன்றிலும் இப்படி ஒரு பாட்டு இருக்கும். சேதுவில் " எங்கே செல்லும் இந்த பாதை" மாதிரி சோகமாகவும் மெதுவாகவும் பயணிக்கும் ஒரு பாட்டு. அனேகமா மாண்டேஜ் பாடலாக வரலாம்.

ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு நாம்
வெளியானோம் பூனைக்கு வாழ்க்கைப்பட்டு
பாம்புக்கு பசி வந்ததே - ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே

வரிகளை உற்று கவனித்தால் ஈழ போராட்டமும், அங்கு வீடிழந்து நிற்கும் மக்களும் நினைவுக்கு வருகிறது !

*************

ஓ செங்காடே

பாடியவர்: மது பால கிருஷ்ணன்
பாடல்: வைரமுத்து

கேட்கும் போது செந்நீர் தானா பாட்டே மறுபடி ஒலிக்கிறதோ என்று தோன்ற வைக்கிறது. கிட்ட தட்ட அதே மாதிரி பாட்டு.

விளையாத காட்டை விட்டு, விளையாண்ட வீட்டை விட்டு
வெள்ளந்தியா வெய்யிலில் ஜனம் வெளியேறுதே 


என வீடிழந்து நிற்கும் மக்கள் துயரத்தை தான் இந்த பாட்டும் பேசுகிறது. சரணம் தான் சற்று வேறு மாதிரி ஒலிக்கிறது. மீண்டும் ஒரே மாதிரி பாட்டு எனும்போது ஈர்க்காமல் போகிறது

*************

அவத்த பையா

பாடியவர்கள்: யாசின், வந்தனா சீனிவாசன்
பாடல்: வைரமுத்து 


ஆல்பத்தில் சோகமான பாடல்களை விடுத்து - ஜாலியான ஒரே டூயட். அதிலும் கூட

வெண்ணி தண்ணி காய வச்சு உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில உன் காஞ்ச முகத்த வச்சு தேய்க்கவா

என்று தான் எழுதுகிறார் வைரமுத்து. மற்ற பாடல்களில் நிறைய சோகம் பிழிந்ததால் ஓரளவு ரசிக்க முடிகிறது இப்பாடலை.

***
மொத்தத்தில்: சோகம் ரொம்பவே அதிகம் உள்ள ஆல்பம் பெரிய அளவில் கவராமல் போகிறது. படமாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன் .. பார்ப்போம்.!

****
டிஸ்கி: மார்ச் 16 சனிக்கிழமை மாலை  வீடுதிரும்பலில் பரதேசி சினிமா விமர்சனம் வெளியாகும்

4 comments:

 1. இன்னும் கேட்கவில்லை. கேட்க முயற்சிக்கிறேன். :)))

  ReplyDelete
 2. ஒருமுறை மட்டுமே கேட்டேன். மீண்டும் கேட்கத் தோன்றவில்லை. ஒருவேளை படம் பார்த்தபின் தோன்றுமோ என்னவோ....

  ReplyDelete
 3. முதல் முறை கேட்கும்போதே கவர்கின்ற பாடல் அரிதாகத்தான் உள்ளது. பலமுறை கேட்டபின்தான் நன்றாக இருக்கும் இந்த படப பாடல்களும் அப்படித்தான் போலும்.

  ReplyDelete
 4. ஓரிரு பாடல்களை ரேடியோவில் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...