Monday, March 4, 2013

தொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்சி - போக்கிரி

நிலம் வாங்கலியோ நிலம்

சனிக்கிழமை காலை டிவி போட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்ன திரை நடிகர்கள் வந்து கெஞ்சி கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா போதும், போனை எடுத்து மத்த விபரங்களை கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவி யில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிறே நேரமே போலிருக்கு! நம்ம நம்பரை பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் " அப்ரூவ்டு நிலமா? " " ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு " - இது ஏமாத்து வேலை என தெரியும் - எனவே " பேன்க் லோன் கிடைக்குமா ? " என அடுத்து கேட்க " கிடைக்காது சார்" என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும் இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர் என்றோ ஒரு நாள் அவர்கள் விற்க போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

கிச்சன் சூப்பர் ஸ்டார் வின்னர் 

விஜய் டிவியில் பல வாரம் நடந்த சமையல் நிகழ்ச்சி - கிச்சன் சூப்பர் ஸ்டார். வீட்டம்மா சமையல் சமாசாரம் பார்க்கும் ஆர்வத்தில் இருக்க , நானோ அதில் வரும் சபர்ணா எனும்  அம்மணியை காணும் ஆர்வத்தில் இருப்பேன்.

சபர்ணா 
நிகழ்ச்சி எப்பவாவது தான் பார்ப்பது வழக்கம். 2 சமையல் எக்ஸ்பர்ட்கள் ஜட்ஜாய் இருப்பது சரி. நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் நடிகர் சுரேஷும் ஜட்ஜ் வேலை பார்க்கிறார்.அதான் பெரும் உறுத்தல். குறிப்பாய் இறுதி போட்டியில் பூஜா மற்றும் மெட்ரோ ப்ரியா இருவருக்கிடையே தான் போட்டி. இருவரில் யார் டைட்டில் ஜெயிப்பது எனும் நிலையில் இரு சமையல் எக்ஸ்பர்ட்களும் ஆளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க சுரேஷ் தான் ஓட்டு போட்டு " பூஜா ஜெயித்தார் " அறிவித்தார்.

நிற்க. மேற்படி பூஜா ரொம்ப சுமார் தான். டிவியில் இது வரை பல போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எப்பவும் சிறு பரிசு கூட ஜெயித்ததில்லை என்றும், இம்முறை டைட்டில் ஜெயித்தேன் என்றும் ஒரு பாட்டம் (நிசமாய்) அழுதார் !

நம்ம ஆளு சபர்ணா பைனலுக்கே வரலை என நானே கடுப்பில் இருந்தேன் .. ஹூம் !

பிளாஷ்பேக் ஆனந்த கீதனின் வார்த்தை விளையாட்டு

சன் டிவி துவங்கிய பொழுதில் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கீதன். இவரும் மாலா, ரபி பெர்னாட், ரமேஷ் பிரபா, ரெகோ போன்றோர் தான் அப்போது பிரபல தொகுப்பாளர்கள் (கால ஓட்டத்தில் இவர்களில் ஒருவரும் இப்போது சன் டிவி யில் இல்லை )

ஒரு நிமிடம் பேசும் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் ஆனந்த கீதன் எப்படியும் 1 நிமிடம் பேச விடாமல் மக்களை அவுட் ஆக்கிடுவார்.

அலுவலக அல்லது வீட்டு கெட் டூகெதர்களில் நாங்கள் எளிதில் நடத்தும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

நீங்க யாரு ? இப்படிக்கு சரவணன்

சூப்பர் சிங்கர் பார்க்க 9 மணிக்கு டிவி போட்டால் , சரவணன் - மீனாட்சி தொடர் தான் நடக்கும் கடைசி 5 நிமிஷம் பார்த்தாலே ( கொஞ்சம் கஷ்டம் தான் !) கதை முழுக்க புரிஞ்சிடும்.

சரவணனுக்கு பல்பு மாட்டும்போது ஷாக் அடிச்சு கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு, தலையில் ஆப்பரேஷன் (!!??) எல்லாம் ஆகிடுது. இதை வச்சு ரெண்டு மூணு நாள் ஓட்டிட்டு, அப்புறம் சரவணன் கண்ணு முழிச்சதை காட்டினாங்க. நினைவு சரியா இருக்கோ இல்லியோ என்கிற மாதிரி சந்தேகம் வர வச்சு, " மாமா .. மச்சான் " என எல்லாரையும் சரியா அடையாளம் சொல்லும் சரவணன், மனைவி மீனாட்சியை மட்டும் பார்த்துட்டு " நீங்க யாரு ? " என கேட்குறாரு பாருங்க... சான்சே இல்லை. பார்த்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்

நல்லா கண்டு புடிக்குறாங்கய்யா மேட்டரு. .. இனிமே சரவணனுக்கு நினைவு வராமல் நடக்கும் குழப்பங்கள், ரெண்டு வருஷம் கழிச்சு நினைவு மீள்வது என சில பல வருஷம் ஓட்டுவாங்க ! நடக்கட்டும் ! நடக்கட்டும் !

சன் டிவி சூர்ய வணக்கத்தில் ராஜா - பாரதி பாஸ்கர் உரையாடல்

சன் டிவி காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு சூர்ய வணக்கம் என்று புதிதாய் பெயர் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன் பேசும் தொகுப்பாளினி சற்று அழகாய் இருப்பார் என்பதால் எப்பவாவது சற்று பார்ப்பது வழக்கம் :) அப்படி ஒரு முறை நிகழ்ச்சி பார்க்கும் போது சமையல் அறை வேலைகள் பற்றி ராஜா - பாரதி பாஸ்கர் உரையாடல் காண முடிந்தது.

பாரதி பாஸ்கர் சொன்ன சில விஷயங்கள் சிந்திக்க வேண்டியவை:

* சமையல் என்பது பெண்ணின் வேலை என்று தான் இன்னமும் தள்ளி விடுகிறோம். ஒவ்வொரு நாளும் 3 வேளை சமையலும், அதற்கான திட்டமிடலும் பெண்ணுக்கு பெரும் சுமை. எப்போதேனும் ஒரு முறையாவது ஆண் சமைத்தால் பெண்ணுக்கு பெரும் relief ஆக இருக்கும்

* மாலை 8 மணிக்கு மனைவி ஒரு வேளை வீட்டுக்கு வந்தால், அதற்கு முன் வரும் கணவரும், குழந்தைகளும் - அவள் வந்து தான் சமையல் செய்யணும் என காத்திருக்கிறார்கள். எவ்வளவு சோர்வாக வந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் உடனே அடுப்படிக்கு செல்லவேண்டியிருக்கிறது

* மறு நாள் சமையல் பற்றி முதல் நாளே திட்டமிட வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேவையான எல்லா பொருளுமே வாங்கி, தேவைப்பட்டால் நறுக்கி வைத்து கொள்ள முடியும்.

* சமையல் முழுதும் செய்யா விடினும் ஆண்கள் மற்றும் வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்தால் அதுவே பெண்களுக்கு பெரும் ஆறுதலாய் இருக்கும். வேலைகளை பேசி கொண்டே சேர்ந்து செய்யும் போது நிச்சயம் கணவன்- மனைவிக்குள் அன்னியோன்னியம் வருகிறது

ராஜா ஆண்கள் பக்கத்தை பேசுகிறேன் என தொடர்ந்து ஒரு புறம் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தது, நல்ல விஷயத்தை சற்று டைவர்ட் செய்தது என்றாலும், பாரதி பாஸ்கர் விடாப்பிடியாக தான் சொல்ல வந்தது முழுதும் அழகாய் சொல்லி முடித்தார் !

பார்த்த படம் - போக்கிரி

போக்கிரி படம் வந்தபோது " வழக்கமான மசாலா, நம்ப முடியாத சண்டைகள், திருப்பங்கள்" என எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை ! பின் மெதுவாக தான் வடிவேலு காமெடி ஹிட் ஆனது. வடிவேலுவின் பெஸ்ட் காமெடி பார்ட்களில் ஒன்று போக்கிரி (வின்னர், தொட்டால் பூ மலரும் போன்றவை இன்னும் சில)

ஞாயிறு வேறு படம் ஏதும் இல்லாததால் பொறுமையாய் போக்கிரி பார்த்து கொண்டிருந்தோம். இளைய தளபதி "எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிப்பதை தான் " இயல்பான நடிப்பு" என்று வைத்திருக்கிறார் போலும். அதிலும் போலிஸ் என்று தெரியும் போது அவரை யூனிபார்மில் காட்டுவார் பாருங்கள். அப்போது விழுந்து புரண்டு சிரித்தேன்.

வீட்டம்மா விஜய் ரசிகை ஆயிற்றே .. " பாரு ..சிரிப்பு போலிஸ் .. நடந்து வர்றாரு " என்று கிண்டல் அடிக்க அடுத்த நிமிடமே கிளைமாக்ஸ் சண்டையில் யூனிபார்மில் முழு சண்டையும் போட்டார். இப்ப வீட்டம்மா " பாத்தீங்களா சிரிப்பு போலிஸ்னு சொன்னீங்க எப்புடி? "

மிக டைட் ஆன போலிஸ் யூனிபார்மில் அவர் சண்டை போடும் போது எப்ப அந்த பேன்ட் கிழியுமோ என்று தான் நமக்கு பயமாய் இருந்தது. இதை சொன்னால் வீட்டமாவிடம் அடுத்த திட்டு விழும் என கப் சிப் ஆனேன் !

************
அண்மை பதிவுகள் : 


21 comments:

 1. பாரதி பாஸ்கர் உரையாடலில் சில நல்ல விசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது...

  உங்க ஆளு பாவம் தான்...

  நீங்களும் போக்கிரி தான் என்பது வீட்டாம்மாவுக்கு தெரியும் தானே...!

  ReplyDelete
  Replies
  1. //உங்க ஆளு பாவம் தான்//

   ஆஹா நீங்களும் பாத்திருப்பீங்க போலருக்கே :)

   Delete
 2. சபர்ணாவை விடுங்க அண்ணாச்சி சந்தியாவை(ஆந்திரா பொண்ணு) பத்தி ஒன்னுமே சொல்லலையே!! :(

  ReplyDelete
  Replies
  1. அம்மணி உங்க பேவரிட்டா? ரைட்டு..

   சபர்ணா முன்னாடி எனக்கு மத்த எல்லாரும் கலங்கலா தான் தெரிஞ்சாங்க பாஸ்

   Delete
 3. பின்ன எப்படின்னே இந்த t.v நடிகைக வந்து விளம்பர படுத்துறங்க மக்களை மாட்டி விடுறதுள்ள அவ்வளோ ஆசையா அவங்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. காசு குடுக்குறதுக்கு விளம்பரத்தில் பேசிட்டு போறாங்க. நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் நண்பா

   Delete
 4. //...மாமா .. மச்சான் " என எல்லாரையும் சரியா அடையாளம் சொல்லும் சரவணன், மனைவி மீனாட்சியை மட்டும் பார்த்துட்டு " நீங்க யாரு ? " என கேட்குறாரு பாருங்க... சான்சே இல்லை. பார்த்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம் //

  காமெடி சீரியலா. ?
  இன்னிலேருந்து பாத்துற வேண்டியது தான்

  ReplyDelete
  Replies
  1. அட பாவி.. இனிமே ஒரே அழுகை தான். பீ கேர் புல் . Take care :)

   Delete
 5. credit / debit card வாங்கியாச்சா ,,, இல்லையா ..?

  ReplyDelete
  Replies
  1. டெபிட் கார்ட் எப்பவும் இருக்கு சார். அது நம்ம காசை செலவு செய்வது தானே? க்ரெடிட் கார்ட் வாங்கவே இல்லை :)

   தங்கள் நியாபக சக்திக்கு ஒரு பாராட்டு :)

   Delete
 6. தொல்லைக்காட்சி ரசனையாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 7. //மேற்படி பூஜா ரொம்ப சுமார் தான்.// 'மேற்படி' படத்துல சின்ன வயசு பூஜா ரெம்ப க்யூட், பார்த்ததில்லையோ?

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சார்? நமக்கு தெரியாத விஷயம் இப்படி நிறைய இருக்கு போல :)

   Delete
 8. நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விசயங்களை தனித்து ஒரு பதிவு போட்டால் விழிப்பு உணர்வுடன் செயல் பட வாய்ப்பாக இருக்கும்.அவர்களிடம் கேக்க வேண்டிய கேள்விகள் என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே தனி பதிவா எழுதிருக்கேன் நண்பா; இந்த லிங்கில் படிங்க

   http://veeduthirumbal.blogspot.com/2012/04/blog-post_19.html

   Delete
 9. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

  ReplyDelete
  Replies
  1. மிக மகிழ்ச்சி சார்; வாசிக்கிறேன்

   Delete
 10. அந்த விளம்பரங்கள் மீதும் முதலாளிங்க வழக்கு தொடுக்க முடியாதா ணா....
  விஐயை பிடிக்காதவர்களுக்கும் விஐய் படம் பிடிக்கும் எண்பது நிருபிக்கபட்டுளளது

  ReplyDelete
 11. போனமாதம் நீதானே பொன்வசந்தம் சந்தியா, அதற்கு அடுத்து கும்கி பார்வதி மேனன், போனவாரம் சரவண்ன் மீனாட்சி தொடர்ல வர்ற மீனாட்சி. இந்த வாரம் கிச்சன் ஸ்டார் சபர்ணா இப்படி மனம் திறந்து ஜொள்ளிடறீங்க. உண்மையில் நீங்க தைரியசாலிதான் மோகன் சார். உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. (போட்டோகளைப்போட்டு சிலசமயம் அசத்திடுறிங்க)


  ReplyDelete
 12. சபர்ணாவா..?? அந்த போட்டியில் எனக்கு கடுப்பேத்துபவர் என்றால் அது சபர்ணா தான். சீரியலில் மட்டுமல்லாது நிஜத்திலும் நடிப்பார்; முன்னுக்குப் பின் முரணாகப் பேசி குழம்பவைப்பார். ப்ரியா ஜெயித்திருக்க வேண்டியது.. மொக்க காரணம் சொல்லி பூஜாக்கு கொடுத்துட்டாங்க..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...