Saturday, March 9, 2013

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - ஒரு பார்வை

திருநெல்வேலியின் புகழ் பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில் சுற்றளவில் மிக பெரியது.

படம்: இணையத்திலிருந்து 

நெல்லையப்பர் கோவில் ஏராளமான குளங்களுடன் பெரிய அளவில் முன்பு இருந்திருக்கிறது. ஆனால் கால போக்கில் அந்த குளங்கள் தூர்க்கப்பட்டு, அவற்றை யார் யாரோ ஆக்கிரமித்து விட்டனர். அந்த இடங்களில் எல்லாம் இப்போது கடைகள் வந்து விட்டன.

உள்ளே நுழையும் போது தலைக்கு மேலே இருக்கும் சிற்பங்கள் அடல்ட்ஸ் ஒன்லி வகையை சேர்ந்தவை. அந்த காலத்தில் கணவன் - மனைவி கோவிலுக்கு வந்து விட்டு, இவற்றை பார்த்தால் "அந்த மூட்" வந்துடுமாம் !

வெளி பிரகாரத்தில் மட்டும் தான் இத்தகைய சிலைகள். உள்ளே முழுக்க முழுக்க அனைவரும் காண கூடிய அளவில் தான் இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து 

ஒரு யானை இன்னொரு யானையை கூட்டி செல்லும் காட்சி, சிவனுக்கு கண் தந்த கண்ணப்ப நாயனார் சிலை, மல்யுத்த வீரன் சில ஆகியவை நம்மை ஈர்த்தன.

படம்: இணையத்திலிருந்து 

நாயக்கர் ஒரு காலத்தில் இந்த பகுதியை ஆண்டபோது, கடவுள் சிலைகளிலும் தங்கள் கடவுளை முன்னிறுத்தி சில மாறுதல்கள் செய்து விட்டனர் என சொல்லப்படுகிறது.

கோவிலில் நெல்லையப்பர் அருகிலிருக்கும் நெல்லை கோவிந்தர் படுத்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.  சற்று உயரம் குறைவானவர்.

பிள்ளை தாண்டு என்பது இங்குள்ள ஒரு வித்யாசமான நம்பிக்கை - குழந்தை இல்லாத பெண்கள் இங்குள்ள வெளியே பூட்டப்பட்ட பொல்லா பிள்ளையார் சந்நிதியுள்ளே மிக மெலிதான கம்பிகளின் ஊடே புகுந்து இன்னொரு பக்கமாய் வெளி வரவேண்டுமாம். அப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். இப்படி பலருக்கும் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த இடத்தையும், கம்பிகளையும் பார்த்தால் இதற்குள் எப்படி புகுந்து வந்திருப்பார்கள் என ஆச்சரியமாக இருந்தது. உள்ளே புகந்து வரும் பெண்ணின் பெற்றோர் அல்லது மாமனார் - மாமியார் உடனிருந்து உள்ளே பிடித்து தள்ளி விடுவார்களாம் !

கோவில் தஞ்சை பெரிய கோவிலை விடவும் அளவில் பெரியது என்றும், கட்டி முடித்து 1860 ஆண்டுகள் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்

இங்குள்ள சகஸ்ரலிங்கம் - ஒரு பெரிய லிங்கத்தினுள் 1008 சிறிய லிங்கங்கள் கொண்டது. (காஞ்சியில் ஒரு கோவிலிலும் இதே போல் பார்த்த நினைவு )
இங்குள்ள பார்வதி அம்மன் பெயர் : காந்திமதி அம்மன். இந்த ஏரியாவில் உள்ள பெண்களில் பலருக்கும் இப்பெயர் உண்டு.

படம்: இணையத்திலிருந்து 
கோவிலின் உள்ளேயே ஒரு அழகான கோவில் குளம் உள்ளது. அது அற்புதமாக பராமரிக்கப்படுகிறது.

மீன் வளத்துறை குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இங்கு நிறைய மீன்களை விட்டு, வளர்த்து வருகிறது

அடுத்து நாம் சென்ற இடம் - தாமிர சபை. சமீபத்தில் தான் 70 லட்சம் செலவில் renovate செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிவன் நடனம் புரிந்த பல்வேறு "சபை" கள் உள்ளன.
சிதம்பரம் - தங்க சபை
மதுரை - வெள்ளி சபை
திருவலங்காடு - இரத்தின சபை
குற்றாலம் - சித்திர சபை

இந்த வரிசையில் நெல்லையில் உள்ளது தாமிர சபை. இந்த ஒவ்வொரு சபைகளிலும் சிவன் நடனம் புரிந்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வோர் பலர். இங்கு பாசிடிவ் வைப்ரேஷன் உணர முடியும் என்கிறார்கள்

அம்மனுக்கு ஏராளமான நகைகள் உண்டு போலும். அது இருக்கும் Safe vault வெளியே எந்நேரமும் ஒரு போலிஸ் காவல் காக்கிறார்.

படம்: இணையத்திலிருந்து 

1000 கால் மண்டபம் ஒன்று நம்மை ஈர்க்கிறது. அங்கு எப்போதும் ஏதாவது கலாட்சேபம் நடக்குமாம். குறிப்பாக திருநெல்வேலி சைவ பிள்ளை மார் வகுப்பினருக்கு இக்கோவில் மிக முக்கியமான ஒன்று என்றும், அவர்கள் அடிக்கடி இங்கு கூடி கலாட்சேபம் செய்வார்கள் என்றும் கூறினார்கள்.
கோவிலுக்குள் இருக்கும் மற்றொரு இடம் - நந்தவனம். இங்கு ஏராள மரங்கள் உடன் - கோவிலுக்கு தேவையான பாலுக்காக சில மாடுகள் வளர்க்கப்படுகின்றன

கோவில் முழுதும் சுற்றி விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு வருகிறோம். எல்லா சிவன் கோவிலிலும் சண்டிகேஸ்வரர் இருப்பார். கை தட்டியோ, விரல்களால் சுண்டியோ நம் வருகையை தெரிய படுத்துவோம் இல்லையா .. அவரே தான் ! கோவிலை விட்டு செல்லும்போது பிரசாதம் தவிர வேறு ஏதும் இங்கிருந்து எடுத்து செல்ல வில்லை என தெரிய படுத்தவே இவர் முன் கைகளை தட்டி விட்டு செல்கிறோம் என்றார் உடன் வந்த நம் நண்பர்.

இந்த கோவிலை அழகாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்ள நெல்லை நகர பொது மக்களே உதவுகிறார்கள். ஒவ்வொரு நான்காவது ஞாயிறன்றும் 400 முதல் 500 பொது மக்கள் கோவிலுக்கு வந்திருந்து கோவில் முழுமையாய் கழுவி விடுகிறார்கள். கோவில் வேலை செய்த திருப்தி அவர்களுக்கும் கிடைத்த மாதிரி ஆயிற்று. கோவிலும் சுத்தமாய் உள்ளது.

இத்தகைய பெரிய கோவில்களில் பின் தான் எத்தனை பேரின் உழைப்பும் தியாகமும் அந்த கோவிலை சுற்றி பல்வேறு கதைகளும் உள்ளன !

கோவிலை தினம் ஒரு முறை முழுதாய் சுற்றி வந்தால் வேறு உடற்பயிற்சியே தேவையில்லை !

நெல்லை சென்றால் அவசியம் சென்று வாருங்கள். நெல்லையப்பரை தரிசிக்க !

********
தொடர்புடைய பதிவுகள் 
சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

32 comments:

 1. ஏன் இணையத்திலிருந்து...தாங்கள் எப்பவும் வீடியோ எடுப்பீர்களே..

  ReplyDelete
  Replies
  1. கோவிலில் புகைப்படம் மற்றும் வீடியோ அனுமதி இல்லை

   Delete
 2. http://www.kovaineram.com/2011/08/blog-post_13.html

  நான் போனபோது எடுத்த போட்டோக்கள்..

  ReplyDelete
  Replies
  1. அட நீங்க எப்படி போட்டோ எடுத்தீங்க? பாக்குறேன்

   Delete
 3. சிறப்பான கோவில்... பலமுறை சென்றதுண்டு...

  சுற்றினால் உடற்பயிற்சியே தேவையில்லை என்பது உண்மை தான்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 4. கெமெரா சார்ஜ் ஒன்னு கட்டிட்டு படங்கள் எடுத்திருக்கேனே!

  http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-19.html

  ReplyDelete
  Replies
  1. அப்படியா டீச்சர்? தகவலுக்கு நன்றி. உங்கள் சுட்டியையும் பார்க்கிறேன்

   Delete
 5. படங்கள் இணையத்திலிருந்து எடுத்திருந்தாலும் கவர்ந்தன. இதே ஆயிரங்கால் மண்டபம் உட்பட கோவிலை நம் முத்துச்சரம் ராமலக்ஷ்மி அழகிய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இந்தக் கோவில் இதுவரை பார்த்ததில்லை பார்க்கும் ஆவல் இருக்கிறது. நெல்லையின் ஆதிகாலப் பெயர் வேணுவனம். சுற்றி மூங்கில் காடுகள் இருந்ததால் அந்தப் பெயர் வழங்கலாச்சு. இந்தப் பதிவைப் பார்த்ததும் பதிவர் 'ஸ்ரீ' நினைவு வந்து விட்டது. அவர் பக்கம் சென்று நாட்களாகி விட்டன சென்று பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அடடா ராமலட்சுமி சில வருடங்களுக்கு முன் எழுதிருக்கனும்; சரியே நினைவு கூர்ந்தீர்கள் நன்றி

   Delete
 6. அற்புதமான பகிர்வு!. எனக்கு நிறைய கோவில்கள் சுற்றி பார்க்கும் ஆவல், அனுபவம் உண்டு..( I'm a Christian) சமீபத்தில் கூட நவ திருப்பதி ஸ்தலங்களை கண்டு வந்தேன், ஆனால் கோவிலை விட்டு செல்லும்போது பிரசாதம் தவிர வேறு ஏதும் இங்கிருந்து எடுத்து செல்ல வில்லை என தெரிய படுத்தவே இவர் (சண்டிகேஸ்வரர்) முன் கைகளை தட்டி விட்டு செல்கிறோம் என்பது புதிய செய்தி..

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமா; நன்றி மகிழ்ச்சி

   Delete

 7. ஆம். பணம் கட்டி அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு படம் எடுக்கலாம்.

  நன்றி ஸ்ரீராம்:).

  எனது பதிவு இங்கே: இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்
  . நீரோடு தெப்பக்குளமும், மேலும் சில படங்களும் இங்கே

  இணையத்திலிருந்து பகிர்ந்திருக்கும் படங்கள் எல்லாம் அருமை. முழுமையாகச் சுற்றிப் பார்த்து இரசிக்க ஒரு நாள் போதாது:).

  சண்டிகேஸ்வரர் முன் மெதுவாக மூன்று முறை கைதட்டியோ விரல்களால் சொடுக்கிட்டோ வணங்கிச் செல்வார்கள், நாம் கோவிலுக்கு வந்து சென்ற செய்தியையும், நமது பிரார்த்தனையையும் சிவனிடம் சிபாரிசு செய்யக் கோரி. உங்கள் நண்பர் சொன்னது போலக் கேள்விப்பட்டதில்லை. அதிலும் சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பவர் ஆகையால் சத்தமாகத் தட்டக்கூடாதென்பார்கள். சிறுகுழந்தைகள் விளையாட்டாகச் சத்தமாகத் தட்டுகையில் கண்டிப்பார்கள் பெரியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாசிக்கிறேன் மேடம் நன்றி

   Delete
 8. புலன்களில் கண்ணுக்கு இனிமையான படங்களை அளித்தமைக்கு நன்றி. காதுக்கு இனிய இசை தூண்களை பற்றி சொல்லி இருக்கலாமே? வாய்க்கு இனிய இருட்டு கடை அல்வா பற்றியும் இணைத்து இருக்கலாம்? நான் திருநெல்வேலி காரன் இல்லிங்கோ ! மனதிற்கு இனிய கட்டுரை அள்ளிதமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஹரி: அல்வா தனி பதிவா வருது; with video :)

   Delete
 9. கோவிலின் உள்ளேயே ஒரு அழகான கோவில் குளம் உள்ளது. அது அற்புதமாக பராமரிக்கப்படுகிறது.

  மீன் வளத்துறை குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இங்கு நிறைய மீன்களை விட்டு, வளர்த்து வருகிறது//// குளம் பக்தர்களுக்காக இல்லையா? நெல்லையப்பர் கோயில் பராமரிப்பு சரி இல்லை என்பதே என் கருத்து. கோயிலை நேரில் கண்டபோது இந்த படத்தில் கண்ட எந்த அழகையும் காண இயலவில்லை. பணம் தான் பல வழிகளில் பறிக்கின்றனர். சமீபத்தில் தோழர்களுடன் இரண்டு முறை வெளிநாட்டு தமிழக சகோதர்களுடன் சென்று வந்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? கருத்துக்கு நன்றி ஜோசபின்

   Delete
 10. 2004ல் இந்த கோவிலுக்குச் சென்றோம். நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரோஷினி அம்மா

   Delete
 11. //கோவிலில் முக்கிய கடவுளான நெல்லை கோவிந்தர் படுத்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார். மூல கடவுள் - சற்று உயரம் குறைவானவர்.//
  இந்தக் கோவிலை பார்த்ததில்லை. இது சிவத்தலம் அல்லவா? இக் கோவிலின் முக்கியக் கடவுள் நெல்லை கோவிந்தர்தானா?

  ReplyDelete
  Replies
  1. அடடா செம கேள்வி கேட்டீங்க. நெல்லை நண்பனிடம் கேட்டுட்டு மறுபடி சொல்கிறேன்

   Delete
 12. நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் இக்கோவிலுக்கு. சிறப்பான கோவில். நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட் நன்றி மகிழ்ச்சி

   Delete
 13. அண்ணாச்சி! பதிவும் அதோட சேர்ந்த பட பதிவும் ரொம்ப அருமை! எங்க ஊருக்கு ஒரு தடவை போயிட்டு வந்தாப்ல இருக்குல்லா! :)

  ReplyDelete
  Replies
  1. அட அட அட தக்குடு உங்க நெல்லை தமிழை கேட்க சொகமா இருக்குதுங்க

   Delete
 14. நல்லதொரு கலைப்பொக்கிஷம் இந்தக்கோயில். காசு கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சுன்னா மூலவரை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் படம் புடிச்சுக்கலாம்.

  ReplyDelete
 15. ஐயா இது சிவஸ்தலம். நெல்லைஅப்பர் சுயம்பு. சிவா பக்தர் ஒருவர் தினமும் நெல்லை உலர்த்தி குத்தி சிவனுக்கு நிவேதனம் செய்து விட்டே தான் உண்பார் ஒரு நல்ல மழை . தன பக்தன் பட்டினி கிடக்கக் கூடாதென்று நெல்லுக்கு மட்டும் மழை பெய்யாமல் வெயில் அடித்துக் வேலி காத்த சிவன்.

  Nellai vasi

  ReplyDelete
 16. கோவிந்தர் நீலி அப்பருக்குப் பக்கத்தில் இருக்கும் சந்நிதானம்

  காந்திமதி அம்மன் இருக்கும் பொது அங்கே மூலவர் கோவிந்தராக இருக்க முடியுமா ?

  பல சிவத் தலங்களில் மைத்துனனுக்கு தன அருகில் சிவன் இடம்கொடுப்பதுண்டு. உதாரணம் சிதம்பரம்  காந்திமதி அம்மன் நடையை பொறுமையாகப் பார்த்து இருந்தால் பல ஆளுயர சிலைகளைப் பார்த்து இருக்கலாம்

  மேலும் கோவில் தல வரலாறு முதல் பல ஓவியங்களைக் காணலாம்

  ReplyDelete
 17. //அந்த காலத்தில் கணவன் - மனைவி கோவிலுக்கு வந்து விட்டு, இவற்றை பார்த்தால் "அந்த மூட்" வந்துடுமாம் !// இது நீங்கள் எங்கும் படித்ததா இல்லை யாரேனும் கூறியதா என்று தெரியவில்லை... நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அத்தனை கோவில்களிலும் சிலைகள் இது போல் தான் செதுக்கப்பட்டிருக்கும்.... இதுவரை இப்படி ஒருவிசயம் நான் கேள்விப்பட்டதில்லை

  // ஒரு பெரிய லிங்கத்தினுள் 1008 சிறிய லிங்கங்கள் கொண்டது. // தென்காசி பெரிய கோவிலிலும் உண்டு

  ReplyDelete
 18. நான் திருநெல்வேலிகாரன் தான், நாங்கள் சிறுவயதில் அடிக்கடி செல்லும் கோவில் இது. ஆனால் இப்பொழுது எதற்க்கெடுத்தாலும் பணம் பணம் என்று பிச்சை எடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வருபவர்களை விட அங்கயே இருக்கும் எங்களுக்கு தான் மிகவும் கேவலமாக இருக்கிறது. இப்பொழுது கோவிலுக்குள் சென்றாலே தியேட்டர் உள்ளே செல்ல கவுன்டரில் நிற்பார்களே அது தான் ஞாகபகம் வருகிறது. இந்த கொடுமை பத்தாதென்று ஜோடியாக வரும் சில படிக்க போகாமல் ஊர் சுற்றி திரியும் நாய்கள் செய்யும் அட்டுழியம் தாங்க முடியவில்லை(ஒரு வேல அதற்கும் சேர்த்து காசு வாங்குகிறார்களோ) அங்கு வேலை செய்யும் ஒருவரும் அதை கண்டுகொள்வதே இல்லை. இன்னும் பல.....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...