Wednesday, March 20, 2013

வானவில் - கருணாஸ் பேச்சு - தேசிய விருது - தமன்னா

கருணாஸ் பேட்டி

கல்கியில் கருணாஸ் உதிர்த்த சில முத்துக்களை வாசியுங்கள் :

ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஜால்ரா போட்டு தலையாட்டினால் இன்னிக்கு நான் தான் நம்பர் 1 காமெடியன். ஆனா நான் அப்படி கிடையாது. என் வீட்டு உலையில் போடுற அரிசிக்கு யார் கையையும் நான் எதிர்பார்க்கலை

(அப்ப சந்தானம் ஜால்ரா அடிச்சு தான் நம்பர் 1 ஆனாரா? சந்தானத்தை லட்சகணக்கா மக்கள் ரசிக்கிறாங்களே ..அது எப்படியாம்?))

பவர் ஸ்டார் சீரியஸா காமெடி பண்றார். பாலும் கள்ளும் ஒரே கலரில் இருக்கும் . அதுக்காக ரெண்டும் ஒண்ணாக முடியுமா?

இன்னைக்கு ராஜா, ரகுமான், யுவன், ஜி. வி. பிரகாஷ் தவிர வேறு யார் இசையிலும் ஜீவன் இல்லை

( ஹாரிஸ் ஜெயராஜ், இமான், அனிருத் இவங்க தொடர்ந்து ஹிட் பாட்டு தர்றாங்களே .. அவங்க எல்லாம் அப்ப வேஸ்ட்டா ?)

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டே கல் எறிவது என்பது இது தான் ! என்னத்தை சாதித்து விட்டோம் என கருணாஸ் இப்படி பேசுகிறாரோ தெரிய வில்லை ! சனியன் அவர் நாக்கில் உட்கார்ந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறது. இப்படியே பேசினால் இனி அவரே படம் எடுத்து, அவரே ஹீரோவாக  நடித்து அவரே பார்க்க வேண்டியது தான் !

சென்னை ஸ்பெஷல் - சிகப்பு விளக்கு ஏரியா

சென்னை வேளச்சேரியில் இருந்து இறங்கி பள்ளிக்கரணை செல்லும் சாலையில் தினம் இரவு 8 மணி முதல் நான்கைந்து பெண்கள் முழு மேக் அப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். கவனித்தால் அரவாணிகள் என்று தெரியும். சற்று தாமதமாய் வரும்போது ஒருவர் மட்டுமே நிற்பதையும் கண்டேன். காரணம் நமது டியூப் லைட் புத்திக்கு சற்று தாமதமாக தான் புரிந்தது.

முதலில் வருவதென்னவோ நால்வர் தான். (ஒரு நாள் ஆட்டோவில் நால்வர் ஒரே நேரத்தில் வந்து இறங்குவதை கண்டேன்).

அப்புறம் ஒவ்வொருவராக கஸ்டமர் கிடைத்து போய் விட சில நேரம் ஒருவர் மட்டும் நிற்கிறார் போலும் !

இந்த இடத்திலிருந்து காமாட்சி நினைவு மருத்துவமனை மற்றும்  போலிஸ் பீட் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது !

அழகு கார்னர்அனுஷ்காவிற்கு முன் மிக சில காலம் நம் தலைவியாக இருந்தவர். நடிக்க தெரிந்த நடிகை. ரொம்ப அதிக வெள்ளை என்பதே ஒரு குறை என நினைக்கிறேன் ! வட நாட்டுக்காரர் எனினும் தமிழை என்ன அழகாய் பேசுகிறார் இந்த பெண் ! வெரி டேலண்டட் கேர்ள் !

கவுண்டர் பிறந்தநாள் ஸ்பெஷல்

தல கவுண்டமணிக்கு 2 நாள் முன்பு பிறந்த நாள்... பதிவர் நண்பர் ஒருவர் ஸ்பெஷல் பதிவு வெளியிட்டிருந்தது பார்த்து அறிந்தேன். கவுண்டரின் பல காமெடிகள் மறக்காது என்றாலும், எனக்கு மிக பிடித்த சின்னத்தம்பி காமெடி இங்கு பகிர்கிறேன்:
போஸ்டர்/ அய்யாசாமி கார்னர்
தேசிய விருதுகள் 

இந்த வருட தேசிய விருதுகளில் வழக்கு எண் தமிழில் சிறந்த படமாகவும் (சரியான தேர்வு), விஸ்வரூபதுக்கு சிறந்த நடனத்துக்கும் (!!!!), பரதேசி சிறந்த ஆடை வடிவமைப்புக்கும் விருதுகள் பெற்றுள்ளது. இது சென்ற வருட இறுதி வரை உள்ள கணக்கெனினும் பரதேசி அதற்கு முன் சென்சார் ஆகி விட்டது என்கிறார்கள். பரதேசிக்கு விருதுகள் சற்று குறைவாக கிடைத்ததாகவே எண்ணுகிறேன்.

ஒவ்வொரு திங்களன்றும் எனது பெண் பள்ளியிலிருந்து வந்ததும் சனி ஞாயிறு விடுமுறையில் புது ரிலீஸ் பார்த்த நண்பர்கள் படம் பற்றி என்ன கூறினர் என்று சொல்வாள்.ஆட்டோவில் வரும் சிறுவர் சிறுமியரும், வகுப்பில் உள்ள சிலரும் "பரதேசி பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது" என்று சொன்னார்களாம். பள்ளி மாணவ மாணவியருக்கு இந்த சோக படம் எப்படி பிடித்தது என ஆச்சரியமாகவே உள்ளது !

அமாவசையும் பாட்டி முகமும்

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் வட இந்திய நண்பரை ஒரு முக்கிய நிகழ்வுக்கு அழைக்க, " இன்று அமாவாசை; இன்று வேண்டாம்; நாளை செல்லலாம் " என்றார். " என்ன இப்படி சொல்றீங்க. சென்னையில் அமாவாசையில் தான் நல்ல காரியம் ஆரம்பிப்பாங்க. அதற்கடுத்த நாள் பிரதமை அல்லது பாட்டி முகம் என நல்ல காரியம் செய்ய மாட்டாங்க. நீங்க பிரதமையில் ஆரம்பிக்கலாம் என சொல்றீங்க " என சொல்ல, "வட இந்தியாவில் அமாவாசையில் எந்த காரியமும் செய்ய மாட்டோம்; அதற்குடுத்த நாள் தான் நல்ல காரியம் துவங்குவோம் " என்றார்.

ஆச்சரியமாய் இருந்தது ! நாம் ப்ரதமையை நல்ல நாள் இல்லை என ஒதுக்குகிறோம். ஆனால் வடக்கில் அதே நாளில் நல்ல காரியம் துவங்கி நன்றாகவே நடந்தேறுகிறது ! எல்லாம் மனதில் + நம்பிக்கையில் தான் இருக்கிறது பாருங்கள் !

நல்ல நாள் என்றும் கெட்ட நாள் என்றும் எதுவுமில்லை. நல்ல விஷயம் செய்ய எல்லா நாளும் நல்ல நாளே !
****************
சும்மா தகவலுக்கு ....


அண்மை பதிவுகள் : 

ஈழ பிரச்சனை-கலைஞர் நிலை- விகடன் கட்டுரை

பரதேசி - தமிழில் ஒரு உலக சினிமா - சல்யூட் பாலா !

எதிர் நீச்சல் - பட்டை கிளப்பும் பாட்டுகள் ஆடியோவுடன் ! அசத்தும் அனிருத் !

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்

******

24 comments:

 1. () --> அசத்தல்...

  அதிக வெள்ளை - அதிக ஆபத்து

  கவுண்டர் ஸ்பெஷல் என்றும் ஸ்பெஷல்...

  ReplyDelete
 2. கருணாஸ் - அரை குடம்....விட்டுத்தள்ளுங்க.

  தேசிய விருதுகள் - Kahaaniக்காக வித்யா பாலனுக்கு கிடைக்கும்னு நினைச்சேன் :(

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாம் ! அவரை எப்படி மிஸ் செஞ்சாங்க ?

   Delete
 3. விஸ்வரூபதுக்கு சிறந்த நடனத்துக்கும் (!!!!),

  என்ன சொல்ல வர்றீங்க .....

  ReplyDelete
  Replies
  1. வடிவேலன்: விஸ்வரூபத்தில் பல டிபார்ட்மெண்ட்கள் நன்கிருந்தது. ஆனாலும் சென்ற ஆண்டு வந்த அனைத்து இந்திய படங்களை விட " உனை காணாத" பாடலின் நடனம் மிக சிறந்தது என தோன்றவில்லை.

   Delete
 4. Anonymous11:27:00 AM

  1,00,00,00,00,000 சூரியனின் தக தக நிறம் கொண்ட தமன்னா ஸ்டில் போட்ட மோகன்குமார் வாழ்க வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தமன்னா சென்னை ரசிகர் மன்ற தலைவர் அவர்களே !

   Delete
 5. ///சமீபத்தில் சென்னையில் வசிக்கும் வட இந்திய நண்பரை ஒரு முக்கிய நிகழ்வுக்கு அழைக்க, " இன்று அமாவாசை; இன்று வேண்டாம்; நாளை செல்லலாம் " என்றார். " என்ன இப்படி சொல்றீங்க. சென்னையில் அமாவாசையில் தான் நல்ல காரியம் ஆரம்பிப்பாங்க. அதற்கடுத்த நாள் பிரதமை அல்லது பாட்டி முகம் என நல்ல காரியம் செய்ய மாட்டாங்க. நீங்க பிரதமையில் ஆரம்பிக்கலாம் என சொல்றீங்க " என சொல்ல, "வட இந்தியாவில் அமாவாசையில் எந்த காரியமும் செய்ய மாட்டோம்; அதற்குடுத்த நாள் தான் நல்ல காரியம் துவங்குவோம் " என்றார்.

  ஆச்சரியமாய் இருந்தது ! நாம் ப்ரதமையை நல்ல நாள் இல்லை என ஒதுக்குகிறோம். ஆனால் வடக்கில் அதே நாளில் நல்ல காரியம் துவங்கி நன்றாகவே நடந்தேறுகிறது ! எல்லாம் மனதில் + நம்பிக்கையில் தான் இருக்கிறது பாருங்கள் !//

  இந்தியா முழுவதும் இந்துக்கள் என்ற டப்பா இங்க தான் டான்ஸ் ஆடுது...எங்க அம்மாவிற்கு முதலில் இதை சொல்லி அவர்களை கேள்வி கேக்கணும்.

  தீபாவளியும் அப்படியே...! 130,000 லட்சம் வருடங்கள் பழமையானது என்பதும் அப்படியே..!

  பாட்டி முகமும்?? இதை பாட்டிமை என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்.


  ReplyDelete
  Replies
  1. பாட்டி முகம், பிரதமை, பாட்டிம்மை இப்படி பல பேர்கள் இருக்கு நம்பள்கி

   Delete
 6. அமாவசை தகவல் தெரியாதது நன்றி

  ReplyDelete
  Replies

  1. நன்றி மலர்பாலன்

   Delete
 7. அம்மாவாசைத்தகவல் புதிது பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete

  2. நன்றி தனிமரம்

   Delete
 8. நல்லதொரு பகிர்வு! நல்ல காரியம் செய்ய அமாவாசையும் உதவாது பாட்டிமை என்ற பிரதமையும் உதவாது. அமாவாசை பிதுர்க்களின் தினம்! (முன்னோர்கள்) எனவே அவர்களுக்கு தர்ப்பணம் முதலியன செய்து வழிபட வேண்டும். அவர்களை வழிபடாமல் வேறெந்த நல்ல காரியங்களும் செய்யக் கூடாது. பிரதமை சோதிட சாஸ்திரப்படி நல்ல காரியங்களுக்கு உகந்தது அல்ல! ஆனால் இப்போது நிறை அமாவாசை என்று அமாவாசையில் சுபகாரியங்கள் சிலர் செய்கின்றனர். இது தவறான நம்பிக்கை!

  ReplyDelete
  Replies
  1. தகவல் + கருத்துக்கு நன்றி சுரேஷ்

   Delete
 9. நல்ல நாள் என்றும் கெட்ட நாள் என்றும் எதுவுமில்லை. நல்ல விஷயம் செய்ய எல்லா நாளும் நல்ல நாளே --

  appo saturday-la kalayanam enga ellam nadakkudhu?? first neenga andha days-la nalla nigalchi arrange pannuveengala??

  chumma rhyming-a punch sollanum-nu solladhenga :)

  ReplyDelete
  Replies
  1. சுவீட்: ரொம்ப நாளா உங்களை எங்கும் காணுமே ? நல்லாருக்கீங்களா?

   என் வரை நான் நல்ல நேரம் பார்ப்பதில்லை; சட்ட கல்லூரியில் 5 வருடமும் வேண்டுமென்றே ராகு காலம், எமகண்டம், பிரதமையில் தான் தேர்வு கட்டணம் செலுத்துவேன். இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை கல்லூரியில் முதல் ரேன்க் வாங்கினேன். (முதல் வருடம் மட்டும் இரண்டாம் ரேன்க்)

   திருமணம் ஆன பின் குடும்ப விஷயங்களில் அப்படி கண்டிப்பாய் இருக்க முடிவதில்லை என்பதையும் ஒப்பு கொள்ள தான் வேண்டும்

   Delete
 10. அண்ணே சென்னை ஸ்பெஷல் - சிகப்பு விளக்கு ஏரியா ரோட்ல இதெல்லாம் பார்த்துகிட்டே போவிங்களா

  ReplyDelete
  Replies
  1. ஆபிஸ் விட்டு தினம் வீட்டுக்கு வர்ற வழி தம்பி ; அதான் பார்க்க வேண்டியிருக்கு :)

   Delete
 11. பிஜு மகராஜின் கதக் நடனம் முகபாவனையுடன் கமல் அருமையாகவே படைத்திருந்தார்.
  அது சரி, போட்டியில் கலந்து கொண்ட 36 படங்களையும் சார் பார்த்து விட்டீர்களா?

  ReplyDelete
 12. எல்லா நாளும் நல்ல நாளே.

  அழகுக்கானர் அழகு.

  ReplyDelete
 13. nalam.. Hope you too

  first rank edutthadhu-kku reason KARMA

  :)

  tc

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...