Tuesday, March 26, 2013

தொல்லை காட்சி - ராதிகா சரத்குமார் - ஆசை- விசு -தகேஷிஸ் கேசில்

சீரியல் பக்கம் ஆசை - விஜய் டிவி 

தெரியாத்தனமா ஒரே ஒரு நாள் இந்த சீரியலை பாத்து தொலைச்சிட்டேன். வழக்கமா மாமியார், மருமகள் பத்தி தான் பேசுவாங்க. இதில் எதோ ஆபிஸ் பத்தி மட்டுமே வருதேன்னு தான் பார்த்தேன்.

எந்த ஆபிசில் இப்படி எந்த வேலையும் பார்க்காம பேசுவாங்களோ தெரியலை ! 8 மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு எங்கு சார் இருப்பாங்க? எப்பவாவது அலுவலகத்தில் வேலை செய்தவரை விட்டு திரைக்கதை ,வசனம் எழுத சொல்லலாம். அதிலும் அந்த டயலாக் எல்லாம் சுத்த டிராமாத்தனம் !

டிவி என்கிற மீடியாவை எவ்வளவு அழகா உபயோகிக்கலாம் ! அதவும்... ஆபிஸ் அங்குள்ள பாலிடிக்ஸ் என்பது மிக பெரிய கதைக்களம். அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்காங்க தயவு செய்து பாத்துடாதீங்க.. இந்த சீரியலை !

மக்கள் டிவியில் திருக்குறள் 

மக்கள் டிவி சத்தமின்றி பல நல்ல நிகழ்சிகள் தந்து வருகிறது. அவற்றில் ஒன்று... திருக்குறள் குறித்த நிகழ்ச்சி.

தொலை பேசியில் நிலையத்துக்கு போன் செய்ய, நிகழ்ச்சி தொகுப்பாளினி (யப்பா. இதை சொல்லவே கஷ்டமா இருக்கு ! எப்படி தான் முழுக்க தமிழில் பேசுறாங்களோ !) ஒரு திருக்குறளின் ஆரம்ப வார்த்தையும் நடுவில் வரும் சில வார்த்தைகளும் சொல்லி கண்டு பிடிக்க சொல்கிறார். " வேணும்னா வீட்டில் இருக்கவங்க கிட்டே கேளுங்க" என சொன்னாலும் கூட, மக்கள் பெரும்பாலும் திருக்குறள் வரிகளை தவறாகவே சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேட்கும் அனைத்தும் மிக பிரபல குறள்களே !

லைன் கிடைச்சா ஒரு தடவை பேசி பாக்கணும்னு அப்பப்ப தோணும்..அப்புறம் அப்படியே மறந்துடும் !

தகேஷிஸ் கேசில் 

போகோ டிவி யில் வரும் நிகழ்ச்சியில் ஒன்று தகேஷிஸ் கேசில்ரொம்ப வினோதமான விளையாட்டுகள் நடத்துவார்கள். சறுக்கு பாறையில் ஓடுவது, உயரமான வழுக்கும் இடத்தில் கயிறு பிடித்து கொண்டு தொங்குவது.. இப்படி பல விளையாட்டுகள். பங்கேற்கும் மக்கள் விழுவதும், தோற்பதும் தான் பார்க்க காமெடியாய் இருக்கும்.

எல்லா விளையாட்டிலும் பெரும்பாலானோர் தோற்க ஒருவரே ஜெயிப்பர். மொழி தான் பேஜாரா இருக்கும். சைனீசோ, வேறு என்ன கருமமோ.. புலம்பி தள்ளுவாங்க ஒண்ணும் புரியாது.

குட்டி பசங்க ஆர்வமாய் பார்த்தாலும் நாமும் கொஞ்ச நேரம் சேர்ந்து சிரிக்க கூடிய நிகழ்ச்சி இது !

விசுவின் மக்கள் அரங்கம் 

சன்னில் பல வருடங்கள் வந்த அரட்டை அரங்கம் அப்புறம் சில வருடங்களாய் ஜெயாவில் தொடர்கிறது.

சன்னில் வரும்போது அடியேன் 3 முறை அரட்டை அரங்கத்தில் பேசியுள்ளேன். இதற்கான செலக்ஷன் - 3 நாள் நடக்கும். நீங்கள் 3 அல்லது 4 நாள் ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு, கியூவில் காத்திருந்து பேசணும். ஒவ்வொரு ரவுண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து கடைசியில் பேசும்போது வீடியோ எடுத்து அதை விசுவே பார்த்து பின் டிவியில் யார் பேசணும் என தேர்வு செய்வார். நான்காம் நாள் தான் ஷூட்டிங் !

சன்னில் வரும்போது நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருந்த விசு இப்போது சேர் போட்டு அமர்ந்து விட்டார். நிகழ்ச்சி ஏனோ முன்பளவு சுவாரஸ்யம் இல்லை.

இருந்தாலும் எப்போதேனும் சானல் மாற்றும் போது சிலர் நன்கு பேசினால் பார்க்கிற வழக்கம். இவ்வாரம் மிலிட்டரியில் பணியாற்றிய ஒருவர் தங்கள் பணி எத்தனை கடினமானது என்றும், மிலிட்டரி காரர்கள் வாழ்க்கையையும் நெகிழ்ச்சியுடன் பேசினார். திரும்ப வந்த பிறகு சமூகம் தங்களை அதிகம் மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை பதிவு செய்தார். ஆயினும் நம்பிக்கை குறையாத இவர் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதாகவும், வாழ்க்கையில் வெல்ல முக்கிய தேவை அவரவர் "attitude " தான் என்றும் பேசியது நிறைவு

நீயா நானா - பாரம்பரிய உணவு Vs மாடர்ன் உணவு

இவ்வார நீயா நானாவில் பாரம்பரிய உணவு Vs மாடர்ன் உணவு - அவ்வளவு சுவாரஸ்யமாய் செல்லவில்லை. ஆயினும் ஸ்பெஷல் கெஸ்ட் வந்த பின் சற்று சூடு பிடித்தது. இத்தகைய உணவு சாப்பிடுவதன் பின் உள்ள அரசியல் (!!??) பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தனர்

பாரம்பரிய உணவை ஆதரித்து பேசிய மருத்துவர், உணவு சம்பந்தமாய் பல வரலாற்று தகவல்கள் மட்டுமல்லாது இன்றைய நிலையும் அருமையாய் பேசினார். குறிப்பாக " அமெரிக்காவில் மாடர்ன் உணவு தான் சாப்பிடுகிறார்கள் அங்கு நூறாண்டு வாழ வில்லையா? 'என கேட்கப்பட, " ஆம். ஆனால் அமெரிக்கா தான் உலகில் புற்று நோயில் நம்பர் ஒன் தெரியுமா? அதற்கு மாடர்ன் உணவு மட்டுமே காரணம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு காரணம் தான் என்றார் அவர்.

எந்தெந்த உணவு கெடுதல், எது நல்லது என்று நீண்ட டிஸ்கஷன் ஹவுஸ் பாசுக்கு மிக பிடித்தது, ஒரு லெவலுக்கு மேல் நான் தான் - கொர் .....கொர் !

சென்னையில் ஒரு நாள் ஆடியோ ரிலீஸ் 

ராதிகா சரத் குமார் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீடு - சென்னையில் ஒரு நாள். மலையாளத்தில் டிராபிக் என்று வந்த சக்கை போடு போட்ட படத்தின் ரீ மேக். (டிராபிக் விமர்சனம்: இங்கு)

ஆடியோ ரிலீசில் சரத்குமார், தனுஷ், சேரன் என பலரும் ஜாலியாக பேசினர். குறிப்பாக சரத் குமார் - தன் மனைவி ராதிகாவை செமையாக நக்கல் அடித்தார். அவரும் அதை ஸ்போர்டிவ் ஆக எடுத்து சிரித்து கொண்டிருந்தார் (வீட்டுக்கு போனதும் பாடி பில்டரின் பாடி என்ன ஆனதோ?)

தனுஷ் கூட ராதிகா மாதிரியே பேசி கலாய்த்தார். சேரன் டிரைவர் ஆக நடிப்பது தான் சற்று பயமா இருக்கு. சீனிவாசன் அற்புதமாக நடித்த பாத்திரத்தை இவர் எவ்ளோ டிராமா செய்ய போறாரோ?

சின்ன தலைவி ரம்யா நம்பீசன் ஒரிஜனலில் ஒரு சிக்கலான பாத்திரத்தில் நடித்தார். தமிழில் அவரை நடிக்க வைக்காததை வன்மையாக கண்டிக்கிறோம். (நடிக்கா விட்டாலும் , ஆடியோ ரிலீசுக்கு அந்த குயில் வந்து அழகாய் கூவியது ஹீ ஹீ )

11 comments:

 1. /// 3 முறை அரட்டை அரங்கத்தில் பேசியுள்ளேன். ///

  முந்தைய பகிர்வுகள் எதுவும் இருக்கிறதா...? லிங்க் தரவும்...

  ReplyDelete
  Replies
  1. Dhana unga kadamai unarchikku alavae illayaaa

   Delete
 2. ரொம்ப அவசரவசரமா போஸ்ட் பண்ணியிருக்கீங்க மோகன்.

  // (டிராபிக் விமர்சனம்: இங்கு) //

  லிங்க் குடுக்கல பாருங்க.

  //சீரியல் பக்கம் ஆசை - விஜய் டிவி //

  ஆஃபீஸ் சீரியலைத்தானே சொல்றீங்க?

  சனிக்கிழமை மதியம் இந்த நாடகத்தை மறு ஒளிபரப்பு பண்ணபோது, அப்பா, "இந்த சீரியல் ஐ.டி. இண்டஸ்ட்ரி வெச்சு எடுத்திருக்காங்கப்பா, கொஞ்ச நேரம் பாரு" என்றார்.

  ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னால் பார்க்கமுடியவில்லை. "ப்பா, செம செயற்கையா இருக்குப்பா" என்று சொல்லி எழுந்துவிட்டேன்.

  ReplyDelete
 3. நீங்க சொல்லி சொல்லியே நானும் ரம்யா நம்பீசன் விசிறி ஆயிட்டேன். மலையாலதில் ஒரு பாட்டு படியிருகிறாங்க பாருங்க சூப்பர் .

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. படம் எப்டின்னு தெரில்ல பார்போம்

   Delete
 5. Raghu: Thanks. Have given the link now.

  ReplyDelete
 6. சீரியல் நமக்கு ஒத்து வராது. அரட்டைஅரங்கம் முன்பு சிலதடவை பார்த்தது இப்பொழுது இல்லை.

  இன்று உங்கள் தேங்காய்பூ படத்தை சுட்டுக்கொண்டேன். :)) நன்றி.

  ReplyDelete
 7. மோகன்,

  சென்னையில் ஒரு நாள் படத்தின் ட்ரைலர் சற்று நன்றாக இருந்தாலும், சரத்குமார் கொடுக்கும் அலப்பறை தாங்க முடியவில்லை. 'Its going to be a tough journey ahead' என்று மொக்கையாக ஆங்கிலம் பேசும்போது, ஒரிஜினல் படத்தைக் கடித்துத் துப்பியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 8. office யூத்துகளுக்கான சீரியல் அன்பரே

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...