Wednesday, August 12, 2015

எங்க வீட்டு தோட்டம்- பிறந்தநாள் பதிவு +படங்கள்

ன்னிக்கு பொறந்த நாள். வாழ்த்துவோர் வாழ்த்தலாம். திட்டுவோர் திட்டலாம் ! உங்களிடம் நேரடியே இனி பர்த்டே பாய் பேசுவார்.....
****
ல்லாருக்கும் வணக்கம். எங்கள் வீட்டு தோட்டத்தை எப்போதும் நம்ம வீட்டம்மா Photo எடுத்து வைப்பார். இந்த தோட்டம் அவரின் முக்கிய ஹாபி.   இந்த பதிவில் சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்கு முன் எடுத்த படங்கள் கூட இருக்கும் ! (90 % கடந்த ஓரிரு மாதத்தில் எடுத்தது தான் !)

தோட்டம், செடி, பூ இதில் ஆர்வம் உள்ளவங்களுக்கு மட்டுமே இந்த பதிவு. மற்றவர்கள் இப்பவே எஸ் ஆகிடலாம்.

முதலில் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எங்கள் வீட்டில் உள்ளது மிக குறைந்த இடம். அதில் தான் இந்த செடிகள் மற்றும் பூந்தொட்டிகள் வைத்துள்ளோம். படங்களை பார்த்து பெரிய தோட்டம் என நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள்.. !  சரி வாங்க எங்க தோட்டத்துக்கு போவோம் !

வாசலுக்கருகே உள்ள சிறிய Lawn
                      மிக அரிதாகவே இந்த வேலை செய்வேன் !

கிச்சன் சுவர் மீது படர்ந்து கிடக்கும் கொடி

நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் உள்ளது. அனைவருக்கும் பொதுவாய் நுழையும் இடத்தில் உள்ளது இந்த சிறு மரம்


********
வித விதமான ரோஜாக்குளும், செம்பருத்திகளும்   :






காம்பவுண்டு சுவர் மீது வலை அடித்து அதில் காய்க்கும் பாகற்காய்




வீட்டில் உள்ள வெற்றிலை கொடி. செம காரமா இருக்கு என பலரும் பறித்து செல்கின்றனர்

*********
இட்லி பூ செடியில் நாட்டி உட்கார்ந்துருக்கா. மாலை நேரம் என் பெண் அவளை இங்கு கொண்டு வந்து விடுவா. நாட்டி இங்கிருந்து பறந்து போக நினைப்பதில்லை
செடியில் அமர்ந்துள்ள நாட்டி
இன்னும் சில பூந்தொட்டிகள்:







இந்த மரம் இப்போது இல்லை. பட்டு போயிடுச்சு வெட்டி விட்டோம். 



எங்கள் வீட்டு மாடலிலேயே உள்ள பக்கத்து வீடு. அவர்கள் வீட்டு விஷேசதின் போது சீரியல் லைட் போட்டிருக்காங்க; அவர்களும் நிறைய செடி அவர்கள் வீட்டின் எதிரே வைத்துள்ளனர்

குட்டி இடத்தில் வரிசையா செடிகள் 




நாகலிங்க பூ: பாண்டவர் பூ என்றும் சொல்வாங்க. அஞ்சு பெட்டல்ஸ் இருக்குமாம்
அழகான குரோட்டன்ஸ் - சுவரின் மீதுள்ள தொட்டியில் வளருது



செம்பருத்தி செடிகள் நிறையவே இருக்கு

நித்திய மல்லிப்பூ

அரளி பூ/ மரம்


Tub-ல் வளரும் அல்லி செடி ; கூடவே சும்மா சில பூக்கள் போட்டு வச்சிருக்காங்க !
 இப்போ இதற்குள் சில மீன்களும் இருக்கு !


எங்க வீட்டு பப்பாளி

கருவேப்பிலை செடி


பொதினா- பிரியாணிக்கு இதை தான் எடுப்போம் 

பறந்து விரிந்த குரோட்டன்ஸ்       

வீட்டு மருதாணி - கையில் போட்டால் செமையா கலர் வரும்

*********
நிறைவா என்ன சொல்லணும்னா: அரை கிரவுண்டில் உள்ள வீட்டை சுத்தி, இருக்கும் கொஞ்ச இடத்தில் இவ்வளவும் செய்துருக்கோம் ! மனம் இருந்தால் மார்க்கமுண்டு ( கருத்து சொல்றாராமாம் !) நீங்கள் விரும்பினால் தொட்டியிலும் அழகிய செடி வளர்க்கலாம் !

நன்றி நண்பர்களே !

டிஸ்கி: முதல் முறையாய் தமிழ் மணத்தின் 3 மாத டிராபிக் ரேங்கில் வீடுதிரும்பல் முதல் இடத்தில் வந்துள்ளது. தமிழ் மணத்தின் பிறந்த நாள் பரிசு ??!!

129 comments:

  1. அத்தனையும் அழகு. உங்கள் தோட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. "எங்க வீட்டு தோட்டம்- பிறந்தநாள் பதிவு +படங்கள்"

    மிகவும் பாராட்டத்தக்க அழகிய பயனுள்ள தோட்டம்..

    இனிய வாழ்த்துகள்..



    http://jaghamani.blogspot.in/2011/04/blog-post_04.html

    கடிகார மலரின் விபரம் பார்க்கலாம்..

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் அருமை !!! பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
    தோட்டமும் பூக்களும் அழகு.

    ReplyDelete
  5. நாங்கள் ஒரு சில செடிகள் வைத்து ஒரு பூ மொட்டு விடும் போதே தினம் தினம் பார்த்து சந்தோசப் படுவோம்...

    இவ்வளவா ? என்று ஆச்சரிப்பட வைக்கிறது...
    அனைத்தும் ரொம்ப அழகாக இருக்கு...
    நாட்டி அழகு... அருமை...

    இதற்கு மேல் சந்தோசம் என்ன வேண்டும்...?

    தோட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  6. முதலில் பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.. நல்லா இருங்க.

    அடுத்து தோட்டம்.... கண்ணுலே ஒத்திக்கற மாதிரி இருக்கு! நல்லா வச்சுருக்கீங்க.

    அந்த பாண்டவர் பூதானே Passion Fruit flower?

    இட்லிப்பூ? அது செத்திப்பூ. செத்தி மந்தாரம் துளசின்னு ஒரு மலையாளப்பாட்டுலே வர்ற பூ! இது சிகப்புக் கலரிலும் வரும்.

    தோட்டப்பராமரிப்பு செய்யும் வீட்டமாவுக்கு ஒரு ' ஓ '!!!!!!!

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
    பசுமைத் தோட்டம் பார்ப்பதற்கே நிறைவாய் உள்ளது

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன் :)

    வெற்றிலை செடி இப்போதான் பார்க்கிறேன். ஃபோட்டோஸ் அருமை.

    பொதுவா, கருவேப்பிலை செடி வீட்டில் வளர்க்ககூடாதுன்னு அம்மா சொல்லுவாங்க. சொந்தகாரங்களோட சண்டை வருமாம். நான் அடம் புடிச்சு, அப்போ நாம கண்டிப்பா வளர்ப்போம்னு சொல்லி, இப்போ அது செடிக்கும் மரத்துக்கும் நடுவிலான ஸ்டேஜில் இருக்கு!

    காய்கறி வாங்கும்போது, கருவேப்பிலை எக்ஸ்ட்ரா கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இப்போ இல்ல பாருங்க :))

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    பார்க்கவே சோலைபோல் பரவசப்படுத்துகிறது
    உங்க்கள் வீட்டுத் தோட்டம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துகள். இருக்கும் சிறிய இடத்தில் இவ்வளவு செடிகொடிகளா ?

    வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  14. Happy Birthday to You
    Happy Birthday to You
    Happy Birthday Dear Mohan anna
    Happy Birthday to You.

    From good friends and true,
    From old friends and new,
    May good luck go with you,
    And happiness too.

    - Harry

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன்... வாழ்க வளமுடன் !!!

    ReplyDelete
  16. happy birthday mohan sir...
    awesome garden lovely...

    ReplyDelete
  17. மோசமான குணம் இருப்பவர்கள் வீட்டில் வெற்றிலை கொடி படறாது எனச் சொல்வார்கள்...!நீங்க....ரொம்ம நல்லவர்ங்கோ!

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! மோகன்ஜி!

    ReplyDelete
  19. பிறந்தநாள் வாழ்த்துகள்!

    தோட்டம் கண்களைப் பறிக்கின்றன. இப்படி ஒரு தோட்டம் இருந்தும் இத்தனை நாட்களாக எங்களுக்கு தெரிவிக்காமல் இருந்தது ஏனோ?!

    ReplyDelete
  20. இவ்வளவு அருமையாக தோட்டத்தை பராமரிக்கும் மேடத்திற்கு எங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  21. Happy birthday Mohan. Could not view all the photos in iPhone. But looks gr8. Will get ideas from u to hv it at our home.

    Once again Wish you a Happy Birthday. Be Happy.

    ReplyDelete
  22. //முதல் முறையாய் தமிழ் மணத்தின் 3 மாத டிராபிக் ரேங்கில் வீடுதிரும்பல் முதல் இடத்தில் வந்துள்ளது.//

    எல்லாம் உழைப்புக்கு கிடைத்த பரிசு. தாங்கள் அதற்கு ததியானவர் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை!

    ReplyDelete
  23. very nice garden maintain panringa, varity of flowers, kinds of grotens, edaye oru alagiya parrot, fish,etc valthugal mohan and mrs mohanji

    ReplyDelete
  24. தமிழ்மண கீரீட பதிவருக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நான் வாழ்த்துக்கள்!

    தமிழகத்தின் முதல் பதிவர் என்ற விஷயத்தை நேற்று இரவு தூங்கும் போதுதான் கவனித்தேன்! உடனே வாழ்த்தலாம் என்று தான் நினைத்தேன்..நல்ல விசயத்திற்கு வேறு யாராவது நல்லவரிடம் இருந்து "முதல் வாழ்த்தை" பெறட்டும் என்று விட்டுவிட்டேன் :)

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாய் தினமும் பதிவிட்டு வருகிறீர்கள் என்று கருதுகிறேன் தினமும் பதிவிடுவது என்பது சாதாரண விசயமல்ல! ஒருவாரமாக வலைச்சரத்தில் நான் தினமும் பதிவெழுதியபோது அது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்! உங்களது கடும் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த தமிழ்மண முதல் இடம்!!!

    வாழ்த்துக்கள் மோகன்சார்! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. பிறந்த நாள் வாழ்த்துகள் சார் ....

    ReplyDelete
  26. பிறந்தநாள் வாழ்த்துக்கள்/அரை கிரவுண்டில் உள்ள வீட்டை சுத்தி, இருக்கும் கொஞ்ச இடத்தில் இவ்வளவும் செய்துருக்கோம் ! மனம் இருந்தால்/// அடேங்கப்பா..உங்கள் தோட்டத்தை சிறிய இடத்தில் இத்தனை விஸ்தாரமாக காட்டி இருப்பது அழகோ அழகு.

    ReplyDelete
  27. தோட்டத்தை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.அருமை.பராமரிப்பவருக்கு பாராட்டுக்கள் பல.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! கண்ணுக்கு குளிர்ச்சியான செடிகளும் பூக்களும் வாவ்... கொள்ளை அழகு.

    ReplyDelete
  29. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  30. பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன் ஜி :)

    தோட்டம் அருமை. மாடியில் ஏதும் வளர்ப்பதில்லையா?

    ReplyDelete
  31. இனிய பிற‌ந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  32. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...

    அழகான தோட்டம் ...

    ReplyDelete
  33. அய்யாசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    தோட்டத்தை அழகாகச் சுற்றிக் காட்டி விட்டீர்கள். எத்தனை விதமான செடிகள், மலர்கள்!! இத்தனை அருமையாக அதைப் பராமரித்து வரும் வீட்டு பாஸுக்கே அத்தனை பாராட்டுகளும்:)!

    ReplyDelete
  35. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  36. பிறந்த நாள் வாழ்த்துகள். குறுகிய இடத்தில் செடிகள் வளர்க்கும் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள். படங்கள் அழகு. தமிழ்மண மகுடத்துக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. Wishing you many more happy returns of the day!
    Garden is very cute, congrats to your wife!

    ReplyDelete
  38. தோட்டம் அழகோ அழகு..
    பிறந்த நாள் வாழ்த்துகள்.பிறந்த நாள் பரிசாக வந்திருக்கும் முதலிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பூச்செடிகள் அழகு..

    ReplyDelete
  40. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,மோஹன்!

    ReplyDelete
  41. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,மோஹன்!

    ReplyDelete
  42. Anonymous7:11:00 PM

    தோட்டம் பசுமை வளமை குளுமை !
    பாராட்டுக்கள் & இரட்டிப்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. அருமையான அழகான தோட்டம்! ரசிக்கவைத்தது. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    ReplyDelete
  44. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    காய்கறித்தோட்டம், பூக்கள்,பழங்கள் என வீடு நிறைந்த அழகு.

    வாழ்த்துகள். வளரட்டும் சோலை வனம்.

    ReplyDelete
  45. கண் கவர்ந்த பதிவு.கண் நிறைந்த தோட்டம்.பார்க்கவே அழகாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. Anonymous7:55:00 PM

    அழகான தோட்டம். அருமையான பராமரிப்பு. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. சூப்பர் தோட்டம்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. இத்தனை செடிகளையும் ஒரே வரிசையில் நேர்த்தியாக வைத்து வளர்ப்பது கடினம். மிக அருமையாக வளர்ந்திருக்கின்றன, அத்தனையும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தன. குரோட்டன்ஸ் செடிக்குப் பதில் இன்னும் சில கீரை வகைகளையே வைத்திருக்கலாம். நாகலிங்க பூ:இதுவரை பார்த்திராதது அழகாக உள்ளது. இத்தனையும் பாதுகாப்பது கடினம், இருந்தும் மிக அருமையாக பராமரித்து வருகிறீர்கள். சபாஷ்!!

    ReplyDelete
  50. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    உங்களின் நாட்டியை எனக்கு ரொம்ப பிடித்தது சகோ.

    ReplyDelete
  51. அழகு - தோட்டம், புகைப்படம்

    is it in chennai !!! SUPER

    ReplyDelete
  52. பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  53. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன்.  செடிகளும் பூக்களும் அழகு.

    ReplyDelete
  54. @ வீடு சுரேஸ் குமார்.

    //மோசமான குணம் இருப்பவர்கள் வீட்டில் வெற்றிலை கொடி படறாது எனச் சொல்வார்கள்...!நீங்க....ரொம்ம நல்லவர்ங்கோ!//

    ஆஹா..... பாய்ண்ட் நோட்டட் யுவர் ஆனர்!

    நானும் நல்லவள்;-)))))

    ReplyDelete
  55. Kudos to your wife! She has made use of the available space so effectively!

    ReplyDelete
  56. பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  57. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  58. பிறந்த நாள் வாழ்த்துகள்! (belated!!).

    உங்கள் வீட்டுப் பூக்களையே நாங்கள் கொடுத்தப் பூங்கொத்தாக ஏற்கவும்.

    ReplyDelete
  59. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தோட்டம் மிக அருமை. சின்ன இடமாக இருந்தாலும், பல வகையான செடி, கொடி, மரங்கள் என்று அசத்தலாக இருக்கிறது.

    ReplyDelete
  60. பிறந்த நாள் வாழ்த்துகள். இன்னிக்கு தான் பார்த்தேன்.

    தோட்டம் வைத்துப் பராமரிப்பது நல்ல விஷயம். கலக்குங்க.

    ReplyDelete
  61. பார்க்கும் இடமெல்லாம் பச்சை வண்ணம் படம் எடுத்து ஆடுது பாஸ்! ரொம்ப அழகா இருக்கு! :)

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (எத்தனாவது பிறந்த நாள்னு சொல்லவேயில்லையே!!) :PP

    ReplyDelete
  62. நன்றி நடன சபாபதி சார்


    ReplyDelete
  63. இராஜராஜேஸ்வரி மேடம்: நன்றி

    ReplyDelete

  64. நன்றி சலீம்

    ReplyDelete


  65. மதுமதி: நன்றி தோழரே

    ReplyDelete

  66. தனபாலன் சார் உங்கள் ஊர் அருமையான மண் ஆச்சே செடியெல்லாம் நன்கு வளருமே


    ReplyDelete
  67. துளசி டீச்சர்: உங்கள் சந்தேகங்களுக்கு எனக்கு பதில் தெரியலை. வீட்டம்மா இந்த பதிவு + கமண்ட்ஸ் படிப்பார் விடை தெரிந்தால் சொல்றேன்

    ReplyDelete

  68. நன்றி சீனு


    ReplyDelete
  69. ரகு: அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களுக்கு


    ReplyDelete
  70. மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!
    உங்கள் பதிவில் மனமும் கண்ணும்!!! நிறைந்த பதிவு இது தான் சார். எனக்கு Gardening மிக பிடித்தமான ஒன்று... செடி வளர்ப்பதில் ஒரு அலாதி சுகம், அதை ரசிப்பவரை விட வளர்ப்பவர்க்கு அதிகம்.. என்னுடைய சொந்த ஊரான காஞ்சிபுரம்-இல் என் வீட்டின் பின்புறம் மொட்ட மாடி-இல் நிறைய செடி வளர்த்து இருக்கிறோம்... காய், பூ, பழம் தரும் வகைகள்.. சென்னை வந்தபின் பராமரிப்பு இன்மையால் 1 % தான் இப்போது உள்ளது... நினைத்தாலே மனம் வேதனைப்படும்.... அழகான சுழல் என்னை நினைவு இன்றும் பசுமையாக உள்ளது மனதில் மட்டும்(!)...என் அம்மாவிற்கும் தோட்டம் அமைப்பதில் அளவுகடந்த ஆர்வம் ஆசை!!!

    உங்களின் தோட்டம் பார்க்கும் பொது என் வீடு தான் நினைவிற்கு வருகிறது... அருமையான பராமரிப்பு அழகான செடிகளின் நடுவே வீடு... கற்பனையில் கூட உங்கள் வீடு பசுமையாக குளிர்ச்சியாக தோன்றுகிறது!!!
    நீங்கள் சொல்வது போல் இது சிறிய தோட்டம் இல்லை.. நகர (நரக) வாழ்க்கையில் இது அழகான சொர்க்கம் தான்....வாழ்த்துக்கள் சார் உங்கள் ஹவுஸ் பாஸ்-க்கு!!!

    future -ல அழகான தோட்டம் அமைக்க அடிமனதில் ஆசை உள்ளது... பார்க்கலாம் சார்...
    அழகான படங்களும் பகிர்ந்ததிற்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  71. நன்றி கார்த்திக்

    ReplyDelete

  72. நன்றி ராஜசேகர்

    ReplyDelete

  73. ராஜ் : நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete


  74. ஹாரி: உங்கள் வாழ்த்து மிக மகிழ்ச்சி தந்தது நன்றி


    ReplyDelete
  75. ரவிச்சந்திரன்: நன்றி


    ReplyDelete
  76. ப்ரியா மகேஷ்: நன்றி மேடம்

    ReplyDelete
  77. வீடு சுரேஷ்: வெற்றிலை பற்றி சொன்னது புது தகவல். அந்த நல்ல மனசு வெற்றிலை வளர்க்கும் வீட்டம்மாவையே சேரும் நன்றி


    ReplyDelete
  78. நன்றி அமைதி அப்பா. உங்கள் பாராட்டை வீட்டம்மாவிடம் சொல்லிட்டேன். மகிழ்ந்தார்கள்

    ReplyDelete


  79. நன்றி ஆதிமனிதன். போனில் பேசியமைக்கும்

    ReplyDelete
  80. வரலாற்று சுவடுகள் said...
    தமிழகத்தின் முதல் பதிவர் என்ற விஷயத்தை நேற்று இரவு தூங்கும் போதுதான் கவனித்தேன்! உடனே வாழ்த்தலாம் என்று தான் நினைத்தேன்..நல்ல விசயத்திற்கு வேறு யாராவது நல்லவரிடம் இருந்து "முதல் வாழ்த்தை" பெறட்டும் என்று விட்டுவிட்டேன் :)
    ******
    நானே இன்று எதேச்சையாய் தான் பார்த்தேன் நண்பா. நன்றி

    ReplyDelete
  81. ராஜகோபால்: நன்றி நண்பா

    ReplyDelete









  82. நன்றி இளம்பரிதி

    ReplyDelete
  83. சாதிகா மேடம் உங்கள் மனம் திறந்த பாராட்டு மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி

    ReplyDelete
  84. ஆசியா ஓமர் : நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  85. ராகவன் சார்: தங்கள் வாழ்த்து மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி

    ReplyDelete
  86. சரவணன் : நன்றி

    ReplyDelete
  87. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    தோட்டம் அருமை. மாடியில் ஏதும் வளர்ப்பதில்லையா?

    *******
    இல்லை ஷங்கர். யோசிக்கிறோம் செயல்படுத்தலை

    ReplyDelete
  88. நன்றி அப்து அண்ணே. தங்கள் கடும் பணிக்கிடையே இன்று போன் செய்தமைக்கும்

    ReplyDelete
  89. நன்றி மனோ மேடம்

    ReplyDelete
  90. நன்றி தினேஷ் குமார்

    ReplyDelete
  91. ஹேமந்த்: நன்றி

    ReplyDelete
  92. ராமலட்சுமி மேடம்: உண்மை தான். அனைத்து பாராட்டும் வீட்டம்மாவையே சேரணும்

    ReplyDelete
  93. நன்றி ஸ்ரீராம்; தங்கள் வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி

    ReplyDelete

  94. நன்றி மாதவி மேடம் மகிழ்ச்சி

    ReplyDelete
  95. சென்னை பித்தன் said...

    தோட்டம் அழகோ அழகு..
    பிறந்த நாள் வாழ்த்துகள்.பிறந்த நாள் பரிசாக வந்திருக்கும் முதலிட வாழ்த்துகள்.
    **********

    சென்னை பித்தன் சார்: இதுவரை முதலிடத்தில் இருந்தவர் நீங்கள். நான் இந்த இடம் வந்ததும் தற்காலிகம் என்பதை அறிவோம் நன்றி சார்

    ReplyDelete
  96. ரியாஸ்: நன்றி

    ReplyDelete
  97. ஆர். ஆர் . ஆர் நன்றி சார்

    ReplyDelete
  98. ஸ்ரவாணி: நன்றி மேடம்

    ReplyDelete
  99. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  100. நன்றி மாதேவி

    ReplyDelete
  101. மகிழ்ச்சி விமலன் சார் நன்றி

    ReplyDelete

  102. நன்றி பாலஹனுமான் சென்னை வரும்போது எங்கள் வீடு வந்தால் தோட்டம் நேரடியே காணலாம்

    ReplyDelete
  103. அமுதா மேடம்: நன்றி

    ReplyDelete
  104. பட்டுமாமி: நன்றிங்க. நீங்கள் சொல்வது உண்மை தான். கீரை ஏன் வளர்க்கலை என வீட்டம்மாவிடம் கேட்கணும்

    ReplyDelete
  105. அருணா: நாட்டியை குறிப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சி

    ReplyDelete
  106. ஸ்ரீ ஸ்ரீனி: ஆமாங்கோ ; மடிப்பாக்கம்

    ReplyDelete

  107. ஜெய் : நன்றி

    ReplyDelete

  108. நன்றி அமரபாரதி மகிழ்ச்சி

    ReplyDelete
  109. தணல்: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  110. காஞ்சனா மேடம்: நன்றி

    ReplyDelete
  111. வாங்க அரசன் நன்றி

    ReplyDelete
  112. சீனிவாசன்: நன்றி நண்பா

    ReplyDelete

  113. விரிச்சிகன் : நன்றி நண்பரே

    ReplyDelete
  114. வாங்க அனுஜன்யா மகிழ்ச்சி

    ReplyDelete
  115. தக்குடு : நன்றி. ஹிஹி வயசெல்லாம் கேட்கபடாது

    ReplyDelete
  116. நன்றியும் மகிழ்ச்சியும் சமீரா. உங்கள் தோட்ட கனவு நிறைவேறட்டும்

    ReplyDelete
  117. எங்க வீட்டிலும் அழகான பூந்தோட்டம் இருந்தது. தென்னை வளர்ந்துப்பறம் அதுவா அழிஞ்சிப் போச்சி. அஞ்சு தென்னை மரம். எப்பவும் நிழலா இருக்கும் என்பதால், செடிகள் ஊட்டமா வளராது. அதுவுமில்லாமே ரெண்டு, மூணு மாசத்துக்கு ஒருமுறை மட்டை வெட்டணும். அதெல்லாம் கீழே விழுந்து செடிகளை அழிச்சிடும்.

    போனவாரம்தான் மொட்டை மாடியில் தோட்டம் போடலாம்னு கொஞ்சம் தொட்டிகள் வாங்கி வெச்சிருக்கோம். பார்ப்போம். அடுத்த வருஷம் என்னாலேயும் இதுமாதிரி தோட்டப்பதிவு போட முடியுதான்னு...

    ReplyDelete
  118. வாழ்த்துகள்.. இனிய பிறந்த நாளுக்கும், அழகான தோட்டம் அமைச்சுப் பராமரிக்கிறதுக்கும்.

    அப்றம் அந்த பர்ப்பிள் பூ நாகலிங்கப் பூ இல்லை. அதை இங்கே கிருஷ்ண கமல்ன்னு சொல்லுவோம்.

    நாகலிங்கப்பூ மஞ்சள் கலந்த ஆரஞ்சுக்கலர்ல நாகப்பாம்பு படம் எடுத்த மாதிரியான அமைப்பில் இருக்கும்.

    ReplyDelete
  119. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. எல்லோரும் சொல்வார்கள். உங்கள் மனைவி செய்துகாட்டிவிட்டார். அவர் வளர்க்கும் அருமையான தோட்டத்தின் பதிவை இட்டு அவரைப் பெருமைப்படுத்திவிட்டீர்கள். கொஞ்ச நேரம் தோட்டத்தில் உலா வந்த உணர்வு. சமர்த்தாய் உக்காரவைத்த இடத்தில் உட்கார்ந்திருப்பவளு(னு)க்கு நாட்டி என்று பெயரா?


    ReplyDelete
  120. பிறந்த நாள் வாழ்த்துக்கள். தோட்டம் மிக அழகு.. கண்ணுக்கு குளிர்ச்சி..

    ReplyDelete
  121. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் வீட்டைச் சுற்றிப் பூத்துக்குலுங்க வைத்துள்ளதற்கும் பாராட்டுக்கள். இங்கு என் மாடத்திலும் பச்சைப் பசேலே! //நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் உள்ளது. அனைவருக்கும் பொதுவாய் நுழையும் இடத்தில் உள்ளது இந்த சிறு மரம் //
    இதை பொன்னரளி என ஈழத்தில் குறிப்பிடுவோம். அதிக பராமரிப்பில்லாத பூமரம்.
    உங்கள் பூந்தோட்டம் அயலவர்களுக்கு முன்மாதிரி. தொடருங்கள்.

    ReplyDelete
  122. நாகலிங்கப்பூ என்பது வேம்பு போன்ற பெரிய மரத்தில் வருவது, இப்படிக் கொடியல்ல! இது Passion fruit - பூ , இது வகை.

    ReplyDelete
  123. http://suvaithacinema.blogspot.fr/2010/09/blog-post_16.html- இதில் நாகலிங்கப்பூ மரம் உள்ளது.
    Passion fruit- கொடித்தோடை - விக்கி சொல்லுது.

    ReplyDelete
  124. மீண்டும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  125. Many days I will visit ur blog. Sema kaduppa I will close. Because u would have not posted anything. Today I saw ur home garden. Really fantastic.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...