Wednesday, November 18, 2015

தொல்லை காட்சி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்- கமல், வைரமுத்து இன்னும் பிற

தீபாவளி படங்கள் டிவி யில்..

தீபாவளி படங்களை பொறுத்த வரை சன் டிவி மற்றும் ஜெயா டிவி முந்தியது என்று தான் சொல்லவேண்டும். விஜய் டிவி மாரி மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற ரெண்டு சுமாரான படங்களை திரையிட, சன் ரிலீஸ் செய்த வேலை இல்லா பட்டதாரி குடும்பங்கள் விரும்பி பார்க்கும் படமாய் அமைந்து விட்டது..இப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக,  மாலை ஜெயா டிவி பாகுபலி ஒளிபரப்பி TRP ஐ தன்  பக்கம் திருப்பியது..

விஜய் ஸ்டார்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ஷோ

தமிழ் சானல்களில் விஜய் டிவி காம்பியர்கள் தான் பெயர் சொன்னாலே - அதிக மக்களுக்கு தெரியும் என்கிற அளவில் இருக்கிறார்கள். இதனால், அவர்கள் காம்பியர்களை வைத்தே - விஜய் ஸ்டார்ஸ் என ஒரு நிகழ்ச்சி நடத்தி விட்டனர்....பாட்டு, டான்ஸ் என ஒரு மணி நேரம் சென்ற நிகழ்ச்சியில் உருப்படியான/ ரசிக்க வாய்த்த ஒரே விஷயம் கலக்க போவது யாரு டீமிலிருந்து வந்து சிரிக்க வைத்தது தான் !

வைரமுத்து சிறப்பு பட்டி மன்றம்

விஜய் டிவியில் வைரமுத்துவின் சிறுகதைகள் பற்றி பட்டி மன்றம்.. !

இப்படி தனி ஒரு மனிதர் பற்றிய பட்டி மன்றம் என்றாலே ரெண்டு பக்கமும் புகழ்ந்து தான் தள்ளுவார்கள்.. இந்நிகழ்ச்சியும் அவ்விதமே.ஒரு பக்கம் அவரது கதை/ அதன் களன் அற்புதம் என்று பேச, இன்னொரு பக்கம் அவர் ரசனை, மொழி வளம் பற்றி வியந்தனர்..

நிமிடத்திற்கொரு முறை வைரமுத்து ரசிக்கும் விதத்தை காட்ட ஒரு க்ளோஸ் அப்..

அரை நிமிடத்தில்  நடுவர் அவசர தீர்ப்பு தர (நிஜமாய் அரை நிமிடம் மட்டுமே !! மீதம் எடிட்டிங்கில் போனதா தெரியாது ) பின் அரை மணி நேரம் வைரமுத்து பேசினார்; சிரித்தார்; அழுதார்..

சினிமாவில் இருந்து கொண்டு எழுதுவதால் மட்டுமே இந்த மரியாதை என்பதும், தமிழில் மிக அதிக ரசிகர்கள் கொண்டிருந்த சுஜாதாவிற்கு கூட  இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை என்பதும் மனதை தைத்தது !

வேதாளம் சிறப்பு நிகழ்ச்சி

விஜய் டிவி தீபாவளி இரவு 10 மணிக்கு வேதாளம் பட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பினர்.

அஜீத்திடம் என்ன பிடிக்கும் என சம்பிரதாய கேள்வி; அவர் நடை, சிரிப்பு என ரசிகர்களின் அதே வித பதில், பெண்கள் சிலிர்ப்புடன் பேசுவது என 5 நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியாமல் தாண்டி விட்டேன்..

சினிமா ஒரு என்ட்டர்டேயின்மென்ட்; பிடிக்கிறதென்றால் பார்த்து விட்டு போக வேண்டும்; அதை விட்டு விட்டு  இன்னும் எத்தனை காலம் தான் நடிகர்களை - மீடியா இப்படி உயர்த்தி பிடிக்குமோ !!

காபி வித் DD - கமல் பேட்டி தூங்காவனம் ரிலீஸ் மற்றும் தனது பிறந்த நாள் இரண்டையும் முன்னிட்டு கமலை பேட்டி எடுத்தார் DD.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றே ! கமலுடன் சேர்ந்து அமர்ந்து பேச ஒவ்வொருவராய் வந்தனர்.. படத்தின் இயக்குனர் ராஜேஷ் அதில் ஒருவர்..

ஆனால் படம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லை ! அவரை வைத்து கொண்டும் கமல் தான் பேசி கொண்டிருந்தார். இயக்குனர் ராஜேஷ் எதுவும் பேசாமல் - DD " நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என சொல்லி அனுப்பி விட்டார் !!

கமலுக்கு எதற்கு இப்படி ப்ராக்ஸி இயக்குனர்கள் தேவை என புரியவில்லை ! தனது பெயரிலேயே இயக்கி விட்டு போய் விடலாம் !!

நம்ம வீட்டு கல்யாணம் - அட்லி- ப்ரியா & சாந்தனு- கீர்த்தி

முன்பு வாரம் ஒரு முறை DD நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்வை தொகுத்து வழங்குவார். அதை நிறுத்தி ரொம்ப காலமாயிற்று. தீபாவளிக்கு இரண்டு சினிமா பிரபலங்கள் திருமண நிகழ்வை காட்டினர்..

அட்லி - ப்ரியா திருமணம் பற்றிய சில தகவல்கள் சுவாரஸ்யம்.

அட்லி மட்டுமே ஒரு தலையாய் காதலிக்க, நண்பர் வட்டத்தில் அனைவருக்கும் தெரியுமாம்.

ஒரு முறை ப்ரியா தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வருவதாக தெரிவிக்க, அட்லி நானும் அப்ளை செய்யட்டுமா என கேட்டுள்ளார். முதலில் விளையாடுகிறார் என பிரியா நினைக்க, அப்புறம் நண்பர்கள் மூலம் விஷயம் தெரிந்துள்ளது. அப்புறம் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி, 1 மாதத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆக - நாங்கள் காதலர்களாக இருக்கவோ, சுற்றவோ இல்லை என அட்லி புலம்பினார்.

ஹனிமூன் வெளிநாடு செல்லுபோது ப்ரியா பிறந்த நாள் வர- சும்மா வெளியில் போகலாம் என கடலுக்குள் அழைத்து, பின் சினிமா மாதிரி வழி மாறி போய் விட்டோம் என ஒரு நடுக்கடல் ரிசார்ட் கூட்டி சென்று - அங்கு ஒரு பெரிய திரையில் அவரது சிறு வயது முதல் உள்ள புகைப்படங்களால் வீடியோ காட்டி அசத்தி உள்ளார்.. Interesting & Romantic !!

2 comments:

  1. மின்சாரம் இல்லாததால் தீபாவளி நிகழ்ச்சிகள் பார்க்கவில்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...