விஜய் டிவியில் ஜேசுதாஸ்- 50 நிகழ்ச்சி
ஹவுஸ் பாஸ் - நான் - இருவருக்கும் இருக்கும் அரிதான ஒற்றுமைகளுள் ஒன்று - இருவரும் ஜேசுதாஸ் குரலுக்கு ரசிகர்கள். எனவே இந்நிகழ்ச்சியை பெரிதும் எதிர்பார்த்தோம்.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பாடியது இருவருக்குமே ஏமாற்றம் தான். 70 வயதுக்கு மேல் ஆகியும் குரல் நன்றாக தான் உள்ளது. ஆயினும், பாடலை - இயல்பில் உள்ளது போல் பாடாமல் மெட்டை சற்று மாற்றி பாடும்போது - அப்பாடல் கேட்கும் சுகம் கிடைப்பதில்லை.
முதுமையினால் மெட்டு அவருக்கு மறந்திருக்கலாம். அப்பாடல்களை பல முறை கேட்ட நமக்கு - பாடல் குறிப்பிட்ட விதத்தில் தான் மனதில் பதிந்துள்ளது. வேறொரு version கேட்கும் போது ஏமாற்றமே.
மற்ற படி நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் நிறைய பேசவும் செய்தார். அவற்றில் சில நினைவுகள் ரசிக்கும் படி இருந்தது.
மேலும் விஜய் ஜேசுதாஸ் மற்றும் இளம் பாடகர்கள் ஜேசுதாஸ் பாடல்கள் பலவற்றை - மெட்டு மாற்றாமல் பாடினர்.. அவையும் ரசிக்க வைத்தது.
டிவியில் பார்த்த படம்: தளபதி
கே டிவியில் எதேச்சையாக தளபதி படம் ஒளிபரப்பாவது கண்டேன்..
ரஜினி- மம்மூட்டி என்ற இரு ஸ்டார்களுக்கு இடையே அரவிந்தசாமியை தைரியமாக அறிமுகம் செய்திருந்தார் மணிரத்னம்.
மகாபாரத கர்ணன் கதை என்பதாலும் - கர்ணன் சூரியனின் மகன் என்பதாலும் படம் பெரும்பகுதி அதிகாலை அல்லது மாலை நேரம் படம் பிடிக்கப்பட்டதாக மணிரத்னம் சொல்லிய நினைவு..
இம்முறை பெரிதும் ரசித்து - வயிறு வலி வருமளவு சிரித்தது மணி ரத்னம் ப்ராண்ட் டயாலாக்ஸ்க்கு தான்.
ரஜினி ஷோபனா இருவரும் காதலிக்கின்றனர். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷோபனா - ரஜினியின் தம்பி அரவிந்த் சாமியை மணக்கிறார்.
ஒரு முறை ரஜினி ஷோபனா இல்லம் வரும் போது நடக்கும் உரையாடல்..
"எப்டி இருக்கே? "
" நீங்க எப்டி இருக்கீங்க ?"
" நல்லா பாத்துக்குறாரா"
" அவர் ரொம்ப நல்லவர் "
கேட்ட கேள்விக்கு பதில் வராமல், மணி டைப் டயலாக்ஸ் Hilarious ..!
நீயா நானா
இந்த வாரம் - வயதான பெற்றோர் ஏன் நகரம் வந்து பிள்ளைகளுடன் தங்குவதில்லை என்ற தலைப்பில் பேசினர்.
ஒரு பக்கம் பிள்ளைகள் - " நாங்கள் எவ்வளவோ கூப்பிடுகிறோம்; அவர்கள் வருவதில்லை" என பேச, இன்னொரு பக்கம் பெற்றோர் " எங்கள் வீட்டில் படுத்தால் தான் தூக்கம் வரும்; உறவு நெருங்கினால் கெட்டு போய் விடும்; எனவே தான் தள்ளி இருக்கிறோம்" என்ற காரணங்களை பேசினர்
அன்றைக்கு கோபிக்கு என்ன கோபமோ தெரியவில்லை; எந்த பக்கம் யார் என்ன பேசினாலும் அவர்களை விளாசி தள்ளினார். பேசும் கருத்துகளை மறுத்து விட்டு வழக்கத்தை விட அதிகம்- வரிக்கு ஒரு முறை " ரைட்டா ? ரைட்டா?" என்றார் கோபி..
எங்களை கூப்பிட்டு இப்படி நோஸ் கட் செய்வது ரைட்டு இல்லை சார் .. என்று யாராவது சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். .. ஹூம் ...
வசந்த் டிவி யில் ராஜா படுத்தும் பாடு
இளையராஜா இசை அமைத்த சில நல்ல பாடல்களை ஞாயிறு இரவு 8.30-9 வரை ஒளிபரப்புகிறது வசந்த் டிவி.ராஜா படுத்தும் பாடு என்கிற வித்யாச தலைப்பில்..
ஒவ்வொன்றும் செம ஹிட் ஆன பாட்டு தான். ராஜா ரசிகர்கள் மிக ரசிக்கும் வண்ணம், அப்படம் மற்றும் பாடல் குறித்து சில சுவாரஸ்ய தகவலும் கூட சொல்கிறார்கள்.. என்ன ஒன்று அந்த தகவல் எல்லாம் பாடல் ஒளிபரப்பாகும் போதே - இசை மட்டும் வருகிற சமயத்தில் சொல்கிறார்கள்.. இதனால் பாடலை முழுதும் ரசிக்க முடியாமல் ஒரு இடைஞ்சலாக இது உள்ளது. மாறாக பாடலின் துவக்கத்தில் இத்தகைய தகவல்கள் சொல்லி விட்டு பாடலை - முழுதும் தொந்தரவின்றி ஒளிபரப்பினால் நன்கு ரசிக்கலாம்.
மகாபாரதம்
ரொம்ப நாளாக ஒரு தனி பதிவாக எழுத நினைத்து முடியாமலே போனது..
மகாபாரதம்- எனக்கு மிக பிடித்தமான ஒரு கதை.. நீடாமங்கலத்தில் வருடா வருடம் சொல்லப்படும் மகாபாரத கதை கேட்க, கேட்க இன்னும் தான் ஈடுபாடு அதிகமாகும்.
சில முறை இது டிவியில் வந்தபோதும், இம்முறை விஜய் டிவியில் வருவது அட்டகாசம் ! சென்ற முறை வந்தபோதே முழுவதும் பார்த்தோம். சீரியல் முடிந்த பின்னும், அடுத்த சில மாதங்களில் மறு ஒலிபரப்பு துவக்கி விட்டனர்.
டப்பிங் சீரியல் என்றாலும் - பீஷ்மர், துரியோதனன், சகுனி , அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், தர்மன், பாஞ்சாலி என அத்தனை பாத்திரத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள நபர்கள் அவ்வளவு பொருத்தம் ! அதிலும் ஆண்கள் அனைவரும் மிக அட்டகாசமான உடல் அமைப்பு கொண்டுள்ளோராக பார்த்து பார்த்து எடுத்துள்ளனர்.
மகாபாரதம் - சினிமா பார்க்கும் திருப்தி+ பிரம்மாண்டத்தை இந்த சீரியல் தந்து விடுகிறது
எனக்கு ரொம்ப பிடித்த பகுதி.. போர் துவங்கிய பின் வரும் பாகம் தான். பல சூழ்ச்சிகள், திட்டங்கள், அரசியல், எதிர்பாராத திருப்பம்.. என இப்பகுதி அட்டகாசமாய் இருக்கும். மறு ஒளிபரப்பில் அது இப்போது தான் துவங்கியுள்ளது. இயலும்போது மீண்டும் பார்க்க துவங்கி உள்ளோம்.. விருப்புமுள்ளோர் கண்டு மகிழுங்கள் !

சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!
ReplyDeleteYesudas or Jesudas
ReplyDeleteIt's Jesudoss, but pronounced like Yesudoss. In Hebrew, J is a "Y" sound.
ReplyDeleteOnce upon a time, the letter "J" was pronounced like a "Y" is today.
That is why the English Bibles and Gospels stuck in many J's as in Judea, Jerusalem, Elijah, and Jesus.
In early English the letter "J" was pronounced the way we pronounce "Y" today.
Delete