எங்கள் பெண் இவ்வருடம் + 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர்கிறார். எனவே அவருக்காக சென்னை கல்லூரிகள் பற்றி நிறைய தகவல்கள் விசாரித்தேன்.. அது பற்றிய ஒரு குறிப்பு..
உண்மையில் இப்போது சென்னை கல்லூரிகளில் பி.காம் சீட் கிடைப்பது தான் மிக கடினம்... !! கல்லூரிகளில் பி. எஸ். சி படிப்பிற்கான கவுண்ட்டர்கள் கூட்டமே இன்றி இருக்க, பி.காம்க்கு மட்டும் பல்வேறு கவுண்ட்டர்கள்.. !!ஒவ்வொன்றிலும் கூட்டம் அம்முகிறது..
+ 2 வில் கணிதம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி படித்த மாணவர்கள் பெரும்பாலும் பணம் தந்தாவது இஞ்சினியரிங் சேர்ந்து விடுகிறார்கள். எனவே பி. எஸ். சி - Physics, Chemistry போன்ற படிப்புகளுக்கு கூட்டம் மிக குறைவாக உள்ளது.. அதே நேரம் + 2 வில் காமர்ஸ், அக்கவுண்ட்ஸ் படித்த மாணவர்கள் விரும்பும் ஒரே படிப்பாக பி. காம் இருக்கிறது.
உங்கள் மகன்/ மகள் அல்லது நெருங்கிய உறவினர் மகன்/ மகள்க்கு பி. காம் சீட் வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது:
1. தேர்வு முடிவு வர சில வாரங்கள் முன்னரே பல கல்லூரிகளில் அப்ளிகேஷன் தர துவங்கி விடுகிறார்கள். முடிந்தால் முன்பே அவற்றில் சில வாங்கி - மதிப்பெண் தவிர மற்ற விஷயங்கள் எழுதி வைத்து விடுவது நல்லது.
2. ரிசல்ட் வந்ததும், கணினியில் தெரியும் மார்க் சீட் பிரிண்ட் எடுத்து கொண்டு உடனடியாய் நீங்கள் சேர வேண்டிய கல்லூரியை அணுகி அப்ளிகேஷன் தந்து விடவும். காரணம் பல கல்லூரிகள் - அப்ளிகேஷன் வருகிற வரிசையிலேயே அட்மிஷன் போடுகிறார்கள். அந்த கல்லூரியில் பி. காம் படிப்புக்கு 100 சீட் என்றால் முதல் நாளே 1000 பேர் அப்ளிகேஷன் தருகிறார்கள். அதில் முதல் 100 மார்க் எடுத்தோருக்கு முதல் லிஸ்ட் தேர்வு என + 2 தேர்வு முடிவு வந்த மறு நாளே பல பெரிய கல்லூரிகள் வெளியிட துவங்கி விடுகின்றன.
தேர்வு முடிவு வெளிவந்து மறு நாள் சென்றாலே, அந்த கல்லூரியின் முதல் லிஸ்ட் வெளியாகி இருக்கும் !! அதில் சில பேர் சேராமல் போவார்கள்; எனவே அடுத்த லிஸ்ட் வெளியாகும்..
நாங்கள் சில காரணங்களால் 3 நாள் கழித்து தான் கல்லூரிகளை அணுகினோம்; அதற்குள் பல கல்லூரிகளில் முதல் 2 லிஸ்ட் முடிவுகள் வெளியாகி விட்டது...!!
3. நீங்கள் ஒரு வேளை முன்பே அப்ளிகேஷன் வாங்கி வைத்திரா விடில், உங்கள் மகன்/ மகளின் 10ஆம் வகுப்பு மார்க் சீட் , + 2 மார்க் சீட், சாதி சர்டிபிகேட், அவனது பெயர் உள்ள ரேஷன் கார்ட் காப்பி இவற்றின் நகல்களை எடுத்து கொண்டு ரிசல்ட் வரும் நாளே கல்லூரியை அணுகி விடுங்கள். அப்ளிகேஷன் எளிமையாக தான் இருக்கும். வாங்கி அங்கேயே பில் செய்து கொடுத்து விட்டு வந்து விடலாம்.
4. கொடுக்கிற அப்ளிகேஷன்களை உடனடியே பார்த்து விட்டு அநேகமாய் மறு நாளே பல கல்லூரிகள் தேர்வான மாணவர்களுக்கு SMS மற்றும் மெயில் அனுப்பி விடுகிறார்கள். அதுவும் அந்த SMS /மெயில் வந்த மறு நாளே பணம் கட்டி சேர வேண்டும் என்ற ரீதியில் தான் அனைத்து கல்லூரிகளும் பணிக்கின்றன. நீங்கள் முடிவு செய்ய நேரம் தருவதே இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட தேதியில் சென்று " கல்லூரியில் சேர - பணம் கட்ட நேரம் கொடுங்க" என்று கேட்டால் அவர்கள் - தருவதே இல்லை; அதிக பட்சம் சில நேரங்களில் ஒரு நாள் அவகாசம் தரலாம்; அதற்கே நீங்கள் போராட வேண்டும்.
எனவே இந்த கல்லூரியில் சேரலாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு அவகாசமும் குறைவாகவே இருக்கும். மற்ற கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பதும் தெரியாத நிலையில் - இந்த நாள் சென்று பீஸ் கட்டா விடில் - இந்த சீட்டும் போய் விடும் என்கிற டென்ஷன் வேறு..
5. பெரும் கல்லூரிகளில் ஒரு செமஸ்டர் பீஸ் 25,000 முதல் 30,000 வரை ஆகிறது. இந்த பணத்தை தயாராய் வைதிருப்பதும் அவசியம். முன்பே சொன்னது போல் முதல் நாள் அப்ளிகேஷன் தந்தால் ஓரிரு நாளில் செலக்ஷன் லிஸ்ட் வந்து விடும்; மறு நாளே நேரில் வந்து கவுன்சலிங் முடித்து பணம் கட்ட சொல்வார்கள்.. எனவே இந்த பணம் புரட்ட அதிக அவகாசம் இருக்காது.. எனவே பணம் தயாராய் இருப்பது அவசியம்..
6. அனைத்து கல்லூரிகளிலும் மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பதில்லை; காமர்ஸ், அக்கவுண்டன்சி, எக்கனாமிக்ஸ், வணிக கணிதம் (அல்லது ) கணினி அறிவியல் - ஆகிய முக்கிய படிப்பில் என்ன மார்க் எடுத்தார்களோ அதன் அடிப்படையில் தான் அட்மிஷன் தரப்படுகிறது
7. சிறந்த பெண்கள் கல்லூரிகளான ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, MOP வைஷ்ணவா போன்றவற்றில் முதல் லிஸ்ட் டில் - 4 பாடங்களிலும் 200 மார்க் எடுத்தோருக்கு தான் சீட் கிடைக்கிறது !! நம்ப சிரமமாய் தான் இருக்கும்.. நினைத்து பாருங்கள் .. 800க்கு 800.. மிக மிக குறைந்த பட்சம் 799 மார்க்குடன் முதல் லிஸ்ட் நின்று விடுகிறது !
விமன்ஸ் கிறித்துவ கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி போன்ற கிருத்துவ கல்லூரிகளில் 25% கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த கல்லூரிகளில் கிருத்துவ மாணவிகளில் பலருக்கு முதல் லிஸ்ட்டில் 790 அல்லது 780 மார்க் வரை கூட சீட் கிடைக்க வாய்ப்ப்புண்டு
8. எத்திராஜ், விமன் கிறிஸ்டியன் கல்லூரி போன்ற பல கல்லூரிகளில் Aided மற்றும் செல்ப் பைனான்சிங்க் என்ற 2 பிரிவும் இருக்கிறது; Aided க்கு பீஸ் நிச்சயம் குறைவு; ஆனால் சீட் கிடைப்பது இன்னும் சிரமமாக இருக்கிறது; அநேகமாய் 4 பாடத்திலும் சேர்த்து 800 அல்லது 799 வாங்கினால் தான் அங்கு வாய்ப்பு.
9. இட ஒதுக்கீடு முறை கல்லூரிகளில் பின்பற்றப்படுகிறது; இதனால் குறைந்த பட்சம் SC மற்றும் MBC மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள். FC பிரிவினர் பாடு பெரும் திண்டாட்டம் என்றால், BC அதற்கடுத்து வருவதால் அவர்களுக்கு சீட் கிடைப்பதும் சிரமமாகவே இருக்கிறது !
10. நிறைவாக..
அவசியம் 3 அல்லது 4 கல்லூரிகளில் அப்ளை செய்யுங்கள்; எந்தெந்த கல்லூரியில் சென்ற வருடம் என்ன கட் ஆப் - இந்த வருட கட் ஆப் என்னவாக இருக்கும் என்கிற விபரங்களை முன் கூட்டியே சேகரியுங்கள்.
நிச்சயம் ஏதேனும் ஒரு கல்லூரியிலிருந்து அழைப்பு வரும். ஆனால் மனித மனமே - எங்கு கிடைக்கிறதோ அதை பெரிதாய் நினைக்க மாட்டோம்; எங்கு கிடைக்கலையோ அதற்கு தான் ஏங்கும். அதே நேரம் இந்த வாய்ப்பையும் தவற விட்டால் என்ன ஆவது என்கிற கேள்வியும் உள்ள நிலையில் சரியான முடிவு எடுப்பது மிக அவசியம் !!
2013 ல் இந்தியா டுடே சர்வேயில் காமர்ஸ் படிக்க சென்னையில் சிறந்த கல்லூரிகள் என பரிந்துரைத்தவை இவை; அநேகமாய் இது சம்பந்தமாய் நடந்த இன்னும் சில சர்வேக்களும் கூட இந்த கல்லூரிகளை தான் சொல்கிறது:ANK
2.Madras Christian College(MCC)
3.Stella Maris College
4.Ethiraj College for Women
5.MOP Vaishnav College for women
6.D.G Vaishnav College
7.Women’s Christian College
8.Presidency College
9.Vivekananda College
10.Meenakshi College for Women
******
அண்மை பதிவுகள்:
தொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர்
இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்
லயோ...லா !! |
உண்மையில் இப்போது சென்னை கல்லூரிகளில் பி.காம் சீட் கிடைப்பது தான் மிக கடினம்... !! கல்லூரிகளில் பி. எஸ். சி படிப்பிற்கான கவுண்ட்டர்கள் கூட்டமே இன்றி இருக்க, பி.காம்க்கு மட்டும் பல்வேறு கவுண்ட்டர்கள்.. !!ஒவ்வொன்றிலும் கூட்டம் அம்முகிறது..
+ 2 வில் கணிதம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி படித்த மாணவர்கள் பெரும்பாலும் பணம் தந்தாவது இஞ்சினியரிங் சேர்ந்து விடுகிறார்கள். எனவே பி. எஸ். சி - Physics, Chemistry போன்ற படிப்புகளுக்கு கூட்டம் மிக குறைவாக உள்ளது.. அதே நேரம் + 2 வில் காமர்ஸ், அக்கவுண்ட்ஸ் படித்த மாணவர்கள் விரும்பும் ஒரே படிப்பாக பி. காம் இருக்கிறது.
உங்கள் மகன்/ மகள் அல்லது நெருங்கிய உறவினர் மகன்/ மகள்க்கு பி. காம் சீட் வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது:
1. தேர்வு முடிவு வர சில வாரங்கள் முன்னரே பல கல்லூரிகளில் அப்ளிகேஷன் தர துவங்கி விடுகிறார்கள். முடிந்தால் முன்பே அவற்றில் சில வாங்கி - மதிப்பெண் தவிர மற்ற விஷயங்கள் எழுதி வைத்து விடுவது நல்லது.
2. ரிசல்ட் வந்ததும், கணினியில் தெரியும் மார்க் சீட் பிரிண்ட் எடுத்து கொண்டு உடனடியாய் நீங்கள் சேர வேண்டிய கல்லூரியை அணுகி அப்ளிகேஷன் தந்து விடவும். காரணம் பல கல்லூரிகள் - அப்ளிகேஷன் வருகிற வரிசையிலேயே அட்மிஷன் போடுகிறார்கள். அந்த கல்லூரியில் பி. காம் படிப்புக்கு 100 சீட் என்றால் முதல் நாளே 1000 பேர் அப்ளிகேஷன் தருகிறார்கள். அதில் முதல் 100 மார்க் எடுத்தோருக்கு முதல் லிஸ்ட் தேர்வு என + 2 தேர்வு முடிவு வந்த மறு நாளே பல பெரிய கல்லூரிகள் வெளியிட துவங்கி விடுகின்றன.
வனம் போன்ற MCC வளாகம் |
தேர்வு முடிவு வெளிவந்து மறு நாள் சென்றாலே, அந்த கல்லூரியின் முதல் லிஸ்ட் வெளியாகி இருக்கும் !! அதில் சில பேர் சேராமல் போவார்கள்; எனவே அடுத்த லிஸ்ட் வெளியாகும்..
நாங்கள் சில காரணங்களால் 3 நாள் கழித்து தான் கல்லூரிகளை அணுகினோம்; அதற்குள் பல கல்லூரிகளில் முதல் 2 லிஸ்ட் முடிவுகள் வெளியாகி விட்டது...!!
3. நீங்கள் ஒரு வேளை முன்பே அப்ளிகேஷன் வாங்கி வைத்திரா விடில், உங்கள் மகன்/ மகளின் 10ஆம் வகுப்பு மார்க் சீட் , + 2 மார்க் சீட், சாதி சர்டிபிகேட், அவனது பெயர் உள்ள ரேஷன் கார்ட் காப்பி இவற்றின் நகல்களை எடுத்து கொண்டு ரிசல்ட் வரும் நாளே கல்லூரியை அணுகி விடுங்கள். அப்ளிகேஷன் எளிமையாக தான் இருக்கும். வாங்கி அங்கேயே பில் செய்து கொடுத்து விட்டு வந்து விடலாம்.
4. கொடுக்கிற அப்ளிகேஷன்களை உடனடியே பார்த்து விட்டு அநேகமாய் மறு நாளே பல கல்லூரிகள் தேர்வான மாணவர்களுக்கு SMS மற்றும் மெயில் அனுப்பி விடுகிறார்கள். அதுவும் அந்த SMS /மெயில் வந்த மறு நாளே பணம் கட்டி சேர வேண்டும் என்ற ரீதியில் தான் அனைத்து கல்லூரிகளும் பணிக்கின்றன. நீங்கள் முடிவு செய்ய நேரம் தருவதே இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட தேதியில் சென்று " கல்லூரியில் சேர - பணம் கட்ட நேரம் கொடுங்க" என்று கேட்டால் அவர்கள் - தருவதே இல்லை; அதிக பட்சம் சில நேரங்களில் ஒரு நாள் அவகாசம் தரலாம்; அதற்கே நீங்கள் போராட வேண்டும்.
ஸ்டெல்லா மாரிஸ்.. இங்கு படித்து முடிப்பதை மிக மிக பெருமையாக கருதுகிறார்கள் ! |
எனவே இந்த கல்லூரியில் சேரலாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு அவகாசமும் குறைவாகவே இருக்கும். மற்ற கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பதும் தெரியாத நிலையில் - இந்த நாள் சென்று பீஸ் கட்டா விடில் - இந்த சீட்டும் போய் விடும் என்கிற டென்ஷன் வேறு..
5. பெரும் கல்லூரிகளில் ஒரு செமஸ்டர் பீஸ் 25,000 முதல் 30,000 வரை ஆகிறது. இந்த பணத்தை தயாராய் வைதிருப்பதும் அவசியம். முன்பே சொன்னது போல் முதல் நாள் அப்ளிகேஷன் தந்தால் ஓரிரு நாளில் செலக்ஷன் லிஸ்ட் வந்து விடும்; மறு நாளே நேரில் வந்து கவுன்சலிங் முடித்து பணம் கட்ட சொல்வார்கள்.. எனவே இந்த பணம் புரட்ட அதிக அவகாசம் இருக்காது.. எனவே பணம் தயாராய் இருப்பது அவசியம்..
6. அனைத்து கல்லூரிகளிலும் மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பதில்லை; காமர்ஸ், அக்கவுண்டன்சி, எக்கனாமிக்ஸ், வணிக கணிதம் (அல்லது ) கணினி அறிவியல் - ஆகிய முக்கிய படிப்பில் என்ன மார்க் எடுத்தார்களோ அதன் அடிப்படையில் தான் அட்மிஷன் தரப்படுகிறது
7. சிறந்த பெண்கள் கல்லூரிகளான ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, MOP வைஷ்ணவா போன்றவற்றில் முதல் லிஸ்ட் டில் - 4 பாடங்களிலும் 200 மார்க் எடுத்தோருக்கு தான் சீட் கிடைக்கிறது !! நம்ப சிரமமாய் தான் இருக்கும்.. நினைத்து பாருங்கள் .. 800க்கு 800.. மிக மிக குறைந்த பட்சம் 799 மார்க்குடன் முதல் லிஸ்ட் நின்று விடுகிறது !
விமன்ஸ் கிறித்துவ கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி போன்ற கிருத்துவ கல்லூரிகளில் 25% கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த கல்லூரிகளில் கிருத்துவ மாணவிகளில் பலருக்கு முதல் லிஸ்ட்டில் 790 அல்லது 780 மார்க் வரை கூட சீட் கிடைக்க வாய்ப்ப்புண்டு
8. எத்திராஜ், விமன் கிறிஸ்டியன் கல்லூரி போன்ற பல கல்லூரிகளில் Aided மற்றும் செல்ப் பைனான்சிங்க் என்ற 2 பிரிவும் இருக்கிறது; Aided க்கு பீஸ் நிச்சயம் குறைவு; ஆனால் சீட் கிடைப்பது இன்னும் சிரமமாக இருக்கிறது; அநேகமாய் 4 பாடத்திலும் சேர்த்து 800 அல்லது 799 வாங்கினால் தான் அங்கு வாய்ப்பு.
எத்திராஜ் கல்லூரி |
10. நிறைவாக..
அவசியம் 3 அல்லது 4 கல்லூரிகளில் அப்ளை செய்யுங்கள்; எந்தெந்த கல்லூரியில் சென்ற வருடம் என்ன கட் ஆப் - இந்த வருட கட் ஆப் என்னவாக இருக்கும் என்கிற விபரங்களை முன் கூட்டியே சேகரியுங்கள்.
நிச்சயம் ஏதேனும் ஒரு கல்லூரியிலிருந்து அழைப்பு வரும். ஆனால் மனித மனமே - எங்கு கிடைக்கிறதோ அதை பெரிதாய் நினைக்க மாட்டோம்; எங்கு கிடைக்கலையோ அதற்கு தான் ஏங்கும். அதே நேரம் இந்த வாய்ப்பையும் தவற விட்டால் என்ன ஆவது என்கிற கேள்வியும் உள்ள நிலையில் சரியான முடிவு எடுப்பது மிக அவசியம் !!
2013 ல் இந்தியா டுடே சர்வேயில் காமர்ஸ் படிக்க சென்னையில் சிறந்த கல்லூரிகள் என பரிந்துரைத்தவை இவை; அநேகமாய் இது சம்பந்தமாய் நடந்த இன்னும் சில சர்வேக்களும் கூட இந்த கல்லூரிகளை தான் சொல்கிறது:ANK
NAME OF THE COLLEGE
1.Loyola College2.Madras Christian College(MCC)
3.Stella Maris College
4.Ethiraj College for Women
5.MOP Vaishnav College for women
6.D.G Vaishnav College
7.Women’s Christian College
8.Presidency College
9.Vivekananda College
10.Meenakshi College for Women
******
அண்மை பதிவுகள்:
தொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர்
இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்
பயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDelete