சினிமா பட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண்களை தொடர்ந்து கொல்கிறார்கள்.. அவர்கள் வளர்ந்து சினிமாவில் நடிக்க போவதால்!! இதில் தப்பி பறவை முனியம்மாவால் வளர்க்கபடுகிறார் ஹீரோ சிவா. பெரியவராகி, மர்மமான முறையில் பலரை கொலை செய்கிறார். தன் "இளம்" நண்பர்களுடன் சுற்றுகிறார்.. இறுதியில் அவர் கொலை செய்தது ஏன், வில்லன்களுக்கெல்லாம் வில்லனாக இருந்தது யார் என்ற கேள்விகளுக்கு சிரிப்போடு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்..
படம் மீது நமது எதிர் பார்ப்பு நன்கு சிரிக்க வைப்பார்கள் என்பதே. அதற்கு வஞ்சனை இல்லாமல் செய்துள்ளனர். தியேட்டர் சிரிப்பு சத்தத்தில் இப்படி நிறைந்து நெடு நாளாகிறது. சில நேரம் வசனம் ஆரம்பித்ததும் சிரிப்பு சத்தம் ஆரம்பிக்க, மீதம் வசனம் கேட்க முடிய வில்லை.
ரன், சிவாஜி, மொழி, காக்க காக்க என பல காட்சிகளில் இருந்து ஒவ்வொரு சீனும் உருவி உள்ளனர். ஆனால் தொடர்ந்து செல்லும் flow-வில் ஒட்டு போல் இல்லாமல், சரளமாய் செல்வது ஆச்சரியம்!! இங்கு தான் இயக்குனர் ஜெயிக்கிறார்.
ஹீரோவின் இளம் நண்பர்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி, MS பாஸ்கர், மனோ பாலா!! இவர்கள் பெயர் பரத். சித்தார்த் இப்படி போகிறது !!
ஹீரோ சிவா இந்த கேரக்டரக்கு மிக சரியாக பொருந்துகிறார். அவரது body language & மேனரிசம் very apt!! ஹீரோ introduction scene - சிரித்து முடியலை. ஹீரோ காலை தூக்கி கொண்டு நிற்க, கேமரா முழுதும் சுற்றி முடிக்கிறது. பின் பக்கம் பார்த்தால் ஹீரோ பேன்ட் கிழிந்திருக்கிறது !!
ஹீரோயின் ஓரளவு அழகு. தமிழ் படங்களில் normal என்ன பங்கிருக்குமோ அதே..
ஆரம்பத்தில் வரும் மம்மூட்டி போன்ற வில்லன் காட்சிகள் கலக்கல். அதை விட தியேட்டர் அதிருவது டெல்லி கணேஷ் கொலை செய்யப்படும் அபூர்வ சகோதரர்கள் type காட்சியில்! மேலும் பல காட்சிகள் குறிப்பிடலாம். ஆனால் சொன்னால் நீங்கள் பார்க்கும் போது ரசிக்க முடியாது என்பதால் குறிப்பிடாமல் விடுகிறேன்.
முடியும் முன் கொஞ்சம் தொய்வடைவது போல் தெரிகிறது; ஆனாலும் தியேட்டர் சிரிப்பு சத்தம் non stop தான் !!
பாடல்கள் ஜாலியாக பார்க்க முடிகிறது. இசை அறிமுகம் கண்ணன்.
இயக்குனர் மிக வித்யாசமான concept தேர்வால் நிச்சயம் இந்த படம் success ஆகி விடும். அடுத்து எந்த வித கதை செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது. சுஜாதா சொல்வது போல் எல்லா இயக்குனருக்கும் நிஜ டெஸ்ட் ரெண்டாம் படம் தான்!!
இந்த அளவு கிண்டல் செய்ய தைரியமும் கூட தயாரிப்பு வலுவான background உள்ள மக்களாய் இருப்பதால் தான் சாத்தியம். இது போல தமிழில் இன்னொரு spoof படம் வருமா தெரிய வில்லை.
கதை, நடிப்பு இப்படி ஏதும் எதிர் பார்க்காதீர்கள், சிரிப்பு மட்டுமே ஒரே எண்ணத்துடன் சென்றால் நன்றாக சிரித்து விட்டு வர ஓர் படம் தமிழ் படம் !!