Tuesday, February 16, 2010

கிரிக்கட் வீரர்கள் .. பிடித்ததும் பிடிக்காததும்

கிரிக்கட் பன்னிரண்டாவது படிக்கும் போது பித்து பிடித்து அலைய வைத்தது; என் வாழ்கையை வேறு திசைக்கு திருப்பியதில் முக்கிய பங்கு அதற்கு உண்டு; மேட்ச் பிக்சிங் போன்ற தருணங்களில் வெறுத்தாலும் பின் மீண்டும் காதல் வந்து விடுகிறது.


         எனக்கு மிக பிடித்த இரு  கிரிக்கட் வீரர்கள் : சச்சின் & கில்கிறிஸ்ட்
                                                   ****

பதிவர் வரதராஜலு கிரிக்கட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார்.

வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? ஆடம் கில்க்ரிஸ்ட்
சச்சின்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? அக்குப் ஜாவித் (பாகிஸ்தான் வீரர்..சச்சினை மற்றும் இந்தியர்கள் பற்றி மிக தவறாக எப்பவும் பேசுவார்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லி (மிக குறைந்த மேட்ச்களில் மிக அதிக விக்கட்டுகள் வீழ்த்தினார்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீ சாந்த் (சவுண்ட் இருக்கும் அளவு மேட்டர் இருப்பதில்லை)

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே
முக்கியமாய் அவரது " Never give up" attidue –க்காக)

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக்

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர் சச்சின், ரிச்சர்ட்ஸ்,ஷேவக்

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர் சில நேரம் டிராவிட் (போர்!!)

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட்,கம்பீர், பிரையன் லாரா

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர் குறிப்பாய் யாருமில்லை

11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் ரவி சாஸ்த்ரி (இந்தியா கேட் என்பார்கள்.. அவ்ளோ கப்பை விடுவார்)

13. பிடித்த ஆல்ரவுண்டர் கபில்தேவ், இம்ரான் கான்

14. பிடித்த நடுவர் டேவிட் ஷெபெர்ட், டிக்கிபேர்ட்

15. பிடிக்காத நடுவர் அசோகா டீ சில்வா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் ரவிசாஸ்திரி

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை

18. பிடித்த அணி இந்தியா, சில நேரம் ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி ஒப்புக்கு ஆடும் நாடுகள்

20. விரும்பி பார்க்கும் அணி- இந்தியா - பாகிஸ்தான்
களுக்கிடையேயான போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கி- ஆஸ்திரேலியா - பங்களாதேஷ்
டையேயான போட்டி

22. பிடித்த அணி தலைவர் ஸ்டீவ் வா, இம்ரான் கான்

23. பிடிக்காத அணித்தலைவர் சச்சின் (கேப்டன்சி சுத்த மோசம்)

24. பிடித்த போட்டி வகை (டெஸ்ட், ஒருநாள், இஇ): ஒன் டே மேட்ச் (நிறைய பார்த்து பழக்கமாயிடுச்சு)

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி சச்சின் – ஷேவக் (One day matches)


26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட் ஜோடி கவாஸ்கர் -சேட்டன் சௌஹான்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், லாரா,வார்னே

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின்


நான் அழைக்கும் பதிவர்கள்:

சங்கர் (பார்த்ததும் படித்ததும்)
அன்புடன் மணிகண்டன்

13 comments:

  1. சொல்லிட்டீங்கல்ல தொடர்ந்துடுவோம்

    ReplyDelete
  2. ஆஹா, உங்க ரசனையும் என்னோட ரசனையும் பல ஓத்துபோகிறது.

    //மேட்ச் பிக்சிங் போன்ற தருணங்களில் வெறுத்தாலும் பின் மீண்டும் காதல் வந்து விடுகிறது. //

    ஒத்துக்கொள்கிறேன்.

    தொடர்ந்தமைக்கு நன்றி மோகன்குமார்

    ReplyDelete
  3. இந்த பதில்களில், "answers fixing" எதுவும் இல்லையே. அப்போ சரியான தேர்வுகள் தான். :-)

    ReplyDelete
  4. மோகன் சார்.. பதிவு போட்டுட்டேன்.. வந்து பாருங்க... :)

    ReplyDelete
  5. பெட்டிங் பத்தி ஏதும் எழுதலையே மோகன்

    ReplyDelete
  6. நமக்கும் இந்த இடுகைக்கும் சம்பந்தமில்லாததால் ப்ரெஸண்ட் சார். அவ்ளோ தான். ஜூட்டு.

    ReplyDelete
  7. ஓ.. இப்டி ஒரு மேட்டர் ஓடிட்டு இருக்கா? :))
    நமக்கும் கிரிக்கெட்டுக்கும் கொஞ்சம் தூரமுங்க..

    ReplyDelete
  8. ஜஸ்ட் வருகைப்பதிவு :)

    ReplyDelete
  9. எனக்கும் அழைப்பு வந்து இருக்கு எழுதணும்.

    ReplyDelete
  10. // SanjaiGandhi™ said...

    ஓ.. இப்டி ஒரு மேட்டர் ஓடிட்டு இருக்கா? :))
    நமக்கும் கிரிக்கெட்டுக்கும் கொஞ்சம் தூரமுங்க..//

    என்ன, ஒரு ஏழரை கி.மீ. இருக்குங்குளா? :-)

    ReplyDelete
  11. தொடர போவதற்கு நன்றி சங்கர்
    ----
    வரதராஜலு ஐயா: வணக்கம் நன்றி
    ----
    சித்ரா :))
    ----
    மணி: நன்றி பார்த்தேன்
    ----
    தேனம்மை மேடம்: ஆம்; நீங்க சொன்னது சரியே; நேரமில்லை

    ReplyDelete
  12. வாங்க விக்கி; ஏதோ இப்படியாவது வரீங்களே
    -----
    சஞ்சய்: அட ஆச்சரியமா இருக்கே; கிரிக்கட் பிடிக்காத ஆணா? ரொம்ப நல்லது தான் சஞ்சய்; நிறைய நேரம் மிச்சம்
    -----
    ரோமியோ அப்துல்லா : நன்றி
    -----

    ReplyDelete
  13. Anonymous2:07:00 PM

    பதில்கள் நன்றாக இருந்தது. ஒன்றை தவிர //பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர் சில நேரம் டிராவிட் (போர்!!)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...