Thursday, April 29, 2010

மைசூர் கூர்க் பயண கட்டுரை படங்களுடன்

ஏப்ரல் இறுதி வாரத்தில் குடுமபத்துடன் மைசூர் மற்றும் கூர்க் சென்று வந்தோம். மே மாதம் இறுதி வாரம் செல்வது தான் முதல் பிளான். ஆனால் எங்கள் கம்பெனி போர்ட் மீட்டிங் மே இறுதியில் என திடீர் முடிவானதால், மே மாதத்தில் லீவ் எடுப்பது சிரமம் என ஏப்ரலில் சென்றோம். இரு வாரங்களுக்கு முன் புக் செய்ததால் டிக்கட் RAC-ல் இருந்தது. RAC தானே நிச்சயம் confirm ஆகிடும் என இருந்தவனுக்கு ரயில் நிலையம் சென்ற போது முதல் அதிர்ச்சி.

டிக்கட் confirm ஆனதை முன்பே நெட்டில் பார்த்திருந்தேன். சார்ட்டில் கோச் நம்பர் பார்த்தால், ES 1 என இருந்தது. மைசூர் எக்ஸ்பிரஸ் மிக பெரிய ட்ரைன். அதில் பின்னாலிருந்து முன்னால் வரை இரு முறை, luggage உடன் நடந்தும் ES 1 என்ற கோச் எண் இல்லை. பின் எங்களை போலவே பலரும் அதே கோச் தேடி அலைவது தெரிந்தது. எந்த டிக்கட் செக்கரும் சரியான பதில் சொல்லலை. பின் பயணிகள் சிலர் இஞ்சினில் ஏறி தகராறு செய்யவும், அந்த எக்ஸ்ட்ரா கோச் சேர்க்க மறந்து விட்டோம் என ஒப்பு கொண்டனர். இன்னும் பத்து நிமிடமே பாக்கி இருக்க, செம டென்ஷன். அந்த கோச் கோர்க்காமல் வண்டி எடுக்க விட மாட்டோம் என பயணிகள் தகராறு செய்ததும் வேறு வழி இன்றி " கோச் கோர்த்ததும் வண்டி கிளம்பும்" என்றனர். கேரஜிளிருந்து ஒரு சுமாரான கோச் வந்து சேர்ந்து, வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

இதனை நான் இங்கு எழுத காரணம், இந்த எக்ஸ்ட்ரா கோச் என்றாலே அவ்வபோது பிரச்சனை வருகிறதாம். அதற்கு டாப் ஆபிசர் ஒப்புதல் வாங்க வேண்டுமாம். இப்படி வாங்காத போது கோச் மாட்டாமல் சில நேரம் "வேறு ஏதாவது கோச்சில் ஏறி அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்குங்க " என்று சொல்லி விடுகிறார்களாம். வேறு சிலர் தங்கள் அனுபவமாக இதனை கூறினர்.

வயதானவர்கள், கை குழந்தை வைத்தவர்கள் என பலரும் முன்னும் பின்னுமாய் பல முறை லக்கேஜ் உடன் அலைந்து அலைந்து அன்று நொந்து போயினர். ரயில்வேயின் அலட்சியம், சரியான பதில் கூறாமை, "கோச் முன்னால் மாட்டுவோம், பின்னால் மாட்டுவோம்" என ஆளுக்கு ஒன்றாய் சொல்லி அலைகழித்தது, எந்த announcement-ம் செய்யாதது.. இவை ரொம்பவும் உறுத்தியது.

ஒரு வழியாய் இந்த டிராமாவுடன் எங்கள் பயணம் துவங்கியது.
****
மைசூரில் நாங்கள் சித்தார்த்தா என்ற ஹோட்டலில் தங்கினோம், ரொம்ப reasonable & decent ஆன ஹோட்டல் அது. அறை வாடகை 800 முதல் 1500 வரை உள்ளது. ஹோட்டல் நன்கு maintain செய்கின்றனர். மைசூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடையில் செல்லலாம். ஆட்டோ எனில் 15 ரூபாய். Mysore palace, Art gallery, Chamundi Hills என பல இடங்களுக்கு அருகில் உள்ளது.


 எல்லாவற்றையும் விட சாப்பாடு ரொம்ப அருமை. வேறு ஹோட்டலில் தங்குவோர் கூட இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பாடு விலையும் very reasonable. எங்கள் அலுவலத்திலிருந்து இது வரை பலர் இங்கு சென்று தங்கி நல்ல ஒபினியன் தந்துள்ளனர்.



நிச்சயமாக நம்பி recommend செய்ய கூடிய ஹோட்டல் இது. Worth the money we pay for room & food.


****

முதல் நாள் காலை நாங்கள் மைசூர் பேலஸ் பார்த்தோம். நாங்கள் தங்கிய ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம். ஆட்டோவில் சென்று திரும்பினோம்.

 













Mysore palace is fantastic!! முதலில் இங்கு வேறு பேலஸ் இருந்துள்ளது. அதன் ஒரு பகுதி தீ விபத்தில் டேமாஜ் ஆனதால் கிருஷ்ண ராஜ உடையார் என்ற ராஜா இந்த பேலஸ் கட்டியுள்ளார். இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த போது கட்டப்பட்ட பேலஸ் இது. இதற்கான பொருள்கள் எல்லாம் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து "The Best" ஆக பார்த்து கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணமாக கண்ணாடி எனில் உலக புகழ் பெற்ற பெல்ஜியம் கண்ணாடி (இன்னும் ரசம் போகாமல் அழாகாய் உள்ளது), மார்பிள்கள் வேறு ஒரு நாடு.. இப்படி.. பேலசின் பல இடங்கள் நம் விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைக்கிறது. மிக குறிப்பாய் தர்பார் நடக்கும் இடம் மற்றும் கல்யாணம் நடக்கும் இடம் (இங்கு தலைக்கு மேல் artwork வேலைபாடுகள் அற்புதம்!!) ..இவை ரொம்ப அழகு!!


பேலஸ் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. இதன் அருகிலேயே பழைய பேலசும் உள்ளது. நாங்கள் முதல் பேலஸ் சுற்றி, முழுக்க சோர்வானதால் அது பார்க்கலை.

****
மதியம் தூங்கி விட்டு மாலை பிருந்தாவன் கார்டன் சென்றோம். அருகில் பஸ் ஸ்டாண்டிலிருந்து நல்ல பஸ்கள் உள்ளன. நாங்கள் தூங்கி எழ நேரம் ஆனதால் காரில் சென்றோம். சென்று வர 400 ரூபாய்.

பிருந்தாவன் கார்டன் மாலை 5.30 மணிக்கு மேல் தான் பார்க்கிறார்கள். பூக்கள் வெயில் காலம் என்பதால் ஓரளவு தான் உள்ளது.

பிருந்தாவன் கார்டன் Aquariumல் உள்ள இந்த மீன் 40000 ரூபாயாம்

 இரவு ஆறரை முதல் Fountain-ல் Musical show உள்ளது. பார்க்க நன்றாக இருந்தது.
















மைசூரில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. பிருந்தாவன் கார்டன் பார்க்கா விட்டால் கூட பெரிய இழப்பில்லை என்று சொல்லலாம். ஆனால் மிக புகழ் பெற்ற இடம் என்பதால் மக்கள் தவறாமல் போகிறார்கள்.

      
வில்லன்.அப்புறம் ஹீரோ..Next சி.எம் :))     அவ்ளோ தாகமா என்ன? :))

***
காரில் திரும்பும் போது தேவராஜ் அர்ஸ் ரோடு, சாயாஜி ராவ் ரோடு ஆகியவை வந்து சற்று ஷாபிங் செய்தோம், இந்த இரு தெருக்கள் தான் மைசூரில் ஷாபிங் செய்ய சிறந்த இடங்கள் என்கிறார்கள். காவேரி ஆர்ட் எம்போரியம் ரொம்ப புகழ் பெற்றதாம். நல்ல வேளை நாங்கள் தாமதமாய் வந்ததால் மூடிட்டாங்க (வாழ்க!! இல்லாட்டி பர்ஸ் பழுத்திருக்கும்!!). கொஞ்சம் துணி மணிகள் வாங்கினாங்க. (நமக்கு தீபாவளிக்கு மட்டும் தான் வாங்கி தருவாங்க!!) தேவராஜ் அர்ஸ் ரோட்டில் உள்ள புவனேஸ்வரி சுவீட் ஸ்டால் மைசூரில் புகழ் பெற்ற கடை; இங்கு மைசூர் ஸ்பெஷல் சுவீட்டுகள் வாங்கினோம்.
******
அடுத்த நாள் மதியம் மேல் கூர்க் கிளம்பும் ஐடியா. எனவே ஒரு அரை நாள் பேகேஜ் டூரில் சில இடங்கள் பார்கக முடிவு செய்தோம். முழு நாள் டூர் எனில் ஒரு நபருக்கு ரூபாய் 150-ம் , அரை நாள் எனில் 80-ம் வாங்குகின்றனர்.

முதலில் Art gallery பார்த்தோம். " ஒரு மணி நேரத்துக்குள் பார்த்து விட்டு திரும்பனும்" என்றனர். நமக்கு கலை அறிவு கம்மி தான். அதற்கும் சேர்த்து ஹவுஸ் பாசுக்கு உண்டு. இந்த ஒரு மணி நேரம் அற்புத படங்களை பார்கக பத்தலை என்றார்கள். ஓவியர் ரவி வர்மா வரைந்த பல படங்கள் இங்கு உள்ளது.

அடுத்து சாமுண்டி ஹில்ஸ் சென்றோம். ஓர் சின்ன மலை மேல் இந்த கோயில் உள்ளது. இங்கிருந்து மைசூர் வியு பார்கக அழகு!! இங்கு மாலை நேரத்தில் வருவதே சிறப்பாம். விளக்குகளுடன் பார்கக அருமையாய் இருக்குமாம்.

 


மகிசாசுரா என்ற அரக்கனை சாமுண்டி வதம் செய்தாராம். இந்த மகிசாசுரா அரக்கன் பெயர் தான் மருவி மைசூர் ஆனதாம்.

பேக்கஜ் டூர்களில் போகும் போது கூட்டம் அதிகம் இல்லா விட்டால் தான் நீங்கள் இங்கு சாமி பார்கக முடியும், இல்லையேல் வெளியிலிருந்து கும்பிட்டு வர சொல்லிடுவாங்க.

பின் அருகிலேயே உள்ள நந்தி கோயில் சென்றோம். இந்தியாவில் நான்காவது பெரிய நந்தி என்கிறார்கள்.

அடுத்து மைசூர் Zoo சென்றோம்.நுழைந்தவுடன் முதலில் கண்ணில் படுவது ஜிராபி. அவ்வளவு பெரிய மிருகம் முதல் முறையாய் பார்க்க அனைவரும் ஆச்சரியத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்.


சுதந்திரமாக சுத்தும் புலிகளை ஓரளவு அருகிலேயே பார்க்க முடிகிறது. வெள்ளை மயில், வித்யாசமான நிறத்தில் கிளி என குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. எங்களால் அதிகம் நடக்க முடியாமல் பாதி தூரத்தில் திரும்பி விட்டோம்.

கொட்டாவி விடும் சிம்பன்சி

அன்று மதியம் மைசூர் ரூம் காலி செய்து விட்டு கூர்க் பயணமானோம். மைசூர் பஸ் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் Volvo AC பஸ் உள்ளது. மூன்று மணி நேரத்தில் கூர்க் அடைகிறது. மைசூர் டு கூர்க் முன் பதிவு செய்ய முடிய வில்லை. குறைந்தது 220 கிலோ மீட்டர் இருந்தால் தான் முன் பதிவு செய்ய முடியுமாம். அதற்கு குறைவெனில் இடம் இருந்தால் ஏறி கொள்ளலாம். டிக்கட் விலை அதிகம் என ரொம்ப கூட்டமில்லை. மிக வசதியாய் Volvo AC பஸ்ஸில் கூர்க் சென்றடைந்தோம்...கூர்கில் எங்களுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி பற்றி அறியாமல்.....


                                                              ................(அடுத்த பதிவில் முடியும் )

20 comments:

  1. போட்டோ பார்த்தா வெயில் அதிகம் போல இருக்கே!

    ரயில் கோச்சு டெர்ரர்ரா இருக்கே தல! :(

    ReplyDelete
  2. அன்புள்ள மோகன்குமார் அவர்களுக்கு!

    உங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.

    http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments

    அன்புடன் மனோ சாமிநாதன்

    ReplyDelete
  3. போட்டோக்கள் நல்லாயிருக்கு.

    ரயில்வே அதிகாரிகளின் செயல்பாடு கண்டிக்கப் படவேண்டியது.

    நல்ல பகிர்வு சார்.
    நன்றி.

    ReplyDelete
  4. அருமை அருமை.

    ரசிச்சுப் படிச்சேன்.

    இனிய பாராட்டுகள்

    ReplyDelete
  5. எஞ்சாய் ..

    ReplyDelete
  6. Anonymous3:33:00 PM

    பஸ்ல டிக்கெட் கிடைக்கலையா என்ன

    ReplyDelete
  7. //எந்த டிக்கட் செக்கரும் சரியான பதில் சொல்லலை//

    நம்மூருல இது பெரிய தொல்லை. என்ன பண்ணித் தொலையறது?

    ReplyDelete
  8. மைசூரு போகனும்னு எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா ஆசை.... இந்தமுறை ஊருக்கு வரும்போது முயற்சி பண்ணிப்பாக்குறேன்.

    முக்கியமான விஷயங்கள பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சாமி.

    ReplyDelete
  9. ஷங்கர்: ஆம். பகலில் வெயில் அதிகம் தான்.
    ***
    மனோ மேடம். அன்பிற்கு மிக்க நன்றி
    ***
    தொடர் ஆதரவுக்கு நன்றி அமைதி அப்பா
    ***
    துளசி நல்லா பாராட்டுறீங்க. மகிழ்ச்சி நன்றி
    ***
    மணிஜி: ரைட்டு
    ***
    சின்ன அம்மணி : சொல்றேங்க. பிளீஸ் வெயிட்
    ***
    சத்ரியன்: நன்றி. மைசூர் அவசியம் பாருங்க. பார்க்க நிறைய இடம் இருக்கு

    ReplyDelete
  10. டிக்கெட் கொடுத்துட்டு எக்ஸ்ட்ரா கோச் சேர்க்காம போறது கண்டிக்கத் தக்கது.

    பழைய அரண்மணையையும் பார்த்திருந்திருக்கலாம்.

    ஜூ முழுசா சுற்றிப் பார்க்க 3 மணி நேரம் வேணும்.

    ஜூவை அடுத்து கரஞ்சி ஏரியின் நேச்சர் பார்க் ஒண்ணு இருக்கு. ரொம்ப நல்லாயிருக்கும். போட்டிங் உண்டு. இரண்டு பக்கமும் பாக்கு மரங்கள் வரிசை கட்டி நிற்க நீளமாய் வாக் போகலாம் இயற்கையை ரசித்தபடி. பலரும் இதை மிஸ் பண்ணிடுறாங்க.

    கூர்க்கில் என்னாச்சு? சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டீங்களே:)?

    தொடருங்கள். பதிவு அருமை.

    ReplyDelete
  11. ஆஹா நீங்க பெங்களூரில் இருக்கீங்க அல்லவா? அதான் சரியா சொல்றீங்க ராமலக்ஷ்மி; கரஞ்சி பார்க்கில் அதிகம் பூக்கள் & Butterflies தற்போது இல்லை என்றதால் போகலை. நேரமும் இல்லை. நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  12. உங்கள் பதிவைப் பார்த்ததும் மைசூர் பயணம் போய்வந்த உணர்வு. ரயில் அதிகாரிகளின் இதுபோன்ற செயல்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதென்ன ஒரு தொடர்கதையின் சுவாரஸ்யத்தோடு முடித்துவிட்டீர்கள்?

    படங்களும் பதிவும் அருமை. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  13. சுற்றலானாலே ஜாலிதான்......
    உங்களுக்கும் சி.எம் ஆசை வந்திருச்சா.....
    சுறா டிக்கெட் அனுப்பி வைக்கிறேன்....

    ReplyDelete
  14. very nice photos and post about your trip. :-)

    ReplyDelete
  15. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  16. நண்பரே...

    உங்க கட்டுரையையும், படத்தையும் பார்த்ததும் மைசூர் போகனும்னு ஆசை வந்துருச்சு....

    ReplyDelete
  17. பயண கட்டுரை நன்றாக இருக்கிறது. தொடரவும்

    ReplyDelete
  18. மைசூரில் நம் ஊரை விட சாப்பாடு விலை மிகக் குறைவு

    ReplyDelete
  19. நன்றி சரவணா குமார்
    ***
    ஜெட் லி ரைட்டு.. என்னது சுறா டிக்கட்ஆஆ??
    ****
    நன்றி சித்ரா
    ***
    வாங்க செந்தில்.. அடுத்த பதிவும் போட்டு விட்டேன்
    ****
    சங்கவி... அவசியம் போயிட்டு வாங்க நண்பா
    ***
    ரோமியோ: நன்றி. நல்லா இருக்கீங்களா?
    ***
    LK: ஆமாங்க நீங்க சொல்றது சரி தான்; ஆனா அரிசி பெருசா வேகாத மாதிரி இருக்கு அதான் கொஞ்சம் ஒத்துக்காது

    ReplyDelete
  20. மைசூர் நல்ல ரசனையான பதிவு.

    இவ்விடங்கள் பார்த்திருக்கிறேன். அருமையான இடங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...