Tuesday, May 8, 2012

சுஜாதாவின் வஸந்த் வஸந்த் - விமர்சனம்


சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் சுஜாதா வைக்கும் சஸ்பென்ஸ் செமையாக இருக்கும் ! உயிர்மை பதிப்பு நூலாக பல ஆண்டுகளுக்கு பிறகு இதனை இப்போது மீண்டும் வாசித்தேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் முதலில் வாசித்த போது கிடைத்த அதே உணர்வுகள் ..! வாத்தியார் வாத்தியார் தான் !

2005-ல் எழுதிய முன்னுரையில் சுஜாதா இப்படி சொல்கிறார்:

"வஸந்த் முதலில் கதையில் தோன்றி முப்பது ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இன்னும் கல்யாணம் ஆக வில்லை. வஸந்த் பெண்களை பார்த்தால் சற்று அசடு வழிவதோடு சரி (நாம் எல்லோருமே தானே!) "

அட ! சுஜாதாவே பெண்களை பார்த்தால் வழிவாரா என்கிற ஆச்சரியத்துடன் வாங்க கதைக்குள் போவோம்..!

கதை 

னியா என்கிற பெண்ணை காதலிக்கிறான் வஸந்த். இனியாவின் தந்தை ஒரு வரலாற்று பேராசிரியர். அவர் எழுதிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை கடத்தி போகிறது ஒரு கூட்டம். அந்த கட்டுரை வேண்டும் என அவர் சொன்னதால் அதை தேடி போகின்றனர் வஸந்தும் கணேஷும்.



அந்த கட்டுரையில் ராஜராஜன் கிணறு பற்றி எழுத பட்டுள்ளது என அறிந்து அந்த கிணறு இருக்கும் உக்கல் என்கிற கிராமத்துக்கு செல்கின்றனர் கணேஷ் & வஸந்த். அங்கு வினோதமான பல அனுபவங்கள் கிட்டுகின்றன. கிணற்றில் புதையல் உண்டா, தங்க காசுகள் உண்டா என்கிற கேள்வி எல்லாம் தாண்டி, அந்த கிணற்றின் நீருக்காக தான் அவ்வளவு போராட்டம் என்பது தெரிகிறது. அப்படி என்ன அந்த நீரில் விசேஷம், அதை வைத்து என்ன செய்கிறார்கள் வில்லன்கள் என்பது கதையின் இறுதியில் தெரிகிறது.

நாவலின் இறுதியில் இனியா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்க, வஸந்த் அடுத்த காதலுக்கு தயார் ஆகிறார் !

கிணறு குறித்த அந்த சஸ்பென்ஸ் செமையாக உள்ளது. அது என்ன என அறியும் ஆவலிலேயே பக்கங்கள் பறக்கின்றன. அது தெரியும் போது நமக்கே வியப்பாக தான் உள்ளது

வஸந்த் ஸ்டைல் குறும்புகள் சில :

"என்னமா எழுதிருக்கார் மகாகவி பாரதி. தலைப்பாவை விலக்கி தலையை தடவி கொடுக்கணும் போல இருக்கு பாஸ் "

" என் பேரு ரங்காச்சாரி. சமீபத்தில் தமிழ் நாட்டில் ஜாதி பேர் கூடாதுன்னதால் ரங்கா. வீட்டில் கூப்பிடுறது '...ங்கா' "

ஆங்காங்கு சுய எள்ளலும் உண்டு " வர வர சுஜாதா கதை நிறைய படிக்க ஆரம்பிசிட்டீயா நீ? ". இன்னொரு இடத்தில் " வேண்டாம் அந்த வார்த்தை சொல்லாதே தொடர் கதையை பாதியில் நிறுத்திடுவாங்க"

நூலகம், மருத்துவமனை என தான் போகும் இடமெல்லாம் பெண்களிடம் கடலை போடுவதும், தன் நகைச்சுவை பேச்சால் பெண்களை கவர்வதும் என வஸந்த் எப்போதும் போல் வசீகரிக்கிறார்.

அரிதாக இந்த கதையில் வஸந்துக்கு கல்யாணம் என்றும், பிறிதோர் இடத்தில வஸந்த் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க போவதாகவும் சொல்கிறார். இரண்டுமே நடக்க வில்லை. (வஸந்த் இறக்க போகிற மாதிரி ஒரு வாரம் முடித்த போது " வஸந்தை கொன்று விடாதீர்கள்" என பலரும் தந்தி அடித்ததாக சுஜாதா சொன்னது.. நீங்களும் அறிந்திருக்கலாம்)

சோடியம் ஹைட்ராக்சைட் , சோடியம் மானோ சல்பேட் என அறிவியலுக்குள் சென்று விளக்கும் போதும், எளிமையாக சுவாரஸ்யமாக சொல்வதில் தான் சுஜாதா நிற்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இக்கதையை இரண்டரை மணி நேரத்தில் படித்து முடித்தேன். செம விறுவிறுப்பு !

கணேஷ் -வஸந்த்தின் துப்பறியும் நாவலை சுஜாதாவின் வழக்கமான பாணியில் வாசிக்க விரும்பினால் அவசியம் வாசியுங்கள் !
************
நூல்: வஸந்த் வஸந்த்
ஆசிரியர்: சுஜாதா 
வெளியீடு : உயிர்மை பதிப்பகம் 
பக்கங்கள்: 176
விலை: ரூ. 100
நன்றி : பதிவர் ரகு 
************
திண்ணை ஏப்ரல் 22 , 2012 இதழில் வெளியானது 

13 comments:

  1. ரா.ரா. கிணறு மர்மம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்கு மறக்கக் கூடியதில்லை. கணேஷ் வஸந்தை அரெஸ்ட் செய்யும் படி இன்ஸபெக்டரிடம் சொல்ல. வஸந்த் பேசும் வசனங்களும். அநத இரவில் கத்திக்குத்து நிகழ கணேஷின் உள்ளுணர்வை வியந்து பாராட்டுவதும் இன்றும் நினைவில் பசுமை. அருமையான நாவலை மீண்டும் நினைவுபடுத்தி படிக்கும் எண்ணத்தை விதைத்து விட்டீர்கள் நண்பா.

    ReplyDelete
  2. சுஜாதா ஒரு திறந்த பல்கலைகழகம் என்பதற்கு மாற்று கருத்தே கிடையாது மிக்க நன்றி நண்பா...!!!

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு முன் படித்தது...சுஜாதாவின் எழுத்துக்கு மயக்கும் சக்தி உண்டு....

    ReplyDelete
  4. சுஜாதா சாரின் கதைகளை முடிவு தெரிந்திருந்தும்,திரும்பி திரும்பி படித்தாலும் அந்த சுவாரசியம் குறையவே குறையாது.

    ReplyDelete
  5. கதை பற்றி உங்கள் நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி கணேஷ்

    ReplyDelete
  6. நன்றி மனோ.

    ReplyDelete
  7. ஆம் சுரேஷ் நன்றி

    ReplyDelete
  8. ராம்வி உண்மை தான் நன்றி

    ReplyDelete
  9. உண்மையாகவே அந்த கிணறு சஸ்பென்ஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாத்தியாரின் இது போன்ற த்ரில்லர் கதைகள்தான் எப்போதும் என்னுடைய ஃபேவரைட்!

    ReplyDelete
  10. Anonymous3:38:00 AM

    சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்!

    ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது.

    சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  11. ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்போம்...அப்போது நடுவில் ஒரு மாறுதலுக்கு 'டக்'கென வேறு ஒன்று படிப்போம் இல்லையா... அது மாதிரி ஏற்லேனவே படித்திருந்தாலும் இப்போது விமர்சனம் படித்ததும் 'எவ்வளவு நாளாச்சு' என்று மறுபடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறது. தூண்டி விட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. ரொம்ப வருடங்கள் முன்பு படித்தது. மீண்டும் படிக்கத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
  13. எனக்கென்னவோ கணேஷ் வசந்த் கதைகளில் விபரீதக் கோட்பாடு, மறுபடியும் கணேஷ் ஈர்த்த அளவுக்கு வசந்த் வசந்த் ஈர்க்கவில்லை. என்றாலும் சுஜாதாவின் நாவல்களிலேயே மோசமான நாவல் கூட படிக்க இண்டரஸ்டிங் ஆக தான் இருக்கும்.அது தான் சுஜாதா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...