Wednesday, May 9, 2012

வானவில் 87: நடிகர் கார்த்தி- பதிவர் சந்திப்பு -பாலஹனுமான்

டிவி கார்னர் : கார்த்தி பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் 1 கோடி


நடிகர் கார்த்தி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் விளையாடினார்.

கடைசி பசங்க எல்லாருமே மிக குறும்பா, செம ஜாலியா இருக்காங்க பாத்துருக்கீங்களா (ஹிஹி மீ டூ கடைசி பிள்ளை) .

கார்த்தியை ஒரு நடிகராக மிக பிடிக்க ஆரம்பித்துள்ளது ! குறிப்பாக காமெடி காட்சியில் செம டைமிங் ! ஜாலியான நடிப்பு இயல்பாய் வருது. வெளியாகும் படங்களில் 10 சதவீதம் மட்டுமே ஓடும் நிலையில் கார்த்தியின் படங்கள் பெரும்பாலும் நன்கு ஓடுவது ஆச்சரியம் ! இனி ஒரு சில தோல்விகள் வரும். அதிலிருந்து கார்த்தி எப்படி எழுகிறார் என பார்க்கணும் !

சினிமாவை தாண்டி கார்த்தியிடம் பிடித்த விஷயம் மனதில் தோன்றுவதை தெளிவாக, அழகாக பேசி விடுகிறார். இந்நிகழ்ச்சி வியாழன் அன்று முடிந்து " திங்கள் சந்திப்போம்" என சூர்யா அறிவித்த போது செட்டில் இருந்த அனைத்து பெண்களும் கார்த்தியிடம் ஓடி வந்து விட்டனர். அருகிலிருந்த சூர்யாவை யாரும் கண்டு கொள்ளாததால், சூர்யா சும்மாவே நின்றார் ! கலகலவென பேசும் கார்த்தி நடத்தியிருந்தால் நிகழ்ச்சி இன்னும் களை கட்டியிருக்கும் போலும் !

பதிவர் சந்திப்பு - 1

பதிவர் கார்த்திகை பாண்டியன் தன் திருமண பத்திரிக்கை வைக்க நண்பர்களை அழைத்திருந்தார். அழைத்த இடம் - மடிப்பாக்கம் . எங்க ஊரு ! விதூஷ் அவர்களின் பள்ளியில் தான் சந்திப்பு. நானும் விதூஷிடம் சில முறை உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று சொன்னேனே அன்றி இதற்கு முன் போனதில்லை.

படம்: நன்றி : கண்ணன் ராமசாமி
பதிவர்கள் பால பாரதி, மணிஜி, செ.சரவண குமார், கண்ணன் ராமசாமி, குட்டி டின், மதார் , ரோமியோ, மேவி என பலரும் வந்திருந்தனர். நான் செல்ல சற்று முன் தான் பதிவர் வித்யா (Scribblings ) வந்து சென்றிருந்தார்.

சீனியர் பதிவர் பாலபாரதி செம சுவாரஸ்யமாக பேசுகிறார். பல கவிதைகள் மனப்பாடமாய் சொல்கிறார்.

கண்ணன் ராமசாமி வெளி நாட்டிலிருந்து சென்னைக்கே வந்து விட்டார் என்று இப்போது தான் தெரிந்தது.

சரவணகுமார் நமது ப்ளாக் பற்றி " Blogging-ன்னா என்ன செய்யணுமோ அதை வீடுதிரும்பலில் சரியா செய்றீங்க. இப்படி தான் இருக்கணும் ஒரு ப்ளாக்" என்றது மிக நிறைவையும் மகிழ்வையும் இருந்தது. இதே கருத்தை அங்கிருந்த மற்றவர்களிடமும் அவர் சொன்னதற்கு நன்றி !

கார்த்திகை பாண்டியன் திருமண பத்திரிக்கை மிக அழகு. மே 31 அன்று திருமணத்துடன் சேர்த்து மதுரையில் பெரிய பதிவர் சந்திப்பு நடக்க கூடும் ! பின்னே? நம்ம பதிவர்கள் கூகிள் பிளஸ்சில் போட்டாலே ஈகோ பார்க்காம வந்துடுவாங்க. நேரில் வேற பத்திரிக்கை தந்துட்டா கேட்கணுமா !

பதிவர் சந்திப்பு - 2

டில்லியிலிருந்து சென்னை வந்த பதிவர்கள் வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி, ரோஷிணி ஆகியோர் எங்கள் இல்லம் வந்திருந்தனர். மன்னை மைனர் RVS- அவர்களை வழியிலேயே மடக்கி தங்கள் வீட்டுக்கு கடத்தி போனார். பின் அவர்களை தம் பெண்களுடன் எங்கள் இல்லம் அழைத்து வந்தார்.

 வெங்கட் குடும்பத்தில் மூன்று பதிவர்கள்,RVS , நான் என மினி பதிவர் சந்திப்பு நடந்தது. வானத்துக்கு கீழே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும்,  தன் கருத்தை எடுத்துரைத்த RVS, திடீரென பிரேக் விட்டு" நானே பேசுறேன்.. நீங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பேசுங்க" என்றார். எவ்ளோ நல்ல மனசு !!

பதிவர்கள் யாரும் இதுவரை நம்ம ஹவுஸ்பாசை சந்தித்ததில்லை. முதல் முறை சந்தித்தது இவர்களே ! ஹவுஸ் பாஸிடம் " உங்களை ரொம்ப ட்டுறாரே.. நீங்க இவர் ப்ளாக் படிக்கிறதில்லையா? " என்றார் ஒருவர் ! டாபிக் மாறியதால் தப்பி விட்டேன்.

RVS-தான் தைரியமாய் நாட்டியை கையில் தூக்கினார். ரோஷிணி கிளிகள் அருகில் போகாவிடினும் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் தூர இருந்து பார்த்தவாறே இருந்தாள்.  RVS பெண்கள், என் பெண்ணுடன் கார்ட்ஸ் விளையாட ஆரம்பித்து விட்டனர்.

வெங்கட் விரைவில் சென்னைக்கு மாறுதல் ஆக கூடும் என்பது இந்த சந்திப்பில் கிடைத்த நல்ல செய்தி.

பதிவர் பக்கம்: பாலஹனுமான்

பாலஹனுமான் என்கிற நண்பர் தனது ப்ளாக்கில்,  தான் வாசித்த பதிவுகளில் பிடித்தவற்றை ஒரிஜினல் லிங்குடன் பகிர்கிறார். சுஜாதா இவருக்கு பிடித்த எழுத்தாளர் என்பதால் சுஜாதா பற்றி எங்கெங்கு  வந்த  கட்டுரைகளும் (வீடுதிரும்பலில் வந்தவை உட்பட) அவர் ப்ளாகிலும் மறுபடி பப்ளிஷ் செய்துள்ளார். போலவே ஜென்சி பாடல்கள் போல நம் ப்ளாகில் அவருக்கு பிடித்த இன்னும் சில பதிவுகளும் அங்கு வந்துள்ளது.
ஒரு மனிதன் எழுதுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தான் எழுதுவதை நிறைய பேர் படிக்க வேண்டும் என்பது தான். நமது பதிவு அங்கு பகிரப்படும் போது, பால ஹனுமான் ப்ளாகை தொடர்ந்து வாசிப்போர் வாசிக்கவும், அது பற்றி கமன்ட் எழுதவும் செய்கிறார்கள். அவரது ப்ளாகை பாருங்கள். அதில் பாலஹனுமானின் ரசனை தெரியும். ஒருவேளை அவருக்கு பிடித்த உங்கள் பதிவும் கூட இருக்கலாம்... Of course உங்கள் பெயரோடு !

சினிமா பாடல் புதிர்

"வேணாம் மச்சான் வேணாம் இந்த பொம்பளை காதலு " - இது ஒரு கல் ஒரு கண்ணாடியில் செம ஹிட்டான பாட்டு. ஹாரிஸ் இந்த பல்லவியின் டியூனை, ரொம்ப சிரமப்படாமல் தனது வேறொரு பாடல் பல்லவியில் இருந்து தான் சுட்டிருக்கிறார். எந்த பாட்டின் பல்லவியில் இருந்து சுட்டிருக்கிறார் தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் !

ஐ.பி. எல் கார்னர்


மும்பை சென்னையை கடைசி மூணு பந்தில் 6,4,4 என அடித்து ஜெயித்த மேட்ச், Match Fixing உயிருடன் உலவுகிறது என்பதை நினைவூட்டியது. அது வரை நன்கு பந்து பேசியவர் பின் எப்படி கடைசி பந்துகளில் புல் டாசாக வீசி தள்ள வேண்டும்?

டில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று மெட்ரோ சிட்டிகளும் நிச்சயம் Playoff சென்றுவிடும் என்று நினைக்கிறேன். (மும்பை 5 மேட்ச்சில் இன்னும் 2 ஜெயித்தால் போதும்!) Playoff செல்ல வாய்ப்பே இல்லாத அணிகள் ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் புனே ஆகியவை (இந்த மூன்றும் கடைசி நான்கிற்குள் தான் வரும் என்பதை டோர்னமென்ட் துவங்கும் போதே நாம் இங்கு ஊகித்திருந்தோம்)

பெங்களூரு அல்லது ராஜஸ்தான் Playoff செல்லும் நான்காவது அணியாக இருக்கும். சென்னைக்கு Playoff செல்லும் வாய்ப்பு மிக மிக குறைவே ! மீதமுள்ள நான்கு மேட்சிலும் வென்றால் தான் Playoff-க்கு தேவையான 18 பாயிண்டுகள் கிடைக்கும். மூன்றில் ஜெயித்தால் (அதுவே கஷ்டம்) மற்ற முடிவுகள் பொறுத்து அதன் அதிர்ஷ்டம் அமையும். மும்பை, பஞ்சாப், புனே ஆகிய மூன்று அணிகளுடன் ஜெயிக்க வேண்டிய மேட்சை தோற்ற சென்னை அடுத்த கட்டத்துக்கு செல்ல தகுதி இல்லாத அணியாக இம்முறை திகழ்கிறது என வருத்தத்தோடு சொல்ல வேண்டி உள்ளது !

டூர் போகிறார் அய்யாசாமி 

வரும் திங்கள்கிழமை முதல் அய்யாசாமி பத்து நாள் பயணமாக டில்லி, ஆக்ரா, சிம்லா, குளு மணாலி போகிறார். சென்னைக்கு பக்கத்திலே இருக்க காஞ்சிபுரம் போனாலே ஏழெட்டு பதிவு போட்டு கொல்லுவார் ! பத்து நாள் டூருன்னா, திரும்ப வந்து எவ்ளோ பந்தா விடுவாரோ தெரியலை ! 

எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் .. இந்த ஆளு எழுதுற பயண கட்டுரை எல்லாம் நல்லா இருக்குன்னு ஏத்தி விட்டு, ஏத்தி விட்டு, நீங்க சும்மா தான் சொல்றீங்கன்னு தெரியாம இப்ப பத்து நாள் டூருக்கு வந்து நிக்குறார் !

நீண்ட நாள் டூர் என்பதால் "பத்து நாளும் பதிவு இல்லையா?" ன்னு அய்யாசாமியிடம் கேட்ட போது "முப்பது .. நாப்பது பதிவு Drafts -ல் கிடக்குது. (எப்பவும் இதே தான் சொல்வார். நோ Change).. அதனால பதிவு போடுறது பிரச்சனை இல்லை. நடுவில இன்டர்நெட் செண்டர் போக நேரம் கிடைச்சா பதிவு வெளியிட்டுடலாம். அதுக்கு வாய்ப்பு குறைவு என்பதால் இந்த பத்து நாளும் பதிவு கொஞ்சம் கம்மியா தான் வரும்". க்கும். இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை !

வாழ்த்தி வழியனுப்பி வைப்போம் அய்யாசாமியை (வேற வழி??)

32 comments:

  1. //கடைசி பசங்க எல்லாருமே மிக குறும்பா, செம ஜாலியா இருக்காங்க பாத்துருக்கீங்களா//

    நான் முதல் பிள்ளைதான். அதுக்காக நானென்ன சிடுமூஞ்சியாவா இருக்கேன்? :))

    //கலகலவென பேசும் கார்த்தி நடத்தியிருந்தால் நிகழ்ச்சி இன்னும் களை கட்டியிருக்கும் போலும்//

    உண்மை.

    பதிவர் கார்த்திகை பாண்டியனுக்கு முன்கூட்டிய திருமண வாழ்த்துக்கள்

    //நான் செல்ல சற்று முன் தான் பதிவர் வித்யா (Scribblings ) வந்து சென்றிருந்தார்.//

    Hope she's doing good. அடுத்து எந்த ரெஸ்டாரன்ட்டை பத்தி எழுதுவாங்கன்னு பாத்தா, ஆளே காணோம்.

    //பாலஹனுமான்//

    நானும் வாசித்திருக்கிறேன். இவருடைய தளம் கிட்டத்தட்ட ஒரு சுஜாதா பெட்டகம் என்றே சொல்லலாம்.

    //சினிமா பாடல் புதிர்//

    அஞ்சல from வாரணம் ஆயிரம்?

    ஹா.ஜெ. எல்லா பாட்டையும் தன்னோட பழைய ட்யுன்லர்ந்துதான் சுடுறார். அவ்ளோதானோ?!

    //ஐ.பி. எல் கார்னர் //

    சென்னையின் பெளலிங் இந்திய அணி மாதிரியே இருக்கிறது. இந்த லட்சணத்தில் ப்ளே ஆஃப் சென்றாலே சாதனைதான்!

    //அய்யாசாமி பத்து நாள் பயணமாக டில்லி, ஆக்ரா, சிம்லா, குளு மணாலி போகிறார்.//

    என்சாய் பண்ணுங்க. அவ்வளவுதான்..இன்னும் ஒரு மாசத்துக்கு பதிவா போட்டு தாக்கிடுவீங்க :))

    ReplyDelete
  2. அடுத்த பயண கட்டுரை ரெடி///

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பு என்பது ஆஹா மிகவும் சுவாரஸ்யமானது வாழ்த்துகள் வாழ்த்துகள் நண்பர்களே...!!!

    ReplyDelete
  4. வழக்கம் போல சுவாரஸ்யம்.

    டெல்லி, கொல்கத்தா நிச்சயம். மும்பை ஏறக்குறைய நிச்சயம். நாலாவது இடத்திற்கு ராயல்ஸ், ஆர்.சி.பி., சென்னை மற்றும் பஞ்சாப் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. பஞ்சாப் மற்றும் ராயல்ஸ் இரண்டும் 12 points தான்.

    ReplyDelete
  5. // வெங்கட் விரைவில் சென்னைக்கு மாறுதல் ஆக கூடும் என்பது இந்த சந்திப்பில் கிடைத்த நல்ல செய்தி. //

    பவர்கட்ட(Electrical Power Cut) அனுபவிக்க இன்னொரு ஆளு கெடைக்கப் போறதுல அண்ணன் மோகன் அவர்களுக்கு எவ்ளோ மகிழ்ச்சி பாருங்க..

    ReplyDelete
  6. //கடைசி பசங்க எல்லாருமே மிக குறும்பா, செம ஜாலியா இருக்காங்க பாத்துருக்கீங்களா//

    எங்க வீட்ல ரெண்டு கடசிப் பையங்கள வச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே... சொல்லி முடியாது!! ஒரு நீட்னஸ் கிடையாது, பொறுப்பு கிடையாது, ஒழுங்கு கிடையாது... ஒண்ணும் கிடயாது.. எப்பப்பாரு கெக்கெபிக்கேன்னு ஜோக் அடிச்சுகிட்டு... :-)))))

    (ரெண்டு கடசிப் பையங்கள = என் சின்ன மகன் & என் கணவர்!!) :-D

    //ஹவுஸ் பாஸிடம் " உங்களை ரொம்ப ஓட்டுறாரே.. நீங்க இவர் ப்ளாக் படிக்கிறதில்லையா? " என்றார் ஒருவர்//
    அப்போதைக்கு டாபிக் மாறினாலும், பிற்பாடு “கைமேல் பலன்” கிடைச்சிருக்குமே!! :-)))))

    என்னது பத்து நாள் டூரா!! ”புயலுக்குமுன் அமைதி”ங்கிற மாதிரி, இந்தப் பத்து நாளாவது (எங்களை) கொஞ்சம் ஃப்ரீயா விட்டாத்தான் என்னாவாம்?? :-))))))))

    ட்ராஃப்ட்ல 40 பதிவா??!!! எங்கருந்துங்க நேரம் கிடைக்குது உங்களுக்கு? சொன்னா, நாங்களும் வாங்கிக்கிறோம்!! :-)))))))

    ReplyDelete
  7. Have a safe n happy journey.

    @Ragu : Thanks yaar. I'm doing good. Only thing is i dont find time to blog, with junior on leave. Will gearup from june. I hope. Fingers crossed.lol..

    ReplyDelete
  8. சரவணகுமார் நமது ப்ளாக் பற்றி " Blogging-ன்னா என்ன செய்யணுமோ அதை வீடுதிரும்பலில் சரியா செய்றீங்க. இப்படி தான் இருக்கணும் ஒரு ப்ளாக்" என்றது மிக நிறைவையும் மகிழ்வையும் இருந்தது.

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. நல்ல தொகுப்பு.

    அய்யாசாமி பயணம் இனிதே அமையட்டும்:)! படங்களும் அனுபவங்களுமாகத் திரும்பி வந்து பகிரக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. அழகான இடங்களை பார்க்க போறீங்க வாழ்த்துகள்.....

    ReplyDelete
  11. வழக்கம் போல வானவில் வர்ணமயமாக இருக்கு.

    பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.

    அய்யாசாமியின் பயண கட்டுரையை ஆர்வத்துடன் எதிபார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. அன்பின் மோகன் குமார்,

    கார்த்திக் நன்றாக கேசுவலாக பேசியது நல்லாயிருந்தது...

    நாங்கள் போன வருசம்தான் டெல்லி, ஆக்ரா எல்லாம் டூர் போனோம்.. பயணக்கட்டுரை பாதியில் நிக்குது.. நீங்களாவது போயிட்டு வந்து ஒழுங்கா எழுதுங்க. பத்திரமா போயிட்டு வாங்க வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  13. அன்புள்ள மோகன் குமார்,

    எனது தளத்தைப் பற்றி உங்கள் பதிவில் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

    இந்த வாரம் எனக்கு மிக மிக இனிய வாரம் போலும்…

    சில நாட்களுக்கு முன்தான் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த நண்பர் கணேஷ் (மின்னல் வரிகள்) நமது பாலஹனுமான் தளத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    ஆன்மீகத்தின் அருஞ்சுவையைப் பருக விரும்புகிறீர்கள் என்றாலும் சரி… வாத்தியார் சுஜாதாவைப் பற்றியும் அவரின் படைப்புலகைப் பற்றியும் நிறையப் படித்தறிய விரும்பினாலும் சரி… பாலஹனுமான் என்ற என் நண்பரின் தளம் உங்களுக்கு உதவும்.

    உங்கள் அன்புக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி…

    ReplyDelete
  14. Welcome Sir, to New Delhi.

    Your Blog is Simple, and Super.

    Inga ippo dhan Veyil pattaiya killapa arambithu ullathu ( Just 2 days before). Have Sun glasses for every one, is a must in Delhi in this Climate.

    You will enjoy more, than your tour experience in Hyderabad.

    Happy Journey.

    ReplyDelete
  15. //ர‌கு said...

    நான் முதல் பிள்ளைதான். அதுக்காக நானென்ன சிடுமூஞ்சியாவா இருக்கேன்? :)) //

    கேள்வியை மிரட்டி கேட்பதிலேயே தெரியலையா முதல் பிள்ளையின் domination குணம் ? :))

    /சினிமா பாடல் புதிர்//

    அஞ்சல from வாரணம் ஆயிரம்?
    ******
    சரியா சொன்னீங்க. அஞ்சலை பாட்டின் காப்பி தான் வேணாம் மச்சான் வேணாம் பாட்டு
    ********
    //என்சாய் பண்ணுங்க. அவ்வளவுதான்..இன்னும் ஒரு மாசத்துக்கு பதிவா போட்டு தாக்கிடுவீங்க :))

    Raghu: ஊருக்கு போற பத்து நாளைக்கு ப்ளாகை உங்க கிட்டே ஒப்படைச்சு அப்பப்போ பதிவு எடுத்து போட சொல்லலாம்னு ஐடியா What do you say?

    ReplyDelete
  16. கோவை நேரம் : நன்றி சார்

    ReplyDelete
  17. மனோ: ஆம் பதிவர் சந்திப்புன்னாலே ஜாலி தான்

    ReplyDelete
  18. அனுஜன்யா said...
    வழக்கம் போல சுவாரஸ்யம்.

    டெல்லி, கொல்கத்தா நிச்சயம். மும்பை ஏறக்குறைய நிச்சயம். நாலாவது இடத்திற்கு ராயல்ஸ், ஆர்.சி.பி., சென்னை மற்றும் பஞ்சாப் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. பஞ்சாப் மற்றும் ராயல்ஸ் இரண்டும் 12 points தான்.
    ********

    மகிழ்ச்சி நன்றி அனுஜன்யா. மிராக்கில் நடந்தால் ஒழிய சென்னை செல்வது சிரமம் என நினைக்கிறேன்

    ReplyDelete
  19. மாதவா: பேச்சு துணைக்கு ஆள் கிடைக்கும்னு நினைச்சேன் தப்பா? :))

    ReplyDelete
  20. ஹுசைனம்மா: தமிழ் மண நட்சத்திரம் ஆன தாங்கள் நேரம் ஒதுக்கி விரிவாய் கமன்ட் எழுதுவது மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது உண்மை தான். பத்து நாள் பதிவு போடாமல் இருந்தால்
    தான் என்ன என்றும் ஒரு எண்ணம் ஓடுகிறது பார்க்கலாம் !

    ReplyDelete
  21. நன்றி வித்யா, Buzz-ஆல் தான் நீங்கள் எல்லாம் எழுதுவதில்லை

    ReplyDelete
  22. நன்றி ராமலட்சுமி :))

    ReplyDelete
  23. சுரேஷ்: அப்டி தான் நினைக்கிறோம்,. பார்க்கலாம்

    ReplyDelete
  24. நன்றி ராம்வி

    ReplyDelete
  25. நித்திலம் மேடம்: ஏன் எழுதாமல் விட்டீர்கள்? இப்போ கூட எழுதலாமே?

    ReplyDelete
  26. பால ஹனுமான்: ஏன் உங்கள் ஐ. டி இல்லாமல் வேறு ஐ. டியில் பின்னோட்டம் வருகிறது?

    ReplyDelete
  27. சோமு: மிக மகிழ்ச்சி நன்றி. இது போல் முன் பின் தெரியாமல் எப்போதோ ஒரு முறை வந்து சிலர் பாராட்டும் போது மிக மகிழ்வாய் இருக்கும் நன்றி

    ReplyDelete
  28. Anonymous10:29:00 AM

    @ரகு

    >>நானும் வாசித்திருக்கிறேன். இவருடைய தளம் கிட்டத்தட்ட ஒரு சுஜாதா பெட்டகம் என்றே சொல்லலாம்.

    நன்றி ரகு..

    @மோகன் குமார்
    இப்போது சரி செய்து விட்டேன். நன்றி...

    ReplyDelete
  29. //வெங்கட் விரைவில் சென்னைக்கு மாறுதல் ஆக கூடும் என்பது இந்த சந்திப்பில் கிடைத்த நல்ல செய்தி. //

    மகிழ்ச்சி!

    *********

    //டூர் போகிறார் அய்யாசாமி //

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  30. என்ஜாய் பண்ணுங்க அய்யாசாமி.

    ReplyDelete
  31. இப்பதான் முதல்தடவையா உங்க பதிவு பக்கம் வந்துருக்கேன்.சுவாரசியமாவும் தகவல் பகிர்வாகவும் இருக்கு.

    பதிவர் சந்திப்பு 2 ல நானும் கலந்திருக்க வேண்டியது.ஜஸ்ட் மிஸ்டு.( நல்ல வேளை எல்லாரும் தப்பிச்சுட்டீங்க)

    சந்திப்பு முதல்ல உணவகத்துல சொல்லி இருந்தாங்க.அன்னிக்கு ஒரு காரணத்தால வெளிய சாப்பிட முடியாதுங்கறதால நானும் எங்க வீட்டு வெங்கட்டும் வர முடியாம போச்சு.சந்திப்பு உங்க வீட்லதான்னு க்ளியரா தெரிஞ்சிருந்தா வந்திருப்போம்.அதனால என்ன இன்னொருவாட்டி எல்லாரும் மாட்டாமலா போயிடப் போறீங்க?அப்ப பாத்துக்கலாம் :-))

    ReplyDelete
  32. சென்னைப் பயணத்தின் போது உங்களனைவரையும் சந்தித்ததில் எங்களனைவருக்குமே மிக்க மகிழ்ச்சி மோகன். இப்பவும் ரோஷ்ணி அஜு-நாட்டி பற்றி எதாவது சொல்லிக்கொண்டு தான் இருக்கிறாள்.....:)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...