Thursday, June 7, 2012

விக்கி டோனாரும், சுஜாதாவின் 14 நாட்களும்

வார இறுதியில் பார்த்த ஒரு சினிமாவும், வாசித்த புத்தகமும் ஒன்றாய் பகிர்கிறேன்

விக்கி டோனார்

வித்யாசமான கதை களன். டில்லியில் குழந்தை பேறு இல்லாதோருக்கு மருத்துவம் செய்யும் டாக்டர் சந்தா புதிதாக ஸ்பேம் டோனார் தேடுகிறார் . ஹீரோ விக்கியை பார்த்து விட்டு, அவனது பரம்பரையில் நிறைய குழந்தைகள் உண்டு என அறிந்து அவனை டோனார் ஆக்க போராடி சம்மதம் வாங்குகிறார். விக்கி துவக்கத்தில் விருப்பமின்றி இறங்கினாலும் பின் நன்றாக பணம் பார்க்கிறான். இடையில் அஷிமா என்கிற பெங்காலி பெண்ணை காதலித்து மணக்கிறான். அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை. அஷிமாவுக்கு குழந்தை பேறுக்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

விக்கி அவள் மீது அன்போடு இருந்தாலும் கூட,  ஒரு வாக்கு வாதத்தில் அவன் ஒரு ஸ்பேம் டோனார் என தெரிந்து விலகுகிறாள் அஷிமா. இருவரும் மீண்டும் ஒன்று சேர டாக்டரே காரணமாகிறார். பெற்றோரை விபத்தில் இழந்த   ஒரு குழந்தை இவர்கள் வசம் வர, புது வாழ்க்கை துவங்குகின்றனர்.
*********
படம் ஓஹோ என்று சொல்ல முடியாது. அதே நேரம் மிக சிக்கலான ஒரு விஷயத்தை கையாண்டமைக்கு நிச்சயம் பாராட்ட தான் வேண்டும்.

குழந்தைபேறின்மை என்பது நம் நாட்டில் உள்ள மிக பெரிய பிரச்சனை. ஆர்டிபிசியல் Insemination என்பது உயர் தட்டு மக்களிடையே நன்கு ஏற்று கொள்ள பட்டாலும், நம் மக்கள் பலரிடமும் சென்று சேரவில்லை. இத்தகைய வெகு ஜன படங்கள் மூலம் இது பற்றி ஏராளமான மக்கள் அறியமுடியும்.

படத்தின் ஹீரோ விக்கி புதுமுகம் என்பதால் நடிக்கிற மாதிரியே தெரியலை. மிக இயல்பாக இருக்கிறார்.


அஷிமாவாக வரும் ஹீரோயின் (யாமி) செம அழகு. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறார்.

படத்தில் சண்டைகள் இல்லை. பாடல்களும் பின்னணியில் தான் ஒலிக்கிறது. ஹீரோவின் அம்மா பாத்திரம் மற்றும் ஹீரோயின் அப்பா பாத்திரம் வித்யாசமாய் உள்ளது. பஞ்சாபிகளுக்கும் பெங்காலிகளுக்கும் இருக்கும் உரசல், கிண்டல் போன்றவை ஆங்காங்கு சுவையாய் விரவப்பட்டுள்ளது.

ஜான் ஆப்ரஹாம் என்கிற பிரபல ஹிந்தி நடிகர் தயாரித்தாலும், அவர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கலை. படம் முடிந்ததும் டைட்டில் ஓடும்போது ஒரு டான்ஸ் ஆடி விட்டு போகிறார். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய ஹிட் ஆகிடுச்சு.

இரண்டு மணி நேரமே ஓடும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் !

**************
சுஜாதாவின் 14 நாட்கள் -நாவல்

இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972-ல் நடந்த போரின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்.

கதை 

குமார் என்கிற விமானி தன் விமானம் மூலம் பாகிஸ்தான் விமானங்களை தாக்குகிறான். எதிரி விமானத்தால் தாக்கப்பட்டு பாராசூட் மூலம் ஒரு காட்டில் விழுந்து பாகிஸ்தான் படையிடம் சிக்குகிறான் குமார். சுல்தான் என்கிற மோசமான ஆபிசர் அவனை சிறைப்பிடித்து துன்புறுத்துகிறான். இந்திய படை அந்த இடத்தை அடைந்து, பாகிஸ்தான் படை சரணைடைகிறது. ஆனால் குமாரை காணும். இந்திய படைகள் வருவதை அறிந்த சுல்தான் அவனை ஆற்றுக்கு அருகே கூட்டி சென்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். இந்திய ராணுவம் குமாரை கண்டுபிடித்து மருத்துவம் கொடுத்து அவனை காப்பாற்றுகிறது. நாவலின் இறுதியில் குமார் இந்த முழு கதையும் கதாசிரியரான சுஜாதாவிடம் சொல்வதாக முடிகிறது.

**********
மிக விறுவிறுப்பான கதை. குமாருக்கு என்னாகுமோ என்கிற பயம் வாசிக்கும் ஒவ்வொருவரையும் தொற்றி கொள்கிறது. இடை இடையியே அவன் மனைவி-மகன் பற்றி சொல்லி கொண்டே வருகிறார் (ரோஜா கதையின் முடிச்சு இங்கிருந்து கூட எடுக்க பட்டிருக்கலாம்) விமானம் பற்றியும், வானில் பறப்பது பற்றியும், போர், துப்பாக்கி இவை பற்றியும் விரிவான விவரணைகள் ஆச்சரிய படுத்துகிறது. சுஜாதா கதையில் மருந்துக்கும் காமெடி இன்றி ஒரு கதை படித்தது இது தான் என நினைக்கிறேன். ஆனால் கதையின் களம் அது போல !

எல்லையில் நம் ராணுவ வீரர்கள் எந்த நிலையில் பணி புரிகிறார்கள், அவர்கள் குடும்பம் எந்த மன நிலையில் வாழ்கிறது போன்றவற்றை உணர இந்த நாவலை ஒரு முறை அவசியம் வாசியுங்கள் !

********
வல்லமை ஜூன் 6, 2012 இதழில் வெளியான கட்டுரை 

17 comments:

  1. விக்கி டோனார் - நிறைய விமர்சனங்கள் வந்தது இந்தப் படம் பற்றி இங்கே.... பார்க்க எண்ணியிருக்கும் ஒரு படம்.....

    சுஜாதாவின் 14 நாட்கள் படித்த நினைவில்லை....... படிக்கத் தூண்டில் போட்டது உங்கள் விமர்சனம். பார்க்கலாம் இங்கே கிடைக்கிறதா என....

    ReplyDelete
  2. 14 நாட்கள் - சுவாரஸ்யமான கதை. அடுத்து என்ன ஆகும் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு அத்தியாத்திலும் அதிகமாகி கொண்டே போனது.

    //நாவலின் இறுதியில் குமார் இந்த முழு கதையும் கதாசிரியரான சுஜாதாவிடம் சொல்வதாக முடிகிறது//

    அடடா! இதை சொல்லாமல் இருந்திருக்கலாம். வாசிப்பவர்களுக்கு ஒரு ஸ்வீட் அனுபவமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. படம் பார்க்கவும் நாவலைப் படிக்கவும்
    முடிவு செய்துவிட்டேன்
    அருமையான விமர்சனம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. thalavivare.. அந்த குழந்தையே விக்கியின் டொனேட் பண்ணதன் மூலம் பிறந்த குழந்தைதான்.

    ReplyDelete
  5. படம் வித்தியாசமான படம் போலும். சுஜாதாவின் பதினாலு நாட்கள் மிக அருமையான ஒன்று. 'வானமெனும் வீதியிலே' படித்திருக்கிறீர்களோ.... ஹைஜாக் பற்றிய அருமையான கதை.

    உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறோம்!

    ReplyDelete
  6. Anonymous7:52:00 PM

    ஹிந்தி படமா? வழக்கமாய் பார்ப்பதில்லை மோகன்...

    தமிழில் நல்ல படங்களும்...காமடியும்..ஆங்கிலத்தில் குழந்தைகள் படங்களும் தான் பார்ப்பது வழக்கம் ...

    மற்ற படங்கள் வீட்டில் பார்க்கையில் கும்பகர்ணன் தான்...அதில் உள்ள சுகமே தனி...

    சுஜாதா..படித்தது..பிடித்தது...நன்றி நண்பரே...

    ReplyDelete
  7. நன்றி வெங்கட். படம் முடிந்தால் பாருங்கள்

    ReplyDelete
  8. 14 நாட்கள் புத்தகம் வாசிக்க தந்த ரகுவிற்கு நன்றி ; தங்கள் கருத்துக்கும் தான் !

    ReplyDelete
  9. ரமணி மிக மகிழ்ச்சி!நன்றி

    ReplyDelete
  10. கேபிள்: நீங்கள் சொன்னது புரியவே செய்தது. இங்கு அதனை நான் சரியாக குறிப்பிட வில்லை. நன்றி

    ReplyDelete
  11. ஸ்ரீராம்: நன்றி ! பின்னூட்டம் போட்டது தப்பாய்யா ? :))

    நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டதை சொன்னா என் இமேஜ் டேமேஜ் ஆகிடுமே ! யோசிக்கிறேன் !

    ReplyDelete
  12. நன்றி ரெவரி; எனக்கும் கூட சில படம் பார்க்கும் போது தூக்கம் வந்துடுது

    ReplyDelete
  13. அருமை. தனித்தனி பதிவுகளாக போட்டிருக்கலாம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அருமை. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அருமையான விமர்சனம் ! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. ஒரு டோனரே நிறைய டொனேட் செய்யும் போது அது சமுதாயத்தில் சிக்கலை ஏற்படுத்துமே. இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
  17. புத்தகவிமர்சனம் படிக்கத் தூண்டுகின்றது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...