Sunday, June 24, 2012

டில்லி : குதுப்மினாரும் ஹுமாயூன் டூம்பும்

குதுப்மினார் - டில்லியை வெற்றிகரமாக கைப்பற்றிய மொகலாயர்கள் அந்த வெற்றிக்காக கட்டிய கட்டிடம் இது.

பகல் மற்றும் இரவு எட்டரை வரை குதுப்மினாரை பார்க்க அனுமதி உண்டு. நாங்கள் மாலை ஏழு மணி அளவில் சென்றோம். மாலை நேரம் உஷ்ணம் இன்றி அழகான விளக்குகள் ஒளிர பார்க்க ரொம்ப அருமையாக இருந்தது. என்ன ஒரு குறையென்றால் புகை படத்தில் அந்த அழகை கொண்டு வர முடியவில்லை. நல்ல சூரிய வெளிச்சத்தில் எடுப்பது போல் விளக்கொளியில் எடுக்கும் படங்கள் வருவதில்லை.







இங்கு தமிழில் பேசும் ஒரு குடும்பத்தை பார்த்து ஆச்சரியமாய் பேச, அவர்களோ, தாங்கள் மங்களூரை சார்ந்தவர்கள் என்றும் மங்களூரில் பேசப்படும் கன்னடம் தமிழ் போலவே தான் இருக்குமென்றும் சொல்லி எங்களை ஆச்சரியப்படுத்தினார்கள்



ஹுமாயூன் டூம்ப்

ஹுமாயூன் இறந்த பின், அவர் மனைவி மெக்கா சென்று வந்தார். மெக்கா பயணம் முடிந்து திரும்பும் போதே தன் கணவர் நினைவாக இந்த மசூதி கட்ட முடிவெடுத்து அதற்கான ஆர்க்கிடெக்டை அழைத்து வந்து விட்டார். அப்படி ஆரம்பித்து கட்டப்பட்டது தான் இந்த கட்டிடம்.

தாஜ் மஹால் இறந்த மனைவிக்காக கணவன் கட்டியது என்றால், இறந்த கணவனுக்காக மனைவி கட்டிய மாளிகை இது !



கிட்ட தட்ட தாஜ் மஹால் போன்ற அமைப்பு தான் வெளியிலிருந்து பார்க்கும் போது உள்ளது. தாஜ் வெள்ளை நிறம். இது சற்று காவி நிறம். அது தான் வித்யாசம். அமெரிக்க அதிபர் ஒபாமா டில்லி வந்தபோது அவரால் ஆக்ரா செல்ல முடிய வில்லை என்பதனால், தாஜுக்கு பதிலாக அதே போல் இருக்கும் இந்த கட்டிடத்தை தான் காண வந்தார்.


                   

இங்கு ஹுமாயூன் சாமாதி மட்டுமல்லாது மொகலாயர்களில் நூற்றுகணக்கான அரசர்கள், மந்திரிகள் ஆகியோரின் உடலும் புதைக்க பட்டுள்ளது.



ப்ராபட் முகமது மிகவும் மனம் உடைந்திருந்த ஒரு கால கட்டத்தில் சிலந்தி கூடு கட்டுவதை கண்டாராம். எத்தனை முறை தடை வந்தாலும் மீண்டும் மீண்டும் சிலந்தி கூடு கட்டுவதை பார்த்து நம்பிக்கை வந்ததாம் அவருக்கு. இதன் நினைவாக இங்குள்ள மைய அரை சிலந்தி கூடு போல் வடிவமைக்க பட்டதாக சொல்கிறார்கள்


உள்ளே நுழையும் போது எடுத்த வீடியோ 










மலர்களும் தோட்டமும் 


மேலே இருந்து எடுத்த வீடியோ ஒன்று :


இங்கு எடுத்த இன்னும் சில படங்கள் :





இங்கு உடைந்த நிலையில் இருக்கும் சில கட்டிடங்கள் 






*****
மொகலாயர் காலம் குறித்தும் அக்கால கட்டிட சிறப்பையும் காண இந்த இரு இடங்களையும் டில்லி செல்லும்போது அவசியம் சென்று பாருங்கள் !

39 comments:

  1. நல்ல பகிர்வு....

    குதுப்மினாரில் மேலே ஏறிச் சென்று பார்க்க படிக்கட்டுகள் உண்டு. முன்பெல்லாம் அனுமதித்தார்கள். ஆனால் ஒரு விபத்திற்குப் பிறகு அனுமதிப்பதில்லை. மேலே இருந்து பார்த்தால், பக்கத்தில் இருக்கும் எல்லா இடங்களும் கண்முன்னே விரியும்..... நான் ரசித்திருக்கிறேன்....

    இரும்புத்தூண் ஒன்று இருக்குமே, கவனித்தீர்களா? இன்று வரை துரு பிடிக்காத அதிசயம்.....

    இரண்டாவதாக, இரண்டு மடங்கு உயரத்தில் கட்ட ஆரம்பித்து முதல் நிலையிலேயே விட்டு வைத்ததும் பார்க்க முடியும்....

    ஹுமாயூன் டோம்ப் - இப்போதெல்லாம் அங்கே நடப்பதைப் பார்க்காமலேயே இருந்துவிடலாம்....

    ReplyDelete
  2. //நல்ல சூரிய வெளிச்சத்தில் எடுப்பது போல் விளக்கொளியில் எடுக்கும் படங்கள் வருவதில்லை. //

    Night Effect option மாற்றி எடுத்தால் வரும் மோகன். என்ன கேமரா யூஸ் பண்றீங்க?

    ReplyDelete
  3. what is the name of humaun's wife?????

    ReplyDelete
  4. அறிய இடங்களை பார்க்க வேண்டிய இடங்களை தெளிவான புகைப்படங்களோடு கட்டுரையாக்கிதரும் அன்பருக்கு நன்றிகள்.!

    ReplyDelete
  5. அறியாத விஷயங்களை அறிந்து கொண்டேன் மக்கா நன்றி...!

    ReplyDelete
  6. அந்த இரும்புத்தூணில் நம்ம முதுகைச் சாய்ச்சு நின்னுக்கிட்டு ரெண்டு கைகளையும் பின்பக்கம் கொண்டுவந்து இரண்டு கைவிரல்கள் ஒன்னையொன்னு தொட்டுச்சுன்னா நாம் நினைச்சது நடக்கும் என்றொரு நம்பிக்கை.

    கை நீளமா இருக்கணும் அதுக்கு! இதைத்தான் நம் மக்கள் (தப்பாப்) புரிஞ்சுக்கிட்டு எந்த வேலைக்கும் கை நீட்டறாங்க இல்லே?

    நாங்களும் மேலே ஏறிப் பார்க்கவில்லை.

    ReplyDelete
  7. @ Crazymohan: ஹுமாயூன் டோம்ப் ஹுமாயூனின் மனைவி ஹமீதா பானு பேகம் அவர்களால் கட்டுவிக்கப்பட்டது....

    @ துளசி டீச்சர்: இப்பல்லாம் அந்த இரும்புத்தூணைச் சுற்றியும் தடுப்பு வேலி போட்டாச்சு.. ஏன்னு கேட்டா “கட்டிப்புடி” தொல்லை தாங்கலையாம்....

    கை நீளமா இருக்கணும்னு அவசியமில்லை... உயரமா இருந்தா கூட போதும். ஏன்னா, மேலே போகப்போக தூணின் சுற்றளவு குறைந்து கொண்டே போகும்.... :)))

    ReplyDelete
  8. குதுப்மினார் - டில்லியை வெற்றிகரமாக கைப்பற்றிய மொகலாயர்கள் அந்த வெற்றிக்காக கட்டிய கட்டிடம் இது.////////
    //
    என்னது குதுப்மினாரை முகலாயர்கள் கட்டினார்களா............?

    அட கர்த்தரே .கர்த்தரே........அதை கட்டியது குத்புதீன் ஐபக் . அவர் முகலாயர் கிடையாது. அடிமை வம்சத்தை சேர்ந்தவர் .
    கட்டிய ஆண்டு 1192 . முகலாயர்கள் இந்தியாவிற்கு வந்தது 1526 .

    ReplyDelete
  9. "டில்லி அற்புத குதுப்மினாரும் ஹுமாயூன் டூம்பும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. கடந்த ஆண்டு மே மாதம் டெல்லி சென்றிருந்தேன்.அப்போது குதுப்மினாரைப் பார்த்தேன்.பிரமிக்க வைக்கும் கட்டிடக் கலை.அழகான படங்களுடன் நீங்கள் அளித்த தகவல்களும் அருமை.

    ReplyDelete
  11. வெங்கட்: குதுப்மினார் பற்றி இன்னும் நிறைய தகவல் எழுதலாம். உங்களை போல நன்கு தெரிந்தவர்கள் எழுதினால் நன்றாயிருக்கும். நான் இது பற்றி படித்து விட்டு எழுத நினைத்தேன். நேரமில்லை. இப்பதிவில் நீங்கள் தந்த அனைத்து அடிஷனல் தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. ரகு: எங்கள் காமிரா சோனி ; ரொம்ப நல்ல காமிரா. நைட் ஆப்ஷன் வச்சதில் தான் இந்த அளவு வந்தது

    ReplyDelete
  13. கிரேசி மோகன்: உங்கள் பேர் பார்த்ததும் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் கிரேசி மோகனோ என நினைதேன்? அப்படியா சார்?

    உங்களுக்கு பதில் வெங்கட் சொல்லியுள்ளார். பாருங்கள்

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் : நன்றி நண்பா

    ReplyDelete
  15. மனோ: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  16. துளசி மேடம்: நீங்கள் சொன்ன தகவல் எங்களுக்கு புதிது. நன்றி

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி: நன்றி

    ReplyDelete
  18. முரளிதரன் : நன்றி நண்பரே

    ReplyDelete
  19. அஞ்சா சிங்கம்: நீங்கள் சொன்னது சரி என்று உணர்கிறேன். தவறுக்கு மன்னிக்க. அங்கிருந்த ஒருவர் சொன்ன தகவல் அது. தவறை சரி செய்து
    விடுகிறேன்

    ReplyDelete
  20. மோகன்,

    டில்லி சலோ னு இன்னும் வண்டி ஓடுது :-))

    ஹிமாயுன் டோம்ப் பார்த்துட்டு தான் தாஜ் மகால் பின்னர் அதே போல வெள்ளை சலவைக்கல்லில் கட்டப்பட்டது.ஹிமாயுன் ஷாஜெகானுக்கு கொள்ளு தாத்தா!

    குதுப்மினார் வெற்றியை கொண்டாட அல்ல, குதுப்தீன் ஐபெக்கின் பிறந்த நாளுக்காக கட்டியது முடிக்கும் முன் இறந்துவிட்டார் ,பின் இல்டாமிஷ் கட்டி முடிச்சார்னு படிச்ச நினைவு.

    அடிமை வம்சம் என்றாலும் அவர்களும் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் மொகலாயர்கள் என்று சொல்லி இருக்கக்கூடும், மொகலாயர்களும் இஸ்லாமியர்கள் தானே.

    பின்னர் ஏன் தனியா மொகலாயர்கள் என சொல்ல வேண்டும்? காரணம் பாபர் மங்கோலிய மற்றும் ஆப்கான் கலப்பின வழி தோன்றல், மொகல் என்றால் மங்கோல் என்று பெர்சியானில் பொருள், எனவே மங்கோலிய இஸ்லாமியர் என்பதை குறிக்க மொகல் என சொல்லப்படுகிறது.

    பாபர் செங்கிஸ்கான் மற்றும் திமூரின் கொள்ளுப் பேரன்.

    பொதுவா பேச்சு வழக்கில் எல்லா இஸ்லாமிய மன்னர்களையும் மக்கள் மொகலாயர்னு சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் போல.

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு, துருப்பிடிக்காத இரும்புத்தூன் பார்க்கவில்லையா. அந்த தூணை கட்டிபிடித்தால் நினைத்தது நடக்கும் என்ற மூடநம்பிக்கை அங்கே உண்டு.

    ReplyDelete
  22. மோகன், என் தலைநகரிலிருந்து தொடரில் குதுப்மினார் பற்றி சில தகவல்களும் படங்களும் பகிர்ந்துள்ளேன்.

    சுட்டி இதோ...

    http://venkatnagaraj.blogspot.in/2010/04/8.html

    ReplyDelete
  23. தகவல்கள், படங்களுடன் பகிர்வு அருமை.

    உண்மைதான் விளக்கொளியில் எடுக்கும் போது கட்டிடங்களின் அழகு வெளிப்படுவதில்லை. சில இடங்களை விளக்கொளியில் பார்ப்பதே அழகு என்பார்கள். இரண்டு நேரங்களும் சென்று பார்க்கிற மாதிரி திட்டமிடுதல் பயணங்களின் போது சிரமமே. நேரம் பிரச்சனையாகும்.

    ReplyDelete
  24. வீடியோ தரம் நன்றாக உள்ளது. இடம் பார்க்க ஆக்ரா கோட்டை போலவே உள்ளது.

    ReplyDelete
  25. வேற எங்கேயெல்லாம் டில்லியில் சுத்தினீங்க?

    ReplyDelete
  26. அருமையான தகவல்கள். குத்புதீன் ஐபக்தான் குதுப்மினாரைக் கட்ட ஆரம்பிச்சார்ன்னுதான் எனக்கும் ஞாபகம்.

    காவி தாஜ்மஹால் அழகாருக்கு.

    ReplyDelete
  27. வவ்வால்: இன்னும் ஓரிரு பதிவில் டில்லியை தாண்டி ஆக்ரா பதிவுகளுக்கு போவோம். அப்புறம் சிம்லா. அப்புறம் மணாலி

    என்ன பண்றது? பெரிய பட்ஜெட்டில் செலவு பண்ணி போட்ட பிராஜக்ட் ஆச்சே ? :))

    நிற்க. ஒரு டையரி போலவும் மற்றும் அங்கு செல்வோருக்கு உதவவும் விரிவாய் எழுத வேண்டி உள்ளது. ஒரே பதிவில் மூன்று இடம் எழுதினால் பெரிய பதிவென மக்கள் தெறித்து ஓடிடுவாங்க. நான்கைந்து பதிவுக்கு நடுவில் தானே இவை வருது? வந்துட்டு போகட்டும் !

    ReplyDelete
  28. வவ்வால் : உங்களின் அடிஷனல் தகவல்கள் மிக நன்று. முடிந்தால் பதிவில் சேர்க்கிறேன்

    ReplyDelete
  29. நன்றி வெங்கட். உங்கள் பதிவு வாசித்த நினைவில்லை. நிச்சயம் வாசிக்கிறேன். குதுப்மினார் பற்றி நிறையவே எழுதலாம் நான் எழுதியது மிக குறைவு என அறிகிறேன்

    ReplyDelete
  30. ராமலெட்சுமி மேடம்: சரியாக சொன்னீர்கள். நாங்கள் விளக்கொளியில் ரசித்த அழகை காமிராவில் கொண்டு வர முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது ! எங்கள் காமிரா பிரச்சனையோ என நினைத்தோம். காமிரா காரரான நீங்கள் சொன்னதும் சந்தேகம் அகன்றது

    ReplyDelete
  31. தாஸ்: நன்றி வீடியோ ஒரே இடத்தில் நின்று கொண்டு சுற்றி எடுத்தால் நன்கு வருகிறது. பல நேரங்களில் நடந்து கொண்டே எடுக்கும் போது சரியே வருவதில்லை. அப்போது நிறைய shake இருக்கும்

    ReplyDelete
  32. ராஜ நடராஜன் சார்: நன்றி டில்லியில் இன்னும் கொஞ்ச இடங்கள் தான். விரைவில் ஆக்ரா செல்வோம்

    ReplyDelete
  33. அமைதிச்சாரல் said...

    குத்புதீன் ஐபக்தான் குதுப்மினாரைக் கட்ட ஆரம்பிச்சார்ன்னுதான் எனக்கும் ஞாபகம்.

    **
    உண்மை தான் நன்றி !

    ReplyDelete
  34. தகவல்கள், படங்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete
  35. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. சகுனி கணக்கு வழக்கை எழுதிய பதிவில் பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

    எனக்கும் தொடக்கத்தில் இது போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரபி சேனல்களை பார்த்து பார்த்து நேரிடையாகவே பார்த்தது போல ஆகி விட்டது.

    அப்புறம் வவ்வால் எந்த துறையில் தான் இப்போது இருக்கீங்க?

    எதை தொட்டாலும் கலக்குறீங்க?

    ReplyDelete
  37. உள்ளே வீடியோ எல்லாம் எடுக்க விடுகிறார்களா? சில நிஜங்களின் அழகாய், நம் கண்களால் பார்க்கும் அழகாய் அப்படியே கேமிராவில் கொண்டு வருவது மிகக் கடினம். ஆனால் இந்தக் கலை ராமலக்ஷ்மி, அமைதிச்சாரல் போன்றவர்களுக்கு கை வந்திருக்கிறது. வவ்வாலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஜோதிஜியின் கேள்வி எனக்கும்....

    அப்புறம் வவ்வால் எந்த துறையில் தான் இப்போது இருக்கீங்க?

    எதை தொட்டாலும் கலக்குறீங்க?

    :))

    ReplyDelete
  38. கண்டுகொண்டோம் பல இடங்களையும். அவைபற்றிய விபரங்களுடன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...