Thursday, August 2, 2012

குமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல்

ரசு பதில்கள் - எஸ். ஏ. பி அவர்களால் துவக்கப்பட்டு ஓஹோ என்று கொடி கட்டி பறந்தது. அண்ணாமலை-ரங்கராஜன்- சுந்தரேசன் என மூன்று பேரால் பதில் தரப்படுகிறது அவர்களின் முதல் எழுத்து சேர்த்தே "அரசு " என சொல்லி வந்தனர். ஆனால் எஸ். ஏ. பி அவர்கள் மறைவுக்கு பின் தான், அரசு பதில்கள் இதுவரை சொன்னது எஸ். ஏ. பி மட்டுமே என தெரிய வந்தது.

வீடுதிரும்பல் பற்றி குறிப்பிட்ட இந்த வார குமுதம்
***************

அரசு பதில்களில் கேள்வி இடம் பெறுவது ஒரு காலத்தில் பெரிய விஷயம் (இப்போது எப்படி என தெரியலை). எனது அண்ணனின் கேள்வி இதில் ஒரு காலத்தில் அடிக்கடி வரும்.

தற்போதைய குமுதம் பழைய குமுதம் போல் அல்ல என்பதை எல்லோருடனும் சேர்ந்து நானும் ஒப்பு கொள்ளத்தான் வேண்டும். இருந்தாலும் இன்னமும் விகடன் மற்றும் குமுதம் தான் தமிழில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கைகள் என்பதை மறுக்க முடியாது

நண்பர் கஸாலி நேற்று போன் செய்து குமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல் பற்றி எழுதியிருக்கு என்றார். ஆச்சரியமாய் இருந்தது. ஜென் கதை நீங்கள் எதோ ப்ளாகில் எழுதிருக்கீங்க போல. அதை அப்படியே எடுத்து போட்டுட்டு நன்றி வீடுதிரும்பல் என போட்டுருக்காங்க என்றார்.

புத்தகம் வாங்கி பார்த்ததும் கூட ஆச்சரியம் குறைய வில்லை !

வாசகர் ஒருவர் ஜென் கதை சொல்ல சொல்லி கேட்க, நமது பதிவில் வந்த ஜென் கதையை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி விட்டு கடைசியில் நன்றி வீடுதிரும்பல் என போட்டுள்ளனர்

இந்த ஜென் கதை நிச்சயம் நான் காது வழியே கேட்டது தான். மனதில் பதிந்து போன கதை. ப்ளாக் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் திரட்டிகளில் இணைக்காத போதே இங்கு பகிர்ந்தது. பின் நட்சத்திர வாரம் சமயம் மீண்டும் மீள் பதிவாய் வந்தது

சுஜாதா சொன்னது போல் பத்திரிக்கையில் பெயர் என்பதே ஒரு மகிழ்ச்சி. அதை விட குமுதம் போன்ற பத்திரிகையில் நம் ப்ளாகை கவனிக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம் + மகிழ்ச்சி.

வெறுமனே வீடுதிரும்பல் என்று சொன்னாலே நாம் தான் என்கிற அளவு இன்னும் பிரபலம் ஆகலை. எனவே குமுதத்தில் வலைப்பதிவு (ப்ளாக்) எனவும் குறிப்பிட்டிருக்கலாம் !

இதுவரை இட்லிவடை மற்றும் கேபிள் சங்கர் போன்ற சிலரைத் தான் அரசு பதில்களில் மேற்கோள் காட்டியதாக அறிகிறேன்.(தவறாய் இருந்தால் திருத்துங்கள் )







குமுதத்தில் சுட்டி காட்டிய கதை இதோ உங்களுக்காக:


ஒரு டீக்கடைக்காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. அப்போது மல்யுத்த வீரன் டீக்கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம். எனவே டீக்கடைக்காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்.

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?"  " டீ ஆற்றுகிறேன்" " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீக்கடைக்காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை.

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீக்கடைக்காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி.

மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்.
***
அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை.. எனினும் சில வரிகள்.. நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம் !

நன்றி குமுதம் ! நன்றி கஸாலி !

டிஸ்கி: இன்று முழு நாள் மீட்டிங். இந்த பதிவிற்காக யாரேனும் போன் செய்து கலாய்க்க போகிறீர்கள் எனவே தான் சொல்லி வைக்கிறேன். தொலை பேசி அணைக்கப்பட்டிருக்கும்.   மாலை ஆறு மணிக்கு மேல் தான் தான் இணையம் பக்கம் வருவேன். நன்றி !

93 comments:

  1. நல்ல கதை. வாழ்த்துகள் மோகன்...

    த.ம. 2

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. பரவாயில்லையே...உங்க பிளாக் பேரையாவது போட்டு இருக்காங்களே...அதை நினைச்சு சந்தோஷ படுங்க...அப்புறம் இதையே ஒரு பதிவா தேத்தி விட்டீங்களே...

    ReplyDelete
  4. குமுதத்தில் வந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்..! மோகன் சார்!

    டிஸ்கி:போன் செய்து கலாய்க்கிறாங்களா..? சிவா,பிரபா மோகன்குமார் போன் நெம்பர் பிளீஸ்!

    ReplyDelete
  5. நல்ல கதை... வாழ்த்துக்கள்...!

    (த.ம. 3)

    ReplyDelete
  6. வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. சூப்பர், வாழ்த்துகள்

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  11. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் மோகன்குமார்.

    ReplyDelete
  12. அப்ப, நீங்க தான் அரசு பதில்கள் எழுதுபவரா? --டவுட்..

    வாழ்த்துக்கள் ஜி..

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.. அண்ணே...

    இதை பதிவாத்தேத்துனதுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. வாழ்த்துகள் மோகன்குமார்!
    என் விகடனில் உங்க பிளாக் பற்றி வந்தப்போவே நீங்க பிரபலமாக ஆரப்பிச்சிட்டீங்க. நான் கூட இணைய அறிமுகம் இல்லாத ஆனால் பத்திரிக்கைகள் வாசிக்கும் பழக்கமுடைய என் தோழிகளிடம் அடிக்கடி வீடு திரும்பல் பகிர்வுகள் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.

    ReplyDelete
  15. மகிழ்ச்சியும்
    வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  16. மிக்க மகிழ்ச்சி
    உங்கள் மூலம் பதிவின் பெருமை
    பரவட்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ஆறு மணிக்கு வந்துடுவீங்கதானே ! வாங்க வாங்க !!

    ReplyDelete
  18. Anonymous11:45:00 AM

    வாழ்த்துக்கள்!! (த.ம.8)

    ReplyDelete
  19. gud story..........congarge sir.....myself also proud to be one of ur readers......contact no please....

    ReplyDelete
  20. மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் மோகன்

    ReplyDelete
  21. குமுதத்தில் வந்ததிற்கு வாழ்த்துக்கள் மோஹன் ! இந்த சாமுராய் கதை ஆரம்பத்தில் விகடனில் வெளி வந்தது !



    அன்புடன் ,



    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்.. சார்...

    தற்போது மீடியாக்கள் பதிவுலகை நன்கு கவனிக்கிறது....

    தொர்ந்து இன்னும் போன்ற நல்லபதிவுகளை பதிவுலகில் இருந்து பத்திரிக்கை உலகம் எடுத்தால வேண்டும்

    ReplyDelete
  24. இதை விட சந்தோஷம் இருக்குமா? வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  25. இப்போது பதில் எழுதும் ‘ப்ரியா கல்யாண ராமனும், எஸ். ஏ. பி.போலவே ஆழ்ந்த படிப்பறிவும் பட்டறிவும் படைப்பாற்றலும் உள்ளவர்.

    உங்கள் பதிவை அவர் எடுத்தாண்டது மிகவும் பெருமைப் படத்தக்கது.

    மிக மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  26. பாஸ் நீங்களாவே ஏன் அப்பிடி நினைச்சுக்கிறீங்க! என்னைபொறுத்தவரை வீடுதிரும்பல் மோகன்குமார் சார் பிரபலம் தான்! அது விகடனுக்கு தெரிஞ்சிருக்கு அதுனாலதான் அப்பிடி போட்டிருக்கும்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  27. சாரி குமுதத்திற்கு :)

    ReplyDelete
  28. Congrats!
    I had the opportunity to watch your program in 'makkal tv' yesterday and today - very good and I was proudly pointing out you to my children! Congrats once again.

    ReplyDelete
  29. வாழ்த்துகள் தோழர். மோதிரக்கையால் குட்டப்படுவதே அதிர்ஷ்டம். நீங்கள் ஷொட்டு வாங்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  30. கதை அருமை நண்பரே..

    குமுதத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் சார்! கதை அருமை!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் சார்.... எனக்கும் நன்றி சொல்லிருக்கீங்க...அதற்கும் ஒரு நன்றி

    ReplyDelete
  33. நன்றி வெங்கட்

    ReplyDelete
  34. துளசி மேடம் : நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. கோவை நேரம் said...


    அப்புறம் இதையே ஒரு பதிவா தேத்தி விட்டீங்களே...

    நண்பா ! சில விஷயம் புதன் கிழமை எழுதும் வாராந்திர பதிவில் எழுதினால் பலரை சென்று சேர்வதில்லை. இப்படி தனியே எழுதினால் தான் அதற்கு ஒரு ரீச் இருக்கு. மற்றபடி பதிவு தேத்தனும் என்று இல்லை. Drafts-ல் இருக்கும் 70 பதிவுகள் என்றைக்கு காலியாகுமோ தெரியலை

    ReplyDelete
  37. வீடு சுரேஸ்குமார் said...


    போன் செய்து கலாய்க்கிறாங்களா..? சிவா,பிரபா மோகன்குமார் போன் நெம்பர் பிளீஸ்!

    **

    நீங்கள் கேட்ட இருவரிடமும் போன் நம்பர் இருக்கு. நான் பொது வெளியில் நம்பர் போடுவதில்லை. சென்னை சந்திப்புக்கு வாங்க பேசுவோம்

    ReplyDelete
  38. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  39. நன்றி கலாநேசன்

    ReplyDelete
  40. வாங்க சிபி. மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  41. மனோ மேடம்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  42. நன்றி ஸாதிகா

    ReplyDelete
  43. நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  44. நன்றி பாலகணேஷ் சார்

    ReplyDelete
  45. காவேரிகணேஷ் said...

    அப்ப, நீங்க தான் அரசு பதில்கள் எழுதுபவரா? --டவுட்..



    அண்ணே: ஏஏஏன் ?? நன்றி !

    ReplyDelete
  46. நன்றி சங்கவி. பதிவா தேத்தியதன் விளக்கம் மேலே சொல்லிருக்கேன்

    ReplyDelete
  47. Uma said...


    நான் கூட இணைய அறிமுகம் இல்லாத ஆனால் பத்திரிக்கைகள் வாசிக்கும் பழக்கமுடைய என் தோழிகளிடம் அடிக்கடி வீடு திரும்பல் பகிர்வுகள் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.

    ***

    மிக மிக மகிழ்ச்சி. எழுதுவதால் பலராலும் நாம் தினமும் நினைக்கப்படுகிறோம். மிக நல்ல, மகிழ்வான உணர்வு இது !

    ReplyDelete
  48. நன்றி நிசாமுதீன் !

    ReplyDelete
  49. நன்றி ரமணி சார் !

    ReplyDelete
  50. ஷர்புதீன் said...


    ஆறு மணிக்கு வந்துடுவீங்கதானே ! வாங்க வாங்க !!


    வாட் மேட்டர் தோஸ்த்?

    ReplyDelete
  51. பாலஹனுமான்: நன்றி சார்

    ReplyDelete
  52. பாலகணேசன்: மிக மகிழ்ச்சி. பொது வெளியில் போன் எண் போடுவதில்லை. மெயில் அனுப்புங்கள் சொல்கிறேன்

    ReplyDelete
  53. நன்றி வலங்கை சரவணன்

    ReplyDelete
  54. நன்றி ஆர். ஆர். ஆர். சார் ! எனக்கு நினைவில்லை !

    ReplyDelete
  55. நன்றி சமீரா

    ReplyDelete
  56. கவிதை வீதி... // சௌந்தர் // said...


    தற்போது மீடியாக்கள் பதிவுலகை நன்கு கவனிக்கிறது....


    உண்மை நன்றி சௌந்தர்

    ReplyDelete
  57. . said...


    இதை விட சந்தோஷம் இருக்குமா? வாழ்த்துகள் மோகன்.

    நீங்கள் இப்படி பாராட்டியது தான் சந்தோசம் ஸ்ரீராம்

    ReplyDelete
  58. நன்றி அமுதா மேடம்

    ReplyDelete
  59. பரமசிவம் ஐயா: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  60. நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே. நண்பர் என உங்களை அடிக்கடி சொல்வது சரியே என நிரூபித்து விட்டீர்கள்

    ReplyDelete
  61. middleclassmadhavi said...

    Congrats!
    I had the opportunity to watch your program in 'makkal tv' yesterday and today - very good and I was proudly pointing out you to my children! Congrats once again.

    மாதவி மேடம் : உங்கள் பின்னூட்டம் மிக மிக மிக மகிழ்ச்சி தந்தது. இத்தகைய பாராட்டுகள் மட்டும் தான் எழுத வைக்கிறது மிக நன்றி

    ReplyDelete
  62. யுவகிருஷ்ணா said...

    வாழ்த்துகள் தோழர். மோதிரக்கையால் குட்டப்படுவதே அதிர்ஷ்டம். நீங்கள் ஷொட்டு வாங்கியிருக்கிறீர்கள்.

    அடடா ! பதிவுலகின் சீனியர் பதிவரிடம் இப்படி பாராட்டு பெற கொடுத்து வச்சிருக்கணும் ! நன்றி லக்கி

    ReplyDelete
  63. மிக நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  64. நன்றி கஸாலி; பல முறை நீங்கள் தான் முதலில் சொல்கிறீர்கள்


    Thanks a ton !

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள்... Mohan

    ReplyDelete
  67. வாழ்த்துக்கள் மோகன்...புத்தகத்தில் பார்த்தப்போவே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன். காலையிலேயே டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன்.

    //வெறுமனே வீடுதிரும்பல் என்று சொன்னாலே நாம் தான் என்கிற அளவு இன்னும் பிரபலம் ஆகலை//

    தன்னடகத்திற்காக சொல்றீங்களான்னு தெரியல. கடந்த சில மாதங்களா உங்க ரீச் அதிகம்னு நம்பறேன். என் ஆபிஸ் ப்ரென்ட் ஒருத்தர் உங்களை 'வீடு திரும்பல் குமார்'னுதான் குறிப்பிடுவார் :)

    ReplyDelete
  68. எங்க வூட்டுல ஆறுமணி முதல் ஒன்பது மணிவரை மின்சாரம் கிடையாது, அதனால் நீங்கள் பேசிய மக்கள் டிவி நிகழ்ச்சி பார்க்கமுடியல., லிங்க் கொடுக்கவும்...

    அப்புறம்,,, அது என்னை கொஞ்ச நாளா பதிவுலக கலக்கு கலக்குறீங்க, அநேகமாக "அட போங்கய்யா" என்று ஓய்வு விட போறீங்கன்னு நினைக்கிறேன்., கேபிள தவிர மற்ற அநேகம் பேர் செய்தது அதனைத்தான் என்று நினைக்கிறேன். சுகுணா திவாகர் ஞாபகம் இருக்கிறதா?

    ReplyDelete
  69. ஒரு வெகு ஜன இதழில் அங்கீகாரம் என்பது கொண்டாடக் கூடியதே தோழர். எனக்கும் மகிழ்ச்சியே தோழர்.

    வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  70. வாழ்த்துக்கள் மோகன்,இப்போது பதிவுகளையும் ஊடகங்கள் கவனிக்கவெ செய்கின்றன.

    வெளிநாட்டில் எல்லாம் பல நிறுவனங்கள் பதிவர்களை தாஜா செய்து
    அவர்கள் பிராடக்ட் பற்றி நன்றாக எழுத சொல்வார்களாம், நம்ம ஊரிலும் ஆங்கிலப்பிலாக்கர்களுக்கு அந்த மவுசு இருக்கு.

    கிரெய்க்ஸ் லிஸ்ட்னு ஒரு அமெரிக்க ஆங்கில பிலாக் அதில் நெகட்டிவ் எழுதினா அந்த பிராடெக்ட் சேல்ஸ் பாதிப்பாகுமாம்.

    கூடிய சீக்கிரம் தமிழ்ப்பதிவுகளுக்கும் அந்த மரியாதை வரும்.

    ReplyDelete
  71. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  72. நன்றி மாதேவி

    ReplyDelete
  73. நன்றி இளங்கோ

    ReplyDelete
  74. நன்றி எட்வின் சார் மகிழ்ச்சி

    ReplyDelete
  75. ர‌கு said...

    தன்னடகத்திற்காக சொல்றீங்களான்னு தெரியல. கடந்த சில மாதங்களா உங்க ரீச் அதிகம்னு நம்பறேன். என் ஆபிஸ் ப்ரென்ட் ஒருத்தர் உங்களை 'வீடு திரும்பல் குமார்'னுதான் குறிப்பிடுவார் :)


    நன்றி ரகு. சீரியஸா தான் அப்படி நினைத்து எழுதினேன்; உங்கள் அலுவலக நண்பர் சொல்வதாய் நீங்கள் சொல்வது ஆச்சரியமாயும் சந்தோஷமாயும் உள்ளது நன்றிகள் பல ! அவருக்கும் என் அன்பை கூறவும்

    ReplyDelete
  76. வவ்வால்: மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  77. ஷர்புதீன் said...

    அப்புறம்,,, அது என்னை கொஞ்ச நாளா பதிவுலக கலக்கு கலக்குறீங்க, அநேகமாக "அட போங்கய்யா" என்று ஓய்வு விட போறீங்கன்னு நினைக்கிறேன்., கேபிள தவிர மற்ற அநேகம் பேர் செய்தது அதனைத்தான் என்று நினைக்கிறேன். சுகுணா திவாகர் ஞாபகம் இருக்கிறதா?
    *******

    ஷர்புதீன் :

    பல பதிவர்கள் ஒரு நேரத்தில் வெறுத்து போய் நிறுத்துகிறார்கள். எழுதுவதை நமக்கு அது எப்போது நடக்குமோ அறியேன். எப்போதும் நடக்கலாம் .. !

    ஆனால் ஒன்று : அலுவலக வேலை + வீடு பாதிக்காமல் தான் எழுதுறேன். 90 % எழுதுவது வார இறுதியில்; இது போன்ற டாபிக்கல், அவசரமாய் பகிரும் விஷயம் மட்டுமே வார நாளில் எழுதுவேன்

    காலை பதிவு போட்டு விடுவேன். மாலை தான் வந்து கமன்ட் போடுவேன். ஓடும் வரை ஓடட்டும் !

    விளம்பரங்களும் இங்கு போட்டு இங்கிருந்து பணமும் கொஞ்சம் வர ஆரம்பித்தால் " எங்கள் நேரத்தை தான் எடுத்துகிட்டு எழுதுகிறீர்கள்" என்ற வீட்டார் பேச்சு சற்று குறைய கூடும்

    இன்னமும் தினம் காலை கிச்சன் வேலை செய்வதோ, மாலை பெண்ணின் பாடத்தை கவனிப்போதோ குறையவில்லை; ஆனால் முன்பு போல் வீட்டில் உள்ளோரிடம் அதிகம் பேசுவதில்லை :(

    மக்கள் டிவி லிங்குகள் இதோ:

    மதுரை நினைவுகள் பற்றிய விமர்சனம்

    http://www.istream.com/tv/watch/146665/Kalai-Vanakkam--Aug-1-2012

    'THE MONK WHO SOLD HIS FERRARI' கீழே உள்ள லிங்கில் உள்ளது.

    http://www.istream.com/tv/watch/147268/Kalai-Vanakkam--Aug-2-2012

    ஒவ்வொரு லின்கிலும் கடைசி பத்து நிமிடம் தான் நான் பேசியது இருக்கும்

    ReplyDelete
  78. Anonymous1:09:00 AM

    நீங்கள் பகிர்ந்து கொண்ட லிங்குகள் மூலம், 'என் மதுரை நினைவுகள்' மற்றும் 'The Monk who sold his Ferrari' புத்தகங்களைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  79. மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  80. வாழ்த்துகள் மோகன்....

    ReplyDelete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete
  82. வாழ்த்துகள்.

    ஆனால், சுட்டி கொடுக்காமல், வெறும் ‘நன்றி’ போடுவதால் ரீச் இருக்காதே. குமுதம் எங்கிருந்து எடுத்ததோ, அதற்கான முகவரியை கொடுத்திருக்க வறுபுறுத்த வேண்டும்.

    ReplyDelete
  83. மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துகள் தோழரே..

    ReplyDelete
  84. வாழ்த்துக்கள் மோகன் குமார். பத்திரிகைகளுக்கும் படைப்புகளை அனுப்புங்கள்

    ReplyDelete
  85. வெகுஜனப் பத்திரிகையில் வந்ததற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  86. Bala Subra said...
    வாழ்த்துகள்.ஆனால், சுட்டி கொடுக்காமல், வெறும் ‘நன்றி’ போடுவதால் ரீச் இருக்காதே
    ******
    உண்மை தான் நன்றி நண்பரே

    ReplyDelete
  87. நன்றி மது மதி

    ReplyDelete
  88. நன்றி முரளி சார்: அனுப்பலாம்.

    ReplyDelete
  89. அமைதி சாரல்: நன்றி

    ReplyDelete
  90. வாழ்த்துக்கள்.
    குமுதத்தில் அந்தக் கதையைப் படித்தபோது உங்கள் பெயரை கவனிக்கவில்லை...

    நீங்கள் இப்பொழுது விஜய் டிவியில் நடித்துக்கொண்டிருந்த சந்தானம் இல்லை. பா.எ.பாஸ்கரன் சந்தானம்.

    மகிழ்ச்சி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...