Sunday, August 19, 2012

சென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள்

திவர் சந்திப்பு குறித்து சில முக்கிய முடிவுகள் மற்றும் தகவல்கள் இதோ.

கலந்து கொள்வோர் இறுதி பட்டியல்

சென்னையில் நடக்கும் பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நண்பர்களின் பட்டியல் நாளை மறுநாள் புதன்கிழமை நண்பர்களின் தளங்களில் வெளியிடப்படும். இதுவரை போன் மூலமும் மெயில் மூலமும் நம்மிடம் தங்கள் வருகையை உறுதி செய்தவர்கள் பட்டியலாக அது இருக்கும்.

நீங்கள் சென்னை பதிவரோ, அல்லது வெளியூரில் இருக்கும் பதிவரோ, ஆகஸ்ட் 26 ஞாயிறு அன்று நடக்கும் விழாவுக்கு நீங்கள் வருவதை இதுவரை மெயில் அல்லது போன் மூலம் உறுதிபடுத்தா விடில் கீழ்க்காணும் மெயில்களில் ஏதாவது ஒன்றுக்கு அவசியம் உங்கள் வருகையை உறுதி செய்யவும் .

மதுமதி : kavimadhumathi@gmail.com
பாலகணேஷ் bganesh55@gmail.com
ஜெயகுமார் : pattikaattaan@gmail.com
மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686


விழாவிற்கான தங்கும் அறை மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், நீங்கள் வருகையை உறுதிபடுத்துவது மிக மிக அவசியம். அதனடிப்படையில் தான் தங்கும் அறைகளும் ஞாயிறு மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்ய முடியும். எனவே நீங்கள் தயவு கூர்ந்து அவசியம் உங்கள் வருகையை உறுதி செய்யவும் !

வெளியூர் பதிவர்கள்  உங்களுக்கு அறை தேவை எனில் அவசியம் எங்களுக்கு தெரிவிக்கவும். இது மிக மிக முக்கியம். நீங்கள் முன்பே தகவல் சொன்னால் தான் அறைகள் தங்க ஏற்பாடு செய்ய எளிதாக இருக்கும். விழா நடத்துவோரின் சிரமத்தை புரிந்து கொண்டு உங்களுக்கு அறை தேவை எனில் அவசியம் முன்பே தெரிவிக்கவும் !

புதனன்று நண்பர்கள் அனைவரது ப்ளாகிலும் இறுதி பட்டியல் வெளியாகும். எனவே நீங்கள் உடன் உங்கள் வருகை குறித்து தகவல் தரவும் !

கவியரங்கில் கலந்து கொள்வோர் பட்டியலும் புதனன்று வெளியாகும். இதுவரை பெயர் தராதோர் கவியரங்கிற்கு பெயர் தர விரும்பினால் நாளை மறுநாள் புதன் கிழமை இந்திய நேரப்படி காலை ஒன்பது மணி தான் பெயர் தர கடைசி நாள். விரைவில் மேலே உள்ள நண்பர்களில் யாருக்கேனும் மெயில் தரவும்.

போலவே மூத்த பதிவர்களுக்கு பாராட்டு மற்றும் மரியாதை செய்வித்தலுக்கு உங்களுக்கு தெரிந்த அறுபது வயதை எட்டிய மூத்த பதிவர்கள் இருந்தால், அவர்களால் விழாவிற்கு அன்று வர முடியும் எனில் எங்களுக்கு நாளை மறுநாளுக்குள் தெரிவியுங்கள். மூத்த பதிவர்களும் எங்களுக்கு விழாவிற்கு வர விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்

விழா நேரத்தில் சிறு மாற்றம்

விழாவில் பதிவர் அறிமுகம், கலந்துரையாடல், கவியரங்கம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் மரியாதையும் என பல நிகழ்வுகள் உள்ளதால் விழாவை காலை பத்து மணிக்கு அரை மணி முன்பாக, அதாவது  ஒன்பதரை மணிக்கே  துவங்க உத்தேசித்துள்ளோம். ரிஜிச்ட்ரேஷன் உள்ளிட்ட நிகழ்வுகள் காலை ஒன்பது மணிக்கு துவங்கும். எனவே விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பதிவர்களும் காலை ஒன்பது மணி முதல் 9.15 க்குள் விழா நடக்கும் ஹாலுக்கு வரும்படி கேட்டு கொள்கிறோம். விழா மிக சரியாக காலை ஒன்பதரை மணிக்கு துவங்கும்.

விழாவிற்கு பங்களிப்பு தர விரும்பும் நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். அனைவரின் பங்களிப்பும் சேர்ந்தால் விழா பிரம்மாண்டமாக இருக்கும். எனவே பதிவர் விழாவுக்கு உங்கள் பங்களிப்பை நீங்கள் செலுத்துமாறு வேண்டுகிறோம்.

விழாவில் இடம் பெரும் சிறப்புகள் பற்றி மதுமதி அவ்வப்போது பதிவுகள் எழுதியுள்ளார். உங்களுக்கு மீண்டும் சுருக்கமாய் சில ஸ்பெஷல் தகவல்களை பகிர்கிறேன்:

சிறப்பு புத்தக கண்காட்சி 

பதிவர் சந்திப்பு நடைபெறும் அன்றைய நாளில் டிஸ்கவரி புத்தக நிலையம் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து புத்தங்களையும் பதிவர்கள் அரங்கிலேயே அவரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவர் சந்திப்பன்று நடக்கும் புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கும் பதிவர்களுக்கு ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

பிரபல திரட்டியான வலையகம் இந்த சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்து தர சம்மதித்து இருக்கிறது.அயல்நாட்டு பதிவர்களும் நிகழ்வை கண்டு மகிழும் வண்ணம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் அறிய மதுமதியின் இந்த பதிவை வாசியுங்கள்

மக்கள் தொலைக்காட்சியில் மாநாட்டு நிகழ்ச்சி

பதிவர் மாநாடு நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வாக ஒளிபரப்ப கேட்டு கொண்டுள்ளோம். அவர்களின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பதிவர் ஒருவருக்கு ஒரு லட்சம் பரிசு

மக்கள் சந்தை சிறந்த பதிவர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தர திட்டமிட்டுள்ளது. என்ன அடிப்படையில் இந்த பரிசு வழங்கப்படும் என்பதை விழாவில் மக்கள் சந்தை நிர்வாகிகள் தெரிவிப்பார்கள்.

இப்படி பல விதத்திலும் நம்மை மகிழ்விக்க இருக்கும் இந்நிகழ்ச்சியில் உங்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் !

வாருங்கள் சந்திப்போம்.

இதுவரை வருகையை உறுதி செய்யாத நண்பர்கள் உடனே உறுதி செய்யுங்கள் ! நன்றி !

55 comments:

  1. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் , அதையும் நாளைய பதிவில் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.

    ReplyDelete
  3. இவ்வளவு ஜரூரா எல்லா ஏற்பாடுகளும் பக்காவா செய்வதை நினைத்தால் பெருமையா இருக்கின்றது.

    விழாக்குழு பொறுப்பாளர்களுக்கு இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  4. மிக விரிவான ஏற்பாடுகளுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தமிழ்மண தர வரிசை முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்
    பதிவர் விழா தொடர்பான விவரங்களை உடனே புதுப்பித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  8. மிகச் சரியாக திட்டமிட்டு செயல் படுத்துதலும்
    அதனை உடனுக்குடன் அனைவருக்கும்
    தெரியப்படுத்துதலுமான வேலைகளை
    மிகக் கச்சிதமாக செய்து போகும் சென்னைப் பதிவுலக்
    நண்பர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை யூட்டுகிறது
    விரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. சிறப்பான ஏற்பாடுகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  10. சிறப்பான ஏற்பாடுகள்.

    பணி சூழல் காரனமாக கலந்து கொள்ள இயலாது என நினைக்கிறேன்.

    மிக வருத்தமாய் உள்ளது.

    வலை மூலம் கண்டு களித்துக் கொள்கிறேன்

    ReplyDelete

  11. நோற்று நடந்த ஆலோசனைக் கூட்டம்
    பற்றி சுருக்கமாக, ஆனால் விளக்கமாக பதிவிட்ட தஙுகளுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  13. இப்போதே விழா களை கட்டத் துவங்கி விட்டது! பதிவுலக விழா என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் சிறப்பும் நிச்சயம் இருக்கும்!

    ReplyDelete
  14. வெற்றிபெற வாழ்த்துகள்



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  15. விளக்கமான பதிவு!

    ReplyDelete
  16. எந்தத் தகவலையும் விடாது அழகாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே. அருமை.

    ReplyDelete
  17. பதிவர் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. பதிவர் மாநாட்டின் முன்னேற்பாடுகள் வியக்க வைக்கின்றன மோகன் சார் வாழ்த்துக்கள்


    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

    இப் படை தோற்கின் எப் படை வெல்லும்

    ReplyDelete
  19. தகவலுக்கு நன்றி! பதிவர் சந்திப்பு வெற்றி பெற உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!. வரும் ஞாயிறன்று சந்திப்போம்.

    ReplyDelete
  20. தகவல்கள் முழுவதும் அறிந்தேன்...

    நன்றி...(TM 17)

    ReplyDelete
  21. நன்றி ராஜசேகர். விழாவில் சந்திப்போம்

    ReplyDelete
  22. ஜெயகுமார்: படங்கள் மெயிலுக்கு வரலை நண்பா

    ReplyDelete
  23. துளசி மேடம்: நன்றி மகிழ்ச்சி. நீங்களும் இந்நேரம் சென்னை வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்

    ReplyDelete

  24. நன்றி ஸ்ரீராம். சென்னையில் தானே உள்ளீர்கள்? விழாவுக்கு வரலாமே?

    ReplyDelete
  25. TN முரளி சார்: இவ்வார தமிழ் மண ஸ்டார் இங்கு வந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  26. நன்றி உலகநாதன்

    ReplyDelete
  27. நன்றி ரமணி சார். விழாவில் உங்களின் MGR போன்ற performance உண்டா?

    ReplyDelete

  28. நன்றி ராமலட்சுமி மேடம்

    ReplyDelete

  29. நன்றி சயின்டிஸ்ட் முரளி கண்ணன்

    ReplyDelete
  30. ராமானுசம் ஐயா நன்றி

    ReplyDelete
  31. TVR சார் : நன்றி

    ReplyDelete
  32. ஜோசப்: நன்றி

    ReplyDelete
  33. மகிழ்ச்சி பாலகணேஷ் நன்றி

    ReplyDelete
  34. சரவணன்: விழாவிற்கு முதல் நாள் நாம் முதன் முறை சந்திப்போம் என நினைக்கிறேன்

    ReplyDelete
  35. நன்றி நடன சபாபதி ஐயா. விழாவில் சந்திப்போம்

    ReplyDelete
  36. நன்றி கோபி மகிழ்ச்சி

    ReplyDelete
  37. சிறப்பான விளக்கமான பகிர்வு அண்ணே .. நன்றி

    ReplyDelete
  38. பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  39. சிறப்பான ஏற்பாடுகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  40. நன்றி சுரேஷ்

    ReplyDelete

  41. நன்றி காஞ்சனா மேடம்

    ReplyDelete
  42. விழா வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  43. பதிவர் சந்திப்பு குறித்து எழுதப்பட்ட ஒரு பதிவையும், அதில் என் பின்னூட்டதையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன். விழா ஏற்பாட்டாளர்களில் நீங்களும் ஒருவர் என்ற முறையில், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்!!

    http://manithaabimaani.blogspot.com/2012/08/blog-post.html


    இப்பதிவை வழிமொழிகிறேன்.

    கடந்த சில சந்திப்புகளுக்குப் பின்னர், பதிவர்கள் தண்ணியடித்த கதையை விலாவாரியாக எழுதியதைப் படித்த பின்னர், பதிவர் சந்திப்புகள் என்றாலே ஒரு அலட்சிய உணர்வுதான் வருகிறது. பெண்கள் தவிர்ப்பதும் இதனால்தான்.

    பதிவர்களிடையே மது அருந்துவது என்பது ஏதோ சாதாரணமான ஒரு செயலைப் போலவே பேசிக்கொள்ளப்படுகிறது.

    பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செய்யும் பதிவர் சமூகம், இதிலும் தன் பொறுப்பையுணர்ந்து குடி குடியைக் கெடுக்கும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, இந்த தலைமூறையிலேயே குடியை-குடிப்பதைப் பெருமையாகப் பறைசாற்றுபவர்களைக் கண்டிக்க வேண்டும்.

    இந்தச் சந்திப்பில், இதை சீரியஸாக கன்ஸீடர் செய்து, “பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் சார் உங்கள் பதிவர் மாநாடு சிறப்புற நடைபெறுவதற்கு!!!
    சார் பதிவர்கள் மட்டும் தான் கலந்துகொள்ளவேண்டுமா?

    ReplyDelete
  45. நன்றி வெங்கட சீனிவாசன்

    ReplyDelete
  46. ஹுசைனம்மா: எல்லா இடத்திலும் குடிப்பவர்கள் இருபது சதவீதம் உள்ளனர். அப்படி தான் இங்கும். இம்முறை மீட்டிங் நடக்கும் ஹாலுக்குள் குடித்து விட்டு வர கூடாது என்று முன்பே கூறியுள்ளோம்.

    பார்ப்போம். உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி ! உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம்

    ReplyDelete

  47. சமீரா said...

    சார் பதிவர்கள் மட்டும் தான் கலந்துகொள்ளவேண்டுமா?

    *******
    உங்களை போன்ற ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டுமெனில் கலந்து கொள்ளலாம். விழாவிற்கு வருகிறீர்கள் எனில் இதில் உள்ள மெயில் எதற்காவது தெரியப்படுத்துங்கள் நன்றி


    ReplyDelete
  48. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள். என்னால் தான் கலந்து கொள்ள முடியவில்லை!

    ReplyDelete
  49. சார் ரொம்ப ரொம்ப நன்றி!!! நான் இப்போது தான் சசிகலா மேடம் அழைத்து என்னுடைய வருகையை பதிவு செய்தேன்.. மிகவும் ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  50. நன்றி வெங்கட்

    ReplyDelete
  51. சமீரா said...

    சார் ரொம்ப ரொம்ப நன்றி!!! நான் இப்போது தான் சசிகலா மேடம் அழைத்து என்னுடைய வருகையை பதிவு செய்தேன்.. மிகவும் ஆவலாக உள்ளது.
    **
    மகிழ்ச்சி சமீரா. எனக்கு உங்களை தெரியாது. தெரியாத பெண்களிடம் நானாக வந்து அறிமுகம் செய்து உங்கள் பெயர் என்ன என கேட்பது கஷ்டம்

    நீங்கள் என் போட்டோ ப்ளாகில் பார்த்ததால் என்னை அடையாளம் கண்டு பிடித்து விடுவீர்கள் எனவே நீங்களாக அறிமுகம் செய்து கொண்டால் தான் உண்டு !

    சில நிமிடங்களாவது அறிமுகம் செய்து கொண்டு பேச முயலுவோம் நன்றி

    ReplyDelete
  52. உங்களது உடனடித் தகவல் எல்லோருக்குமே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...