Friday, November 30, 2012

இந்தியா ஏன் கசக்கிறது - பயமுறுத்தும் சாலைகள்

இந்தியா ஏன் கசக்கிறது - பயமுறுத்தும் சாலைகள் - ஆதிமனிதன்.

சென்ற பதிவிற்கு வீடுதிரும்பல் வாசகர்கள் தந்த ஆதரவு மிகுந்த மகிழ்வை தந்தது. எல்லோருக்கும் நன்றி.

போரிஸ் பெக்கரில் தொடங்கி மேலை நாடுகளில் இருந்து யார் இந்தியா வந்தாலும், அவர்கள் பார்த்து வியக்கும், பயப்படும் ஒரே விஷயம் நம் நாட்டு சாலைகளையும் அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகளையும் தான் !




சில ஆண்டுகள் மேலை நாடுகளில் இருந்து விட்டு மீண்டும் தாயகம் திரும்பும் என்னைப் போல் பலருக்கும் மீண்டும் பழகிக் கொள்ள சவாலாகவுள்ள விஷயம் நம் போக்குவரத்து முறைதான். அந்த அளவிற்கு மேலை நாடுகளில் போக்குவரத்து ஒழுக்கம் மேலோங்கி இருக்கும்.

உலகில் உள்ள வாகனங்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவான வாகனங்களை கொண்டுள்ள நம் நாட்டில் தான் சாலை விபத்துகள் அதிகம். இந்திய அரசின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 2010-ல் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகளில் சிக்கியுள்ளனர். அதில் இறந்தவர்கள் மட்டும் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர். அதாவது இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் சிக்குகிறார்கள். ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் பலியாகிறார். இவை எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே குற்றம் சொல்லி பயனில்லை. மக்கள் மனம் மாறினால்தான் இம்மாதிரி விபத்துக்களை தவிர்க்க முடியும்.

நம்ம ஊரில் பெரும்பாலான இரவு நேர விபத்துக்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படுவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒருவர் அளவுக்கு மீறி குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது மிகப் பெரிய குற்றம். 'Accidents are not considered as accidents always'.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு அளவுகோல் உண்டு. As per California law, 0.08 % is the maximum content of alcohol you can have it in your blood) குடித்து விட்டு வாகனம் ஓட்டி ஒருவர் மீது மோதி அவர் உயிர் இழந்து விட்டால், குடித்து விட்டு வண்டி ஓட்டியவர்க்கு கொலை குற்றத்திற்கு ஈடான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.

நியூ யார்க், சிக்காகோ போன்ற பெருநகரங்களில் நீங்கள் அதிகமாக குடித்தபின் உங்களால் வண்டி ஓட்ட முடியவில்லை எனில் ஒரு நம்பருக்கு அழைத்தால் போதும். அவர்கள் உங்களை வீட்டிற்கே இலவசமாக காரில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இதற்கேன்றே அங்கு பொது நல அமைப்புகள் உண்டு. நம்ம ஊரில் இதை பற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. நாமாகவே தான் திருந்த வேண்டும்.

யாரோ ஒருவருக்கு தான் விபத்து நடக்கும்; நமக்கல்ல என்ற அலட்சியம் கூடாது; இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விபத்து நமக்கும் நடக்கலாம்; ஒவ்வொரு நான்கு நிமிடத்தில் இறக்கும் நபராய் நாம் இருந்து விட்டால் குடும்பத்தின் நிலை என்ன ஆவது? இதை நினைத்தாவது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாய் தவிர்க்க வேண்டும்.

அடுத்து லேன் டிசிப்ளின். நான் முதன் முதலில் சென்னைக்கு வந்த போது அண்ணா சாலையில் 'Follow Lane Discipline' என்ற போர்டை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த டிசிப்ளினை யாரும் பின்பற்றுகிற மாதிரியே தெரிய வில்லை. ஆங்காங்கே நடக்கும் சிறு விபத்துக்கள் முதல் பெரும் விபத்துக்கள் வரை நாம் லேன் டிசிப்ளின் பின்பற்றினால் பெரும் அளவு குறைந்து விடும்.

இத்தனைக்கும் தற்போது எல்லா நெடுஞ்சாலைகளிலும் குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட வழித்தடங்கள் உள்ளன. உலகில் சிறிய உயிரினமான எறும்புகள் கூட ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தான் செல்லும். ஆனா நாம பாருங்க ரெண்டு கோட்டுக்கு நடுவுல தான் வண்டியை ஓட்டுவோம். இப்படி ஓட்டும்போது நீங்கள் எப்படி செல்ல போகிறீர்கள் என்று முன்னால் போகிறவருக்கும் தெரியாது, பின்னால் வருபவரும் குழம்பி போக வாய்ப்புண்டு.

வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புகையில், சென்னையை நெருங்குகையில் கவனித்து பாருங்கள். மூன்று லேன்களில் ஆறு வண்டிகள் அடைத்துக் கொண்டு போகும். அதனாலேயே ஆங்காங்கு வரும் டிராபிக் ஜாம். சற்று முன் தான் மேல்மருவத்தூர் அருகே வண்டியை ரெண்டு மணி நேரம் நிப்பாட்டி விட்டு சாவகசமாக எல்லோரும் சாப்பிட்டு வருவார்கள். ஆனால் ரோட்டில் வந்தவுடன் அவர்களால் சிறிது பொறுமையாக இருந்து போக முடியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அத்தனை மைல் வேகத்தில் (ப்ரீ வேக்களில் குறைந்தது 110 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில்) வண்டிகள் தொடர்ச்சியாக சென்றாலும் விபத்துக்கள் மிகவும் குறைவே. அதற்கு முக்கிய காரணம் எல்லோரும் லேன் டிசிப்ளினை பின்பற்றுவது தான். மினசொட்டவில் நாங்கள் இருந்த நகரத்தின் அருகே உள்ள பாலத்தை தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. ஆனால் அங்கு மூன்று வருடங்களில் ஒரு விபத்து கூட ஏற்பட்டு நான் பார்த்ததில்லை.

அடுத்ததாக சிக்னல். நம்மூரில் சிக்னலை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே நாம் மதித்து நின்றாலும் பின்னால் உள்ளவர்கள் திட்டியோ, ஹாரன் அடித்தோ நம்மை விரட்டுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் பூந்தமல்லி ஹை ரோட்டில் ஒரு சிக்னலில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டேன். எனக்கு தெரியும் அந்த குறிப்பிட்ட சிக்னலை யாரும் மதிப்பதில்லை என்று. எங்களுக்கு பின்னால் வந்த எந்த வாகனமும் ரெட் சிக்னலில் நிற்கவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த என் மகள் "என்னப்பா? யாருமே நிக்கல. நம்ம மட்டும் தான் நிற்கிறோம்?" என்று கூறினாள். "இப்படியே எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது? நாமாவது நிற்போம்" என்று கூறினேன்.

அமெரிக்காவில் சிக்னலில் வண்டியை நிறுத்தாவிட்டால் அது மிக பெரிய முற்றம். Signal jump என்று கூறுவார்கள். இரவு நடு சாமம் ஆனாலும், அங்கு ஈ, காக்கா இல்லை என்றாலும் கூட STOP சிம்பல் மற்றும் சிகப்பு சிக்னலுக்கு நீங்கள் வண்டியை நிறுத்தி தான் ஆக வேண்டும். நீங்கள் மஞ்சள் சிக்னலின் போதே வண்டியின் வேகத்தை குறைத்து விட வேண்டும். அப்படி உங்களால் பாதுகாப்பாக நிறுத்த முடியாத பட்சத்தில் தொடர்ந்து நிறுத்தாமல் சிக்னலை கடந்து விட வேண்டும். இன்டர்செக்க்ஷனில் (சாலையின் நடுவில்) வண்டியை நிறுத்த கூடாது. இங்கு நாம் பாதி ரோட்டை தாண்டி தான் அடுத்தவருக்கும் வழி விடாமல் அடைத்துக் கொண்டு நிற்கிறோம்.

அமெரிக்கர்கள் மட்டும் தான் ஒழுக்கமானவர்கள். நாம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அங்கு மக்கள் அப்படி இருப்பதற்கு எனக்கு தெரிந்து இரு முக்கிய காரணங்கள்: ஒன்று பிறந்ததிலிருந்தே அவர்கள் அவ்வாறான ஒழுக்கத்திற்கு தங்களை பழக்கப் படுத்திக் கொண்டார்கள். இரண்டாவது அப்படி நீங்கள் ஏதும் போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில், மாட்டிக் கொண்டீர்களானால் உங்களுக்கு கிடைக்கும் தண்டனை (சிறையோ/அபராதமோ) இரண்டுமே கடுமையாக இருக்கும். அங்கு போலீசார் லஞ்சம் வாங்க மாட்டார்கள். ஆதலால் லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகவும் முடியாது.

சாலை பாதுகாப்பு பற்றி என்னுடைய பழைய பதிவு  பதிவெழுத வந்த காலத்தில் மிகவும் ரசித்து எழுதியது. அப்போது நல்ல வரவேற்பையும் பெற்றது.

எப்படி குழந்தைகள் சின்ன வயதிலேயே கோவிலுக்கு போனால் செருப்பை கழட்டி போடவும், புத்தகத்தை மிதித்து விட்டால் தொட்டு கும்பிடவும் நாம் சொல்லி தந்ததை கடைசிவரை அவர்கள் அவர்களையும் அறியாமல் பின் பற்றுகிறார்களோ அதே போல் நம் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே போக்குவரத்து விதிமுறைகளை சொல்லி தந்து, நாமும் அவர்கள் முன் விதிகளை பின்பற்றினால் எதிர் காலத்திலாவது விபத்தில்லா ஒரு நல்ல தலைமுறை உருவாக வாய்ப்புண்டு.
*******
மெரிக்காவில் சாலை போக்குவரத்து சம்பந்தப்பட்ட சில சுவாரசிய குறிப்புகள்:

# அங்கு பெட்ரோல் பம்ப் என்று சொல்ல மாட்டார்கள். கேஸ் ஸ்டேஷன் என்று தான் அழைப்பார்கள்.

# பொதுவாக எல்லோரும் முழு டான்க்கையும் புல் செய்வார்கள். பெட்ரோல் போட யாரும் இருக்க மாட்டார்கள். நாம் தான் கீழே இறங்கி நாமே போட்டுக் கொள்ள வேண்டும்.

# சாலைகளில் ஹாரன் சத்தம் கேட்பது மிக மிக அரிது. யாரையாவது எச்சரிக்கை செய்யவோ அல்லது தவறு செய்யும் சக ஓட்டுனரை கடுமையாக திட்ட மட்டுமே ஹாரன் அடிப்பார்கள். இங்கு வந்த பிறகு குழந்தைகள் அவ்வப்போது ஹரனை அடித்து சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்.

# ஹை பீமை நினைத்த போதெல்லாம் போட்டு ஓட்ட முடியாது. அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு.

# காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்/பின் ஹெட் லாம்ப் ஆன் செய்திருக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான வண்டிகளில் ஆட்டோமேடிக் லைட் ஆன் சிஸ்டம் இருக்கும்.

# ஆறு வயது வரை குழந்தைகளுக்கு பேபி சீட் அல்லது பூஸ்டர் சீட் உபயோகப் படுத்தவேண்டும். தவறினால் மிக பெரிய தண்டனை உண்டு.

# முன் இருக்கையில் அமருபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

# பன்னிரண்டு வயதிற்கு மேல் தான் யாரும் முன் இருக்கையில் அமர்ந்து போகலாம். 


இன்னும் வரும்....

டிஸ்கி: ஞாயிறுக்குள் வீடுதிரும்பலில் இவ்வார புதுப்பட விமர்சனங்கள் 1 or 2 வெளியாகலாம் !

50 comments:

  1. வாகனங்கள் வரிசையாக சென்றாலே விபத்து குறைந்துவிடும் இவ்வளவு சிக்னல்கள் கூட தேவையில்லை. இந்த வைரசை ஒழுக்கத்தை எல்லா வாகன ஓட்டிகளும் நடைபாத சாரிகளும் கடைபிடித்தால் விபத்து குறைந்துவிடும்,மேலும் வேக கட்டுப்பாடும் அவசியம்,
    நல்ல த்க்கவளுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் கண்ணதாசன். நன்றி.

      வேக தட்டுப்பாடு என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு குறைவாக (ப்ரீ வேயில் ) போனாலும் டிக்கெட் கிடைக்கும்.

      Delete
  2. எங்கள் ஊருக்கு வந்தால் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்...

    சுவாரஸ்யமான குறிப்புகள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். எந்த ஊர் சார்?

      Delete
  3. Hi Adhimanithan.... naan Eden PRairie irukkaen.. nenga entha oorla (in Minnesota) irunthenga.. also which flyover you are saying here...

    ReplyDelete
    Replies
    1. Hi Vadivelan, I was in Eagan. The bridge I was referring in my post is the interstate 35W bridge in downtown Minneapolis. But unfortunately this bridge collapsed on Aug-02, 2007. But nothing to do with a traffic accident. In fact I read that more than 200,000 cars uses this bridge every day.

      Delete
  4. தில்லி போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த இடத்திற்குச் சென்றாலும் நாம் சந்திப்பது இந்த போக்கைத்தான். தான் முதலில் சென்று விட்டால் போதும், மற்றவர்கள் சென்றால் என்ன, இல்லை என்றால் என்ன என்பது தான் இவர்கள் கண்ணோட்டம்.

    ReplyDelete
  5. வேளச்சேரியில் காலை பீக் ஹவர்சின் போது பாருங்கள் மோகன். சாலையில் ஹெவி ட்ராபிக் என்பதால் மெகாமார்ட் ஷோரூம் இருக்கும் ப்ளாட்பாரத்தின் மேலேயே நிறைய பேர் பைக் ஒட்டிக்கொண்டு செல்வார்கள். பார்க்கும்போதே அவ்வளவு எரிச்சல் வரும்.

    இந்த ____ங்க எல்லாம் என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? அவ்வளவு அவசரம் இருக்கறவனுங்க இன்னும் சீக்கிரமா கிளம்ப வேண்டியதுதானே?

    ReplyDelete
    Replies
    1. பிளாட்பாரத்தில் வண்டி ஓட்டும் அளவிற்கு இன்னும் அங்கு ஆக்கிரப்பு அரம்பமாகவில்லையா?

      Delete

  6. // எனக்கு தெரியும் அந்த குறிப்பிட்ட சிக்னலை யாரும் மதிப்பதில்லை என்று. எங்களுக்கு பின்னால் வந்த எந்த வாகனமும் ரெட் சிக்னலில் நிற்கவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த என் மகள் "என்னப்பா? யாருமே நிக்கல. நம்ம மட்டும் தான் நிற்கிறோம்?" என்று கூறினாள் //
    மிக மிக ஆபத்தானது... உங்களுக்கு.
    பின்னால் வருபவர் தங்கள் வாகனத்தை இடிக்க / மோத வாய்ப்புள்ளது. அதன் பின்னும் தவறு உங்களுடைதாகவே அவரால் எண்ணி திட்டப்படும், அந்த நேரத்தில் அவரது பக்கத்தில் இருந்து பார்த்தால் அதுவும் தவறு இல்லை - ஏனெனில் நீங்கள் தான் அந்த இடத்தின் வழக்கத்துக்கு மாறாக?!, எதிர்பாராத?! வகையில் சிக்னலை பின்பற்றியிருக்கிறீர்கள்!!!
    நம் ஊரில் நீங்க ஒழுங்கா இருக்குறதுக்கும் தனி எச்சரிக்கை உணர்வு தேவை.

    //இரவு நடு சாமம் ஆனாலும், அங்கு ஈ, காக்கா இல்லை என்றாலும் கூட STOP சிம்பல் மற்றும் சிகப்பு சிக்னலுக்கு நீங்கள் வண்டியை நிறுத்தி தான் ஆக வேண்டும்// சரியான அணுகுமுறை.

    டிசிப்ளின் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
    நேரில் கண்டதில்லை, ஆனால் கேள்விப்பட்டதை வைத்து சொல்வதென்றால், ஜப்பானிய நகரங்களுக்கு உள் சாலைகள் நம்மூரில் இருப்பதை விடவும் சிறியன மற்றும் குறுகலும் கொண்டது. வாகனங்களும் எண்ணிக்கையில் அதிகம். ஆனாலும் சாலைகளில் நெரிசல் இல்லை. அடுத்தவருக்கான மரியாதையும், புரிந்துணர்வும் கூட காரணம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி iTTiAM.

      //அடுத்தவருக்கான மரியாதையும், புரிந்துணர்வும் கூட காரணம்.//

      சரியாக சொன்னீர்கள். இதை வளர்த்துக்கொண்டால் போதும். எல்லாம் சரியாகி விடும்.

      Delete
  7. இன்றைய நாளிதழிலில் செய்தி. வராங்கல்லில் மோசமான ரோட்டால் ஸ்கூல் பஸ் கவிழ்ந்து இரண்டு குழந்தைகள் பலி. :((

    கரெக்டா எப்படி ராங் ரூட்டில் வண்டி ஓட்டுவது என்பதில் எங்க ஹைதை அண்ணாத்தைக்களை அடிச்சிக்க முடியாது தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. எப்பா ? ஹைதராபாத்தில் நான் இருந்திருக்கேன். நம்மூர் ஆட்டோ ரிக்க்ஷாக்கள் தேவலாம். ஹை - டெக் சிட்டி சந்திப்பில் பெரும்பாலும் எதிர் திசையில் அதுவும் மிக வேகமாக அவர்கள் வண்டி ஓட்டுவதை பார்த்து நான் அரண்டு போய் இருக்கிறேன்.

      Delete
  8. /ஞாயிறுக்குள் வீடுதிரும்பலில் இவ்வார புதுப்பட விமர்சனங்கள் 1 or 2 வெளியாகலாம்/

    டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சா?

    ReplyDelete
  9. நீங்கள் செய்வது அக்கிரமம். நிர்வாணபுரியில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன். நீங்கள் பைத்தியக்காரன் ஆவது மட்டுமில்லாமல் எங்களையும் பைத்தியக்காரர்கள் ஆக்கப் பார்க்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது ஐயா? அந்த கோவணமும் கட்டவில்லை என்றால் வெட்கமாக இருக்கிறது. போக போக பழக்கமாகிவிடும் என நினைக்கிறன்.

      Delete
  10. விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு போகும் போது சென்னை போக்குவரத்தை பார்த்து பயம் தொடங்கி விடும்.அதுவரை ஹாரன் சத்தம் கேட்காமல் , திடிரென கேட்கும்போது பயம் அதிகமாகும். ஒரு மாதத்தில் சென்னை ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. சேம் பிளட். எனக்கும் ஏர்போர்ட் வந்தவுடன் நாயிஸ் பொளுஷன் தான் அதிகமாக பாதிக்கும்.

      Delete
  11. பொதுவாகவே டிராஃபிக் ரூல், குப்பை போடுவது என்று அனைத்திலுமே தனிமனித விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாடு திருந்தாது!

    ReplyDelete
  12. உலகில் சிறிய உயிரினமான எறும்புகள் கூட ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தான் செல்லும். ஆனா நாம பாருங்க ரெண்டு கோட்டுக்கு நடுவுல தான் வண்டியை ஓட்டுவோம்

    நல்ல பகிர்வு நண்பரே.

    ReplyDelete
  13. எப்போ தான் இந்த நாடு திருந்துமோ தெரியல...
    பூந்தமல்லி ஹை ரோடு-இல் பெரும்பாலும் லாரிகள் தான் போகும். நாம் மதித்து நின்றாலும் பின் வரும் லாரிகளின் அதிவேகத்தை கண்டு நாமும் சிக்னல் மீற வேண்டியதாக போகிறது...
    ரோடு- அப்படி ஒன்று பல இடங்களில் இல்லை. NH - இல் பயணித்தால் கூட லேன் பின்பற்றி வாகனம் ஒட்டுவதில்லை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா. நிச்சயம் அடுத்து வரும் தலைமுறைகள் மாற்றத்தை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.

      Delete
  14. நல்ல பதிவு!
    “அங்கு போலீசார் லஞ்சம் வாங்க மாட்டார்கள். ஆதலால் லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகவும் முடியாது.” ஒண்ணு சுய ஒழுக்க்ம் வேண்டும் இல்லைன்னா சொன்னா திருத்தணும் இங்கே இரண்டுமே இல்லை அதுதான் பிரச்சனை!

    ReplyDelete
  15. நமது நாடும் குறைந்ததில்லை.


    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. நான் நம் நாட்டை குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. நம் நாட்டிலும் அப்படி இல்லையே என்ற ஏக்கத்தினால் எழுதுகிறேன்.

      Delete
  16. இந்த சாலைகளை பற்றிய பதிவுகளோ/செய்திகளோ படித்தாலே சும்மா சுவ் என்று எகிறுகிறது.இந்தியா தவறவிட்ட பல விஷயங்களில் சாலை நிர்வாகமும் ஒன்று.திருத்தவே முடியாத நிலைக்கு நாம் எப்பவோ போய்விட்டோம். சும்ம்மா ஒரு சாம்பிள்...விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு ஒரு முக்கியமான சாலை,இதன் மூலம் தான் ஆர்காடு சாலையில் இருந்து கோயம்பேடுக்கு போக இலகுவான சாலை இதை அகலப்படுத்த 1975 இல் இருந்து யோசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளவும்.
    சாலையின் நடுவில் ஒரு மேன் ஹோல் மூடி அது சாலை மட்டத்துக்கு இருக்கவே இருக்காது ஏனென்றால் அது வேறு துறை அவர்களுக்கு சாலையை எந்த மட்டத்துக்கு போடுவார்கள் என்று தெரியாது, அவ்வளவு நேர்த்தியான தகவல் பரிமாற்றம்.என்னத்த சொல்வது.அவனவன் GIS முறைபடி தகவல்களை சேர்த்து நகரத்தை நிர்மாணிக்கிறார்கள் இங்கு அதை பற்றி தெரிந்து வைத்துள்ளார்களா என்று கூட தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //இந்தியா தவறவிட்ட பல விஷயங்களில் சாலை நிர்வாகமும் ஒன்று.//

      நன்றி குமார். இந்த போக்குவரத்து மந்திரிகள் எல்லாம் பல நேரங்களில் வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். அங்குள்ள நல்ல விஷயங்கள் ஒன்றையாவது இங்கு கொண்டு வருகிறார்களா என்றால் இல்லை.

      சாலை நிர்வாகம். அப்படினா என்னவென்று கேட்டாலும் கேட்பார்கள்.

      Delete
  17. இதைப்பற்றி மாய்ந்து மாய்ந்து பதிவுகள் என்னமோ நிறைய நாமும் எழுதுறோம். ஆனாலும் அதெல்லாம் யாருக்குன்னுதான் தெரியலை! ஒரே வயித்தெரிச்சல் மட்டும் தான் மிச்சம்.

    ஆனாலும் நம் காவல் துறை இப்படி இருக்கக் கூடாது. போலீஸ் முன்னாலேயே எத்தனையோ விதி மீறல். அவர்களும் கண்டு கொள்வதேயில்லை. எப்படி இப்படி அவர்களால் இருக்க முடிகிறதோ!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தருமி ஐயா.

      /ஒரே வயித்தெரிச்சல் மட்டும் தான் மிச்சம். //

      ஓ அதனால் தான் எனக்கு இப்ப நிறைய காஸ் பார்ம் அகிடுச்சோ.

      Delete
  18. உங்கள் தொடர் பதிவு நன்றாக உள்ளது. தொடருங்கள்.

    அடுத்த தலைமுறையில் இது மாறிவிடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. பார்க்கலாம். உங்கள் வரையில் நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் சார். அவ்வளவு தான் நம்மால் முடியும்.

    பத்தாண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை செய்த போது, இரவு காட்சி படம் பார்த்து விட்டு நடு இரவில் யாரும் இல்லாத பன்னர்கட்டா சாலையில் சிகப்பு விளக்கில் நின்றதுண்டு. முதல் ஓரிரு முறை பின்னால் வந்தவர்கள் அசிங்கமாக திட்டவே, தொடர்ந்து சிகப்பு விளக்கு வந்தால் வண்டியை சாலைக்கு நடுவில் இல்லாமல், ஓரத்தில் நிறுத்தி விடுவேன். ஆனால் கடந்தது கிடையாது.

    என் வரையில், என்னால் முடிந்தது. ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஓட்டியதே கிடையாது. அது 5 நிமிட பயணமாக இருந்தாலும் சரி. 70 கிமி க்கு அதிகமாக வண்டியை ஓட்டியதே கிடையாது. இன்டிகேட்டர் சரியாக போட்டு விட்டு, கையையும் காட்டி விட்டே வண்டியை திருப்புவேன்.

    இதையெல்லாம் படித்த பிறகு நான் ஏதோ புத்தனின் மறுபிறவி என்று நினைக்க வேண்டாம். அதே ஆண்டில் என்னுடன் வேலை செய்த அரவிந்த் உபாத்யாய் என்ற வட நாட்டு நண்பனின் மீது டிரைலர் ஒன்று ஏறிவிட (எட்டு சக்கரங்களும்) அவனது வயிறு மற்றும் தொடை பகுதியை ரோட்டில் இருந்து சுரண்டி எடுக்கும் போது நான் அருகில் இருந்தேன்.

    ம்ம்ம். இன்றும் கூட அந்த காட்சி எனக்கு நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். கற்றுக் கொள்வது அவரவர் தன்மையை பொருத்தது.

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் தொடர் பதிவு நன்றாக உள்ளது. தொடருங்கள். //

      நன்றி சத்யப்ரியன். என்னை தங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன். பரவாயில்லை, இந்த முறை நான் ஏதும் தவறாக குறிப்பிடவில்லை என நம்புகிறேன். இல்லையென்றால் எனக்கொரு தனி மடல் வந்திருக்கும்!

      அப்ப நான் சரியாக தான் பேசுறேன்(வடிவேலு காமெடி பாணியில் வாசிக்கவும்).

      Delete
    2. நினைவு இல்லாமல் என்ன சார். உங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து படித்து வருபவன் நான். எனது கணிப்பு படி உங்கள் பதிவு ஒவ்வொன்றையும் சராசரியாக ஆயிரம் பேராவது படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      அப்படி இருக்கும் போது தவறான தகவல்கள் வந்தால் சுட்டிக் காட்டுவது தேவையல்லவா?

      Delete
  19. //சில ஆண்டுகள் மேலை நாடுகளில் இருந்து விட்டு மீண்டும் தாயகம் திரும்பும் என்னைப் போல் பலருக்கும் மீண்டும் பழகிக் கொள்ள சவாலாகவுள்ள விஷயம் நம் போக்குவரத்து முறைதான்.

    இதனாலேயே திரும்பி ஓடி வந்துட்டேன்.முடியல!

    ReplyDelete
  20. // சற்று முன் தான் மேல்மருவத்தூர் அருகே வண்டியை ரெண்டு மணி நேரம் நிப்பாட்டி விட்டு சாவகசமாக எல்லோரும் சாப்பிட்டு வருவார்கள். ஆனால் ரோட்டில் வந்தவுடன் அவர்களால் சிறிது பொறுமையாக இருந்து போக முடியவில்லை.

    முண்டகலப்பைகள். நம்ம ஊரு அருமையான ஊரு. மக்கள் கிட்ட சுயநலம் அதிகம் ஆயிருச்சு.

    ReplyDelete
  21. //பொதுவாக எல்லோரும் முழு டான்க்கையும் புல் செய்வார்கள்.// வசதியுள்ளாதவர்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு மட்டும் போடுவதுண்டு

    //பெட்ரோல் போட யாரும் இருக்க மாட்டார்கள். நாம் தான் கீழே இறங்கி நாமே போட்டுக் கொள்ள வேண்டும்.//

    இது எல்லா மாநிலங்களியும் கிடையாது உதாரணமாக நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் கேஸ் ஸ்டேஷனில் வேலை செய்பவர்கள் மட்டும்தான் கேஸ் போடுவார்கள். குளிர்காலத்தில் இது நமக்கு மிக வசதியாக இருக்கும். ஆனால் அங்கு குளிர்காலத்தில் வேலை பார்ப்பவர்களை பார்த்தால் கண்ணில் தண்ணீர் வந்துவிடும்

    //
    # பன்னிரண்டு வயதிற்கு மேல் தான் யாரும் முன் இருக்கையில் அமர்ந்து போகலாம். ///

    வயதில் இந்த சட்டமும் மாநிலங்களுக்கு மாநிலம் சிறிது வேறுபடும்

    ReplyDelete
  22. நம்ம ஊர் ஆட்டோகார்களைப் போலத்தான் நீயூயார்க்கில் கார் ஒட்டும் டாக்ஸி டிரைவர்கள், கண்ணா பின்னாவென்ரு ஒட்டுவார்கள்


    அமெரிக்காவில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் நீயூஜெர்ஸி வந்து கார் ஒட்டும் போது சிறிது குழம்பி போவார்கள் காரணம் இங்கு லெப்ட் டெர்ன் எடுக்கும் போது மற்ற மாநிலங்களில் அல்லது மற்ற நாடுகளில் உள்ளது போல அல்லாமல் ஜக் ஹேண்ட்ல் என்ற முறையில்தான் எடுக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் பல சட்டங்கள், நடைமுறைகள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் வேறுபாடும். நீங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் அ. உ. நான் கலிபோர்ணியா வைத்து சொன்னேன்.

      Delete
  23. வெளி நாடுகளைப் பற்றி இவ்வளவு பெருமை பேசுகின்ற உங்களைப் போன்ற சிலர் இந்தியா வந்தால் எத்தனைப்பேர் ஒழுங்காக நடந்துகொள்கிறீர்கள்.....????

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா (நான் உட்பட) பலரும் முடிந்த அளவு நடக்க முயற்சிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதே நேரத்தில் சிலர் இங்கு கருத்து கூறியிருந்தது போல் சூழ்நிலைகளால் தொடர்ந்து கடை பிடிக்க முடியாமல் போவது உண்டு என்பதும் அதே அளவு உண்மை.

      இன்றும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் வெளியில் செல்லும் போது காகிதத்தையோ குப்பையையோ கீழே போடுவதை தவிர்த்து வருகிறோம். வெளியூர் எல்லாம் காரில் செல்லும் போது கூடவே ட்ராஷ் பேக்ஸ் எடுத்துகொண்டு தான் செல்கிறோம்.

      Delete
  24. எப்போது தெரிந்து கொள்ளப் போகிறோமோ....:(

    ReplyDelete
    Replies
    1. நன்றி K2D. விரைவில் என நம்புவோம்.

      Delete
  25. மீண்டும் வீடுதிரும்பல் மோகன் அவர்களுக்கும் அதன் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இடையில் வேலை பளு காரணமாக தங்கள் அனைவரின் கருத்துக்கும் பதில் போட முடியவில்லை. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  26. அமெரிக்கா என்றில்லை, உலகின் பல நாடுகளில் சாலை விதிகளை இந்தியை விட பல மடங்கு மதிக்கிறார்கள். இந்தியாவில் ஒரு காரணம் நம் எல்லோரும் ஒரே இடத்தில் குவிவதுதான். தேவையான அளவு சாலைகள் அமைக்க இடமும் வசதியும் இல்லை. Zoning, Suburb என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.

    If we spread out more, and if zoning is intelligently thought and enforced, it will go great way to improve infrastructure conditions. It will improve the economy as well by creating plenty of jobs. We just have to change the mentality that all of use ave to pile on in the same pincode.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...