Friday, November 23, 2012

மீண்டும் இந்திய வாழ்க்கை- கசப்பும் இனிப்பும்...

திவர் ஆதிமனிதன்- தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்; அமெரிக்காவில், குடும்பத்துடன் பல வருடங்கள் வசித்து விட்டு, தனது நிறுவனத்தின்  சென்னை கிளைக்கு மாற்றல் பெற்று வந்துள்ளார். அமெரிக்கா பற்றியும், தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்தும் தன் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார் ஆதிமனிதன்.

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பின் அவருக்கு ஏற்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு மினி தொடரை இங்கு எழுத இசைந்துள்ளார். தன் சொந்த மண்ணுக்கு திரும்பிய கதையை இவர் வீடுதிரும்பலில் எழுதுவது பொருத்தம் தானே !

********
மீண்டும் இந்திய வாழ்க்கை - கசப்பும் இனிப்பும்...

ந்தியா திரும்பி ஐந்து மாதங்கள் ஆகப் போகின்றன. இந்தியா திரும்பப் போகிறோம் என்பதில் இருந்த ஆர்வமும், ஆசையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

என்னதான் இங்கு பிறந்து வளர்ந்திருந்தாலும் சில வருடகால அந்நிய மண்ணின் வாழ்க்கை கொஞ்சம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது போலும். அதற்கு காரணம் இந்தியாவின் இயற்கை வெட்ப நிலையோ அல்லது ஏறினால் கார் - இறங்கினால் கார் என்ற வசதி குறைவோ இல்லை. நிச்சயம் மாற முடியும் என்றாலும், மாறாத நம் இந்திய மனப்பான்மையும் இங்குள்ள அரசியல் சூழ்நிலையுமே இந்தியா மீது சலிப்பு தட்டுவதற்கு எனக்கு புரிந்த முக்கிய காரணங்கள்.

முதலாவது நம் கல்வி முறை. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெள்ளைக்காரன் விட்டு சென்ற நடை முறைகளையும் பாட திட்டங்களையும் வைத்துக் கொண்டு ஏன் அழுகிறோம் என எனக்கு தெரியவில்லை. கல்வி கற்பதை ஒரு மிகப் பெரிய பாரமாக ஆக்கி வைத்திருக்கிறது நம் கல்வி முறை.

பள்ளிகளுக்கான யூனிபார்ம் ஆகட்டும், மூட்டை போல் தூக்கிக் கொண்டு போகும் நோட்டு புத்தகங்களாக இருக்கட்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு தேர்வை நடத்தி குழந்தைகளை புத்தக சாம்பிரானிகளாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அடிக்கும் வெய்யிலில் பிநோபார்ம் என்று ஒரு ஆடை வடிவம். அதை போட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. அதை எப்படி பெண் பிள்ளை நாள் முழுதும் அணியும்? இன்னொரு கொடுமை: பறக்கும் புழுதியில் வாரத்துக்கொருமுறை வெள்ளை நிற யூனிபார்ம் வேறு போட வேண்டுமாம்.

இதை என் நண்பர் ஒருவரிடம் சொன்னபோது " இதுக்கே இப்படி சொல்றியே ! என் பெண்ணோட பள்ளியில் நீல கலர் டாப்ஸ் ; முழு வெள்ளை பேன்ட் தான் யூனிபார்ம். வெள்ளை கலர் பேன்ட் என்பதால் எட்டாவதுக்கு மேல் உள்ள பெண்கள் ஒவ்வொரு மாசமும் படுற வேதனை கொடுமை. ஆனா எந்த பெற்றோருக்கும் இதை எதிர்த்து,  வெள்ளை கலர் பேன்ட் வேண்டாம் என சொல்லக்கூட தைரியம் இல்லை !" என்றார்.

ஒரு சில பெரிய பள்ளிகளில் கூட முழுமையான விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளி கட்டடத்திற்கு நடுவே உள்ள இடத்தில் மாணவர்களுக்கு இன்னமும் 'த்ரோ' பால் விளையாட்டு தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் படிப்பைத் தவிர மற்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். அப்புறம் ஒலிம்பிக்கில் மட்டும் எப்படி தங்கத்தை அள்ளிக் கொண்டு வர முடியும்?

படம்: இணையத்திலிருந்து 

மாலை நேரத்தில் எங்கள் தெருவில் இருக்கும் பல பெற்றோர்களை ஒரே இடத்தில் சந்திக்க வேண்டுமானால் அருகே உள்ள ஸ்டேஷனரி ஷாப் சென்றால் போதும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு 'பட சார்ட்டை' தேடிக் கொண்டு இருப்பார்கள். நாளைக்கே ஒட்டி கொண்டு வர வேண்டும் என முதல் நாள் தான் பிள்ளைகளுக்கு இம்மாதிரி வேலையை கொடுக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் வேலை முடிந்து வீடு வந்து சேரவே இரவாகி விடுகிறது. வருவதற்குள் குழந்தைகள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே! ஏன் அதை இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்தால் என்ன?

அதே போல் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை வார நாட்களில் அலுவல் நேரத்தில் வைக்கிறார்கள். எங்கள் அலுவலகம் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தாண்டி உள்ளது. எப்படி நான் நாலு மணிக்கு வந்து ஆசிரியர்களை சந்திப்பது? எங்களுக்கு இரண்டு குழந்தைகள் என்பதால் அடுத்தடுத்து இரு வேறு தினங்களில் இப்படி நான்கு மணி மீட்டிங்கிற்கு பள்ளி வர வேண்டும் ! இதே பள்ளி ஆசிரியர் மற்றும் பிரின்சிபாலின் குழந்தைகள் வேறு பள்ளியில் படித்தால் இவர்களும் லீவு போட்டு விட்டு தானே போக வேண்டும்?

அடுத்ததாக இங்குள்ள தமிழ்ப்பாடம். நான்கு ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் செய்யுளும் பழங்கால பாடல்களும். நமக்கே உச்சரிக்க முடியவில்லை. நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது. குழந்தைகள் எப்படி மனப்பாடம் செய்து எழுத முடியும்? சாதாரணமாக தற்போது உபயோகப்படுத்தும் சொற்களையும், இப்போதைய தமிழையும் சொல்லிக் கொடுத்தாலே போதும் ! இவர்கள் சொல்வதையெல்லாம் படித்தால், குழந்தைகளுக்கு தமிழ் மேல் வெறுப்பு தான் வரும். வரும் இல்லை ஏற்கனவே வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி கூறுவதால் எனக்கு தமிழ் மேல் பற்றோ விருப்போ இல்லை என்று நீங்கள் கருதினால்.... அது தவறு. அமெரிக்காவில் இருந்தவரை அவர்கள் பாட திட்டத்தில் தமிழ் இல்லாத போதும் ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து தமிழ் பாட புத்தகங்களை வரவழைத்து அதை தினமும் என் மனைவி இரு பிள்ளைகளுக்கும் தொடர்ந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இன்று, சென்னை வந்து, ஐந்தே மாதங்களில் இன்னும் நன்றாக தமிழ் பயின்று கடந்த தேர்வில் தமிழில் என் மூத்த பெண் அவளது வகுப்பில் முதல் இடம் எடுத்து உள்ளார்.

என்னைப்பொறுத்தவரை, நம் தாய் மொழியை தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமன்று, பெருமையும் கூட. ஆனால் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மேலை நாடுகளில் ப்ரைமரி வகுப்பில் சேக்ஸ்பியர் பாடம் நடத்துவதில்லை. எனவே அவர்கள் தங்கள் தாய்மொழியை கற்பதில் கஷ்டப்படுவதில்லை. மாறாக இங்கு சங்க இலக்கிய பாடல்களை சிறு வகுப்புகளில் வாசிக்கும் போது பிள்ளைகளுக்கு தமிழ் மீது வெறுப்பு வர வாய்ப்பு உண்டு.

தயவு செய்து உங்கள் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு தமிழை எல்லாம் தமிழ் MA படிப்பவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தமிழின் மீது ஆர்வம் வருகிற மாதிரி பாடல்களையும், பாடங்களையும் பாட புத்தகத்தில் வைப்பது பற்றி அரசு யோசித்தால் நலம் !

இன்னும் வரும்...

46 comments:

 1. வீடு திரும்பல்-நல்ல பொருத்தம்...

  பள்ளியில் இருந்து ஆரம்பித்துள்ளது நன்று... நடக்கும் உண்மையை (கொடுமையை) நன்றாக சொல்லி உள்ளார்...

  ReplyDelete
  Replies
  1. //வீடு திரும்பல்-நல்ல பொருத்தம்...//

   I like it!

   Delete
 2. அவர் சொன்னது அத்தனையும் அப்பட்டமான உண்மை. பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் மகா மோசம். மருந்துக்கும் சுத்தம் இல்லை:(

  அப்புறம் புரிஞ்சு படிச்சுத் தெளிஞ்சு அறியவேண்டிய தேவை இல்லை. மனப்பாடம் பண்ணினால் போதும். ஞாபக சக்தி யாருக்கு அதிகம் இருக்கோ அவுங்க அதிகமார்க் வாங்கி வெற்றி பெறுவார்கள். அதான் வல்லாரைக்கீரை மாத்திரைக்கு பயங்கர டிமாண்ட்.

  யூனிஃபார்ம் சல்வார் கமீஸ் என்றால் துப்பட்டாவை மடிச்சு ரெண்டு தோளிலும் பின் குத்தி ஆடாம அசையாம வச்சுக்கணும். அஞ்சு வயசு பொடிசு துப்பட்டாவோட போவதைப் பார்த்து...'ஐயோ'ன்னு ஆகிருச்சு:(

  ReplyDelete
  Replies
  1. //அதான் வல்லாரைக்கீரை மாத்திரைக்கு பயங்கர டிமாண்ட்...//

   ஒ! அப்படி ஒன்னு இருக்கா? வல்லார கீர ரெண்டு கட்டு பார்சேல்...

   //பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் மகா மோசம். மருந்துக்கும் சுத்தம் இல்லை:(//

   என் சின்னவள் இன்னமும் பள்ளி நேரங்களில் அடக்கிக் கொண்டு வீடு வந்து தான் போகிறாள். நிச்சயம் இதிலும் நாம் முன்னேற்றம் காட்ட வேண்டும்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

   Delete
 3. ஆம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் அதிலும் குழந்தைகள் தமிழை வெறுத்து 6 அல்லது 11 -ம் வகுப்பிலிருந்து வேறு மொழிப்பாடத்துக்கு மாறி விடுகிறார்கள். 12 வரை படிப்பவரும் அங்கு இருக்கும் தமிழின் கணத்தால் அதன் பிறகு புத்தகம் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றில் கூட தமிழ் படிக்க யோசிக்கிறார்கள். மொழி மேல் ஆசை வளர்வதற்கு பதில் வெறுப்பைத்தான் வளர்க்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள். நன்றி எழில்.

   Delete
 4. நீங்கள் சொன்ன பல கருத்துக்கள் சரியானவை தான். ஆனா, செய்யுளும், பழந்தமிழ் பாடல்களும் ஏன் ஒதுக்கப்படணும்? மெல்ல நம் மொழியை ,கலாச்சாரத்தை மறுக்கும் முயற்சி இல்லையா இது? நம்ம குழந்தைகளுக்கு இருக்கும் அறிவுத்திறனுக்கு , அவர்களால் எல்லா பழந்தமிழ் பாடல்களையும் படிக்க முடியும். தேவை, நல்ல உற்சாகமுள்ள ,மொழியை உயிர்ப்பித்து, அதனை சுவாரசியமாக சொல்லிகொடுக்க கூடிய ஆசிரியர்களே!!

  ReplyDelete
  Replies
  1. ஏற்றுக்கொள்கிறேன் ஐயா. நான் சொல்ல வந்தது, வயதுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பாடங்களை வைத்தால் விரும்பி படிப்பார்கள் என்பதை தான். தமிழ் வேண்டாம் என கூறவில்லை.

   Delete
 5. ஆதிமனிதன் தாய்நாடு திரும்பி விட்டாரா? வித்தியாசங்களும், குறைகளும் சொல்லுவதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன! நிறைகளையும் சொல்வார் என்று நினைக்கிறேன்! :))

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டேன்...வந்துட்டேன்.

   //நிறைகளையும் சொல்வார் என்று நினைக்கிறேன்! :))//

   மீண்டும் இந்திய வாழ்க்கை- கசப்பும் இனிப்பும்...இனிப்பு கண்டிப்பாக உண்டு.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. கல்வி என்பது நம்நாட்டிலும் பெரிய சுமைதான். எப்போதுதான் உணர்ந்து தளர்த்தப் போகின்றார்களோ?

  ReplyDelete
 7. நீங்க சொல்வது அனைத்துமே உண்மை தான். பினோஃபார்ம் மட்டுமல்லாது, டை, பெல்ட் ஷூ சாக்ஸ் அனைத்துமே தேவையில்லாதது தான். நம்ம ஊர் தட்பவெப்ப நிலைக்கு ஷு சாக்ஸ் டை எல்லாம் எதற்கு என்று புரியவில்லை. வெந்து போய் தான் வருகிறார்கள். என்று மாறுமோ தெரியவில்லை.....

  மனப்பாடம் செய்யும் முறையை சரி செய்தால் தான் நல்லது. சமச்சீர் என்று வேறு வைத்து குழப்புகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. //நம்ம ஊர் தட்பவெப்ப நிலைக்கு ஷு சாக்ஸ் டை எல்லாம் எதற்கு என்று புரியவில்லை.//

   உங்களை மாதிரி ஒருவர் கல்வித்துறை அமைச்சராக வந்தால் நல்லது. ஏன் ஒரு IT கம்பெனி CEO ஆனால் கூட நல்லது தான். நாங்களும் இந்த ஷூ சாக்சிலிருந்து தப்பிப்போம்.

   அங்கு அமெரிக்காவில் சம்மர் சீசனில் அமெரிக்கர்கள் சிலர் ட்ரவுசருடன் ஆபீசுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். நான் லண்டனில் இருந்த போது கட்டாயம் இல்லையென்ற போதும் டை கட்டிக் கொண்டு அலைந்தேன். அவ்வளவு குளிர். என்ன செய்ய. இங்கே என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது.

   Delete
 8. சிங்கை பள்ளிகளில் தமிழ் பாடமுறை அங்குள்ளவர்களுக்கு கடினமாக இருக்கிறது என்ற புகார் எழுந்தவுடன் அதை சிரமேற்கொண்டு வாழ்கைக்கு எவ்வளவு தேவையோ அதை செயற்படுத்தினார்கள்(எளிமையாக்கினார்கள்).
  சிங்கையை விட்டு இங்கு வந்து 4 வருடங்களுக்கு மேலாகிறது, சாலையில் வாகனத்தில் நான் படும் பாடு சொல்லிமாளாது.

  ReplyDelete
  Replies
  1. //புகார் எழுந்தவுடன் அதை சிரமேற்கொண்டு வாழ்கைக்கு எவ்வளவு தேவையோ அதை செயற்படுத்தினார்கள்(எளிமையாக்கினார்கள்).//

   அது சிங்கை. இது இங்கே.

   //சாலையில் வாகனத்தில் நான் படும் பாடு சொல்லிமாளாது.//

   மீ டூ...அடுத்து அது தான் சார் வருது...

   Delete
 9. சிந்திக்க வேண்டிய விஷயம் சார்.. கீதமஞ்சரி அம்மா கூட ஆஸ்திரேலியன் கல்வி முறை பற்றி அவங்க ப்ளாக்-ல தொடர் பதிவா எழுதி இருக்காங்க..

  அவைகளோடு ஒப்பிடும் போது நமது கல்வி முறை மற்றும் பயிற்றுவிக்கும் முறை எவ்ளோ பின் தங்கியது-னு உணர முடிகிறது...

  இதுக்கெல்லாம் மற்றம் எப்போ வருனு யாருமே சொல்லமுடியாது!! அப்படியே வந்தாலும் அரசியல் ஆதாயம் தேட எதிர்பவர்கள் தான் அதிகம்.. ஏதோ நாம் தாய் மொழியே வேண்டாம்னு சொல்ற மாதிரி வரஞ்சி கட்டிட்டு வந்திடுவாங்க...

  தொடர்ந்து எழுதுங்கள் சார்.. நல்ல அனுபவ தொடர்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சமீரா. நிச்சயம் தொடர்கிறேன்.

   Delete
 10. சிறப்பு..எழுதட்டும் வாசிப்போம்..

  ReplyDelete
 11. \\ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு 'பட சார்ட்டை' தேடிக் கொண்டு இருப்பார்கள்.\\ குழந்தைகளுக்கு காண்பிக்க ஒரு வகுப்புக்கு ஒரு சார்ட்டே போதும். அதையே அடுத்த வருடமும் தொடர்ந்து உபயோக்கிக்கலாம். எதுக்கு ஒவ்வொரு குழந்தையும் அதே சாரட்டை தயாரிக்கச் சொல்லி உசிரை எடுக்கிறாங்கன்னு தான் தெரியவில்லை. இவங்க வேலை வைப்பது குழந்தைகளுக்க அவர்களது பெற்றோருக்கா என்றும் தெரியவில்லை. ஒரு அம்மா தன்னுடைய மகன் தினமும் பள்ளி முடித்து வந்ததும், "அம்மா, எனக்கு இன்னின்ன சார்ட்டு வேணும் ரெடி பண்ணுன்னு சொல்லிட்டு அவன்பாட்டுக்கு ஹாயா டி .வி. பார்க்க உட்கார்ந்திடறான். நான் கடை கடையா அலைஞ்சு தேடித் பிடிச்சு வாங்கிவந்து, அதையெல்லாம் வெட்டி ஒட்டி ரெடி பண்ண வேண்டியிருக்கு. ரெடியாகளைன்னா ஸ்கூலில் ஃ பர்ஸ்ட் பீரியடு முடிஞ்சதும் வந்து கொடுத்துடு, அடுத்த பீரியடில் தான் அந்த சார்ட்டைக் கேட்கும் ஆசிரியர் வருவார் என்கிறான், அவனுக்கு எந்த கவலையுமே இல்லை". இதைக் கேட்க தமாஷாக இருந்தது!!

  ReplyDelete
  Replies
  1. இதில் அமெரிக்க வீட்டு பாடங்கள் நேர் மாறாக இருக்கும். அங்கு குழந்தைகள் நாம் (சார்ட்) ஒட்டி கொடுக்கிறேன் என்று கூறினால் கூட This is my job. Let me do... என்று கூறிவிடுவார்கள். அந்த அளவிற்கு கஷ்டமாகவும் குழந்தைகளுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்.

   Delete
 12. /இவர்கள் சொல்வதையெல்லாம் படித்தால், குழந்தைகளுக்கு தமிழ் மேல் வெறுப்பு தான் வரும். வரும் இல்லை ஏற்கனவே வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
  /
  Absolutely true, damage has been done in my kid's case already...

  ReplyDelete
 13. இந்த மாதிரி பள்ளிகளில் வேலை செய்யவே பிடிக்காமல் வெட்டியாய் பொழுது போக்குகிறேன் நான்.திருத்த முடியாது.ஒதுங்க முடியும் அல்லவா.தனியார் பள்ளி வேலை என்பது கொத்தடிமை போல வாழ்க்கை.ஹோம் வொர்க் அதிகம் விரும்புவது பெற்றோர்கள் தான். தமிழ் பற்றி நீங்கள் கூறியது உண்மை.

  ReplyDelete
  Replies
  1. //ஹோம் வொர்க் அதிகம் விரும்புவது பெற்றோர்கள் தான்//

   நிச்சயமாக நான் இல்லை. நன்றி மேடம்.

   Delete
 14. கட்டுரையாளரின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்! கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை! அதை இந்த அரசியல்வாதிகள் எப்போது தரப்போகிறார்கள்! பெற்றவர்கள்தான் கொந்தளிக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. மாற்றம் நிச்சயம் வரும் சார். எனக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவோ மாறி இருக்கிறது. என்ன அதற்கு பல வருடங்கள் ஆகிறது.

   Delete
 15. வீடு திரும்பல் வாசகர்களுக்கும் திரு. மோகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பெரும்பாலானோர் என் கருத்தை அமோதித்தது சற்று எதிர் பாராதது. இத் தொடரை மேலும் தொடர இது இன்னும் எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

  ReplyDelete
 16. ந்ன்றி மோகன் ஆதிமனிதனின் பதிவுகளுக்கு!

  உடை ஷூ சாக்ஸ், அனைத்திலும் மாற்றம் தேவையே. தூத்துக்குடியில் ஒருசில பள்ளிகளில் skirt & Top என மாற்றம் வந்துவிட்ட்து, ஆனால் ஷூ சாக்ஸ் மாறவேயில்லை sandals போதுமானது என நினைக்கிறேன்
  தமிழை பொறுத்தவரை செய்யுள் பகுதி மனனம் செய்வது தேவைதான். குழந்தைகளுக்கு புரிந்து படிக்கும்முறைதான் நல்லது என்றாலும் இளவயதில் கொஞசம் கடினமான செய்யுள்களை மனப்பாடம் செய்வது அவர்களது நினைவுத்திற்னை அதிகரிக்கச்செய்யும் என நினைக்கிறேன் (சுலோக்ங்களை மன்னம் செய்வதைப்போல) என் மகளின் பள்ளியில் (VIKASA SCHOOL) மனப்பாடம் செய்யும் முறை கிடையாது ஆனாலும் தினமும் வீட்டில் ஒரு திருக்குறளும் பைபிள் வசனம் ஒன்றும் மனனம் செய்கிறாள் அவளை சுறுசுறுப்பாக செயல்படவைக்க அது உதவுகிறது. என்ன நிறைய செய்யுள் பகுதிகளை கொடுத்து குழந்தைகளை கஷ்டப்படுத்தாமல் எளிதாக ஆக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்களுக்கு நன்றி உமா மேடம்.

   Delete
 17. நல்ல விஷயம் மோகன். தொடரட்டும் அவர் கட்டுரை. பல வித்தியாசங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்....

  ReplyDelete
 18. ம்ம்ம் வந்து 4 வருஷமாச்சு. நம்ம வேர் இருக்கற இடத்துக்கு வந்திட்டோம்னு சொல்வது எல்லாம் சும்மனாச்சுக்கும்னுதான் தோணுது. மனதின் ஒரு மூலை தினமும் ஏண்டா இங்க வந்தோம்னு துடிக்குது. மன உளைச்சல் அதிகமாத்தான் இருக்கு இங்க. நீங்க ஸ்கூல்லேர்ந்து ஆரம்பிச்சிருக்கீங்க...... நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கு. :((

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. //நம்ம வேர் இருக்கற இடத்துக்கு வந்திட்டோம்னு சொல்வது எல்லாம் சும்மனாச்சுக்கும்னுதான் தோணுது. //

   தைரியமா சொல்றீங்க. சொன்னா யாரு கேட்குறா?

   நாலு வருஷம் ஆகியும் இன்னும் இருக்கா? ஆறு மாசத்தில் எல்லாம் சரியா போய்டும்னு நண்பர்கள் நம்பிக்கை ஊட்டினார்கள். அதெல்லாம் சும்மாவா?

   Delete
 19. //ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மேலை நாடுகளில் ப்ரைமரி வகுப்பில் சேக்ஸ்பியர் பாடம் நடத்துவதில்லை// யோசிக்க வேண்டிய விஷயம்தான். இன்னும் கொஞ்சம் மெல்ல ரேம்ப் அப் செய்கிற மாதிரி பாடத் திட்டத்தை மாற்றலாமோ என்னமோ...

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 20. ம்ம்.. CBSE-யிலும் CCE என்று கொண்டு வந்திருக்கிறார்கள். சமச்சீர் கிட்டத்தட்ட இது போலத்தான். படம் தேடி ஒட்டுவதும், மாடல் செஞ்சு கொண்டுவான்னு சொல்றதுமா... எனக்குத்தான் "school work" கூடிகிட்டே போகுது!!

  இருப்பினும், முந்தைய பாடத்திட்டத்தைவிட, CCe முறையில் கொஞ்சம் activities அதிகம் இருக்கிறது என்பதால், ஓரளவு பரவாயில்லை. மற்றபடி, தமிழ்.... ஹிந்தியை ஒப்பிடும்போது தமிழ் எவ்வளவோ பரவால்லைன்னு ஆறுதல் படுத்திக்க வேண்டியதுதான். இங்கே CBSE-யில் ஹிந்தி மட்டுமே உண்டு. பேச்சு-ஹிந்தியும், புத்தக-ஹிந்தியும் இதே பாடுதான். கூகிள் உதவியில்தான் படிக்கிறோம். (யெஸ், படிக்கி”றோம்”தான்!!)

  ReplyDelete
 21. //ஹிந்தியை ஒப்பிடும்போது தமிழ் எவ்வளவோ பரவால்லைன்னு ஆறுதல் படுத்திக்க வேண்டியதுதான்.//

  இது வேறயா?

  ReplyDelete
 22. Lets not compare education in UK and TN in Eng teaching. The syllabus at primary school may not cover Shakepeare, only coz his subjects r adult oriented, except a few comedies like MSND. Otherwise, a child learns best English stories and all popular rhymes.

  It is their mother tongue. So also, we can. Our children shd learn our ancient classical poems. It does not mean those tough sangam. But only those light sangam. Sangam poetry includes both light and tough.

  Ignorance of such light poetry from among our ancient classical poetry has made Adhi Manithan make a sweeping statement.

  Abolish English from schools. No complain of children not taking interest in Tamil. Energies drain out to English. Direct towards Tamil. Children like to learn anything. It s u who r perversely blocking it.

  ReplyDelete
 23. நீங்க அமெரிக்காவிலேர்ந்து வந்திருக்கீங்க. நான் இங்க பக்கத்துல சிலோன்ல போய் இருந்திட்டு வந்ததுக்கே நொந்து நூலாகி வெந்து வெர்மிசலி ஆகிகிட்டு இருக்கேன். இத்தனைக்கும் நான் ஹைதையில் இருக்கேன். தமிழ்நாட்டு பக்கம் வந்திருந்தேன்னா இத்தனை நாள் ஓட்டியது கூட கஷ்டமா இருந்திருக்கும் ஆதிமனிதன். அட நீங்க நம்ம ஊருக்கு பக்கத்து ஊர்க்காரரா. நமக்கு புதுக்கோட்டைதான். :))

  ReplyDelete
 24. //நான் இங்க பக்கத்துல சிலோன்ல போய் இருந்திட்டு வந்ததுக்கே//

  தென்றல், உங்களின் முந்தைய பின்னூட்டம் பார்த்ததிலிருந்து இதைத்தான் நானும் நினைச்சேன். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்த பிறகும் இப்படித் தோன்றுகிறதே (இந்தியா தோன்ற வைக்கிறது??) என்று!!

  ReplyDelete
 25. http://pudugaithendral.blogspot.com/2012/11/blog-post_28.html நேரம் கிடைக்கும்போது என்னுடைய பதிவை பாருங்க

  ReplyDelete
 26. Excellent observation and great post to the point. I feel your pain.

  ReplyDelete
 27. நல்ல பதிவு. இங்கு கூறப்பட்ட இனிப்பும் கசப்பும் முற்றிலும் உண்மையே. மேலும் அனைவரும் அறிந்ததே.
  மாற்றத்திற்கான செயல் திட்டங்களையும், அவற்றை செயல் படுத்துவதற்கான வழிமுறைகளையும் சேர்த்து கூறினால், ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு நம் தமிழகம் தயாராகும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...