Wednesday, November 21, 2012

வானவில்: புஜாரா- பாவனா- முகநூல் கைதுகள்

முகநூல் - தொடரும் கைதுகள்

பால் தாக்கரே பற்றி முகநூலில் ஸ்டேட்டஸ் எழுதியமைக்கு மகாராஷ்ட்ராவில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி அலையை கிளப்பியுள்ளது.

துக்ளக் இதழ் ஒன்று வாங்கி தயவு செய்து வாசியுங்கள். கேள்வி பதிலில் பிரதமர், சோனியா, கலைஞர் போன்றோரை நேரடியே தாக்கி தான் எழுதுகிறார்.

சென்ற வார இதழில் இந்தியாவின் பெண் முதல்வர் ஒருவர் (தமிழக முதல்வர் அல்ல) சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறாரே என்ற கேள்விக்கு " இவர் பணியாற்றும் லட்சணத்துக்கு சம்பளம் ஒரு கேடா? இவரை வேலையை விட்டு அனுப்பாமல் இருப்பதே பெரிது" என்று பதில் கூறுகிறார்

இது அவதூறு இல்லையா? லட்சக்கணக்கில் வாசிக்கப்படும் பத்திரிக்கைகள் மேல் எல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை? இணையம் மட்டும் ஏன் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது என புரியவில்லை.

இந்த விஷயம் எங்கே போய் முடியப்போகிறதோ !

அழகு கார்னர்

சித்திரம் பேசியது மூலம் பேசிய சித்திரம் - தெத்துபல்லுக்கு அடிமையாகி திரிந்த தமிழ் மக்களை மறந்து மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் ..மீண்டு(ம்) வர வேண்டுகிறோம்இறந்தவர் பிழைத்து வந்த கதை 

பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் நடந்த சண்டையில் காணாமல் போய் விட்டார். பல மாதம் தேடி பின் போலிஸ் கம்பிலேயின்ட்டும் தந்துள்ளனர். போலிஸ் கொஞ்ச நாள் தேடிவிட்டு பின் முகம் சிதைந்த ஒருவர் பிணத்தை காட்ட, பெற்றோர் உட்பட அனைவரும் அது தங்கள் மகன் பிணம் என வீட்டுக்கு எடுத்து வந்து அடக்கம் செய்து விட்டனர்.

இறந்தவருக்கு இரு பெண் குழந்தைகள். இறந்தவர் மனைவிக்கு, இறந்தவர் தம்பியையே திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கு இரு நாள் முன், வெடிகள் மற்றும் புது துணியுடன் இறந்தவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

கோபத்தில் வெளியூரில் போய் வேலை செய்ததாகவும், அனைவர் போன் நம்பரையும் தொலைத்து விட்டதாவும் சொல்லியுள்ளார். அண்ணியை கல்யாணம் செய்து கொள்ளப்போனோமே என்று கூச்சத்தில் நெளிந்த தம்பியை சமாதானம் செய்துள்ளார் பிழைத்து வந்த அண்ணன்.

சில நேரங்களில் நிஜம் - சினிமாவை விட சுவாரஸ்யமாய் இருக்கிறது !


கிரிக்கெட் கார்னர்

இந்தியா-இங்கிலாந்து இடையே நடந்த முதல் டெஸ்ட்டின் பெரும்பகுதியை இந்தியா டாமினேட் செய்தது. நான்காம் நாள் இங்கிலாந்து சற்று விழித்தெழுந்தாலும், அது டூ லேட்.

டிராவிட் ஆடும் ஒன் டவுனில் புஜாரா அசத்தி வருகிறார். ஹெல்மெட் அணிந்து முகம் தெரியாத புஜாரா - உயரம், நிற்கும் விதம், பொறுமை என டிராவிட்டை அப்படியே நினைவு படுத்துகிறார். ஆனால் அவரின் நிஜ டெஸ்ட் இந்தியாவுக்கு வெளியே தான். சச்சின் கூட டிராவிட் அளவு வெளிநாட்டு டெஸ்டில் அசத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தல விடாமல் தொடர்ந்து ஆடிவருகிறார். இருக்கும் ரசிகர்களையும் இழப்பதற்குள் டீசன்ட்டாய் விலகி, அடுத்த இளம் வீரருக்கு வாய்ப்பளிப்பது தான் அவருக்கு அழகு. ஆனால் பணமும் புகழும் எவ்வளவு கிடைத்தாலும் அலுக்காது என்பதற்கு வாழும் உதாரணமாய் இருக்கிறார் சச்சின் :((

ப்ளாக் மூலம் கிடைத்த அய்யாசாமியின் பள்ளிக்கால நண்பர்

பதிவர்- இலக்கிய சூறாவளி கோபி ப்ளாகில் வீடுதிரும்பலுக்கு லிங்க் தந்துள்ளார். அங்கிருந்து மோகன்குமார் என்கிற பெயரை பார்த்து வீடுதிரும்பல் வந்த வேங்கடப்பன் என்கிற பள்ளிக்கால நண்பர் அய்யாசாமியை ஒரு நாள் போனில் பிடித்து விட்டார். இருபது வருடத்துக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்டு நண்பரிடம் பேசுவதில் இருவருக்கும் மிக மகிழ்ச்சி. பள்ளியில் தள்ளி நின்று சைட் அடித்த பெண்களின் இன்றைய நிலை பற்றி பேசி பெருமூச்சு விட்டனர் நண்பர்கள் இருவரும்.

திருநெல்வேலியில் மருத்துவராக இருக்கும் வேங்கடப்பன் அதன்பின் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். சமீபத்தில் பேசியபோது, " டேய் .. உன் ப்ளாகில் நான் ரொம்ப ரசிப்பது அய்யாசாமி பற்றி எழுதுறது தான். இப்போ எல்லாம் ஏன் அய்யாசாமி கார்னர் எழுதுறதில்லை..அவசியம் எழுதுடா" என்றார். நண்பரின் வேண்டுகோளை ஏற்று இனி அவ்வப்போது நிச்சயம் எழுதுவதாக சொல்லியுள்ளார் அய்யாசாமி !

படித்ததில் பிடித்தது - விகடனில் கி. ராஜ நாராயணன் பேட்டி

''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''

''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''

'இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''

''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''

(நன்றி: விகடன்)

போஸ்டர் கார்னர்முகநூல் கிறுக்கல்கள்

தீபாவளி நேரத்தில் நாம் அதிகம் இருக்க வேண்டிய இடம் : ஆபிஸ் தான் ! வீட்டில் இருந்தா தீனி திண்ணே பெருத்துடுவோம் !
***
தீபாவளி ரிலீஸ் ஒன்றுக்கு பதிவர் நண்பர்கள் யாரும் விமர்சனமே எழுதலை ! @ காசி குப்பம் !

உ. தா அண்ணே, கேபிள், சிபி: வீ ஆர் வெயிட்டிங்
****
நாகமுத்து (Nagamoottoo) மற்றும் சாமி (Sammy) யை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆடும் இன்னொரு வீரர் வீராசாமி பெருமாள் !

*****
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கார்த்தி சிதம்பரம் அவர்கள் பிறந்த நாளுக்கு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்:

காங்கிரசின் முகவரியே வருக !

வரலாறே வருக வருக !

## யாராவது கருத்து சொல்ல விரும்புறீங்களா?
***

28 comments:

 1. சுவாரஸ்யமான தகவல்கள்... (அதுவும்-இறந்தவர் பிழைத்து வந்த கதை...!!!!!)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 2. //லட்சக்கணக்கில் வாசிக்கப்படும் பத்திரிக்கைகள் மேல் எல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை? //

  அவதூறு வழக்குகள் போடப்படும். சில சமயம் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டும் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தெரியும் எல். கே ஆனால் அது வெறும் வழக்கு தான்; பெரும்பாலும் அது பிசுபிசுத்து போகும். இணையத்தில் அவர் எழுதியதை அப்படியே பகிர்ந்தால் கூட நேரே சிறை அப்புறம் தான் விசாரணையே !

   Delete
  2. பயந்து வாழுது ஒரு சமூகம்
   இருண்டு போய் கிடக்கு மற்றொரு புறம்.

   Delete
  3. வாங்க ஜோதிஜி வணக்கம்

   Delete
 3. வரும் பாராளுமன்ற தேர்ந்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கார்த்தி சிதம்பரம் பிரதமர் ஆவார்...!ராகுல் காந்தியை விட கார்த்தி சிதம்பரம் திறமையானவர்...!

  :)))))))))
  (கருத்து போதுமா...?சார்..!)

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ் தம்பி: ரைட்டு

   Delete
 4. \\கோபத்தில் வெளியூரில் போய் வேலை செய்ததாகவும், அனைவர் போன் நம்பரையும் தொலைத்து விட்டதாவும் சொல்லியுள்ளார். அண்ணியை கல்யாணம் செய்து கொள்ளப்போனோமே என்று கூச்சத்தில் நெளிந்த தம்பியை சமாதானம் செய்துள்ளார் பிழைத்து வந்த அண்ணன்.\\ இராமாயணத்தில் வரும் வாலி-சுக்ரீவன் கதை மாதிரி இருக்கே!!

  ReplyDelete
 5. Future Impossible Tense\\ இப்பேற்பட்ட புத்திசாலி மாணவனையா அந்த வாத்தியார் அப்படி போட்டு அடிக்கிறாரு.........சே..... என்ன நாடுய்யா இது..........

  ReplyDelete
  Replies
  1. அதானே ஜெயதேவ் !!

   Delete
 6. எல்லா தகவல்களுமே சுவாரஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரோஷினி அம்மா

   Delete
 7. இந்த காலத்தில் பத்திரிக்கைகளுக்கு இருக்கும் அபரிமிதமான சுதந்திரத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட பொது மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதையே fb -பெண்கள் கைது வழக்கு காட்டுகிறது...

  சச்சின் தன் மகனை கிரிக்கெட்-இல் நுழைக்காமல் வெளியேறுவதில்லை என சபதம் பூண்டுள்ளார் (!!).....

  காதல் பத்தி கி. ராஜ நாராயணன் சார் சொன்ன தகவல் சூப்பர்..

  வானவில் கலர்புல்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சமீரா; முதல் பாராவில் நீங்க சொன்னது உண்மைதான்

   Delete
 8. வானவில்லின் அனைத்து வண்ணங்களுமே பிரகாசம்!

  ReplyDelete
 9. அன்றிரவு டைம்ஸ் நவ் சேனலில் அர்னாப் நடத்திய கலந்துரையாடல் சண்டை பார்த்தீர்களோ?

  இறந்தவர் பிழைத்து வந்த கதையில் அவர் இன்னும் 3 நாள் கழித்து வந்திருந்தால்..?

  கபில் தேவ் சொல்வது போல புஜாரா நன்றாக விளையாடுகிறார்தான். ஆனால் அவசரப்பட்டு டிராவிட்டுடன் எல்லாம் ஒப்பிட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.

  எனக்குத் தெரிந்தே உங்களுக்கு ப்ளாக் மூலம் கிடைத்த 2வது நண்பர்!

  ReplyDelete
  Replies
  1. //அன்றிரவு டைம்ஸ் நவ் சேனலில் அர்னாப் நடத்திய கலந்துரையாடல் சண்டை பார்த்தீர்களோ?//

   இல்லீங்க சார்

   //எனக்குத் தெரிந்தே உங்களுக்கு ப்ளாக் மூலம் கிடைத்த 2வது நண்பர்!//

   ஆம் முதல் நண்பர் பதிவர் பெயர் சொல்ல விருப்பமில்லை

   Delete
 10. சிறப்பான வானவில்.. பெருகட்டும் நட்பு வட்டம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட் ஊரிலிருந்து இப்போதான் டில்லி திரும்பினீர்கள் என நினைக்கிறேன்

   Delete
 11. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியாழி

   Delete
 12. Anonymous12:09:00 AM

  ## யாராவது கருத்து சொல்ல விரும்புறீங்களா?
  இவன்லாம் ஒரு ஆளுன்னு...  தொடரும் கைதுகள்//

  சுரணை கெட்ட மக்கள் அடுத்த வீட்ல என்ன நடந்தாலும் கம்முன்னு குந்திக்கிடிருப்பங்க மோகன்...

  ReplyDelete
  Replies
  1. ரெவெரி: வருகைக்கு நன்றி. நலமா இருக்கீங்களா

   Delete
 13. வாங்க மாதேவி நன்றி

  ReplyDelete
 14. முகநூல் கைதுகள் முடிவல்ல ! தொடக்கம்! நான் முன்பே சொன்னேன் யார் கேட்டார்கள்?

  ReplyDelete
 15. //சித்திரம் பேசியது மூலம் பேசிய சித்திரம் - தெத்துபல்லுக்கு அடிமையாகி திரிந்த தமிழ் மக்களை மறந்து மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் ..மீண்டு(ம்) வர வேண்டுகிறோம்//

  வீடுதிரும்பல் என்பதற்கு பொருள் உங்கள் வீட்டிற்கு அழைப்பதுதானோ :)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...