Sunday, November 11, 2012

போடா போடி : பாட்டு எப்புடி?

முதலில் இதை படிச்சு பாருங்க. இது என்னான்னு ஊகிக்க முடியுதா? :

பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு படிப்பை லவ் பண்ணிட்டேன்
இருபத்தியொரு வயசு வரைக்கும் வேலைக்கு ஒழுங்கா போயி வேலைய லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ண லவ் பண்ணலாம்னு தோணுதுங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்ளோ நாள் ஜாலியா இருந்துட்டேன் நான்
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன் நான்

ஐயோ ...ஐயோ
சோ கன்பியூசனுங்க தலை எல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
லவ் பண்ணலாமா வேணாமா ? லவ் பண்ணலாமா வேணாமா ?

***

மேலே உள்ளது என்னான்னு சொல்லவா?

நம்புங்க...... இது போடா போடி படத்து பாடல் வரிகள் ! எழுதி, பாடி, ஆடி, நடிப்பது உங்கள் சிம்பு (முடியல)

******

அப்பன் மவனே, லவ் பண்ணலாமா, ஐ யாம் ய குத்து டான்சர் என மூணு பாட்டு சிம்புவே பாடிருக்கார். படத்தின் 2 பாட்டுகளை எழுதியதும் அவரே. படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பல பாடல்களை எழுதியிருக்கார். (நல்லவேளை கண்ணதாசன், பட்டுக்கோட்டை போன்றோர் இன்று உயிரோடு இல்லை !)
*****
லவ் பண்ணலாமா பாட்டு வசன கவிதை (!!??) மாதிரி இருந்தாலும், ஓரளவு ஹிட் ஆகிடுச்சு. சிம்புவின் வழக்கமான "எவண்டி  உன்னை பெத்தான் " டைப் பாட்டு தான் இது. இத்தகைய பாட்டுகள் விட்டில் பூச்சி மாதிரி. கொஞ்ச நாள் பாடிட்டு மறந்துடுவாங்க இளைஞர்கள்.

பாட்டுக்கு சட்டை போடாம மேலுடம்பு காட்டியபடி சிம்பு  ஆடும் நடனத்தை நினைத்தால் பயமாயிருக்கு ! (Trailor-ஏ கண்ணை கட்டுதே !)

*****
"அப்பன் மவனே" பாட்டு பாடல் (வாலி) வரிகளாலும், எளிய முறையில் பாடப்பட்டதாலும் கவர்கிறது. குட்டி பசங்க உள்ள இளம் தந்தைகள் தங்கள் மகனை நோக்கி

" எப்பவுமே நான்தான் உன் பஸ்ட்டு பிரன்டுப்பா; உன் பெஸ்ட் பிரன்டுப்பா"
என்று பாடுவார்கள் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இந்த ஆல்பத்தில் எனக்கு ஓரளவு பிடித்த பாட்டு இது.

வாலி கைவண்ணம் என்பதால் சற்று தப்பி பிழைத்து விட்டது என நினைக்கிறேன். (சிம்பு ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்கிறாராமே ! அவர் நடிப்பது இருக்கட்டும். முதல் படத்திலேயே ஹீரோயின் ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிக்கிறாரா ? ஆச்சரியம் தான் )
******
ஐ யாம் எ குத்து டான்சர் பாட்டு ஷங்கர் மகாதேவன் மற்றும் சிம்பு பாடியிருக்காங்க. சிம்புவின் வீர தீரம் சொல்லுது பாட்டு. " என் ஆசை மைதிலியே", " கலாசலா,கலாசலா", " லூசு பெண்ணே" மாதிரி
சிம்பு நடித்த பாடல் வரிகளை வைத்து தான் பல்லவி எழுதப்பட்டிருக்கு.

சிம்புவை அவர் பழைய பாட்டு வரிகளை வைத்தே ஆஹோ ஓஹோ என பாராட்டும் அளவு பேன் பாலோயிங் அவருக்கு இருக்கா என்ன ! ??

இது ரொம்ப சின்ன பாட்டு என்பது மட்டும் ஆறுதல்.
 ********
"ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா" என்று ஒரு டூயட் பாட்டு. கல்லானாலும், புல்லானாலும் என்னுடைய பாய் பிரன்ட் நீதானே என்றும், "யார் நீ Friend- ஆ? ...........நோ !  Fling-ஆ? .......நோ ! " என்ற உயர்ந்த தத்துவ வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கார். இளைய தலைமுறையில் சிலருக்கு ஒருவேளை பாட்டு பிடிக்கலாம்.
*****
படத்தலைப்பையே  பாடல் வரிகளாக கொண்ட "போடா போடி"யை பென்னி தயாள் & ஆண்ட்ரியா பாடியுள்ளனர்.

இந்த பாட்டில் "காதலை காதலி......க்.............கிறேன்" என்று திரும்ப திரும்ப பாடுறாங்க. ........துரை... என்ன சொல்ல வர்றீங்க?

ஆண்ட்ரியாவின் ஐஸ்க்ரீம் குரல் வருகிற இடங்கள் மட்டும் ஓரளவு கவர்கிறது. இன்றைய எந்த முழு நேர பாடகிக்கும் சவால் விடும்படி ஹை பிச்சில் பாடுவது இவரின் ஸ்பெஷாலிட்டி.
இந்த பாடலில் அடிக்கடி வரும் இன்னொரு வரி " ஐயோ ஐயோ நான் செத்து பிழைக்கின்றேன் !"

பாட்டு கேட்கும் நம்ம நிலைமையை இதுக்கு மேலே ஈசியா சொல்ல முடியாது
***
பாடல்களுக்கு இசை தரன். வரிகள் புரியாத பாஸ்ட் பீட் பாட்டுகள் தான் ஒவ்வொன்றும். ஒரு மெலடி கூட இல்லை. விரைவில் இந்த பாஸ்ட் பாடல் மேனியாவிலிருந்து வெளியேறினால் நல்லது.. !

***
இன்றைய இளைய தலைமுறைக்கு இத்தகைய அர்த்தமற்ற வரிகளை கொண்ட, இரைச்சலான பாடல்கள் தான் பிடிக்கிறது என இவர்களாகவே முடிவு கட்டி கொள்கிறார்கள். இதே சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா பட பாடல்களை நினைத்து பாருங்கள். என்ன அற்புத வரிகள்.. எவ்வளவு அழகான இசை ! அதை அனைத்து தரப்பினரும் கொண்டாட வில்லையா?

தயவு செய்து இளைஞர்கள் பேரை சொல்லி எங்க காதுகளை டேமேஜ் செய்யாதீங்க ! உங்களுக்கு புண்ணியமா போகும் !

ஆறேழு முறை கேட்டும் ஒரு பாட்டை  தவிர மற்றவை ஈர்க்க  வில்லை என்பதே இந்த ஆல்பம் குறித்த ஒரு வரி கருத்து ! 

15 comments:

 1. இந்தப் பாட்டெல்லாம் பொறுமையா கேட்டதுக்கே உங்களை பாராட்டணும்

  ReplyDelete
  Replies
  1. யுவன் இசைன்னு நினைச்சுட்டேன் அதான் டவுன்லோடு பண்ணி கேட்டேன் இல்லாட்டி கேட்டிருக்க மாட்டேன்

   Delete
 2. ஞாயிறு கூட பதிவா... உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்

  ReplyDelete
  Replies
  1. தம்பி அம்பது பதிவுக்கு மேலே draft -ல் கிடக்குது ; அப்புறம் எப்படி காலி பண்றது

   Delete
 3. டவுன்லோட் பண்ணிக் 1 முறை கேட்டுவிட்டு அப்போதே அழித்துவிட்டேன்.. ஒரு பாட்டு கூட ரசிக்கும்படியா இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. கரீட்டு. அப்பன் மவனே பாட்டு மட்டும் பரவால்லை

   Delete
 4. "யார் நீ Friend- ஆ? ...........நோ ! Fling-ஆ? .......நோ ! " என்ற உயர்ந்த தத்துவ வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கார் ஹ ஹஹா....இன்னமும் பண்ணலாம் சிஸ்கோவுக்கு போகலாம் பாடல் இலங்கை சூரியனில் போடும் போது 1 முதல் ஒருமாதம் போட்காவை போடலாம் என்பதை சென்ஸர் பண்ணித்தான் போட்டார்கள் உண்மையில் கேட்கும்போது கெட்டவார்த்தையாகத்தான் கேட்டது....அந்த இடங்களில் மட்டும் பீப் என்ற ஒலியோடு சென்ஸர் செய்யப்பட்டது நேரக்கொடுமை

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா கிரித்திகன்? தகவலுக்கு நன்றி

   Delete
 5. ரொம்ப பொறுமையா பாட்டு கேட்டு பதிவை பகிர்ந்துள்ளதற்கே அவார்டு கொடுக்கலாம்!

  ReplyDelete
 6. இந்தப்படத்தில் வரும் அர்த்தமற்ற பாடல்களை போல்தான் தரவரிசை என்னும் போதையில் மாட்டிக்கொண்ட உங்களின் பதிவும் இருக்கிறது. தயவு செய்து இப்படிப்பட்ட பதிவுகளை எழுதி எங்களின் நேரத்தை வீணடிக்காதீர். உங்களுக்கு புண்ணியமா போகும்.

  ReplyDelete
 7. தரவரிசை என்னும் போதையால் உங்கள் பதிவின் தரம் குறைந்துகொண்டே வருகிறது கவனிக்கவும். உங்களை நன்றாக அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.

  ReplyDelete
 8. கஸாலி : இந்த பதிவை பற்றி நீங்க சொல்வதை ஒத்துக்குவேன். ஆனா மற்ற பதிவுகளை பற்றியும் அதே உங்கள் கருத்து அதே என்றால் ஐ யாம் சாரி; வரகூடூடிய பல்வேறு கருத்துகளில் இன்னொரு கோணம்; இன்னொரு கருத்து என்று தான் அதை எடுத்துக்கணும்;

  தினம் ஒரு பதிவு தான் பெரும்பாலும் எழுதுறேன். இப்படி எழுதுவோர் எத்தனையோ பேர் உள்ளனர். நான் எழுதுவது மொக்கை என்றால் தினம் மூவாயிரம் பேர் படிக்க மாட்டார்கள். சில மாதங்களுக்கு முன் தினம் ஆயிரம் என்றிருந்த பேஜ் வியூஸ், ஐநூறு ஐநூறாக உயர்ந்து இப்போது தினம் மூவாயிரம் என்றாகி உள்ளது (நான்கைந்து மாதத்தில் ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் ஆகி உள்ளது ). நீங்கள் என் நண்பர் என்பதால் இதை கூகிளில் இருந்து எடுத்து மெயில் மூலம் பகிரவும் தயார். நான்கைந்து மாதத்தில் எப்படி தொடர்ந்து பேஜ் வியூஸ் அதிமாகி உள்ளது என உங்களுக்கு அது காட்டும்

  தினம் ஒரு பதிவு எழுதுவதாலும், தினம் வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாவதாலும் தான் இது சாத்தியமாகி உள்ளது. மொக்கையாய் எழுதினால் ஏன் நண்பா மறுபடி மறுபடி வரப்போகிறார்கள்?

  உங்களுக்கு ஒரு டாபிக் பிடிக்கலை என்றால் அந்த பதிவின் உள்ளேயே சென்று படிக்காமல் இருப்பது நல்லது. நான் எனக்கு விருப்பமுள்ள டாபிக் என்றால் மட்டும் தான் உள்ளேயே நுழைவேன்.

  உங்கள் ஒருவருக்காக தினம் ஒரு பதிவு எழுதாமல் இருக்கவா? அல்லது தினம் வரும் மூவாயிரம் பேருக்காக எழுதவா?

  தர வரிசை என்னும் போதையால் என்று எதை சொல்கிறீர்கள்? தமிழ் மண தர வரிசையை சொல்கிறீர்களா ? அது தப்பு என்று தான் என்றுமே நான் சொல்லி வருகிறேன். கேபிள், ஜாக்கி போன்றோரை விடுத்து நான் முதலிடத்திலும் நீங்கள் நான்காம் இடத்திலும் இருக்கும் ஒரு தர வரிசை எப்படி சரியாக இருக்க முடியும்? நீங்கள் அந்த தர வரிசையை பெரிதாய் நினைக்காதீர்கள் ! அது இயங்கும் விதம் முழுக்க முழுக்க தவறு !

  ReplyDelete
 9. நில நாட்கள் முன் நீங்கள் சொன்ன படத்தின்ன் பாடல்களையே இன்னும் கேட்கவில்லை மோகன்!...

  தில்லி சென்ற பிறகு தான் கேட்க வேண்டும்.... :)

  ReplyDelete
 10. சரியான விளக்கவுரை கொடுத்துயுள்ளீர்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...