Tuesday, November 6, 2012

தமிழேண்டா..! 25 பொது குணங்கள் !

மிழேண்டா என்கிற தலைப்பில் அவ்வப்போது முகநூலில் பகிர்ந்தவற்றின் தொகுப்பு இது.

எல்லாமும்,எல்லார்க்கும் பொருந்தாது என்பதோடு "இங்கு குறிப்பிடுபவை யாவும் கற்பனையே; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை" என்பதையும் சொல்லி "கொல்ல" ஆசைப்படுகிறேன்.

சொல்லப்போனால் இவை ஐயாசாமியின் குணங்கள் என வச்சிக்குங்களேன் (சைபர் கிரைம் எப்படி எல்லாம் மிரட்டுதய்யா !)

****
தமிழேண்டா

1. அரை கிரவுண்டு நிலம் வாங்கி தனி வீடு கட்டி வாழ விரும்புவான் சென்னை தமிழன் !
###

2. மழை வந்தால் சாலையின் நடு சென்டரில் நடப்பது சென்னை தமிழனின் வழக்கம் !

###

3. வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்து, கூடவே கொஞ்சம் பூ வைத்து கொண்டு வந்தால் தமிழச்சியாக ஏற்றுக் கொள்வோம் !

###

4.  தெருவில் இருக்கும் யாரோ ஒருவரின் காலி ப்ளாட்டை குப்பை கொட்ட பயன்படுத்தினால் நீங்கள் தமிழர் தான் !

###

5. மனைவிக்கு அடங்குபவனும், பயப்படுபவனும் தான் எங்கள் தமிழன் !

###

6. ஆஸ்பத்திரிக்கு வரும்போதும், ஆபிசுக்கு லீவு போட்டோமே என குற்ற உணர்வுடன் அமர்ந்திருப்பான் தமிழன் !

###

7. சுஜாதா எழுத்து, ரஜினி படம் இரண்டில் ஒன்றேனும் பிடிக்கும் தமிழனுக்கு !

###

8. வருடத்துக்கொரு முறை கனவுக்கன்னியை மாற்றி விடுவான் தமிழன் !

###

9. தெருவில் எந்த கோயிலை பார்த்தாலும் கன்னத்தில் போட்டு கொள்பவரை பார்த்தால், அவர் தமிழர் என அடித்து சொல்லலாம்.

###

10. ஹோட்டலில் பார்சல் வாங்கும் போது "எக்ஸ்ட்ரா சாம்பார் தாங்க " என கூச்சமின்றி கேட்டால், அவன் நம்ம இனம் !

###

11. உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தது 25 % -- 50 % சேமித்தால், நீங்கள் தமிழர் தான் !

###

12. ஷேர் ஆட்டோவில் பக்கத்தில் பெண் இருந்தால், கிளுகிளுப்போடு அமர்ந்திருப்பான் சென்னை தமிழன்.

###

13. திருட்டு வீ.சி.டியில் ஏற்கனவே பார்த்த படத்தை, "உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" இரண்டாம் முறை பார்த்து ரசிப்பான் எங்கள் தமிழன் .

###

14. ஒருநாள் சீரியல் பார்க்காவிடில் "என்ன ஆச்சு?" என்று பார்த்த யாரிடமாவது கேட்டால் தான் தூக்கம் வரும் பல தமிழருக்கு.

###
15. பாஸுக்கு சோப்பு   போடுவது தன் கடமைகளில் ஒன்று என தெளிவாய் உணர்ந்தவன் தமிழன் .
###

16. தன் திருமணத்துக்கு வந்த சுவர் கடிகாரத்தையும், ஹாட் பேக்கையும் அப்படியே பேக் செய்து வேறு திருமணத்தில் பரிசளிக்கும் புத்திசாலியாக்கும் எங்க தமிழன் !


###

17. ஒன்வே-யிலும், ராங் சைடிலும் வண்டி ஓட்டி செல்வது தமிழர் பண்பாடு.

###

18. குழந்தையை டாடி, மம்மி என்று கூப்பிடவே சொல்லித் தருவான் மறத்தமிழன் .

###

19. கர்சீப்பை கன்னா பின்னாவென்று சுருட்டி இடது உள்ளங்கைக்குள் வைத்திருந்தால், நீங்கள் தமிழச்சி தான்.

###

20. சாவு ஊர்வலத்தில் சரக்கடித்து விட்டு யாராவது ஆடாவிட்டால், இறந்த தமிழனின் ஆன்மா சாந்தியடையாது

####

21. மொய் கவரை கண்டுபிடித்தவன் தமிழன்.

####

22. தன் குழந்தையை " சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக்கி கை நிறைய சம்பாதிக்க வைக்கணும்" என்பது, பல தமிழரின் சிலிர்க்க வைக்கும் நேயர் விருப்பம்.

####

23. தீபாவளிக்கும், புது வருடத்துக்கும் காலையில் கோவில் சென்று, பின் டிவி முன் செட்டில் ஆகிடுவான் நம்ம ஆளு !
####

24. தப்பே செய்யாவிட்டாலும் எங்கு போலீஸை பார்த்தாலும் உதறல் எடுக்கும் எங்க தமிழருக்கு !

####

25. எந்த குழந்தையை பார்த்தாலும், "கணக்கு பாடம்தான் மிக முக்கியம்" என சொல்வது தமிழனின் வழக்கம்.


****
நான் ஏதும் தவற விட்டிருந்தால் சொல்லுங்கங்கங்க !

47 comments:

 1. \\15. பாஸுக்கு சோப்பு போடுவது தன் கடமைகளில் ஒன்று என தெளிவாய் உணர்ந்தவன் தமிழன் .\\ ithai nammai vida matravarkal nandraaga, athuvum soppu poduvathe theriyaama poduraanga, பாஸ்.

  \\22. தன் குழந்தையை " சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக்கி கை நிறைய சம்பாதிக்க வைக்கணும்" என்பது, பல தமிழரின் சிலிர்க்க வைக்கும் நேயர் விருப்பம்.\\ நம்மாளு விரும்பியதொட நிறுத்திட்டான் மென்பொருள் துறையில் முக்கால் வாசிப்பேர் மனவாடு.......... :((  \\ 24. தப்பே செய்யாவிட்டாலும் எங்கு போலீஸை பார்த்தாலும் உதறல் எடுக்கும் எங்க தமிழருக்கு !\\ தப்பே செய்யாவிட்டாலும் இழுத்துப் பொய் முட்டிக்கு முட்டி தட்டினா அவன் என்ன செய்வான் பாஸ்.................

  கொஞ்சம் அழகா இருக்கும் பெண்ணை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை கூட இல்லாமல் சொல்லுபவன் தமிழன்

  தமிழர்களோடு ஆங்கிலத்திலும் மற்ற மொழி பேசுபவர்களோடு தமிழிலும் பேசுவான் சுத்தத் தமிழன்.

  ReplyDelete
 2. கொஞ்சம் அழகா இருக்கும் பெண்ணை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை கூட இல்லாமல் ஜொள்ளுபவன் தமிழன்.

  ReplyDelete
 3. வணக்கம் தலைவரே...

  நாமெல்லாம் 100% தமிழன்தான்..!

  ReplyDelete
 4. "தமிழேண்டா..! 25 பொது குணங்கள் ! " என்று தமிழர் புகழ் பாடி பற்றி பதிவு எழுதினால், இந்த பதிவை ஷேர் செய்தால் நீங்களும் தமிழனே... :):):):):):)

  ReplyDelete
 5. கூச்சமே இல்லாம பொது இடங்களில் உச்சா போறவனும் தமிழனே

  ReplyDelete
 6. சரக்கு அடித்துவிட்டு நடுரோட்டில் மல்லாக்க படுப்பவனும் தமிழனே

  ReplyDelete
 7. மொபைல் போன்ல ரிங் டோன் சத்தமா வச்சி பாட்டு கேட்கிறவனும் தமிழன்

  ReplyDelete
 8. காட்டி கொடுப்பதும் போட்டு கொடுப்பவனும் தமிழன்

  ReplyDelete
 9. தமிழ்நாட்டுல பொறந்துட்டு குழந்தைகளை கான்வென்ட்ல சேர்க்கிறவன் தமிழன்

  ReplyDelete
 10. அரை கிரவுண்டு நிலம் வாங்கி தனி வீடு கட்டி வாழ கனவு காணுவான் சென்னை தமிழன் !
  /////////////////////////
  மற்ற ஊர் தமிழன் ஒரு ஏக்கர்ல வீடு கட்ட ஆசைப்படுவான்!?
  மழை வந்தால் சாலை ஓரத்தில நிப்பான் நடுவில் நிற்கமாட்டான்!?

  ReplyDelete
 11. கோவைநேரம் சொன்ன மாதிரி, சகதமிழன் நம்மைவிட முன்னேறிடுவானோன்னு அவனுக்கு குழிபறிப்பவனும் தமிழனே.......

  ReplyDelete
 12. ஹா ஹா ஹா அய்யா சாமி என்னும் தமிழனின் குணங்களை படித்து ரசித்தேன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

  ReplyDelete
 13. Anonymous10:35:00 AM

  எப்படிங்க இப்படி ?
  அரிய கண்டுபிடிப்புகள்? !

  ReplyDelete
 14. புது கார் வாங்கினா, அந்த சீட்டுக்குப் போட்டிருக்கிற பிளாஸ்டிக் காகிதத்தை இரண்டு வருடத்திற்கு அப்படியே வைத்திருப்பவன்தான் பச்சைத்தமிழன்.

  ReplyDelete
 15. செமயா இருக்கு

  ReplyDelete
 16. ஆங்கிலம் சரியாக தெரியா விட்டாலும் தன்னை அறிவாளி என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்ற நினைப்பில் வலிந்து இங்கிலீஷில் பேசுபவனும் தமிழன்தான். :-)

  ReplyDelete
 17. முக்கியமான குணத்தை விட்டுவிட்டீர்களே! ஒற்றுமை என்றால் என்ன விலை என்று கேட்பவன்.

  ReplyDelete
 18. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா....26)இந்த பதிவை படித்துவிட்டு இதில் எத்தனை குணங்கள் தன்னோடு பொருந்தி பார்ப்பவனும் தமிழன்தான்...ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. WOW!!பின்னுறீங்க...

   Delete
 20. எவ்வளவு கரண்ட் கட்டானாலும் , சொரனையே இல்லாமல் சூப்பராக தூங்குவான் தங்கத்தமிழன் !

  ReplyDelete
 21. அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆனாலும் பரவாயில்லை னு செல் போன்ல பாட்டு சத்தமா வச்சி கேட்கிறவன் தமிழன்

  ReplyDelete
 22. நானும் தமிழண்டா..!

  ReplyDelete
 23. i took this as a joke , but i never accept crticising tamils . if you come out of tamilnadu or out of india you will come to know that we are better than other states of india being in work ethics, sinceriaty, honesty and politness.i am proud call my self தமிழண்டா.
  I am sending this reply from browsing center in ksa, there is no tamil font.

  ReplyDelete
 24. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா :))

  பழனி.கந்தசாமி
  "புது கார் வாங்கினா, அந்த சீட்டுக்குப் போட்டிருக்கிற பிளாஸ்டிக் காகிதத்தை இரண்டு வருடத்திற்கு அப்படியே வைத்திருப்பவன்தான் பச்சைத்தமிழன்." ஹா...ஹா.. நிஜத்தில் கண்டிருக்கின்றேன்.

  ReplyDelete
 25. அடடா! கச்சிதமான வர்ணணைகள்! சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி!

  ReplyDelete
 26. Anonymous6:13:00 PM

  இதுல ஒன்னும் நான் பண்ணின நினைவே இல்லை மோகன்...-:)

  மற(தி)த்தமிழன்டா...

  ReplyDelete
 27. தமிழனின் அடையாளங்களை புட்டுப் புட்டு வைத்து விட்டீர்கள்.
  //பழனி.கந்தசாமி
  புது கார் வாங்கினா, அந்த சீட்டுக்குப் போட்டிருக்கிற பிளாஸ்டிக் காகிதத்தை இரண்டு வருடத்திற்கு அப்படியே வைத்திருப்பவன்தான் பச்சைத்தமிழன்.//
  நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கம்ப்யூட்டர் கீ போர்டை பிளாஸ்டிக் கவரால மூடி வச்சிட்டு இன்னும் அதை எடுககாமயே வச்சுருக்கார்.கம்ப்யுட்டர் வாங்கி 5 வருஷம் ஆகுது.அப்படியேதான் யூஸ் பண்றார்.

  ReplyDelete
 28. வருசா வருசம் மறக்காம சொல்லும் ஸ்டேட்மெண்ட் : இந்த மாதிரி வெயில் எந்த வருசமும் இருந்ததில்லை

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 29. மூனு நாளு பேரா சேர்ந்து கரெக்டா, தெரு முக்குல நிண்ணுக்கிட்டு பேசுறது...,

  கடை வாசல்ல குறுக்கால வண்டி நிறுத்துறது...,

  கோவில் சுவத்துல பேரு எழுதுறது, கோவில் வலம் வந்த எண்ணிக்கையை எழுதுறது..,

  பஸ், ரயில், ஹாஸ்பத்திரில பக்கத்துல உக்காந்து இருக்குறவங்க கிட்ட பேப்பர், புக் வாங்கி படிக்குறது..,

  கோவில், ரேஷன், ஹாஸ்பிட்டல்ல கியூல நிக்காம தெரிஞ்சவங்க பேர் சொல்லிட்டு போறது..,

  காலைலயே டீக்கடைல உக்காந்து ஊர் கதைலாம் பேசுறது..,

  ReplyDelete
  Replies
  1. டி .வி. ரிமோட்டுக்கு பாலிதீன் சுத்தி வைத்துக்கொள்வது,
   புதிய சேரில் பின் பக்கம் டர்கி டவலை போட்டுகொள்வது.
   புதிய பொருள் வாங்கினால் அதன் மேல் உள்ள பாலீதின் கவரை அகற்றாமல் பயன்படுத்துவது.
   டி.வி. யில் பேட்டி என்றால் சலவை சட்டையும், நெற்றியில் சிறு விபூதி பட்டையும்,
   கொஞ்சமும் வெட்கமில்லாமல் ரோட்டு ஓரம் நின்று 'ஒன்னுக்கு' அடிப்பது.
   பொது இடங்களில் விதரணை இல்லாமல் குப்பை கொட்டுவது.
   சினிமா காரர்கள் என்றால் வாய் பிளந்து கொள்வது.

   இன்னம் நிறைய சொல்லாம்

   Delete
 30. கொசுறு வாங்கிட்டு போறது.,

  ஹாஸ்பிட்டலுக்கு கட்டு சோறு கட்டி போறது..,

  ஹாஸ்பிட்டல்ல நோயாளிக்கிட்ட எங்க மாமாவுக்கு இப்படித்தான்னு ஆரம்பிச்சு பீதியை உண்டாக்குறது..,


  ReplyDelete
 31. தமிழன்....

  சொல்லி இருக்கும் பல பண்புகள் இந்தியர்களுக்குப் பொதுவானவை! இங்கே தில்லியில் பல தரப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பார்த்ததினால் சொல்கிறேன்! :)

  ReplyDelete
 32. 8. வருஷத்துக்கொருமுறையா.. ஆறு மாசத்துக்கொரு முறை இல்லை? :))

  ReplyDelete
 33. நண்பர்களே இந்த பதிவு ரொம்ப நாளா Draft-ல் தூங்கிட்டு இருந்தது. இவ்ளோ பெரிய ஆதரவு நீங்க பின்னூட்டம் மூலமா தருவீங்கன்னு நினைக்கவே இல்லை. நன்றி நன்றி நன்றி !

  நீங்கள் ஒவ்வொருவரும் சொன்ன அடிஷனல் விஷயங்கள் மிக ரசித்தேன் நன்றி !

  பின்னூட்டம் ஏகப்பட்டது ஆகி போனதாலே தனி தனியா பதில் சொல்ல முடியலை. தப்பா நினைக்காம தமிழர் மாதிரி டேக் இட் ஈசியா எடுத்துக்குங்க :))

  ReplyDelete
 34. தமிழர் குறை (மோசமான ) பற்றி பெரிய கட்டுரையே எழுதி விட்டீர்கள் .நிறை பற்றி எப்போது ?

  ReplyDelete
 35. [[உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தது 25 % -- 50 % சேமித்தால், நீங்கள் தமிழர் தான்]]
  இது உண்மையாயிருந்தால் மகிழ்ச்சியே!

  ReplyDelete
 36. மொத்தத்தில் " தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு" என்பது இத்தனைக்குண்ங்களையும் உள்ளடக்கிய தமிழனைத்தானா...?

  ReplyDelete
 37. அருமையான ஆராய்ச்சி.

  ReplyDelete
 38. கேவலமாக இன்னொருவன் தன்னை இழிவு செய்து நடத்தினாலும் அவனிடம் பம்மி நடந்து, உடன் வரும் தமிழனை எப்படியாவது முன்னேறவிடாமல் செய்வது மிக முக்கியமான குணம். இன்னொரு தமிழன் பேச்சை கேட்டு நடப்பது, ஏற்று கொள்ள முடியாத ஒன்று. மறத்தமிழன்டா!

  ReplyDelete
 39. உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தது 25 % -- 50 % சேமித்தால், நீங்கள் தமிழர் தான் !

  இது ஒண்ணு மட்டும்தான் இடிக்குது.

  மோகன் உங்க ப்திவு மட்டுமில்லை,, தொடர்ந்து வந்த பின்னூட்டங்களும் அருமை!!!!

  ReplyDelete
 40. Anonymous12:25:00 PM

  நான் டமிலன்! நான் டமிலன்! நான் டமிலன்! ஐய்யயோ நான் டமிலன்

  ReplyDelete
 41. Anonymous12:30:00 PM

  இப்படி தண்ணைதானே கேவலப்படுத்திக்கொள்வது தமிழனின் பண்பு

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...