Sunday, November 11, 2012

காசு குடுத்து படம் பார்த்து பயப்படணுமா? பீட்சா விமர்சனம்

ய்யாசாமிக்கு பொதுவா த்ரில்லர் படங்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. கல்லூரி காலம் முதல் எந்த படமும் நண்பர்கள் கூட்டமாய் பார்க்க செல்லும்போது, த்ரில்லர் படம் என்றால் அய்யாசாமி எஸ் ஆகிடுவார் " காசு குடுத்து, பயந்துட்டு வரணுமா? போங்கடா போக்கத்த பயலுகளா" என திட்டுவார்.

அப்படிப்பட்டவரின் மனைவிக்கு த்ரில்லர் படங்கள் என்றால் உயிர் ! (பேய்க்கு பேய் படம் பிடிப்பதில் ஆச்சரியம் இல்லைன்னு முணுமுணுப்பார் அய்யாசாமி) ஒருவிதத்தில் கணவன்-மனைவிக்கு மாறுபட்ட ரசனை இருப்பது நல்லது தான் ! அய்யாசாமிக்காக அவர் மனைவி காமெடி படம் பார்க்க ஆரம்பித்து விட்டார். அவருக்காக இவர் த்ரில்லர் பார்க்க ஆரம்பித்தார்.

அய்யாசாமிக்கும் ஒரு பேய் படம் பிடித்தது என்றால் அது "ஈரம்" தான். மிக அழகான மேக்கிங் சுவாரஸ்ய நேரேஷன் இவற்றால் எப்போதும் ரசிக்கும் படம் அது.

சரி பீட்சாவுக்கு வருவோம். பீட்சா பற்றிய அய்யாசாமியின் விமர்சனம் இதோ (கதை சொல்லப்படலை; பயம் வேண்டாம்)

*********

எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சொல்றாங்களேன்னு தான் பீட்சா பார்த்தோம். நிறைய விமர்சனம் இதுக்கு முன்னால படிச்சாச்சு. எல்லாரும் சொல்லி வச்சிகிட்டாப்புல " பீட்சா டெலிவரி பண்ண போற ஹீரோ ஒரு பேய் பங்களாவுல மாட்டிக்குராறு. அப்புறம் என்னா நடக்குதுங்கறது தான் கதை"ன்னு மட்டும் தான் சொன்னாங்க

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ரம்யா நம்பீசன் மற்றும் விஜய் சேதுபதி பார்ட் தான் வந்தது. எல்லாரும் என்னாப்பா இதுன்னு முணுமுணுதுக்கிட்டு இருந்தாங்க (அவங்களுக்கு உடனே பயப்பட்டாகனுமாம் !)

ஆனா இந்த பார்ட் வந்தப்போ ஐ வாஸ் வெரி ஹாப்பி. காரணம்......... ஹீ ஹீ ரம்யா நம்பீசன் தான். அம்மணி அழகா இருக்காங்க. நல்லா நடிக்கவும் தெரியுது. இயக்குனர்கள் எல்லாம் நல்ல நல்ல படமா வாய்ப்பு குடுத்து, இவங்களை அடுத்த அனுஷ்கா ஆக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

ரம்யாக்கு சின்ன பாத்திரம் ; முழுக்க முழுக்க படத்தை தாங்குவது விஜய் சேதுபதி தான் என்றாலும், டைட்டிலில் இரண்டு பேர் பேரும் ஒண்ணாவே போட்டாங்க.

விஜய் சேதுபதி ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். அந்த பங்களாவில் மாட்டி கொள்வது அவரல்ல; படம் பார்க்கும் மக்கள் ஒவ்வொருவரும் தான் என்கிற அளவில் அவரும் , இயக்குனர், ஒளிப்பதிவாளர் கூட்டணி உழைச்சிருக்கு.

பேய் பங்களா பார்ட் வந்தவுடனே சரியா அஞ்சு மினிட்டுக்கு ஒரு தடவை நம்மை அலறவைக்கிறாங்க. இடைவேளைக்கு அப்புறம் வர்ற அரைமணி நேரம், நிமிஷத்துக்கு நிமிஷம் மக்களை அலறவிடுறாங்க. நல்லாருங்கப்பா !

சில பேரு கண்ணை மூடிகிட்டே பாதி படம் பாக்குறாங்க ! (நான் இல்ல !) 

மிக அதிக பாராட்டுகள் சேரவேண்டியது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு தான். பாக்குறதுக்கு சிம்பு தம்பி குறளரசன் மாதிரி இருக்கும் இவர் அழகான திரைக்கதை உத்தியால் கலக்கிட்டார்.

கருப்பு சட்டை போட்டவர் தான் இயக்குனர் 
படத்தில் தேவையில்லாமல் ஒரு காட்சியும் இல்லை. பாடல்கள் ரெண்டு மூணு தான் இருக்கு. ஆனால் எதுவும் மனதில் தங்கலை என்பது மைனஸ். படம் பார்த்து முடித்ததும் ஆள் ஆளுக்கு " அது எப்படி? இது எப்படி?" என லாஜிக் மிஸ்டேக் நிறைய பேசுகிறார்கள். ஆனால் பாக்கும்போது கட்டி போட்டுடுறாங்க நம்மளை.

எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத படம் வருவது தான் வித்யாசமே. அந்த விதத்தில் இப்படம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி, படத்தின் பட்ஜெட்டை விட ரெண்டு மூன்று மடங்கு சம்பாதித்து விட்டது இன்னும் கூட சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.

படம் முடியும் போது மனைவி மற்றும் என் பெண்ணுக்கு ஒரு வித ஏமாற்றம் வந்தாலும் கூட, படம் பார்க்கும் போது அவர்களுக்கும் இருந்த த்ரில் பீலிங் செம !

கார்த்திக் சுப்புராஜ் என்ற இளைஞரின் மிக வித்தியாச முயற்சிக்காகவே இந்த பீட்சாவை அவசியம் பாருங்க !

ஆண்டி க்ளைமாக்ஸ் :

இந்த படத்தை நான் பயமின்றி பார்த்தேன் காரணம் சொன்னா நீங்களே  பரிதாபப்படுவீங்க. 

ப்ரேம்னு என் நண்பன்.... காலேஜ் நாளில் இருந்தே, அவனுக்கு ஒரு ரகசியமும் தங்காது.சமீபத்தில்  அவனோடு காரில் போய் கொண்டிருக்கும்போது பீட்சா பற்றி பேச்சு வர, டபக்குன்னு ஒரே நிமிஷத்தில் சஸ்பென்சை உடைச்சிட்டான் ! " நான் வேணாம்டா ! வேணாம்டா" என சொல்ல, கதற கதற மேட்டரை டபக்குன்னு சொல்லிட்டான்... படுபாவி !

அவன் என்ன சொன்னான்னு சொல்லவா? 

அலோ ..அலோ ஏங்க விண்டோவை க்ளோஸ் பண்ணிட்டு ஓடுறீங்க நில்லுங்க ! நில்லுங்க !

****
சமீபத்து பதிவு: போடா போடி பாட்டு  ப்புடி: இங்கே

24 comments:

 1. காசு கொடுத்துட்டு அழுதுட்டு வரணுமா என்று அழுகை படத்துக்கு தான் நான் ரொம்ப யோசிப்பேன்.(மகாநதி தவிர்த்து)

  ReplyDelete
  Replies
  1. அழுகை படம் என பார்க்கும் முன்னே தெரிவது சற்று கஷ்டம் தானே மேடம்? த்ரில்லர் என்றால் விளம்பரத்திலேயே தெரிஞ்சுடும். ஆனால் அழுகை படம் எக்காரணம் கொண்டும் மறுபடி பார்ப்பதில்லை (நீங்க சொன்ன மாதிரி சில படம் தவிர்த்து)

   Delete
 2. நேற்றுதான் படம் பார்த்தேன்
  அமானுஷ்யமாகவே முடிக்காமல் இருந்திருந்தால்
  படம் சப்பெனப் போயிருக்கும்
  அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
  தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் பாத்துட்டீங்களா சார்? நன்றி

   உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

   Delete
 3. Replies
  1. நன்றி அஜீம்பாஷா

   Delete
 4. "த்ரில்லர்" பார்த்திடுவோம். மிக்கநன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி நன்றி. பாருங்க

   Delete
 5. இன்னும் பார்க்கவில்லை! பார்த்து விடுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பாருங்க சுரேஷ் நன்றி

   Delete
 6. பீட்சா படம் பார்க்கத் தூண்டுகிறது விமர்சனங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முரளி சார்

   Delete
 7. கண்டீப்பா படத்த பாக்கணூம் போல. THANKS ANNA

  ReplyDelete
  Replies
  1. நல்லாருக்கியா அன்பு ? நன்றி வீட்டில் அம்மா அப்பா அனைவருக்கும் என் அன்பையும் தீபாவளி வாழ்த்தையும் தெரிவிக்கவும்

   Delete
 8. //எல்லாரும் என்னாப்பா இதுன்னு முணுமுணுதுக்கிட்டு இருந்தாங்க (அவங்களுக்கு உடனே பயப்பட்டாகனுமாம் !)//

  :))))))))))))

  வாய்ப்பு கிடைத்தால் பார்க்கப் படும்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்; முடிந்தால் பாருங்க. விரைவில் டிவி யில் வரவும் வாய்ப்பு உண்டு ; தியேட்டரில் பார்த்தல் எபக்ட் அதிகம்

   Delete
 9. தலைப்பை மட்டுமே படித்தேன் படம் பார்ப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.............Thanks.

  ReplyDelete
 10. //சில பேரு கண்ணை மூடிகிட்டே பாதி படம் பாக்குறாங்க ! (நான் இல்ல !) //

  சரி சரி நம்பிட்டோம்


  ReplyDelete
 11. தீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
  என இத்திருநாளில் வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 12. நல்லது.... பொதுவாகவே த்ரில்லர் படங்கள் எனக்கும் பிடிக்கும்... பீட்சா பார்ப்பேனா என்பதும் இப்போதைக்கு தெரியாது! :)

  ReplyDelete
 13. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 14. பீட்ஸான்னு ஒரு படம். அப்படி எல்லோரும் கொண்டாடுற அளவுக்கு இந்தப் படத்துல என்ன இருக்குன்னு தெரியல. முதல்ல படத்தோட பெயர் பாருங்க..பீட்ஸான்னு இங்கிலிஷ் பெயரை வச்சு பார்க்க வர்றவங்களை ஈர்க்கப் பார்க்கிறார் டைரக்டர். ஏன் இட்லி, வடை, பொங்கல், பொறி உருண்டைன்னு வைக்க வேண்டியதுதானே..வைக்க மாட்டாங்க...ஏன்னா இது கலிகாலம்...தினமும் சாப்பிடறத கண்டுக்க மாட்டாங்களாம்.. ஆனா எங்கேயோ வெளிநாட்டுலருந்து வந்தத கொண்டாடுறா.

  கதை என்னன்னு பார்த்தீங்கன்னா கதாநாயகனும் கதாநாயகியும் கல்யாணம் கட்டாமலேயே சேர்ந்து வாழுறாங்க.. கதாநாயகி கர்ப்பம் ஆகிடுறா. என்ன கதையோ கண்றாவியோ? அப்பலருந்து என்னால சீட்டுல உட்கார முடியல. இந்தப் படத்தைப் பார்த்து இளைய சமுதாயமே கெட்டுப் போகப் போறது. ஹீரோ முகத்தைப் பார்த்தா நாலு நாளைக்கு சாதம் இறங்காது. அப்படியொரு முகம். ஹீரோயின் அதுக்கும் மேல. அந்தப் பொண்ணும் அதோட கலரும் பேச்சும். முதல்ல கேரளாவுலருந்து நடிகைகளைக் கூட்டிட்டு வர்றதை தமிழ் சினிமா உலகம் நிறுத்தணும். நயந்தாரா, அசின் வேணும்னா இருந்துட்டுப் போகட்டும். மற்றவங்களையெல்லாம் துரத்திடணும். என்னமோ தமிழ்நாட்டில் அழகா, சிவப்பா நடிகைகள் இல்லாத மாதிரி கூட்டிட்டு வர்றாங்க. எந்த மலையாளப் படத்துலையாவது தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுத்திருப்பாங்களா? நாம மட்டும் கொடுக்குறதுல என்ன நியாயம் இருக்கு? பாவனா, விஜயலக்ஷ்மின்னு அழகேயில்லாத நடிகைகளைத் தமிழ்ல அறிமுகப்படுத்தினதுல ஆரம்பத்துல மிஸ்கீன் மேல எனக்கு ரொம்பக் கோபம் இருந்தது. ஆனா அதுக்கும் சேர்த்து லட்டு மாதிரி ஒரு இந்திய அழகியையும், ஒரு வெள்ளைக்கார அழகியையும் முகமூடியில் அறிமுகப்படுத்தினதுல எனக்கு அவர் மேல இருந்த கோபம் எல்லாம் போயிட்டுது. இதுக்காகவே மிஸ்கீனை நேர்ல சந்திச்சு பாராட்டினேன்..அடுத்தடுத்த படங்கள்லையும் இந்திய அழகிகள அறிமுகப்படுத்தப் போறதா சொன்னார்.. நல்லாருக்கட்டும்.

  ரம்யா நம்பீசனுக்கு வரேன். ஏன் இந்தப் பொண்ணு இப்படி இருக்கு? படத்தோட கிளைமாக்ஸ்ல எனக்கு இவ மேல பயங்கரக் கோபம். திருட்டுப் பொண்ணு.. என்ன ஒரு கெட்ட புத்தி? ஹீரோவுக்கு கன்னத்துல அறையுறா..நானா இருந்தா கையைப் பிடிச்சு வெண்டிக்கா உடைக்கிறமாதிரி உடைச்சுப் போட்டிருப்பேன்..இதெல்லாம் ஜீன்ஸ்லருந்து வர்றது.. இவருக்கெல்லாம் தமிழ்ப் படங்கள்ல சான்ஸே கொடுக்கக் கூடாது. அதுல வேற சொந்தக் குரல்ல பேசி ஆளைக் கொல்றா. பேசாம சின்மயிக்கு குரல் கொடுக்கச் சொல்லியிருக்கலாம். சின்மயி குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கச்சேரி செய்ய ஆரம்பிச்சா நாள் முழுக்க உட்கார்ந்து கேட்டுட்டேயிருப்பேன். அவரோட குரலைப் போலவே அவரும் அழகு..பேசாம அவரையும் சினிமால நடிக்க வைக்கலாம். ஆனா இந்த மாதிரி குப்பைப் படங்கள்லயெல்லாம் சின்மயி நடிக்க மாட்டார்..

  யாரும் பீட்ஸா பார்க்க விரும்பினீங்கன்னா இனிமே விரும்பாதீங்க.. படம் படு மட்டம். நம்ம பண்பாடுகளை குழி தோண்டிப் புதைக்குது.. கதாநாயகன், கதாநாயகின்னா சமூகத்துக்கு முன்மாதிரியா இருக்கணும்..நல்லவங்களா இருக்கணும்..ஹீரோ வீரமானவனா, நாலு பேர் இல்ல நாப்பது பேர் வந்தாலும் அசராம சண்டை போடக் கூடியவனா இருக்கணும்..ஹீரோயின்னா அடக்க ஒடுக்கமா, ஹீரோவுக்கு அடங்கினவளா இருக்கணும்... இது எதுவுமே படத்துல இல்ல..இப்படித்தான் முன்னாடி ஆரண்ய காண்டம்னு ஒண்ணு வந்துச்சு..இந்தப் படத்து டைரக்டர் கார்த்திக் மட்டும் என் கண்ணுல சிக்கினா நல்லதா நாலு கேட்கலாம்னு இருக்கேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...