Sunday, November 18, 2012

துப்பாக்கி எவ்ளோ பெரிய ஹிட்? விமர்சனம்

2012 ல் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் ஓடவில்லை என்கின்றனர். தாண்டவம், மாற்றான், முக மூடி உள்ளிட்ட பல படங்கள் பெரும் தோல்வி ! துப்பாக்கியை கூட நக்கலோடுதான் எதிர்நோக்கியிருந்தேன். டிரைலர் மற்றும் பாடல்கள் எந்த எதிர்பார்ப்பையும் தரவில்லை .அதிலும் பாடல்கள் சுத்தம்....

படம் பார்க்க நம் பதிவர் நண்பர்கள் எழுதிய நல்ல விமர்சனங்கள் தான் காரணம். மேலும் நம்ம வீட்டம்மாவிற்கு பிடித்த நடிகர்களில் விஜய்யும் ஒருவர் (கமல் மற்றும் பருத்தி வீரன் கார்த்தி மற்ற இருவர்). பெண்ணுக்கும் நேற்று தான் மாதாந்திர தேர்வுகள் முடிந்ததால், ஐநாக்ஸில் துப்பாக்கி சென்றோம்.

கதை

இணையத்தில் நிச்சயம் வாசித்திருப்பீர்கள் என்பதால் மிக சுருக்கமாக:

பெற்றோர் இருக்கும் மும்பைக்கு 40 நாள் விடுமுறையில் வருகிறார் ராணுவ கேப்டன் விஜய். மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்த சதி நடப்பது தெரிந்து, அதை தடுக்க ஒன் மேன் ஆர்மியாக போராடுகிறார். வென்றாரா இல்லையா என்பதை வெண் திரையில் காண்க
*********


ஐம்பது படத்துக்கு மேல் நடித்த விஜய்க்கு ஹிட் ஆன படங்கள் இருபது இருக்குமா ? ஆனால் என்றும் மக்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்த படங்கள் எத்தனை இருக்கும்? துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி போன்ற வெகு சில படங்களை தான் சொல்ல முடிகிறது. இந்த சிறிய பட்டியலில் மக்கள் என்றும் ரசித்து, கொண்டாடும் படமாக சேர்கிறது துப்பாக்கி. மேக் நோ மிஸ்டேக். இது விஜய்யின் அட்டகாசமான சரவெடி படங்களில் ஒன்று !

படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் முருகதாஸ் தான். மனுஷன் ஏழாம் அறிவில் நிகழ்ந்தது மீண்டும் நடக்ககூடாது என்று உழைத்துள்ளது தெரிகிறது.

A.R. முருகதாஸ் படங்கள் அனைத்திலும் சில ஒற்றுமை இருக்கும் :
ஹீரோ அறிமுக பாடல் + ஹீரோயின் அறிமுக பாடல்/

நகைச்சுவைக்கு தனி பார்ட் இருக்காது. ஹீரோ அல்லது ஹீரோயினே காமெடியும் செய்வார்கள்

புத்திசாலித்தனமான காய் நகர்த்தல் இருக்கும்

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாய் மூணு, நாலு சீன் செம நச்சுன்னு இருக்கும் (ஏழாம் அறிவில் ஒன்று கூட அப்படி இல்லை); ரமணாவில் இறந்த பிணத்தை வைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்க்க சொல்லும் காட்சி; விஜயனிடம் "உனக்கு மூணு சான்ஸ் தர்றேன் யாருக்கு வேண்ணா போன் பண்ணு" என விஜயகாந்த் பேசும் காட்சி..இப்படி ரசிகர்கள் கை தட்டி மகிழும்; "பின்னிட்டாண்டா டைரக்டர்" என்று சொல்லும் காட்சிகள் நிச்சயம் இருக்கும். இந்த சீன் ஒவ்வொன்றும் பத்து, 15 நிமிடம் வரும் பரபரப்பான காட்சிகளாக இருக்கும். அதன் முடிவில் நாமே வென்றது போல் தியேட்டர் ஆர்ப்பரிக்கும்.

துப்பாக்கியிலும் அத்தகைய காட்சிகள் சில உண்டு

27-ஆம் தேதி 12 இடத்தில் குண்டு வெடிக்க போகிறது என்று சொல்லிவிட்டு, அதே நாளின் காலை விஜய் மிக கூலாய் ஒரு கல்யாணம் அட்டென்ட் செய்கிறார். கல்யாணத்தில் 12 நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு, "ஜாலியாய் ஒரு கேம் ஆடுவோமா?" என்று ஆரம்பிக்கும் போது சீட்டின் நுனிக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னே வரும் மக்கள், வெவ்வேறு இடத்தில், குறிப்பிட்ட ஒரே நொடியில் 12 பேர் சுட்டு வீழ்த்தப்படும் நேரம் சீட்டிலிருந்து விழாத குறையாய் கை தட்டி மகிழ்கிறார்கள் (லாஜிக் எல்லாம் யாருக்கு வேணும் சார்? அது கிடக்கட்டும் ஒரு மூலையில் !)

போலவே, விஜய் தங்கையை கடத்தி, பின் மீட்கும் காட்சி ஒரு க்ளைமாக்ஸ் அளவு வலுவாய் இருக்கு. சண்டை முடிந்து நாய் அருகில் அமர்ந்து நாயும் விஜய்யும் சேர்ந்து மூச்சு வாங்கும் போது தியேட்டர் அலறுகிறது. முருகதாசின் இன்னொரு ஸ்பெஷல் பன்ச் சீன் இது !

படம் வரும்முன் வந்த டிரைலரில் " ஐ யாம் வெயிட்டிங்" என விஜய் சொல்லும்போது, அத்தனை பேரும் கிண்டலடித்தோம். கிண்டலடித்த என்னை போன்றோர் அந்த காட்சிக்கு கிடைக்கும் கை தட்டலில் சற்று நாணித்தான் போக வேண்டியிருக்கு.

ஹீரோ அறிமுகத்தை விட ஹீரோயின் காஜல் அறிமுகமாகும் காட்சி செம ! அதிலும் அறிமுக காட்சியில் அப்பாவுக்கு அவர் விடும் அறை.

 "அப்பாவை அடி அடின்னு சின்ன வயசில் கொஞ்சிட்டு இப்ப அடிக்கிறாளேன்னா என்ன பண்றது" - அப்படின்னு மனைவி சொல்றாரே அது எங்க வீட்டிலே ஒட்டு கேட்டுட்டு எழுதின மாதிரியே இருந்துது :)

அண்டார்டிகா பாட்டில் காஜல் எத்தனை விதமான விளையாட்டு விளையாடுகிறார் என ஒரு போட்டியே வைக்கலாம் வழக்கமா ஹீரோ தான் எல்லா விளையாட்டிலும் கில்லி என காட்டுவார்கள். இங்கு காஜலை பாக்சிங், பேஸ்கட் பால் உள்ளிட்ட பல விளையாட்டில் அசத்துறார் என்கிறார்கள். சேட்டு பெண் காஜல் அகர்வாலை சில இடத்தில் ரசித்தாலும், கண்ணை முழுசாய் உருட்டி பார்த்தால் முகத்தில் பாதி பகுதி கண்ணாக இருந்து மிரட்டுகிறது !

ஜெயராம் பார்ட் லாஜிக் எல்லாம் பார்க்காமல் இருந்தால், செம ஜாலியாய் இருக்கு. ஸ்பீடான படத்தில் ஜெயராம் பார்ட் ஒரு releif தான். காபி டே காட்சி, இரண்டு ஜோடிகள் சந்திக்கும் காட்சி என பல இடங்களில் சிரித்து கொண்டிருந்தோம்.



இடைவேளையில் மக்கள் முகத்தில் அத்தனை சந்தோஷம் ! இன்று ஒரு டிக்கெட்டுக்கு நூற்று இருபது ரூபாய் தந்து ஒரு குடும்பத்தில் மூவர் அல்லது நால்வர் தியேட்டர் செல்வது மிக பெரிய லக்சரி. செலவு செய்ததுக்கு மேல் மக்களை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு இயக்குனர் மற்றும் நடிகருக்கு இருக்கிறது. எப்போதோ ஒரு முறை தான் இது நிகழ்கிறது. இன்று பல படம் ஓடாத காரணம் இது தான் (திருட்டு வீ. சி டி மற்றும் இணையத்தில் படம் வெளியாவது இன்னொரு காரணம். இப்படம் மிக பெரிய ஹிட் ஆகாமல் போனால் திருட்டு வீ. சி டி தான் காரணமாய் இருக்கும்;மக்கள் எப்படியும் படத்தை பார்த்து விடுவர்)

இடைவேளையில் எல்லாரும் மகிழ்வோடு இருக்க, எங்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் கணவன்- மனைவி மட்டும் மிக வருத்தத்தில் இருந்தனர் " சினிமா தானேங்க ! சினிமா தானேங்க!" என்று மனைவி மறுபடி மறுபடி சொல்லி கணவனை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார். கணவர் மிக மிக வருத்ததோடு குனிந்தவாறே இருந்தார்.

மிக மிக புத்திசாலித்தனமாய் திரைக்கதை அமைத்த இயக்குனர் ஏன் இந்த சென்சிடிவ் விஷயத்தில் இப்படி கோட்டை விட்டார் என்பது புரியவே இல்லை. விஜய்யுடன் வந்து தீவிரவாதிகளை கொல்லும், அவரது நல்ல நண்பர்களில் இருவர் முஸ்லீம் என்பதை பின்னர் காட்டுகிறார். (அஷ்ரப் and ஜபார்); போலவே தீவிரவாதிகளை தப்பிக்க விடுபவர் (" நீ தப்பான இடத்தில கை வச்சிட்டே") ஒரு ஹிந்து என்றும் காட்டுகிறார். ஆனால் இதெல்லாம் உற்று நோக்கினால் தான் தெரியும். கமல் உன்னை போல் ஒருவனில் செய்தது போல் சில தீவிரவாதிகளை பிற மதத்தினராய் காட்டியிருந்தால் இப்போது வரும் மனவருத்தம் வராமல் தடுத்திருக்கலாம் :((

ஏற்கனவே இஸ்லாமியர்கள் எத்தனையோ வலியும், வேதனையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் வசிக்கும் சிலர் செய்யும் வேலைகளால் இங்கு வாழும் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை; வெளிநாடு (குறிப்பாய் அமேரிக்கா) சென்றால் இஸ்லாமியர் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே கடும் விசாரணை ..இப்படி பல... !இந்நிலையில் அவர்கள் வலியை அதிகப்படுத்தும் விதத்தில் முருகதாஸ் காட்சிகளை அமைத்திருக்க வேண்டாம் !

நிற்க . இஸ்லாமியர்கள் மனம் புண்படும் வகையில் இருந்த சில காட்சிகள் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
********
படம் பார்க்கும் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு தோன்றும் கேள்விகளை சத்யன் பாத்திரம் தொடர்ந்து கேட்கிறது. ஒரு காட்சியில் விஜய் வீட்டின் ஒரு கப் போர்டில் தீவிரவாதியும், இன்னொரு கப் போர்டில் காஜலும் ஒளிந்திருப்பதை சத்யன் பார்ப்பார். இயக்குனரும் படத்தை இப்படியே தான் தீவிரவாதம் மற்றும் காதல் என மாற்றி மாற்றி கொண்டு போகிறார்

படத்தின் பெரும் சறுக்கல் இசை (பாடல்கள் பற்றி இங்கு தனியா புலம்பியாச்சு ! ) நிறைய பாட்டு பார்ட்டி சாங்காக உள்ளதால் ஒரே உடையில் தான் ஹீரோ ஹீரோயின் ஆடுறாங்க. ஏற்கனவே சுமாரான பாட்டுகளில் ஒரே உடையில் ஆடுவது monotonous ஆக இருக்கு. " வெண்ணிலவை" பாட்டு வரும்போது பாதி தியேட்டர் வெளி நடப்பு செய்தனர். (" குளிரில் அர்ஜன்ட் உச்சா வந்தது; நல்ல நேரத்தில் இந்த பாட்டு போட்டாங்க" )

படத்தின் ஆங்காங்கு ஹிந்தி மற்றும் ஆங்கில டயலாக்குகள் வருகின்றன. அவற்றில் " வாட் இஸ் யுவர் நேம்?" போன்ற கடினமான வரிகளுக்கு தமிழில் மொழி பெயர்க்கிறார்கள். ஹிந்தியில் பேசும் பல இடத்துக்கு எந்த சப் டைட்டிலும் போடலை. வேற்று மொழி வரும் அணைத்து இடத்திலும் சப் டைட்டில் போடணும் என ஏன் தோணலையோ தெரியலை !

பட முடிவில் விஜய் மறுபடி ராணுவத்துக்கு செல்ல, பின்னணியில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, "ராணுவத்துக்கு சமர்ப்பணம்" என்று போட்டார்கள். மக்களிடம் இதுக்கும் செம ரெஸ்பான்ஸ் ! படத்தின் கடைசி கை தட்டல் இந்த ஸ்லைடுக்கு கிடைக்கிறது !

படம் முடிந்து ஐநாக்சின் மூன்று மாடி படிக்கட்டில் இறங்கி வரும்போது படம் பார்த்த மக்கள் மிக மகிழ்வாய் நிறைவாய் பேசிக்கொண்டு வருவதை பார்க்க முடிந்தது

பைனல் பன்ச்

நண்பன், துப்பாக்கி போல இன்னும் நாலு படம் நடித்தால், வீட்டம்மாவோடு சேர்ந்து நானும் டாகுடர் விஜய் ரசிகனாவதை தவிர வேறு வழியே இல்லை !

துப்பாக்கி....தீபாவளி சரவெடி......அவசியம் அனுபவியுங்கள் !

39 comments:

 1. விமர்சனம் சூப்பருங்கோ...! பாவம் அவரை சமூகவளைத்தலங்கள் படுத்துன பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் போல...!

  ReplyDelete
 2. செம ஹிட்... நல்ல விமர்சனம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 3. விமர்சனம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
  தீபாவளி நன்றாகக் கழிந்தது போல. எஞ்சாய்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் அப்பாதுரை சரியாய் கணித்தீர்கள் நன்றி

   Delete
 4. விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மாதேவி நம்ம விமர்சனத்தை எப்பவும் மதித்து கேட்பவர் நீங்க !! மிக்க நன்றி

   Delete
 5. இந்த மாதிரி நல்ல படங்களிலும் (விஜயின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல இயக்குனர்கள்) கையில் விஜய் தொடர்ந்து நடித்தால் மட்டுமே எதிர்காலத்தில் அவருக்கு நல்ல இடமிருக்கிறது. திரும்பவும் பிரபுதேவா, பேரரசுக்கு கால்ஷீட் கொடுத்தால் அம்பேல்!!

  ReplyDelete
  Replies
  1. ஹாலிவுட் ரசிகன்: கரக்ட்டு இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சரியான ரூட்டுக்கு வர்றார் என நினைக்கிறேன் ஷங்கரை தொடர்ந்து முருகதாஸ் அடுத்து கூட நல்ல இயக்குனர்கள் தான் போலும்

   Delete
 6. நண்பன், துப்பாக்கி போல இன்னும் நாலு படம் நடித்தால், வீட்டம்மாவோடு சேர்ந்து நானும் டாகுடர் விஜய் ரசிகனாவதை தவிர வேறு வழியே இல்லை !
  >>
  அப்படின்னா இப்போ இல்லியா? இவ்வளவு நாளை வேஸ்ட் பண்ணிட்டிங்க்ணா!!

  ReplyDelete
 7. அண்ணி விஜய் ரசிகரா?! ஹைய்யோ அண்ணி இம்புட்டு தைரியமான, வீரமன, பொறுமையான, எதையும் தாங்கும் இதயமுள்ளவங்களா?! அவங்க எப்பவுமே இப்படித்தானா? இல்ல, உங்களுக்கு ஹவுஸ் பாஸ் ஆனப் பின்னா?!

  ReplyDelete
  Replies
  1. நோ கமண்ட்ஸ் (நான் சாயந்திரம் வீட்டுக்கு போகணும் இல்லியா)

   Delete
 8. //போலவே, விஜய் தங்கையை கடத்தி, பின் மீட்கும் காட்சி ஒரு க்ளைமாக்ஸ் அளவு வலுவாய் இருக்கு//
  உண்மைதானுங்க இந்த சீன் முடிந்தபின்னும் படம் தொடர எனது மகள் (10 வயது) கேட்ட கேள்வி இன்னும் படம் இருக்கா அப்பா.... :-)

  ReplyDelete
  Replies
  1. ஆம். என் பெண்ணும் கூட அதே கேள்வி கேட்டாள் " மெயின் வில்லன் இருக்கார் இல்லியா? படம் முடியாது" என்றேன்

   Delete
 9. எங்கள் வீட்டில் என்னைத் தவிர மற்ற அனைவரும் பார்த்து மகிழ்ந்து விட்டனர்!!!

  ReplyDelete
  Replies
  1. அட ஏன் சார் உங்களை விட்டுட்டு போயிட்டாங்க ? உங்களுக்கு படம் பார்க்க பிடிக்காதா ? அப்படி தெரியலையே

   Delete
 10. நல்ல விமர்சனம்!விஜய்க்கும் முருகதாஸூக்கும் ஒரு ஜே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உமா மேடம் முடிந்தால் படம் பாருங்கள் உங்கள் பெண்ணுக்கு மிக பிடிக்க கூடும்

   Delete
 11. Replies
  1. நன்றி ஸ்ரீவிஜி

   Delete
 12. படம் நல்லா இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு போய் பாத்து என்ஜாய் பண்ணி இருக்கீங்க.விமர்சனம் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார். சரியா சொன்னீங்க நன்றி

   Delete
 13. FOR UR REVIEW, I WAS WAITING

  ReplyDelete
  Replies
  1. தலைவா என்னா இது ! தேங்க்ஸ் :))

   Delete
 14. Anonymous8:19:00 PM

  மிக மிக புத்திசாலித்தனமாய் திரைக்கதை அமைத்த இயக்குனர் ஏன் இந்த சென்சிடிவ் விஷயத்தில் இப்படி கோட்டை விட்டார் என்பது புரியவே இல்லை. விஜய்யுடன் வந்து தீவிரவாதிகளை கொல்லும், அவரது நல்ல நண்பர்களில் இருவர் முஸ்லீம் என்பதை பின்னர் காட்டுகிறார். (அஷ்ரப் and ஜபார்); போலவே தீவிரவாதிகளை தப்பிக்க விடுபவர் (" நீ தப்பான இடத்தில கை வச்சிட்டே") ஒரு ஹிந்து என்றும் காட்டுகிறார். ஆனால் இதெல்லாம் உற்று நோக்கினால் தான் தெரியும்.
  Intha points ya yarum yosikkala.. Atha padathula sariya kavanikkalannu than thonuthu.. thanks for noting and it will give atleast some positive wave...

  ReplyDelete
 15. சூப்பர் விமர்சனம் தல

  ReplyDelete
  Replies
  1. நன்றி மைந்தன் சிவா (நீங்க விஜய் ரசிகரா நண்பா)

   Delete
 16. வொன்டெர்ஃபுல் விமர்சனம். நன்றீ அண்ணா

  ReplyDelete
  Replies
  1. நன்றி அன்பு படம் பார்த்தாயா?

   Delete
 17. inraikku thaan naanum inge (paris) parkka poren. thank you.. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவி நன்றி

   படம் இந்நேரம் பார்த்திருப்பீங்க என நினைக்கிறேன்

   Delete
 18. விமர்சனம் நல்லா இருக்குது நண்பரே...

  ReplyDelete
 19. i used to watch movies only after reading reviews from vikatan and friends from blog . i hope u hv showed due and fair appreciation to the movie. great

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க மகிழ்ச்சி

   Delete
 20. விமர்சனம் நல்ல அலசல்! அருமை!

  ReplyDelete
 21. நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 22. இவ்ளோ பெரிய விமர்சனம்.. நான் எதிற்பர்களை சார்.. ரொம்ப நல்லா possitive-ஆ விஜய் பத்தி எழுதி இருக்கீங்க..

  இந்த படத்துல மனசு கஷ்டபடர விஷயம் - அந்த முஸ்லிம் தீவிரவாதி பத்தி தான்.. அதையும் இப்ப நீக்கிட்டதா சொல்றாங்க..

  படம் பார்க்கும் ஆவல் வருகிறது...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...