Thursday, April 11, 2013

வானவில்: எனை காணவில்லையே நேற்றோடு !

முகநூல் கிறுக்கல்கள் 

** பக்கத்து சீட்டில் அமர்ந்தவாறு, மொபைலில் என்ன டைப் செய்கிறோம் என எட்டி பார்க்கும் ஆட்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என அந்நியன் படத்திலேயே சொல்லியிருக்கலாம்... ##முடியல ##

@@@@@@@

** நான் போயிட்டு வர்றேன்; கிளம்புறேன்; போயிட்டு வர்றேன்; கிளம்புறேன் " என்று சொல்லியவாறு, அதே இடத்தில் நின்றார் டாஸ்மார்க் வாசலில் வேஷ்டி பாதி அவிழ்ந்த பெரியவர் !

@@@@@@@

வித்தியாச வழக்கு - தீர்ப்பு

தமிழக அரசில் வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர் மதுரை பிள்ளை. இவருக்கான பென்ஷன் கணக்கிட்டு தரப்பட்டு வந்தது. பின் ஆடிட்டிங்கில் இவருக்கு அதிகமான அளவு பென்ஷன் தந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே முதலில் அதிகமாக தந்த பென்ஷனை அடுத்தடுத்த மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து கொண்டு அரசு அவருக்கு பென்ஷன் தந்தது. வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் இதில் வித்யாசமான தீர்ப்பை வழங்கியது. " தனக்கு அதிகம் பென்ஷன் தர சொல்லி அவர் கேட்கவில்லை.அவர் எந்த தவறான தகவலும் தரவில்லை. இது அரசு செய்த தவறு. எனவே அந்த பணத்தை மறுபடி அவரிடம் வாங்குவது தவறு என்றும், இது வரை பிடித்த பணத்தை திரும்ப கொடுக்கவும் " என்றும் நீதிபதி ஹரிபரந்தாமன் தீர்பளித்துள்ளார்.

இனி அரசு அலவலகங்கள் இத்தகைய கால்குலேஷன்களில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க கூடும் !

புத்தாண்டு சிறப்பு படங்கள் 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டிவிக்கள் போட்டி போட்டு கொண்டு புது படம் ஒளி பரப்புகின்றன. விஜய் டிவி யில் விஜய் நடித்த துப்பாக்கி தான் - ஹாட் ஆக இருக்க போகிறது. சன்னில் மாற்றான் ; ஜெயா - கலைஞர் எப்படி டப் பைட் கொடுக்க போறாங்க என தெரியலை.

தமிழ் புத்தாண்டு இந்த வருஷம் ஞாயிறு அன்னிக்கு வந்துடுச்சு... வார நாளா இருந்தா ஒரு நாள் லீவு கிடைச்சிருக்கும் என்று வருந்துகிற ஆளா நீங்க? கையை குடுங்க ....என் இனமய்யா நீங்கள் !

என்னா பாட்டுடே !

அப்பாசுக்கு இது முதல் படம். பெண்கள் எல்லாம் அவரை பார்த்து விட்டு ஆஹோ ஓஹோ என்றனர். ஏற்கனவே எஸ்டாபிளிஷ் ஆன வினீத்தை அவர் இப்படத்தில் எளிதாய் தாண்டியிருப்பார் ஆனால் தமிழ் திரையுலகில் அவருக்கு ஸ்பெஷல் இடம் இல்லாமல் போனது

சரி பாடலுக்கு வருவோம். மெலடியில் ரகுமான் அசத்துவதில் ஆச்சரியமே இல்லை. மிக அழகான பிக்ச்சரைசஷன். தபு வெரி கியூட்

" மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் " என்று என்னை மாதிரி அப்போதைய கல்லூரி பசங்களை பாட வைத்த பாடல்...அய்யாசாமி கார்னர் 

அய்யாசாமியின் ஹவுஸ் பாஸ் வேலைக்கு செல்பவர் என்பதும் அய்யாசாமிக்கு எடுபிடி வேலைக்கு மேல் சமையல் பெரிதாய் தெரியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதரின் தஞ்சாவூர் குசும்பு மட்டும் குறையவே குறையாது.

இரவு சாப்பாடுக்கு சாதம் இருக்க கூடாது. தோசையும் கூடாது (தாகம் எடுக்குமாம்) ; இதனால் அவர் ஹவுஸ் பாஸ் சப்பாத்தி அல்லது உப்புமா செய்வார். (சப்பாத்தியை அடுத்தடுத்த நாள் செய்தால் அதற்கும் " தினம் சப்பாத்தியா? " என கேள்வி கேட்பார் நம்ம வெரைட்டி பிரியர் )

இதனால் சப்பாத்தி அல்லது உப்புமா என்று மாறி மாறி செய்வார் அவர் ஹவுஸ் பாஸ். அதிலும் சும்மா இருக்க மாட்டார் நம்ம ஆளு. சாப்பிட உட்காரும் போது " இன்னிக்கு உப்புமா தானே? " என்பார். " ஆமா எப்படி கண்டுபிடிச்சீங்க? வாசனை வந்துடுச்சா? " என்றால்

"க்கும்... நேத்து சப்பாத்தின்னா இன்னிக்கு உப்புமா தானே; இதுக்கு மோப்பம் வேற பாக்கணுமாக்கும் " என்று கிண்டல் விடுவார்

அர்ச்சனை துவங்கி விடும் !

ஆமா உங்க வீட்டில் இந்த இரவு சாப்பாட்டு பிரச்னையை எப்படி சமாளிக்கிறீங்க?

போஸ்டர் கார்னர் நீத்தார் நினைவு - திரு சங்கர கிருஷ்ணன்

கோனே எலிவேட்டர் நிறுவனத்தில் எம். டி யாக இருந்த திரு சங்கர கிருஷ்ணன் நேற்று மரணமடைந்தார். இன்றைய செய்தி தாள்களில் இந்த செய்தி நீங்கள் வாசித்திருக்க கூடும்.

எங்கள் நிறுவனத்தில் External Director ஆக இருந்ததால்- 4 ஆண்டுகளாக அவரை அறிவேன். கடும் உழைப்பாளி. கோனே நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபத்திற்கு கொண்டு சென்றவர். இந்தியா சிமிண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவங்களில் இயக்குனராக இருந்தார். தமிழ் நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினராக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் கட்டப்பட்ட போது பெரும் பங்காற்றியவர்.


சென்ற வாரம் அடுத்த போர்ட் மீட்டிங் குறித்து அவரிடம் பேசினேன். 67 வயது வரை சிங்கம் போல இருந்தாலும் , கடைசி 3 ஆண்டுகளில் புற்று நோய் வந்து சிறிது சிறிதாக பாதிக்கப்படுவதை கண் முன்னே கண்டோம்.

போர்டு மீட்டிங் அறையில் எப்போதும் சரியாக குறிப்பிட்ட இடத்தில் தான் ஒவ்வொருவரும் அமருவர்; இங்கு தான் அமரணும் என பேசி கொள்ளாமல் இயல்பாய் நடக்கும் விஷயம் இது. சங்கர நாராயணன் அவர்களின் அருகில் தான் எப்போதும் அமருவேன். அடுத்த முறை நிச்சயம் அவர் இல்லாத இடைவெளி உணர முடியும் :(

யாருக்கும் தீங்கு நினைக்காத, அனைவருக்கும் உதவும் ஒரு நல்ல உள்ளம் ! அவரது ஆத்மா சாந்தியடையட்டும் !

13 comments:

 1. அதான் சன் டி .வி ல போட்டியா திரைக்கு வந்து சில மாதங்களே ஆன நான் ஈ படம் போடுறாங்கண்ணே அப்புறம் என்ன?

  ReplyDelete
 2. //ஆமா உங்க வீட்டில் இந்த இரவு சாப்பாட்டு பிரச்னையை எப்படி சமாளிக்கிறீங்க? //

  என்ன செய்தாலும் அப்பிடியே சாப்பிட்டால் சரியா போச்சி. இதுல எங்க பிரச்சனை வரப்போவுது? :)))

  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 3. நைஸ் போட்டோ கார்னர்

  ReplyDelete
 4. வழக்கு தீர்ப்பு சரியில்ல என்றே கருதுகிறேன். அது ஊழியரிடம் இருந்துதான் பிடித்தம் செய்யப்படும்.அவர்மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பார்கள்.இது போன்ற தீர்ப்புகள் பயனாளர்களுக்கு பெற வேண்டிய பலன்களை மேலும் தாமதப் படுத்தும்.
  சில நேரங்களில் வங்கிகளில் தவறாக கிரெடிட் செய்து விடுவது உண்டு. அதை திருப்பி கொடுக்கத் தேவை இல்லை என்பதுபோல் அமைந்திருக்கும் தீர்ப்பில் நீதி இல்லை. என்பது என் கருத்து
  *****
  போஸ்ட் கார்னர் படம் ஒரு கவிதை.
  ***
  உருக்கமான நினைவுகள்

  ReplyDelete
 5. வித்தியாச வழக்கு - தீர்பபு சரியோ இல்லையோ.. அரசு அலுவலர்கள் கொஞசம் பொறுப்போடு வேலை செய்யவேண்டும்.
  இரவு சாப்பாடுக்கு இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி இவைதான் எங்க வீட்டு மெனு.
  துப்பாக்கி துப்பாக்கின்னு 15 நாட்களாக மகள் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்..
  திரு சங்கர கிருஷ்ணன் அவர்களின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்த்னை.

  ReplyDelete
  Replies
  1. Anonymous8:28:00 PM

   uma neenga enna work seyringa
   lakshu15@gmail.com

   Delete
 6. //** பக்கத்து சீட்டில் அமர்ந்தவாறு, மொபைலில் என்ன டைப் செய்கிறோம் என எட்டி பார்க்கும் ஆட்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என அந்நியன் படத்திலேயே சொல்லியிருக்கலாம்... ##முடியல ##//


  நீங்களே சொல்லுங்க பாஸ் same blood

  ReplyDelete
 7. சரியான தீர்ப்பு தான்!

  என்ன படம் போட்டாலும் மின்சாரம் இருந்தால் தானே பார்ப்பதற்கு....:))SO எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை...:))

  என்ன போட்டாலும் சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லையே....:)

  சங்கர கிருஷ்ணன் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..

  ReplyDelete
 8. //" மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் " //

  "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தானென்று" .... இது ஜோடி பட பாடல் . ரெண்டுமே ஒரே மாதிரியே இருக்கு . ஐ கண்டுபிடிப்பு ...!

  ReplyDelete
 9. போஸ்டர் சூப்பர்
  அந்த ஹவுஸ் பாஸ் சோ இன்சண்ட் நக்கல்சாமியையும் கேள்வி கேக்கறங்க பாருங்க பொறுமையா
  வாவ் இப்படியும் தீர்ப்பு நம்பமுடியவில்லை

  ReplyDelete
 10. மோகன் சார் சன்னில் நான் ஈ ,ஜெயாவில் மாற்றான் ,விஜயில் துப்பாக்கி

  ReplyDelete
 11. Anonymous9:05:00 AM

  எனைக் காணவில்லையே நேற்றோடு-நினைவில் நீங்கா பாடல்.நான் டிப்ளமோ படிக்கும்போது கல்லூரி ஆண்டு விழாவில் அப்பாடலைப் பாடியிருக்கிறேன்.மலரும் நினைவுகள்,...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...