Tuesday, April 30, 2013

தொல்லைகாட்சி : 60 நொடி; ஆர் யூ ரெடி + மேதின சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்

60 நொடி ... ஆர் யூ ரெடி

"60 நொடி ... ஆர் யூ ரெடி ? " என புதிதாக ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். முன்பு 2 பேர் ஓரணியாக இருந்து, இன்னொரு ஜோடி எதிரில் இருந்து விளையாடிய நிகழ்ச்சி தான்...இப்போது தனித்தனியே விளையாடுகிற மாதிரி மாறி வந்துள்ளது60 நொடிகளில் குறிப்பிட்ட டாஸ்க் ஒன்றை முடிக்க வேண்டும். முடித்தவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவர். முடிக்காதவர்களில் ஒருவர் அவுட் ஆகி வெளியேறுவார்.

10 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆளுக்கு 60 நொடி தான் ஆடுகிறார்கள். ஆக 10 நிமிஷத்தில் கேம் முடிஞ்சுடும். அப்புறம் எப்படி ஒரு மணி நேரம் இழுக்குறாங்க..? அதுக்கு தான் DD போன்ற ஆட்களை வைத்து ஏதாவது பேச வைக்கிறார்கள்.

தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக !

நல்ல நிகழ்ச்சி - மக்கள் தொலை காட்சியில் திருக்குறள்

மக்கள் தொலை காட்சியில் தினம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. தொலைபேசியில் அவர்கள் டிவிக்கு கூபிடுபவர்களுக்கு ஒரு திருக்குறளின் முதல் வார்த்தை சொல்லி அந்த குறள் முழுமையும் சொல்ல சொல்கிறார்கள். வீட்டில் இருப்போரிடம் கேட்டு கொள்ள அனுமதித்தாலும் நம் மக்கள் எளிதான திருக்குறளை கூட தவறாகவே சொல்கிறார்கள். மக்கள் தொலை காட்சி சத்தமின்றி தமிழ் குறித்த சில நல்ல நிகழ்சிகள் வழங்கி வருவது பாராட்டுக்கு உரியது

ஐ. பி. எல் கார்னர்

சென்னை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் தற்போது வலுவான நிலையில் - பாயிண்ட்டில் நம்பர் -1 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் நடக்கும் மேட்ச்களில் மறுபடியும் தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தது .. நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சி!

அவுட் ஆப் பார்ம் முரளி விஜய்யை எடுத்து விட்டு சாகாவை டீமில் எடுத்தது நன்கு வொர்க் அவுட் ஆனது.

கொல்கத்தா - சென்ற முறை பைனலில் சென்னையை வென்றது. அதற்கு பதிலடி தரும் விதமாய் இம்முறை 2 முறை கொல்கத்தாவுடன் ஆடி - 2 முறையும் சென்னை எளிதில் வென்றது. 2012-ல் கோப்பை வென்ற கொல்கத்தா செமி பைனல் செல்ல நாக்கு தள்ளி கொண்டு முழிக்கிறது.

டில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் செமி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும்.

சீரியல் பக்கம்: விஜய் டிவி யின் " ஆபிஸ் "

இந்த சீரியலில் வர்ற மாதிரி ஆபிஸ் எந்த ஊரில் இருக்குன்னு தெரியலை. சதா சர்வ காலமும் வேலையே செய்யாமல் பேசி கிட்டே இருக்காங்க. லவ் பண்றாங்க.பழைய காதல் பத்தி இழு - இழுன்னு இழுத்து சொல்றாங்க. ஹீரோ- ஹீரோயின் சீட் அல்லது காண்டீனில் தான் சீரியல் முழுக்க நகருது ! ஆபிஸ் என்கிற நல்ல களத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் செய்துள்ளனரே என்று தான் கடுப்பா வருது (வீட்டம்மணி மாற்றி மாற்றி பார்ப்பதால் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு )

விஜய் அவார்ட்ஸ்

விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் முன் - அதற்கான Pre Cursor விழாவே சற்று கிராண்டாக நடத்தி வருகிறார்கள் விஜய் டிவியில். பல இயக்குனர்கள்- நடிகர் நடிகைகளை மேடைக்கு அழைத்து கேள்வி கேட்டு, சில பின்னணி பாடகர்கள் பாடி - ஆடி அமர்க்களப்படுது ! இந்த விழாவே ஒரு ஹாலில் தான் நடத்தினர் போலும் ! வழக்கம் போல் - விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ

*****************

மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிக்களும் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்புகின்றன. இணையத்தில் கிடைத்த வரை ஒரு சிறு தொகுப்பு இதோ

விஜய் டிவி

7.30 AM - சொன்னா புரியாது - சினிமா ரெவியூ
8.00 AM - 3 பேர்; 3 காதல் சினிமா சிறப்பு பார்வை
8.30 AM - சூது கவ்வும் - சினிமா சிறப்பு பார்வை
10 AM - அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
11 AM - நண்பன் - திரைப்படம்
3 PM - என் தேசம் என் மக்கள்
4.30 P M - எதிர் நீச்சல் சினிமா சிறப்பு பார்வை
5.00 P M - கும்கி - திரைப்படம்

சன் டிவி

2.00 P M - மங்காத்தா - திரைப்படம்
6.00 P M - ஏழாம் அறிவு - திரைப்படம்

ஜி தமிழ்

10 AM சமர் திரைப்படம்

கலைஞர் டிவி

10 AM புத்தகம் திரைப்படம்
6 P M பையா திரைப்படம்
9 P M சூது கவ்வும் திரைப்படம் ஒரு பார்வை
9.30 P M நான் ராஜாவாக போகிறேன் திரைப்படம் ஒரு பார்வை
10 P M யாருடா மகேஷ் திரைப்படம் ஒரு பார்வை
10.30 P M சும்மா நச்சுன்னு இருக்கு (பவர் ஸ்டார் படம்) ஒரு பார்வை


12 comments:

 1. //தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக !//

  //விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ //

  உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 2. //தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக !//

  அது சரி....

  மே தினம் - எங்களுக்கு அலுவலகம் உண்டு! அதனால் தப்பித்தேன்....

  ReplyDelete
 3. இத்தனை பவர் கட்டிலும் எப்படின்னே டி வி பார்க்க முடியுது

  ReplyDelete
  Replies
  1. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

   இங்கே கரண்ட் கட் 2 மணி நேரம் தான்.

   Delete
 4. //டில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் செமி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும். //

  eppadi ippadi ungalala mattum yosikka mudiyuthu ?? semi final sellum 4 anigalil 2 ani than final aadum , funal vilayadura renudla onnuthan cup win pannum , eppadi namma kanippu ?

  ReplyDelete
 5. மறுபடியும் நண்பனா! ஐயோ....

  ReplyDelete
 6. அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com)
  இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...

  - தமிழன் பொது மன்றம்.

  ReplyDelete
 7. விஜய் டி வி மட்டுமே நான் பார்ப்பது! இப்போது அதுவும் இல்லை! உங்கள் பதிவில் படித்து அறிந்து கொள்கிறேன் நன்றி!

  ReplyDelete
 8. தொலைக்காட்சி , மேதின சிறப்பு என பல செய்திகள் பகிர்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 9. TV PARAKA VERUPA IRUKKU SIR.

  ReplyDelete
 10. Anonymous6:54:00 AM

  உழைப்பாளர் தினத்தில் பிறந்த எங்கள் தல அஜித்துக்கு வாழ்த்துக்கள்..அவருடைய மங்காத்தா படம்தான் இன்று TRP ரேட்டிங்கை அள்ளும்.

  ReplyDelete
 11. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...