Friday, April 5, 2013

உணவகம் அறிமுகம் : அம்மா உணவகம்

ன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் அனந்து முக நூலில் நான் உணவகம் அறிமுகம் லின்க் தரும்போதெல்லாம் " அம்மா உணவகம் சென்று விட்டு எழுதுங்கள்" என்று கேட்ட வண்ணம் இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ அம்மா உணவகம்...

உணவக வாசலில் போர்டு 
காலை நேரம் கிண்டி BSNL - அலுவலகத்தில் ஒரு வேலை விஷயமாக சென்று கொண்டிருக்க, ஆலந்தூரில் இந்த அம்மா உணவகம் கண்ணில் பட்டது. BSNL அலுவலகம் திறக்க நேரமாகும்; உள்ளே போய் பார்க்கலாம் என்று நுழைந்தேன்.

நல்ல விஸ்தாரமான பெரிய இடம். சமையல் அறை , ஸ்டோர் ரூம், சாப்பாட்டு அறை என தெளிவாக போர்டு மாட்டி வைத்துள்ளனர்.

சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்க பெரிய கியூ நிற்கிறது. உள்ளே எட்டி பார்த்தால் சாப்பாடு வாங்க இன்னோர் பெரிய கியூ. டோக்கன் வாங்கும் கியூவில் நானும் இணைந்தேன். ஒரு இட்லிக்கு ஒரு சீட்டு என நீங்கள் நாலு இட்லி சாப்பிட்டால் நாலு சீட்டு தனித்தனியே தருகிறார்கள். (காகிதம் தான் வீணாகிறது. ஒரே காகிதத்தில் நான்கு இட்லிக்கும் எழுதி தரலாம். ஒரு பக்கம் மரங்களை அழிக்க கூடாது என்று சொல்லி விட்டு, இவ்வளவு காகிதம் அழிக்கணுமா என்றும் கேள்வி எழுகிறது)வீட்டில் சாப்புடற மாதிரி யாரும் 3 இட்லி, நாலு இட்லி சாப்பிடுவதில்லை. பலரும் 6, 8 அல்லது 10 இட்லி வாங்கி கொண்டிருந்தார்கள். நான் ஏற்கனவே காலை சாப்பிட்டு விட்டதால் 2 இட்லி மட்டும் கேட்க, நம்மை " 2 இட்லியா ?" என ஒரு மாதிரி பார்த்தவாறு டோக்கன் தந்தனர்

அடுத்து இட்லி வாங்கும் கியூ . " செயின்ட் தாமஸ் மவுண்டில் இருந்து இங்கு வர்றேன். அந்த பக்கமும் ஒரு கடை போட்டா நல்லாருக்கும். சீக்கிரம் போட்டுருவாங்கன்னு நினைக்கிறேன் " என்று சொல்லியபடி இருந்தார் நமக்கு பின்னால் இருந்தவர்

ஒரு பக்கம் இட்லி வாங்கும் கியூ என்றால், நடு நடுவே இட்லி தட்டை கொண்டு வந்து நீட்டி எக்ஸ்ட்ரா சாம்பார் வாங்கி செல்வோருக்கும் தாரளமாக சாம்பார் ஊற்றுகிறார்கள்.

நமக்கான 2 இட்லியை வாங்கும் போது " சட்னி ஏதும் கிடையாதா? சாம்பார் மட்டும் தானா? "என்று கேட்க வார்த்தையில் மிக தன்மையாக " ஆமாங்க சாம்பார் மட்டும் தான் " என்கிறார் உணவு தரும் பெண்மணி. தட்டை எடுத்து கொண்டு சாப்பிடும் இடத்திற்கு வருகிறேன். நிறையவே டேபிள், சேர்கள் போடப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் ஹவுஸ் புல். ஓரமாய் நின்று கொண்டு சாப்பிடும் மக்களுடன் இணைந்தேன்

இட்லியும் சாம்பாரும் எந்த குறையும் சொல்ல முடியாத படி அருமையாய் இருந்தது. அவ்வப்போது சாப்பிட்ட தட்டை எடுத்தபடியும், தண்ணீர் ஊற்றியபடியும் இருக்கிறார்கள் பெண்கள்.

அங்கிருக்கும் ஒருவரிடம் பேசியபோது " இப்பல்லாம் தினம் 2 வேளையும் இங்கே தான் சார் சாப்பாடு. மதியம் சாம்பார் சாதம் வந்து சாப்பிட்டு பாருங்க. செம சூப்பரா இருக்கும் " என்றார்.

சுட சுட இட்லி, திக்கான சாம்பார், அருமையான குடிநீர், குறைவான விலை என அம்மா உணவகம் அடிச்சு தூள் கிளப்புது.....

இந்த அரசு செய்யும் அரிதான நல்ல காரியங்களில் ஒன்று இந்த அம்மா உணவகம்....

நிற்க இந்த பதிவிற்கு இரண்டாம் பாகமும் உண்டு.. மதிய சாப்பாடு பற்றி என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் இல்லை.. ! என்ன என யோசித்தவாறு இருங்கள்.. சில நாட்களில் பகிர்கிறேன் !

31 comments:

 1. //இந்த அரசு செய்யும் அரிதான நல்ல காரியங்களில் ஒன்று இந்த அம்மா உணவகம்....//

  சின்னச் சின்ன சாலையோர வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பது ஒரு சாதனையா?

  ReplyDelete
  Replies
  1. எத்தனயோ கூலி தொழிலாளர்கள் ஒருவேளை மற்றும் அரைவயிறு சாப்பாட்டுடன் காலம் தள்ளுகிறார்கள் அவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் சென்னையில் சொல்லவே வேண்டாம் வேலை தேடுவோர்கள், மிகக்குறந்த சம்பளத்திற்கு வேலையில் இருப்போர் மற்றும் கூலி தொழிலாளர்கள் இவர்களுக்காகவே அந்த உணவகத்தை நிறைய திறக்கலாம். எந்த ரோட்டோர கடையும் 5 ருபாய்க்கு சாப்பாடு கொடுப்பதில்லை

   Delete
  2. வறுமையில் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு திட்டங்கள் போடுவதை விட்டுவிட்டு அவர்களை மட்டும் கூட்டு, பொரியல், அப்பளம் என்று எதுவுமே இல்லாத 5 ரூபாய் சாப்பாடு சாப்பிட சொல்வது எவ்வளவு பெரிய அநியாயம்?

   Delete
  3. இதுவரை எத்தனை திட்டங்கள் தமிழக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி முழுமையாக சென்றடைந்துள்ளன. அத்தனை திட்டங்கள் வந்தாலும் அது மக்களை சென்றடைவதற்குள் வடிகட்டப்படும் என்பதே உண்மை.
   மலிவு விலையில் உணவு தருவதற்கும் திட்டங்கள் செயல்படுதுவதிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இந்த உணவு அப்பளம் , பொரியலோடு சாப்பிடுபவர்களுக்கு இல்லை ஒருவேளை உணவிற்கு வழியில்லாதவர்களுக்கு.இலவசங்களை கொடுப்பதற்கு பதில் இது எவ்வளவோ மேல் இந்த உணவகத்தை நடத்துபவர்களே மகளிர் சுய உதவிகுழுக்கள் தான் அந்த வகையில் பார்த்தால் மறைமுகமாக எத்தனையோ பேர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் திட்டம்தான் இது.

   Delete
  4. இந்த உணவகங்களில் வரிசையில் நிற்பதில் பாதிக்கும் மேற்பட்டோர் நல்ல வசதி படைத்தவர்களே. மேலும் இங்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே விநியோகிக்கப் படுகிறது என்று கேள்விப்பட்டேன். இதனால் பெரிதாக ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. நேரமின்மையால் விரிவாக எழுத முடியவில்லை. மொத்தத்தில் தேர்தலுக்கான மக்களை ஏமாற்றும் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பதுதான் உண்மை.

   Delete
  5. ungal pechin azham purigiradhu Mr.vijay ahnaal idhil kuripitavaral ahvadhu payan adaigirargal yendral namaku perumidham dhanay..... kalai avargalin varthai elam nijam oru velai sapida sapadu iladhavan.. apalam, kootu poriyal yendru yedhir parpadhu illai... pasitha vairuku kudika koozh irundhalum adhu ahmirdham dhan....

   Delete
 2. அடுத்ததா வரப்போறது பேட்டிதானே :-)))

  ReplyDelete
 3. ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வசூல் வேட்டை.இன்னொரு பக்கம் உணவிட்டு புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள் போல.என்ன கணக்கோ புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. kooti kazhithu parungal elam seriyaga varum

   Delete
 4. நம்ம பஸ் ஸ்டாண்ட் அருகில் கூட உள்ளது நான் போனதில்லை போர்டு பார்த்தேன்

  ReplyDelete
  Replies
  1. pongalen sir poidhan parugalen....

   Delete
 5. அமைதிச்சாரல் அவர்கள் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்....:))

  ReplyDelete
 6. மிக்க நன்றி. நாட்டில் நல்ல விஷயங்கள் நடந்தால் அதை படிக்க சந்தோஷமாக இருக்கிறது.

  அனந்து.

  ReplyDelete
 7. நல்லதே நடக்கட்டும்...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்... பாராட்டுவோம்...

  ReplyDelete
  Replies
  1. Jooraa Kai thaattunga pa...Sollittaaaru Namma Dhana...!!

   Delete
 10. dhinasari oru velai sapatuku kastapadum adharavuatr mudhiyavarukum andrada cooli thozhilaligalum inni vairara virudhu.. kadavuluku nandri...........

  ReplyDelete
 11. நல்லா போகிறவரைக்கும் நல்ல திட்டம்தான் எத்தனை நாளைக்கு அதன் தரம் நீடிக்கிறது என்று பார்ப்போம்

  ReplyDelete
 12. நம்ம ஏரியால எங்க இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? விளம்பரத்தில் வருவது போல, தேடினாலும் கிடைக்கமாட்டேங்குது

  ReplyDelete
 13. இப்படிஎல்லாம் இருக்கின்றனவா !!! நல்ல அறிமுகம்.

  ReplyDelete

 14. இந்த அரசு செய்யும் அரிதான நல்ல காரியங்களில் ஒன்று இந்த அம்மா உணவகம்....

  தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!
  visit ; http://vitrustu.blogspot.in/2013/04/blog-post_4672.html

  ReplyDelete
 15. மகிழ்ச்சி. அருமையான பதிவு.
  உங்கள் நேரத்தை ஒதுக்கி வரிசையில் நின்று பதிவு எழுதுவதற்காக சிரமப் பட்டிருக்கிறீர்கள். உங்கள் நல்ல எண்ணத்தை வாழ்த்துகிறேன் திரு மோகன் குமார்.

  ReplyDelete
 16. நல்லதை கண்டா பாராட்டத்தான் வேண்டும்

  ReplyDelete
 17. THE ONE RUPEE IDLY AND OTHER ITEMS WERE MADE OUT OF COMMON MAN`S RATION RICE. REFERENCE DINAMALAR9april 2013). NEWS. IF 200 FEW PEOPLE WILL CHERISH WITH THIS CHEAPER FOOD AT THE COST OF 1000 RATION CARD HOLDERS.MAY BE 4000 PEOPLES RICE..IT IS DENIED TO SUPPLY AT THE RATION SHOPS AROUND THE CITY(ie.previos outskirts of chennai city).AND HOW LONG THIS WILL SUSTAIN? TILL PARLIAMENT ELECTIONS..... DON`T WEAR BLINKERS WHILE YOU ASSES OR COMMENT YOUR VIEWS OF ANY MATTERS.TRY TO BE UNBIASED ALWAYS . REGULAR READER OF YOUR BLOG BABU.E.

  ReplyDelete
 18. ரேசன் அரிசி என்றால் சாப்பிடக்கூடாத ஒன்றா? இந்த அரிசி ரேசன் கடைகளுக்கு வழங்குவதை தடுத்து இங்கு கோண்டுவரப்படுவதில்லை ரேசன் கடை, அரசு பள்ளி சத்துணவு, சிறைச்சாலைக்கான அரிசி சிவில் சப்ளை குடோனில் இருந்து வழங்கப்படுகிறது இதுவும் அப்படித்தான். சிவில் சப்ளை குடோனில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளுக்கான உணவுப்பொருட்கள் இருப்பு வைக்கப்படுகின்றன. முதலில் வருவது முதலில் எடுக்கப்படுவதால் 3 ஆண்டு பழைய அரிசி அனைத்து இடங்களுக்கும் வழங்கப்படுகிறது அரிசியில் புழு பூச்சிகள் சேராமல் இருக்க பூச்சிமருந்துகள் தெளிக்கப்படுகின்றன அதுதான் அந்த அரிசியில் வரும் ஒரு துர்மனத்திற்கு காரனம்..

  ReplyDelete
 19. இட்லிக்கடை நடத்துகிறதா தமிழக அரசு?!

  ReplyDelete
 20. Anonymous8:25:00 AM

  Amma unavagangal amogamaga valarattum.

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. மிக நல்ல விஷயம். அதைவிட நீங்க சிரமம் எடுத்து கியூவில் நின்று உணவை சுவைத்து விமர்சன்ம் எழுதியது மிக நல்ல விஷயம்.பொறுமைக்கும், சிரத்தைக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. சென்னை மாநாகராட்சி மூலம் வருடத்திற்கு 20 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் 10,00,000 மக்களின் பசியை போக்கும் ஒரு உண்ணத திட்டம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...