Thursday, April 18, 2013

வானவில்: டாகுடர் விஜய் பாட்டு- மந்திரா பேடி -தங்கம் வாங்கலாமா?

பதிவர் பக்கம்- போலிஸ் வாழ்க்கை குறித்த முரளி கண்ணனின் பதிவு

பதிவர் அறிமுகம் என்று சொல்ல முடியாது. என்னை விட இவர் சூப்பர் சீனியர்.

போலிஸ் என்றால் பெரும்பாலான மக்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் வரும். நாம் அவர்களோடு பேசுவது அநேகமாக பைக்கில் சென்றால் நிறுத்தி மாமூல் வாங்கும்போது தான். இதனாலும் அவர்கள் மீது நமக்கு நல்ல ஒபினியன் இருக்காது. ஆனால் அப்படி மாமூல் வாங்கும் நிலைக்கு வரும் முன் இவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை அளவில் எழுதியிருக்கியரர் பதிவர் முரளி கண்ணன். இங்கு வாசித்து பாருங்கள் !

கீழே கீழே கீழே போகும் தங்கம் விலை

தங்கத்தின் விலையை கவனித்தீர்களா? கடந்த 15 மாதங்களில் மிக குறைந்த விலைக்கு வந்துள்ளது. கடந்த 5 மாதங்களாகவே விலை- ஏறியதை விட இறங்கியது அதிகம். இருந்தும் இப்போதைய நிலை தங்கம் வாங்க எண்ணுவோருக்கு சாதகமான ஒன்றே. திருமணத்துக்கோ, ஒரு இன்வஸ்ட்மென்ட்டாகவோ எப்படி வாங்க நினைத்தாலும் இந்த நேரத்தில் வாங்குவது உசிதம். "இதை விட இன்னும் குறைந்தால் ?" என்றால்... எந்த விஷயத்திலும் ஐடியல் நிலையை யாராலும் கணிக்க முடியாது. ஓரளவு கவனித்து, விலை குறைந்த நேரத்தில் வாங்குவது புத்திசாலித்தனம் !

ஐ. பி எல் கார்னர்

சென்னையில் நடக்கும் பல மேட்ச்களில் CSK தோற்பது, நேரில் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய அடி தான். CSK இடம் அப்படி என்ன தான் சரியா இல்லை?

ஓபனர்ஸ் பெரும்பாலும் ஒழுங்காக ஆடுவதில்லை. அதிலும் முதல் 6 ஓவர்களில் அடித்து ஆடுவதே இல்லை. பவுலிங்கில் கடைசி ஓவர்கள் சரியாக வீச மாட்டேன் என்கிறோம். ரைனா சற்று அவுட் ஆப் பார்ம்.

யோவ் அப்புறம் என்ன தான்யா இருக்கு டீமில என்றால், தோனியின் பேட்டிங், பிரேவோ, ஜடேஜா, மாரிஸ் போன்ற தரமான ஆல் ரவுண்டர்கள் இருப்பது ....etc.

சில மேட்சுகள் பார்க்கும்போது டிராமா பாக்குற மாதிரியே இருக்கு. அவற்றில் தோற்றாலும் கூட அதிக பணம் கிடைக்க வாய்ப்பிருக்க கூடும் :))

குறிப்பாக பெங்களூரு விளையாடும் அனைத்து ஆட்டங்களும் கடைசி பந்தில் தான் ரிசல்ட் முடிவாவதை கவனியுங்கள் - கேம்ப்ளிங் எந்த அளவு விளையாடுகிறது என்று புரியும் .

அழகு கார்னர்

ஐ. பி. எல் சீசன் என்பதால் அடுத்தடுத்து சில கிரிக்கெட் அழகிகளை காண்போம்.

கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்க்ஸ் முடிந்து அடுத்து இன்னிங்க்ஸ் துவங்கும் முன் ஸ்டூடியோவில் அமர்ந்து பேசுகிறேன் என மொக்கை போடுவார்கள். இந்த அரை மணி நேரமாவது மக்கள் சொந்த வேலை பார்ப்பார்கள். ஆனால் அப்போதும் டிவியை விட்டு நகர கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த அம்மணியை எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் போன்ற நிகழ்சிகளுக்கு அழைத்து வந்தார்கள்.

Mandira Bedi (27229) size:1280x1024

காமண்டரி ஜொள்ள வரும் பாய்காட் போன்றோர் அம்மணியிடம் காமிரா முன்னாலேயே "ஹீ ஹீ" என்பார்கள்.

 ராஜ் குஷால் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். "கணவனாய் இருப்பது முழு நேர வேலை" என்ற பழமொழிக்கேற்ப,  இப்போதெல்லாம் ராஜ் குஷால் படம் இயக்குற மாதிரி தெரியலை :)

விபத்துகளில் போலிசுக்கு தகவல்

ஒரு விபத்து நடக்கிறது. அதனை பார்த்து விட்டு தகவல் தரும் நபர் தன்னை குறித்த தகவல்கள் தராமலே விபத்து குறித்த தகவலை போலிசுக்கு தர அனுமதி வழங்க வேண்டும் என ஒரு பொது நல வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி தர மறுத்து விட்டது. " ஒரு நபர் தானாகவே மோதி விபத்து ஏற்படுத்தி இருந்தால், அவரே கூட தன்னை வெளிப்படுத்தாமல் இப்படி தகவல் தர முடியும்" என்று காரணம் கூறி உள்ளது மத்திய அரசு. ஆனால் அத்தகைய நபர்கள் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு வரமால் " எழுத்து மூலமான சாட்சி மட்டும் தர கோர்ட் அனுமதி தந்தால் நல்லது " என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

உண்மையில் விபத்து நடக்கும்போது பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவமனையில் அனுமதிப்பது தான் மிக முக்கியம். ஆனால் பலரும் ரோடில் அடி பட்டவர் பற்றி தகவல் தர பயப்படுவது நாமும் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டுமே என்று தான். எனவே அனானிகளாக கூட விபத்து பற்றி தகவல் தர மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் மிக நல்லது.

என்னா பாட்டுடே !

ஷாஜஹான் என்று ஒரு திராபை படம். ஆனால் அந்த படத்தில் இப்படி ஒரு அட்டகாச பாட்டு.

பாடல் கவர ஒரே ஒரு காரணம் தான். வரிகள் !

"என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்"

" வீசி போன புயலில் என் வேர்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி "

" வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களை பிடிக்கவும் கைகள் நடுங்குகிறேன் "

"பகவான் பேசுவதில்லை; அட பக்தியும் குறைவதுமில்லை
காதலி பேசுவதில்லை; என் காதல் குறைவதுமில்லை "

என இப்போ லவ் செய்யும் தம்பிகளும் கூட தங்கள் காதலிக்கு இப்பாட்டை forward செய்து லவ்வை டெவலப் செஞ்சுக்கலாம் !

வீடியோ பார்க்கையில் டாகுடர் விஜய் ஒரு இடத்தில் கோட், டை சகிதமாய் வெளிநாட்டு அழகிகளுடன் பறந்து பறந்து ஆடுவார் அந்த நேரம் நல்லா சிரித்து மகிழுங்கள் !அய்யாசாமி கார்னர்

Mrs.அய்யாசாமிக்கு இன்னும் சில வாரங்களில் பிறந்த நாள் வருகிறது. அதற்கு பெரிய செலவுக்கு அடி போட்டு வந்தார் (பெண்கள் வேறென்ன கேட்பாங்க ? ....ஹூம் அதே தான் !)

அய்யாசாமி அடுப்படியில் அல்லக்கையாக அசிஸ்ட் செய்து கொண்டிருக்கும்போது இப்படி புலம்பலானார் Mrs. அய்யாசாமி

" இது வரைக்கும் எனக்குன்னு என்ன வாங்கி கொடுத்துருக்கீங்க ? ஒரு காஸ்ட்லி பொருள், பெரிய நகை..?? ம்ம் .சொல்லுங்க. "

மீண்டும் மீண்டும் கேட்டபின், அய்யாசாமி பேசினார்

" வலது கை செய்றது - இடது கைக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிற பரம்பரை நாங்க ( அடங்கப்பா ........இது உலக நடிப்புடா சாமி !) ;  என்னென்ன செஞ்சேன்னு ஞாபகம் வச்சிக்க மாட்டேன்; அப்படியே ஞாபகம் இருந்தாலும் சொல்லி காட்ட மாட்டேன் "

இந்த அநியாய புருடாவை கேட்டதும் Mrs. அய்யாசாமிக்கு சிரிப்பு வர, இது தான் சமயம் என அடுப்படியிலிருந்து எஸ் ஆனார் அய்யாசாமி !

10 comments:

 1. Anonymous8:20:00 AM

  அண்ணே மந்திரா பேடி கல்யாணம் கட்டுனது சேகர் கபூரை இல்லை ராஜ் குஷாலை. சேகர் கபூர் கட்டுனது சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை. சுசித்ரா என்பவர் 25 வருடங்களுக்கு முன்பு காபித்தூள் விளம்பரத்துல வருவார். அது நெஸ்கேபேயோ அல்லது சன்ரைஸ்ஸோ நினைவில் இல்லை. அது மட்டுமில்லாமல் சிவரஞ்சனி என்ற தமிழ்படத்திலும் நடித்துள்ளார்.

  குடும்பத்துல பயங்கரமான விரிசலை ஏற்படுத்தி விடுவீர்கள் போல இருக்கிறதே.

  ReplyDelete
 2. தம்பி சரி பண்ணிட்டேன் நன்றீஸ்

  ReplyDelete
 3. // பெரிய நகை..?? ம்ம் .சொல்லுங்க. " //

  Please ref.
  //இப்போதைய நிலை தங்கம் வாங்க எண்ணுவோருக்கு சாதகமான ஒன்றே. ..........எப்படி வாங்க நினைத்தாலும் இந்த நேரத்தில் வாங்குவது உசிதம்....
  .....விலை குறைந்த நேரத்தில் வாங்குவது புத்திசாலித்தனம் !

  ReplyDelete
 4. // அண்ணே மந்திரா பேடி கல்யாணம் கட்டுனது சேகர் கபூரை இல்லை ராஜ் குஷாலை. சேகர் கபூர் கட்டுனது சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை. சுசித்ரா என்பவர் 25 வருடங்களுக்கு முன்பு காபித்தூள் விளம்பரத்துல வருவார். அது நெஸ்கேபேயோ அல்லது சன்ரைஸ்ஸோ நினைவில் இல்லை. அது மட்டுமில்லாமல் சிவரஞ்சனி என்ற தமிழ்படத்திலும் நடித்துள்ளார். //

  மோகன் குமார் : நல்லா தாறாங்கயா டீடெயிலூ.


  ReplyDelete
 5. இந்த ipl மந்த்ரா பேடி வரங்களா நன் பார்க்கவே இல்லையே

  ReplyDelete
 6. மிக்க நன்றி மோகன்குமார்

  ReplyDelete
 7. Anonymous8:12:00 PM

  இன்றைய டெல்லியுடனான மேட்சில் நிச்சயம் வெல்வார்கள் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 8. சுவையான வானவில்.....

  அழகு கார்னர்.... - அதுக்கப்புறம் நிறைய பேர் வந்துட்டாங்க மோகன்! :)

  ReplyDelete
 9. பயங்கரமான ஆள் சார் நீங்க!! இப்படி கூட எஸ் ஆகலாமா?

  ReplyDelete
 10. அண்ணா சிவகாசி இராமச்சந்திரன் அவர்களின் பிளாக் ஐ டி தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா
  விஜய் டி வி யின் தமிழ் சங்கத்தில் பேசியது அவர்தானே அண்ணா. அவர் நல்லா பேசினார். நீங்கள் எப்போதோ ஒரு முறை அவர் பிளாக் பற்றி எழுதி உள்ளீர் கள் நான் மறந்து விட்டேன் தயவு செய்து தரவும்.
  ௧. சாலையில் செல்லும் யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டால் அவருக்கு உதவலாம் எனில் முடியவில்லை. காவலர்கள் வீடு வரை வந்து விடுகிறார்கள் விசாரணைக்காக (இதில் வந்து போக வண்டியின் டீஸல் செலவு நாமதான் அழுவனும்)
  //எனவே அனானிகளாக கூட விபத்து பற்றி தகவல் தர மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் மிக நல்லது.// நல்ல தீர்வு அண்ணே
  ௨. மந்திரா பேடி அந்த சேனலில் வந்து பேசுகிறார்கள் என சொன்னால் நல்லா இருக்கும் நான் இது வரைக்கும் அவர்களை டி வியில் பார்த்ததே இல்லை.
  ௩. தளபதி விஜய் நடித்த ஷாஜகான் சூப்பர் திரைப்படம். பட் தான் சரியாக ஓடவில்லை.

  ௪. கடைசியா என்ன ண்ணா நீங்களும் கேம்ப்ளிங் பத்தி ஒத்து கிடிங்க நல்லது .


  ௫. அய்யா சாமி கார்னர் சொல்றேனு தப்பா எடுத்துக்காதிங்க ஒரு உரிமையில் சொல்லுறேன் சத்தியமா சிரிப்பு வரல ணா ...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...