Wednesday, April 24, 2013

வானவில்: எடை கூட என்ன செய்யலாம் ?

ஐ. பி. எல் கார்னர்

கெயில் நேற்று அடித்த அடி .. அப்பப்பா .. ஐ. பி. எல் - ஹீரோ என்றால் ஒவ்வொரு வருடமும் அது கெயில் தான் !!

                      Chris Gayle celebrates his 30-ball hundred

ஆட்டம் துவங்கி, ஒன்பதாவது ஓவர் நடக்கும் போதே கெயில் செஞ்சுரி அடித்து விட்டார். இத்தனைக்கும் நடுவில் மழையால் ஆட்டம் 10 நிமிடத்துக்கும் மேல் நிறுத்தப்பட்டது ! புனே அணியில் விக்கெட் கீப்பர் தவிர மற்ற அனைவரும் பவுலிங் போட கூடியவர்கள் தான் என துவங்கும் போது கிரிக்-இன்போவில் கிண்டல் அடித்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராய் வந்து போட, போட பந்து காணாமல் போய் கொண்டிருந்தது. 30 பந்துகளில் செஞ்சுரி என்பது கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. கபிலின் 175 நாட் அவுட் போல இந்த 175 நாட் அவுட்டும் ரொம்ப நாள் ரிக்கார்ட் ஆக நிற்க போகிறது.

படித்ததில் பிடித்தது : எடை கூட என்ன செய்யலாம் ?

எடை போட திட்டமிடும் முன், ஏன் எடை குறைவாக உள்ளீர்கள் என்பதற்கு டாக்டரை பார்ப்பது நலம். அப்போது தான் நீங்கள் ஏன் ஒல்லியாக உள்ளீர்கள் என்பது பற்றியும், தைராயிட் போன்ற பிரச்சனை உள்ளதா என்றும் பார்த்து விட்டு அதற்கு தகுந்த மாதிரி ஆலோசனை தருவார்

வழக்கமாய் உண்ணும் உணவு பட்டியல் தயாரியுங்கள் அதனுடன் ஒவ்வொரு வேளையும் 200 கலோரி சேர்த்து சாப்பிட ஆரம்பிக்கவும்

தினம் பர்கர்ஸ் சிப்ஸ் என்று சும்மா புல் கட்டு கட்ட கூடாது. புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு சத்தான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்

வயிறை பட்டினி போடக்கூடாது. அடிக்கடி சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக கலோரி உணவு சாப்பிட்டால் பசி சற்று குறைவாக கூட இருக்கும் ஒரே தடவை சாப்பிடுவதை தவிர்த்து ஐந்து ஆறு முறை சாப்பிட பழகுங்கள்

கடலைகள், உலர்ந்த பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா வேர்க்கடலை இவற்றை சாப்பிடவும். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது இது போன்ற உணவுகளை கை வசம் எடுத்து செல்லுங்கள்

கலோரி அதிகம் உள்ள குளிர் பானங்களை சாப்பாட்டுடன் சேர்த்து பருகுங்கள். சத்தான மில்க் ஷேக்குகள் பருகலாம்

பாதி ராத்திரியில் எழுந்து எதையாவது கொறிப்பதற்கு பதில் இரவு படுக்க போகுமுன் ஒழுங்காக சாப்பிடவும். இரவு பழங்கள் பேரிச்சை பழம் பால் போன்றவை சேர்த்து கொள்வது அவசியம்

4 நாட்கள் சாப்பிட்டு விட்டு எடை கூட வில்லையே என்று வருந்த கூடாது. எப்படி எடை குறைய பொறுமை அவசியமோ அப்படி எடை கூடவும் பொறுமை தேவையே. சிலருக்கு சில மாதங்களில் பலன் தரும். சிலருக்கு வெயிட் போட சில வருடங்களும் ஆகலாம்

உங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். சில வகை ஆடைகளில் நீங்கள் சற்று குண்டாய் தெரிவீர்கள். அவற்றை தேர்ந்தெடுத்து அணியுங்கள்

15 நாளைக்கு ஒரு முறை எடை பார்த்தால் போதும் சற்று எடை போட்டதுமே மற்றவர் கண்ணுக்கு எடை போட்டது தெரியும். " என்ன எடை கூடுது" என்பார்கள் அதை வைத்து எடை கூடியுள்ளதை அறியலாம்

இன்னொரு முக்கிய விஷயம்: அளவுக்கு அதிகமாய் எடை போட்டு விட்டு பின் அதை குறைக்க கஷ்டப்படக்கூடாது. உங்கள் உயரத்திற்கேற்ற எடை இருக்கிற மாதிரி பார்த்து கொள்ளுங்கள்

என்னா பாட்டுடே

வாணி ஜெயராம் - பல அற்புத பாடல்களை பாடி நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவரது பாடல்களில் இந்த " நானே நானா " எனக்கு மட்டுமன்றி நண்பர்கள் பலருக்கும் கூட மிக பிடிக்கும். ராஜா இசையில் வாணி ஜெயராம் மிக அதிகம் பாடியதில்லை ஆனால் பாடிய சிற்சில பாடல்கள் - அதி அற்புதம் !

பாடலின் வீடியோ வடிவம் பார்த்தால் - வாணி ஜெயராம் மற்றும் ராஜாவின் இசையை முழுமையாய் ரசிக்காமல் போக கூடும் என்பதால் ஆடியோ வடிவம் மட்டும் பகிர்கிறேன்புது மெனு - தக்காளி தோசை 

வீட்டம்மா இந்த வார இறுதியில் தக்காளி தோசை என்ற புது மெனு செய்து பார்த்தார். எப்படி என பகிர்கிறேன்.

அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்து விட்டு பின் , காஞ்ச மிளகாய் தக்காளி சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். அரைத்து முடித்ததுமே தோசைக்கான மாவு தயார்.

சைட் டிஷாக தேங்காய் சட்னி அல்லது சாம்பார் இருந்தால் சிறப்பு. இல்லா விடில் இட்லி பொடி கூட தொட்டு கொள்ளலாம்

சாப்பிடும் போது நிறத்திலும் சுவையிலும் ஏறக்குறைய அடை போல தான் இருந்தது. இந்த கமண்ட்டை சொன்னதும் ஹவுஸ் பாஸ் சொன்னது " ஆமாம்; அடையும் இதே மாதிரி தான் தயார் செய்வோம்; இதில் கூடுதலாக தக்காளி சேர்த்து அரைக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் "

போஸ்டர் கார்னர்அய்யாசாமியும் கரண்ட் கட்டும்

சென்னை வாசிகளுக்கு தினம் 2 மணி நேரமே கரண்ட் கட் ஆகிறது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட 2 மணி நேரம் கட் ஆகும். இதில் காலை 8 முதல் 10 எனில், சமையல் உள்ளிட்ட மிக்சி வேலைகள் அனைத்தும் எட்டு மணிக்குள் முடிக்க வேண்டும். அதுவாவது பரவாயில்லை.

எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு கரண்ட் கட் ஆன நிலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது, எந்த சுவிட்ச் ஆன் செய்த நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் கிளம்புவதால், வீட்டுக்கு வந்து பார்க்கும் போது ஏதேனும் சுவிட்ச் ஆப் செய்யாமல் ஓடிய படி இருக்கிறது.

நம்ம அய்யாசாமி வீட்டில் ஒரு நாள் இப்படி தண்ணீருக்கான மோட்டார் ஆப் செய்யாமல் சென்று விட, 8 - 9 மணி நேரம் ஓடிய படி இருந்தது ! நல்லவேளை.. ரொம்ப உஷ்ணமாகி மோட்டார் எரியாமல் தப்பியது !

உங்கள் வீடுகளில் காலை 8 மணிக்கு கரண்ட் கட் ஆனால், வீட்டை விட்டு கிளம்பும் போது சற்று எச்சரிக்கையாய் அனைத்து சுவிட்ச்சும் ஆப் செய்துள்ளீர்களா என பாருங்கள்  !

*****
அண்மை பதிவுகள்:

இருட்டு கடை அல்வா: அறியாத தகவல்கள் வீடியோவுடன்

தொல்லை காட்சி - விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்

12 comments:

 1. இந்த கரண்டுக்கு ஏதும் ஷாக் ட்ரீட்மண்ட் இல்லாமப் போச்சே...!

  ReplyDelete
 2. வீட்டுவாசல் கதவின் உட்புறம் ஒரு மெயின் சுவிட்ச் பொருத்தி அதை அணைத்தால் வீட்டில் உள்ள மொத்த பவரும் அணையுமாறு செய்யலாமே

  ReplyDelete
 3. அலுவலகம் கிளம்பும் நேரமான 8-10 கரண்ட் கட்டாக இருந்தால் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
  நல்ல பாடல்

  ReplyDelete
 4. மின் வெட்டு சிந்துபாத் கதை போல நீண்டு கொண்டே போகிறது

  ReplyDelete
 5. கெயில் அடிச்ச பால்ல ஒன்னு எங்க வீட்டுக்குள்ள வந்து விழுந்திடிச்சு ........ என்னா அடி என்னா அடி ப்பா

  ReplyDelete
 6. க்ரிக்கெட் பார்ப்பதை 90% குறைத்து வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு ஒரு மணிக்கு IPL ரிப்பீட் பார்த்தேன். அடி ஒவ்வொன்னும் ப்ளாக் தண்டர். எனது அபிமான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெத்தை தலைவன் ரிச்சர்ட்ஸ், இளவரசன் லாரா, சிங்கம் புலிகள் வால்ஷ்-ஆம்ப்ரோஸ் ஆகியோருக்கு பிறகு கருஞ்சிறுத்தை கெயில் நிலை நாட்டி வருவது பெரு மகிழ்ச்சி.

  ஹிந்துவில் படித்த ட்வீட் ஒன்று: கெயில் ஆடும்போது பீல்டர்கள் எல்லாம் பார்வையாளர்களாகவும், பார்வையாளர்கள் எல்லாம் பீல்டர்களாகவும் மாறி விடுகின்றனர்.

  நீ ஓங்காம அடிச்சாலே ஒன்னரை டன் வைட்டு தலைவா!

  ReplyDelete
 7. ப்ளூ டூத்தில் வீட்டின் மின்சாரத்தை இயக்கலாம் கட்டுப் படுத்தலாம் என்று படித்திருக்கிறேன்! :))

  கெயில் ஆட்டத்தை நேரடியாகப் பார்க்கக் கொடுத்து வைக்காமல் போனது!

  ReplyDelete
 8. ஆமாம் சரியா சொன்னீங்க கரண்டு போகும் நேரம் வீட்டை விட்டு போனால் கவனமுடன் இருக்கனும் மெயின் சுவிட்ச் வைத்து எல்லாத்தையும் off பண்ணமுடியாது பால் தயிர் மாவு போன்ற வைகள் பிரிட்ஜில் இருக்கும் போது எப்படிoff பண்ணுவது

  ReplyDelete
 9. தக்காளி தோசை பற்றி இங்கே பகிர்ந்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

  http://kovai2delhi.blogspot.in/2011/12/blog-post.html

  நாங்களும் தில்லியில் மோட்டார் ஸ்விட்சை போட்டு விட்டு மறந்து வெளியே சென்றிருக்கிறோம். ஒருமுறை நான், ஒருமுறை கணவர்....:)

  வாணி ஜெயராமனின் இந்த பாடல் மிகவும் பிடித்தது.

  ReplyDelete
 10. Anonymous6:33:00 AM

  நானும் கிறிஸ் கெயிலின் அதிரடியைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்..என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்..

  ReplyDelete
 11. எனக்கும் மிகவும் பிடித்த பாடல்....

  கெயில்... அதிரடி தான் - கடைசி மூன்று ஓவர்கள் பார்க்க முடிந்தது.... :)

  பார்வையாளர்கள் - ஃபீல்டர்கள் - போஸ்டராகவே மேட்ச் நடந்தபோது ஒரு பார்வையாளர் இதை எழுதி காண்பித்துக் கொண்டிருந்தார்.....

  தக்காளி தோசே.... எங்க வீட்டம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க!

  ReplyDelete
 12. எடை குறைய மூன்றாம் சுழி பாருங்கள்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...