Monday, July 1, 2013

தொல்லைகாட்சி: வாரண்ட் குறும்படம் -ஸ்டுவர்ட் லிட்டில்- பெண்ணோவியம்

பார்த்த குறும்படம் - வாரண்ட்

விஜய் அவார்ட்சில் விருது வாங்கிய "வாரண்ட்" அப்போது ஒளிபரப்பவில்லை; எதோ ஒரு நாள் இரவு 11.30 மணிக்கு விஜய் டிவி யில் ஒளிபரப்பினர்.

கதை இது தான்: போலிசால் தேடப்படுகிறான் ஒருவன். நண்பன் ஒருவன் அவனுக்கு அடைக்கலம் தந்திருக்கிறான். அவனது காதலி (சிபி பாஷையில் 20 மார்க் பிகர்) வீட்டில் பிரச்சனை என கிளம்பி இவனை காண வருகிறாள்.

போலிஸ் இன்னொரு நண்பனை பிடித்து மிரட்டி- அவனை போன் செய்ய வைத்து குற்றவாளியை வளைத்து பிடிக்கிறது.

அந்த பெண் சென்னை வந்து இவனுக்கு போன் செய்ய, அப்போது அவன் போலி ஜீப்பில் சென்று கொண்டிருக்கிறான்

இது தான் கதை ! நான் ரொம்ப கஷ்டப்பட்டு புரிஞ்சுகிட்டு எளிமையா (!!!??) சொல்லிருக்கேன். கலைஞர் டிவியில் வாரா வாரம் இதை விட பல நல்ல கதைகளை பார்த்திருக்கோம் !



நல்ல நிகழ்ச்சி - ஊர் சுற்றலாம் வாங்க 

ஞாயிறு மதியம் 12 மணிக்கு மக்கள் டிவி யில் வருகிறது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சி. வார நாட்களில் " சொல்லி அடி " என தமிழ் வார்த்தைகளை வைத்து போன் செய்யும் மக்களை கேள்வி கேட்கும் அதே சித்ரா தான் (அம்மணி நல்ல அழகு !) இந்த நிகழ்ச்சியும் நடத்துகிறார்

சென்னையின் பல்வேறு இடங்களை நமக்கு அறிமுகம் செய்து, நமக்கு தெரிந்த இடங்கள் பற்றி தெரியாத பல விஷயம் சொல்கிறார்கள். நிச்சயம் பார்க்க தகுந்த நிகழ்ச்சி

ஜெயா மேக்ஸ், முரசு, சன் லைப் சானல்கள்

ஒவ்வொரு சானலும் இப்போது பாடல்களுக்கென்று - ஒன்றுக்கு மேற்பட்ட சானல்கள் வைத்துள்ளன. சன் மியூசிக்கில் பெரும்பாலும் சற்று புது பாடல்கள் வருகிறது -என்றால் பழைய பாடல் பிரியர்களுக்காக அவர்களே சன் லைப் சானல் வைத்துள்ளனர். கலைஞர் டிவியும் இசையருவி தாண்டி முரசு சானல் துவங்கியுள்ளது

பழைய மற்றும் 80- களில் வெளியான ராஜா பாடல்களை இந்த சானல்கள் விளம்பரங்கள் அதிகமின்றி ஒளிபரப்புகின்றன. ரேடியோ போல இந்த சானல்களை வைத்து விட்டு, தொடர்ந்து பாடல் கேட்டபடி நம்ம வேலையை பார்க்கலாம் !

பார்த்த படம் - ஸ்டூவர்ட் லிட்டில்

ஸ்டூவர்ட் லிட்டில் சீரிஸ் மிக பிரபலமான ஒன்று. ஒரு சிறுவன் அவனுக்கு தம்பியாக ஒரு சின்ன எலி (ஆம் பேன்ட் சட்டை எல்லாம் போட்ட கார்ட்டூன் எலி.. !) இவர்களின் குறும்புகள் தான் கதை

இந்த வாரம் சன் டிவி -யில் இதன் முதல் பாகம் ஒளிபரப்பானது. பெண்ணுடன் அமர்ந்து சிரிக்க சிரிக்க பார்த்தேன். ரொம்ப ரசித்தது - வீட்டில் வளரும் பூனையை தான் ! அது பேசும் மெட்ராஸ் பாஷை தமிழாகட்டும், எலியை சாப்பிட முடியாமல் புலம்புவதாகட்டும் அமர்க்களம் ! இதில் அதன் சக நண்பர்களான பூனைகள் விடும் டயலாக் எல்லாமே செம சிரிப்பு வர வைத்தது.

ஸ்டூவர்ட் லிட்டிலின் ரசிகராக்கி விட்டது இந்த குட்டீஸ் படம் !

ஜோடி சீசன்.. 

விஜய் டிவியின் டான்ஸ் ஷோவில் இந்த வாரம் அம்பிகா - ராதா இருவரும் நடுவர்களாக வந்தனர். அம்பிகாவின் அலட்டல் ஓவர் ! சரோஜா தேவி மாதிரி என சொல்லி விட்டு என்னமோ மாதிரி அவர் முகபாவம் காட்ட DD -யோ உங்களை மாதிரி யாரும் நடிச்சதில்லை என வஞ்ச புகழ்ச்சி அவிழ்த்து விட்டார்

அடுத்த வாரம் எல்லாரும் ஜோடி மாற்றி ஆடனுமாம் ! " உங்களுக்கு எந்த ஆள் வேணும்" என கேட்க " எனக்கு இவர் தான் வேணும்" என ஆள் ஆளுக்கு "தங்கள் விருப்பத்தை " தெரிவித்தனர் (என்னமா உதவி பண்றாங்கப்பா !!)

ஆனந்தி சற்று கிளாமராக ஆடினார் . அவர் எப்ப ஆடுவார் என காத்திருந்தால், " எங்க கிட்டே இருக்கிறது அழகான ஒரே ஒரு பொண்ணு தாண்டா " என கடைசி ஆளாக ஆட வைத்தனர் !


பெண்ணோவியம்

சானல் மாற்றி கொண்டே செல்லும்போது வசந்த் டிவியில் - பெண்கள் குறித்தான நிகழ்ச்சி வர ஹவுஸ் பாஸ் அப்படியே நிறுத்தி விட்டார்

பெரிய ஷாப்பிங் மாலில் சென்று பெண்களுக்கான உடை உள்ளிட்ட அனைத்து ஆக்சசரிஸ் வாங்குகிறார்கள். ஒவ்வொரு துணிக்கும் அதற்கு ஏற்ற கலரில் - பேக், செருப்பு, வளையல் என அனைத்தும் ஷாபிங் செய்வதை காட்ட " பாத்தீங்களா? பாருங்க.. எப்படி ஷாப்பிங் செய்யுறதுன்னு காட்டுறாங்க பாருங்க. பாத்து தெரிஞ்சுக்குங்க ; அப்பவாவது இதே மாதிரி வாங்கி தர்றீங்களா பாப்போம் " என்றார்

நானும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு " நல்லாருக்கு " என சொல்ல " எது துணியா? Bag -ஆ ? "

" இல்லை அந்த பொண்ணு " என்று பதில் சொல்லி வாங்கி கட்டி கொண்டேன்

நீதி : தயவு செய்து இந்த நிகழ்ச்சி வந்தால் - சானல் மாத்திடுங்க சார் !

6 comments:

  1. நானும் இந்த படம் ஏற்கனவே பல தடவை பார்த்தேன் என்றாலும் நேற்று மறுபடியும் பார்த்தேன் செம்ம காமெடி

    ReplyDelete
  2. ம்ம் ஷாப்பிங்க் நிகழ்ச்சி எப்பவாவது பார்ப்பதுண்டு. ஆனா, எனக்கு அது பிடிக்கௌறதில்லை சகோ! மேல்தட்டு ஆட்கள்க்கான கடையாவே காட்டுறாங்க. மிடில் கிளாஸ் கடைகள் மற்றும் ஃபேஷனை காட்டுனா நல்லா இருக்கும்..,
    அப்புறம் ஸ்டூவர்ட் பத்தி சொல்லவா வேணும்.

    ReplyDelete
  3. ஸ்டூவர்ட் லிட்டில் எப்போது போட்டாலும் பார்ப்போம்....:)

    சன் லைஃபில் ராஜாவின் பாடல்கள் எத்தனையோ இருக்க....போட்டதையே தான் மீண்டும், மீண்டும் போடுவார்கள்.

    ஆனாலும் ரேடியோ போல் வைத்து நம் வேலைகளை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. ஸ்டூவர்ட் லிட்டில் ஜாலியான படம்! பலமுறை சன் டீவியில் பார்த்து இருக்கிறேன்! ஊர் சுற்றலாம் வாங்கவும் பார்த்து இருக்கேன்! நல்ல நிகழ்ச்சிதான்!

    ReplyDelete
  5. ஸ்டூவர்ட் லிட்டில், ரீயோ, ரிங்கபெல், ஐஸ்சேஜ், மடகாஸ்கார் ...... இன்னும் பல :)) மகள் சி.டி வாங்கி பார்ப்பாள் பார்த்திருக்கின்றேன்.

    ReplyDelete
  6. பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...