Tuesday, July 9, 2013

தமிழ் சினிமா-வின் Top 10 அபத்தங்கள்

வீடுதிரும்பல் துவக்கிய உடன் போட்ட இரண்டாவது பதிவு இது.  உங்களில் பலரும் வாசித்திருக்க வாய்ப்பில்லை எனவே மீள் பதிவாக வருகிறது :)
*************
தமிழ் சினிமா-வின் Top 10 அபத்தங்கள்

1. ஹீரோயின் வாயாடி +  குறும்புக்கார பெண்ணாக இருப்பார். இவரது ஜம்பம் ஹீரோ கிட்டே செல்லுபடி ஆகாது. Hero எல்லா வகையிலும் ஜெயிப்பார்.

2. ஹீரோயின் மாடர்ன் டிரஸ்-இல் கலக்குவார். ஆனால் கல்யாண பேச்சை எடுத்ததும் புடவை கட்ட ஆரம்பித்து விடுவார். பாடல் காட்சியில் குஜாலா வருவார்).3. ஹீரோ வீட்டை விட்டு வெளியே விரட்டப்படும் காட்சியில் மழை பெய்தே தீரும். இது போல ஹீரோ மனம் நோகும் காட்சிகளில் எல்லாம் உடனே அவர் தெருவில் நடக்க, மழை பெய்யும் .

4. வில்லன் கூட்டத்தை சேர்ந்த 150 பேரை தனி ஆளாக சுவற்றுக்கு பின் மறைந்து மறைந்து அடித்து வீழ்த்திவிட்டு வரும் ஹீரோ வில்லன்-இடம் மாட்டி கொள்வார். இந்த வில்லன், ஹீரோ-வை உடனே கொல்லாமல் தானாக சாகும் படி (பாம்பு விட்டு கடிக்க விடுவது, உடம்பை சுற்றி bomb வைத்து கட்டி போடுவது etc) தண்டனை தருவார். நிச்சயமாக அதில் சாகாமல் ஹீரோ தப்பித்து வந்து வில்லன்-உடன் மறுபடி ஒரு சண்டை போட்டு கதையை முடிப்பார்.

5. T. ராஜேந்தர் படத்தில் வரும் அத்தனை பேரும் விதி விலக்கே இல்லாமல் T. ராஜேந்தர் போலவே அடுக்கு மொழியில் வசனம் பேசுவார்கள். ( ராஜேந்தர் சீரியஸ்- ஆக வசனம் பேசும் அத்தனை காட்சியும் காமெடி- தான்).

6. Heroine பள்ளி கூடத்தில் படிப்பவராக காட்டபட்டால், அவர் வயதுக்கு வரும் காட்சி கண்டிப்பாக உண்டு. கிளாஸ் ரூமிலோ, தோழியை அல்லது ஹீரோ - வை துரத்திக்கொண்டு ஓடும்போதோ heroine வயசுக்கு வருவார்.

7. காமெடி நடிகர்கள் மீது bomb வெடித்தால், அவர்கள் சாக மாட்டார்கள். சட்டை கிழிந்து முகம் முழுதும் கருப்பாகி நிற்பார்கள்.

8. ஹீரோ எத்தனாவது மாடியில் இருந்து குதித்தாலும் அவர் swimming pool-உள்ளேயோ, போய்க்கொண்டிருக்கும் வண்டி மீதோ தான் சரியாக குதிப்பார். நாற்பது மாடி கட்டிடத்தின் மீது இருந்து குதித்தாலும் Hero-க்கு எந்த அடி-யும் படாது.

9. ஹீரோ-வும் ஹிரோயின்னும் தனியாக காட்டுக்குள் ( சில நேரங்களில் தனியே வீட்டுக்குள்) இருப்பார்கள். அப்போது கடும் இடி இடிக்கும். பயந்து போன ஹீரோயின் ஹீரோ-வை கட்டி கொள்ள, உடனே கசமுசா ஆகி விடும். இந்த ஒரே முறையில் பெண் confirm -ஆக கர்ப்பமாகி விடுவார். இது மட்டும் அல்ல எந்த ஆணும், பெண்ணும் ஒரு முறை தப்பு செய்தாலே, பெண் கர்ப்பமாகி விடுவார். இதில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், side actor, side actress எல்லாரும் சமமே. தமிழ் சினிமா இந்த விஷயத்தில் ரொம்ப strict.

10.ஹீரோ தப்பி தவறி சாவது போல் காட்சி இருந்தால் கத்தி குத்து அல்லது துப்பாக்கி குண்டு பட்ட பின்பும், தான் செய்யும் வேலை-யை (பாட்டு அல்லது பைட்) முழுவதுமாக முடித்து விட்டு, தனது தியாகம் பற்றி தான் சொல்ல நினைத்தது முழுதும் சொல்லி விட்டு தான் சாவார்.

-------------
இது முழுமையான லிஸ்ட் இல்லை. தவற விட்டதை நீங்க பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே !

10 comments:

 1. Anonymous4:20:00 PM

  Thalaiva Kalakuringa poonga.. TR Pathina message than super... I have a doubt on why recent days his flims have become comedy. In 80's(not sure whether the year is right) films like Thangaikku Oru Geetham, Mythili Ennai Kadhali are super hit - Mari(Nattamai)

  Thanks and Regards,
  MARIAPPAN SUNDARARAJAN

  ReplyDelete
 2. ஹீரோவின் நண்பரோ உறவினரோ சாகும் தருவாயில் ஹீரோவிடம் ஒரு பெரிய ரகசியத்தை சொல்லிவிட்டுத்தான் சாவார்...

  ReplyDelete
 3. hero eve teasing, ragging ellam bayangarama pannuvar, aana amma akka sentiment la mattum kannu kalanguvaru!

  ReplyDelete
 4. இந்த இம்சைகளுக்காகதான் நான் சினிமாவே பார்க்குறதில்லை

  ReplyDelete
 5. ஹீரோவுக்கு ஹீரோயின் செட் ஆகும் போது ஹீரோயினோடு சுத்தி கொண்டுகிருக்கும் லூசு தோழிக்கு, ஹீரோ நண்பனான காமெடியன் செட்டாயிடுவாறு.

  ReplyDelete
 6. ஹீரோ எப்பவுமே ரேஸ் ல தொக்க மாட்டார் அது கார்,பைக், இல்ல மாட்டுவண்டி குதிரை வண்டி எத இருந்தாலும் சரி ஹாஹா

  ReplyDelete
 7. //எந்த ஆணும், பெண்ணும் ஒரு முறை தப்பு செய்தாலே, பெண் கர்ப்பமாகி விடுவார்.//
  ரெண்டாவது தடவை அந்த தப்பை பாக்கணும்னு ஆசையாக்கும்.

  ReplyDelete
 8. தயவு செய்து நீங்களும் இவர்கள் பின்னாடி போகாதீர்கள்

  ReplyDelete
 9. அருமை !!! இதே தலைப்பில் அடுத்த பார்ட்டும் எழுதுங்க...

  ReplyDelete
 10. ஏட்டையா பெயர் கண்டிப்பாக ஏகாம்பரமாகத்தான் இருக்கும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...